தமிழர் ஆடைகள்/024
நம்பிக்கைகள்
அணிந்திருக்கும் ஆடையை ஊசியால் தைப்பது சரியல்ல.
அம்மை வந்த வீட்டில் துணியால் குப்பையைப் பெருக்குதல்
தேவையானது.
ஈரத்துணியை எடுத்துக்கொண்டோ, உடுத்துக்கொண்டோ
வெளியூர் போதல் நல்லதல்ல.
உடலின் மேல் துணியின்றி குளிக்கலாகாது. ஏதாவது வஸ்திரம்
உடுத்திக் கொள்ள வேண்டுமென்பர்.
உடைகளில் குறிப்பிட்ட சில, அதிர்ஷ்டத்தையும், வேறு சில
துரதிர்ஷ்டத்தையும் தரும் எனக் கருதுவர்.
எரிந்த துணியை வீட்டில் வைத்தால் கஷ்டம் வரும்.
கோவிலுக்குப் போகும்போது தூய நூல் புடவை
அல்லது பட்டுப்புடவை கட்டிச் செல்லவேண்டும் என்பர்.
கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்லல் சரியன்று.
சுமங்கலிகள் வெண்ணிற ஆடைகளை அணிதல் ஆகாது.
திருமணப் பெண்ணிற்கு உடன் அனுப்பும் ஆடைகளில் கறுப்பு,
வெள்ளை நிறங்கள் இருக்கலாகாது.
திருமணம் நிச்சயமான பின்னர் வெள்ளிதோறும் கோயிலுக்குப்
போகும்போதெல்லாம் புத்தாடைகளையே உடுக்க வேண்டும் என்பர்.
புத்தாடைகள் கிடைக்கும்—உடைகளைத் தையல்பகுதி மேல்
வரும்படி அறியாது அணிந்து சென்றால்.
புத்தாடைகள் செவ்வாயன்று வாங்க மாட்டார்கள்.
புத்தாடைகளைச் சனியன்று உடுப்பது நல்லதல்ல.
புத்தாடைகளைத் துவைக்கும் முன்னர், அவை கிழிவது நல்லதல்ல.
புத்தாடை நுனியில் மஞ்சள் தோய்த்துக் கட்டுவர்.
புத்தாடைகளைப் புதன் அணிவது நல்லது என்பர்.
புத்தாடைகளை அணிய வியாழன் நல்லநாள்.
புத்தாடைகளைப் பூசை செய்து பின்னர் அணிவர்.
புத்தாடையை அணிந்துகொண்டு உறங்க மாட்டார்கள்.
பெண்கள் முந்தானையை அலையவிடக் கூடாது. அப்படி
அலையவிட்டால் அவர்கள் வாழ்க்கையும் அலையும்.
பெண்கள் முந்தானையை விரித்து அதில் படுக்கக் கூடாது
அப்படிப் படுத்தால் அவ்வீடு விடியவே விடியாது என்றும்
அந்த வீடு கெட்டுப் போவதாகவும் நம்புவர்.
மாலையில் வாசலில் துணி உலர்த்தக் கூடாது.
வண்ணான் அழுக்குத் துணிகளோடு எதிர்த்து வருதல் நல்லது.
வண்ணான் வெளுத்த துணிகளோடு எதிரே வருதல் நல்லது அல்ல.
விதவைகள் புத்தாடைகளை நனைத்து உடுப்பர்.
விதவைகள் ரவிக்கை அணியலாகாது என்பர்.
வீட்டில் துணிகளை நன்றாகப் பிழிந்து உலர்த்துவது நல்லது
நீர் சொட்டலாகாது.