உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/002

விக்கிமூலம் இலிருந்து

நன்றியுரை

தமிழர் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உணர்த்தும் நூல்களை வெளியிடும் முயற்சியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் தமிழர் ஆடைகள் எனும் இவ்வாய்வு நூல் வெளிவருகிறது. இவ்வாய்ப்பினை நல்கிய நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

நூலின் உருவாக்கத்திற்குத் தேவையான அரிய கருத்துக்களை நல்கி துணை புரிந்த எனது மதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரிய பேராசிரியர் டாக்டர். ச. வே. சுப்பிரமணியன் அவர்கட்கு என் இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ஆய்வுக் கட்டுரை எழுதும்போது தங்கள் உயர்ந்த எண்ணங்களை அளித்து வழிகாட்டிய முனைவர் குழுவிற்கு என் நன்றி உரித்து, நூலாக்குங்கால் தனது சிந்தனைகள் பலவற்றைச் சிறக்க அளித்த நெசவுத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திரு. பி. எஸ். சுந்தரராஜன் அவர்கட்கு என் நன்றி. எழுந்த சில ஐயப்பாடுகளைப் போக்கி, இன்முகத்துடன் உதவி புரித்த திரு. ஆ. சிவலிங்கனார் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. மற்றும் பல நிலைகளிலும் இந்நூல் வெளியீட்டிற்குத் துணைபுரிந்த என் சகோதர சகோதரியார்க்கும் நன்றி.

இவ்வாய்வேட்டினை வெளியிட அனுமதி அளித்த சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சென்னை

கே. பகவதி

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/002&oldid=1841536" இலிருந்து மீள்விக்கப்பட்டது