உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/022

விக்கிமூலம் இலிருந்து

குடும்பப் பழமொழிகள்

வாழ்க்கை

உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம். -சீனா

பெண்கள்

அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும். -இங்கிலாந்து

செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள். -பல்கேரியா

ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு. -எஸ்டோனியா

நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும். -ஸ்பெயின்

ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. -எஸ்டோனியா

காதல்

பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்கொள்ளவும். -ஆப்பிரிக்கா


பெண் பார்த்தல்

கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு. -துருக்கி

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது. -ஆப்பிரிக்கா

திருமணம்

கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான். -அயர்லாந்து
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).

“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல். -மான்டினீக்ரோ


கணவன்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும். -ஆப்பிரிக்கா

மனைவி

பெண்டாட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள். -ஆப்பிரிக்கா


வீடு

பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம். -ஜெர்மனி

இல்வாழ்க்கை

ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டுபிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரையில் மறைந்துவிடும். -இந்தியா

தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை. -எஸ்டோனியா


தாய் தந்தையர்

தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை. -தமிழ்நாடு

பழமை

பழைய துணி—புதிய கிழிசல். -எஸ்டோனியா

உடற்குறைகள்

ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள். -சீனா

மரணம்

சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம். -எஸ்டோனியா

உலக அனுபவம்

நாவிதரில் பழையவன், வண்ணாரில் பழையவன். -இந்தியா

உலகத்தோடு ஒழுகல்

நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும். -அரேபியா

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/022&oldid=1841584" இலிருந்து மீள்விக்கப்பட்டது