தமிழர் ஆடைகள்
தமிழர் ஆடைகள்
முனைவர் கு. பகவதி
இணைப்பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113.
BIBLIOGRAPHICAL DATA
| Title of the Book | : | tamilar adaigal |
| Author | : | Dr. K. Bhagavathi, M.A., Ph.D., Associate Professor International Institute of Tamil Studies C.P.T. Campus, Chennai - 600 113. |
| Publisher | : | International Institute of Tamil Studies C.P.T. Campus, Chennai-600 113. Ph: 22542992 |
| Publication No. | : | 460 |
| Language | : | Tamil |
| Edition | : | Second; First - 1980 |
| Year of Publication | : | 2003 |
| Paper Used | : | 18.6 TNPL Maplitho |
| Size of the Book | : | 21/14 cms. |
| Printing type Used | : | 10, 12, 14, 18 points |
| No. of Pages | : | xiv+422 |
| No. of Copies | : | 1000 |
| Price | : | Rs. 90/- (Rupees ninety only) |
| Printing | : | Powerman Printers 89, Coral Merchant Street Mannady, Chennai - 600 001 Ph. 25248342 |
| Subject | : | Costumes of the Tamils |
| Special Information | : | This is the first Book on costumes of the Tamils |
முனைவர் சா. கிருட்டினமூர்த்தி
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600 113.
அணிந்துரை
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஆடை இன்றியமையாதது. ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ என்பது முதுமொழி. மனிதனுடைய அடிப்படைத் தேவையாகவும் பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்குவது ஆடை. ஆடையைக் குறிப்பதற்கு இலக்கியங்களில் பல சொற்கள் ஆளப்பட்டுள்ளன. உடுக்கை, துணி, ஆடை, உடுப்பு, குப்பாயம், மெய்ப்பை, பட்டுடை, கலிங்கம், புடவை, சச்சு, தானை, படாம் என ஆடைகளைக் குறிக்கும் பல்வேறு சொற்கள் நிலவிவந்துள்ளதைக் காணும்போது இத்தகு பண்பாடுடைய சமுதாயாகத் தமிழ்ச் சமுதாயம் இருந்தது என்பதை நாம் அறியலாம். உடுக்கை இழந்தவன் கைபோல என்று ஆடையின் இன்றியமையாமை மான உணர்வோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. பண்டைத் தமிழர்களின் தொழில்களில் ஆடை நெய்தல் தொழில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது.
நெசவு இன்றியமையாத தொழிலாகப் பண்டைத் தமிழர்க்கு இருந்தது. பஞ்சு எடுத்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், சாயம் தோய்த்தல், ஆடை தைத்தல் போன்ற பல்வேறு தொழில்கள் நடைபெற்றதாக இலக்கியங்களில் காண முடிகின்றது. பஞ்சு எடுத்தல், நூல் நூற்றல் போன்ற பணிகளைக் கணவனை இழந்த பெண்கள் மேற்கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. அவர்கள் பருத்திப் பெண்டிர், ஆளில் பெண்டிர் என்று வழங்கப்பட்டனர். மிக நுட்பமான ஆடை வகையையும் முன்னோர் நெய்ததற்கான சான்றுகள் நிரம்பக் காணப்படுகின்றன. நூல் ஆடையோடு பட்டு ஆடை நெய்வதிலும் விளைநுட்பஞ் சான்றவர்களாகப் பண்டைத் தமிழர்கள் இருந்தனர். நீலப்பட்டு, பூம்பட்டு, வெண்பட்டு, வண்ணப்பட்டு, ரோமப்பட்டு என்றெல்லாம் பட்டின் வகைகளைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்களில் பேசப்படுகின்றன. நூற்ற இழையின் இழையைக் காணமுடியாத அளவிற்கு மிக நுட்பமான ஆடைகளையம் முன்னோர்கள் நெய்நனர் என்பதற்குச் சான்றுகள் நிரம்ப உள்ளன. ‘இழைமருங்கு அறியா நுழைநூல் கலிங்கம்’ என்று மகையடுகடாம் ஆடையின் சிறப்பை வெளிப்படுத்திக் காட்டுகின்றது. ஆடை நெய்தல் என்ற செய்தியைக்கொண்டு நெய்வதற்குத் தறிகன் இருந்தன என்று கருத இடம் உண்டு. ஆனால் 1885இல் தான் பிரிட்டனைச் சார்ந்த இ. கார்ட்ரைட் என்பவர் விசைத்தறியக் கண்டுபிடித்தார் என்பதை அறியமுடிகிறது. இந்நிலையில் மிக நுட்பமான ஆடைகளை நெய்யும் நுட்பத்தைத் தமிழர்கள் முன்பே அறிந்திருந்தனர் என்பதைக் காணும்பொழுது வியப்படையாமல் இருக்கமுடியவில்லை. ஆடைகளைத் தைக்கும் தொழில் நடைபெற்றதற்கான குறிப்பும் காணப்படுகிறது. துன்னல்காரர், துன்னூசி போன்ற சொற்கள் ஆடை தைக்கப்பட்டதைக் குறிப்பதாக அமைகின்றன. துணியைத் தைத்து ஆடையாக அணிந்துகொள்ளும் நிலை இருந்ததால் அதற்கான பொறிகள் இருந்திருக்க வேண்டும் என்று கருதலாம். