உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/025

விக்கிமூலம் இலிருந்து

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்

அரத்தம்

அரத்த முடீஇ அணிபழுப்பப் பூசி திணை.மாலை.நூற்.மரு.144

நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும் பெருங். 1:42:208

புகைக் கொடிப்புத்தேள் பொருக்கென வூட்டி
அழற்கொடி அரத்த மறைத்தவோ எனவும் பெருங். 2.19:148-49

அரணம்

மெய்புதை அரணம் எண்ணாது பதி. 52:6

அரைசரு மமர் மலைந்தரணம் வீசினார் சீவக. 777

அடுபடை யிளையரு மரணம் வீசினார் சிவக.1847

அறுவை

வெறியுற விரிந்த அறுவை மெல்லணை நற். மரு. 40

துறை போரு அறுவைத் தூமடியன்ன நற். மரு.70

ஓடாப் பூட்கை யொன்பொறி கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர் பதி. 4:4

அறுவை தோயும் ஒருபெருங் குடுமி அகம். பாலை. 195

அறுவை, தூவிரி கடுப்பத் துவன்றி, மீமிசை
தண்பல விழிதரும் அருவி புறம். 154

கால்கழி கட்டிலிற் கிடப்பித்துத்
தூ வெள்ளறுவை போர்ப்பிலதே புறம். 286

தூ வெள்ளறுவை மாயோற் குறுகி புறம். 291

களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை புறம். 311

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி பொரு. 82-83

காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ சிறுபாண். 236

துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர நெடு. 34-34

தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு சிலப். 10:98-99

இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம் சிலப். 17:23

நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும் சிலப். 14:205-8

வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் மணி. 6:93

வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு மணி. 28:53

முழுதும் அறுவை பல மூடினரும் நீல. 468

அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து பெருங். 2:5:128

அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி சீவக. 1279

நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன் சீவக. 2010

பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி பெரிய. இயற்கை-11

மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே பெரிய. திருஞான. 95

அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார் பெரிய. நேசநாயனார். 2

ஆசு

காலாசோ டற வெறிந்த கனை கழற்கால் சீவக. 2236

ஆடை

துவர் செய்யாடைச் செந்தொடை மறவர் நற். 33

சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர் ஐங். பாலை. 363

பொலம்புரி யாடை வலம்புரிவண்ண பரி. 3-88

ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும் கலித். 18

ஆடை கொண்டொலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ கலித். 72

உதிர்துகள் உக்க நின் ஆடையொலிப்ப கலித்.81

அந்துவராடைப் பொதுவனோடு ஆய்ந்த, முறுவலாள் கலித். 102

காயாம்பூக் கன்னிக் கருந்துவர் ஆடையை கலித். 108

வேட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும் புறம். 275

எள்ளே பருத்தியே எண்ணெயுடுத்தாடை...
... இன்புற்று வாழ்வான் இயைந்து ஏலாதி. 50

ஐயமே, பிச்சை அருந்தவர்க் கூணாடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் ஏலாதி. 70

உடுத்தாடை நீருட்பிழியார் ஆசாரக். 11

படைவரினும் ஆடை வளியுறைப்பப் போகார்
பலரிடை ஆடையுதிரார் ஆசாரக். 36

உடுத்தாடை யில்லாதார் நீராட்டும்...
காண அரிய கண் திரி. 71

அணியெல்லாம் ஆடையின் பின் பழ. நா. 26

படுக்கை இவராயக் கண்ணும் உடுத்தாடை
உண்டி வினவுவாரில் பழ. நா. 329

திரை நீராடை யிருநில மடந்தை சிலப். 4:7

அலைநீராடை மலைமுலையாக சிலப். 5:1

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து சிலப். 7:25

பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய சிலப். 11:50

புண்ணிய நறுமலராடை போர்த்து சிலப். 13:173

ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார் சிலப். 28:63-64

பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன் மணி. 5:61

ஆடை பற்றென வுரைத்த வவன் நீல. 188

பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர் நீல. 259

அத்திட்டாடை கோடலும் நீல. 356

பொங்காடை போர்த்தார்க்கு நீல. 470

நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார் பெருங். 1:32:64

அணிகலப் பேழையும் ஆடை வட்டியும் பெருங். 1:38:163

மாசிலருமணி மடைத்த வாடையர் பெருங். 3:1:119

வண்ணவாடையன் வந்திவன் தோன்றி பெருங். 5:4:38

அணியுமாடையுமணியும் நல்கி பெருங். 5:4:94

வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே சீவக. 105

ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
         யாரும் கவர்ந்தெழுநாள் சீவக. 307

தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர் சீவக. 482

நானக் கிடங்காடைநகர் நாகத்திடை சீவக. 590

தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு சீவக. 744

கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை சீவக. 964

ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர் சீவக. 1848

வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற் சீவக. 1893

உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை சீவக. 1874

வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி சீவக. 2078

தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன் சீவக. 2142

ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை சீவக. 2860

மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக சீவக. 2929

உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து நாலா. திவ். பெரி. திருப். 9

வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு நாலா. திவ். பெரி. திருப். 3-4:2

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு ஆண். திருப். 27

பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து நம்மா. திருவாய். 1

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நம்மா. திருவாய். 3:1:1

உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன் நம்மா. திருவாய். 3:7:4

எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே நம்மா. திருவாய். 4:3:5

திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான் நம்மா. திருவாய். 8:9:1