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பார்த்திலேமீ என்பவர் 1829இல் தான் தையல் பொறியைக் கண்டுபிடித்தார் என அறியமுடிகிறது. இதனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு துணி நெய்வதும், உடல் அமைப்பிற்கேற்ற வகையில் ஆடைகள் தைத்துக் கொள்வதும் ஆகிய நிலைகள் இருந்தன என்பது வியக்கத்தக்கதாக உள்ளது. இந்தகைய நிலையில் பண்டைய தமிழர்கள் நாகரிகத்தின் மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு நம்முடைய இலக்கியங்களில் சான்றுகள் நிரம்பவுள்ளன. தமிழர்களின் நாகரிக அடையாளங்களாகக் காணப்படும் பல்வேறு கூறுகளுள் ஆடை இன்றியமையாதது என்பதால் இது பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பயின்று வந்துள்ள நிலையில் அவற்றைத் தொகுத்துக் காண்பது என்பது நம்மை நாமே மீளாய்வுக்கு உட்படுத்துவதாகும். இந்நிலையில் தமிழர் பண்பாடு வரிசையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ‘தமிழர் ஆடைகள்’ எனும் தொகுப்பாய்வை மேற்கொண்டது. இந்த நூலின் இன்றியமையாமை கருதி இதனை மறுபதிப்பாக வெளியிட இந்நிறுவனம் முடிவுசெய்தது. இதனை மறுபதிப்பாக வெளியிட இசைவளித்த நிறுவனப் பதிப்புக்குழு உறுப்பினர்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று தமிழர்களின் பெருமையை, புகழை வெளிப்படுத்திக்காட்டும் நூல்கள் நிரம்ப வெளிவரவேண்டும்.
இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு கல்வியமைச்சர் திருமிகு செ. செம்மலை அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி பண்பாடு-மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் திருமிகு பு.ஏ. இராமையா இ.ஆ.ப, அவர்களுக்கும், கூடுதல் செயலாளர் திருமிகு தா. சந்திரசேகரன் இ.ஆ.ப, அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.
இந்நூலினை அழகுற அச்சிட்டுத்தந்த சென்னை பவர்மேன் அச்சகத்தார்க்கும் நன்றி.
22-07-2003
சென்னை
இயக்குநர்
உள்ளே...
| v |
| vi |
| vii |
| 1-16 |
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
| 17-18 |
| 19-78 |
உடை - 23; ஆடை - 26; தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; சிதார் - 41; தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; பூங்கரை நீலம் 48; தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; ஈர்ங்கட்டு - 65; கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; பல்வட்டக்காசு - 76; தேவாங்கு- 76; வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்
| 89-118 |
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
| 119-182 |
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவிகள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சில ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
| 183-190 |
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை - 188.
| 190-233 |
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இலை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
| 235-292 |
| 293-301 |
| 301-303 |
| 303-308 |
| 309-310 |
| 315-384 |
| 385-388 |
| 389-397 |
| 398-399 |
| 399-400 |
| 400 |
| 400-401 |
| 402-406 |
| 407-421 |