பொன்னொத்த வாடை பெரு. திரு. மொழி. 6:5

பொன்னிற வாடையைக் கையில் தாங்கி பெரு. திரு. மொழி. 6:8

பொங்கிளவாடை யரையில் சாத்தி பெரு. திரு. மொழி. 6.9

பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும் பெரி. திரு. மொழி. 1:7:3

சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
        மேல்வைத்துப் போய் பெரி. திருமொழி. 3:3:5

கட்டி நன்குடுத்த பீதக வாடை பெரி. திருமொழி. 3:6:10

செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள் பெரி. திருமொழி. 3:7:1

பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து பெரி. திருமொழி. 5:2:8

சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய் பெரி. திருமொழி. 5:3:7

சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே திருப்பான். அமலன். 2


அந்தி நிறத் தாடையும் திருப்பான். அமலன். 3

பெண்ணின் வருத்த மறியாத பெருமாள் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிறே நாச்சி-திரு. 3:1

பீதகவாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல் நாச்சி-திரு. 4:5

வெளிய சங்கொன்றுடையானைப் பீதக உடையுடையானை நாச்சி-திரு. 4:8

துவரியாடை யார் மட்டையர் சமண்தொண்டர்கள் நாச்சி-திரு. 2:1:6

காசையாடை மூடி யோடிக் காதல் செய்தான் பெரிய. திருமொழி. 2:2:1

சேவடி கை திருவடிவாய் கண் சிவந்த ஆடை பெரிய. திருமொழி. 2:10:9

பவ்வநீருடை வாடையாகச் சுற்றி பெரிய. திருமொழி. 2:1:6

பொங்கு புணரிக் கடல் சூழாடை நிலமாமகள் பெரிய. திருமொழி. 6:10:9

துவராடையுடுத்து ஒருசெண்டு சிலுப்பி பெரிய. திருமொழி. 10:8:2

பொன்னின்மாமதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே கம்ப. 113

ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் கம்ப. 217

உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள் கம்ப. ஆரணிய. 238

வண்ணமணி ஆடையுள மற்றும் உள பெற்றேன் கம்ப. 4690

அஞ்சுவணத்தினாடை யுடுத்தாள் கம்ப. சுந்தர 174

அண்ணன் வேலிராவணன் அரத்தவாடையன் கம்ப. சுந்தர 369

எழு முகில் ஆடையா அகன்,
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே கம்ப. 6815

மாமதில் ஆடை இலங்கையாள் கம்ப. 7182

நெய் கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள் கம்ப. 9571

பிறவும் ஆடையும் சாந்தமும் கம்ப. 9759

கொய்யுளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை
இன்ன, மெய் உறக் கொடுத்த பின்னர் கம்ப. 10511

ஆடை கைத்தலத் தொருத்தி கொண்டது சூளா. 467

அருமணிக் கலங்களும் அரத்தவாடையும் சூளா. 1722

மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய பெரிய. அமர். 29

அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி பெரிய. தடுத். 184

அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி பெரிய. கண்ணப்ப. 61

யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
         சிற்றாடையுடன் பெரிய. மானக். 13

ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார் பெரிய. திருஞான. 259

சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம் பெரிய. சாக்கிய. 12


பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல பெரிய. ஏயர். 377

துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார் பெரிய. சாக்கிய. 12

அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று பெரிய. கழறிற்-63

ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி பெரிய. கழறிற்-153

எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில் பெரிய. இடங்கழி-1

ஈரணி

மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை வாய்த்தன்று பரி. 11:8-67

ஈரந்தணி ஆடையை எல்லி மாலையை கலித். குறிஞ். 16

ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை மரு. 1

ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து மரு. 93

வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு அகம். 166

இணர் துணை மகளிரொடு ஈரணி அகம். 266

இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22

நீரணி கொண்ட ஈரணி நீக்கி பெருங். 1.42.143

ஈரணிப் பள்ளிப் புக்கருவினான். சீவக. 373

உடுக்கை

மரனார் உடுக்கை மலையுறை குறவர் நற். 64

குன்றி யேய்க்கும் உடுக்கை குறுந். கடவுள் வாழ்த்து

எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கை பரி. 1

புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு பரி. 2

மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை பரி. 4

பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே பரி. 15

இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை அகம். 285

மாசுணுடுக்கை மடிவாயிடையன் புறம். 54

மாசொடு குறைந்த உடுக்கையள் புறம். 159

உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார் நாலடி. 141

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு குறன். 788

உடுக்கை யிகவார் ஆசாரக். 75

உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று ஏலாதி. 9

உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி பழமொழி. 338

புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை சிலப். 25. 126

சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1


பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை நாலா. திவ். திருவாய். 4.8.4

உடுப்பு

தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர மணி. 3:140

உடை

உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே தொல். மெய்ப். 14

உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர் நற். 299

பொன் ஒக்கும் உடையவை பரி. 1.56

பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல கலித். 124

பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து புறம். 136

தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி புறம். 376

வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் புறம். 377

முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து புறம். 390

புகை முகந்தன்ன மாசில் தூஉடை திருமுருகு. 138

சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை பெரும்.74

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை முல்லை. 59

உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் குறள். 939

ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு குறள். 1012

உடை நடை சொற் சோர்வு வைதல்
...குடிமைக்குத் தக்க செயல் ஆசாரக். 49

உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று சிறு. மூலம். 61

பொன்னிறம் கொண்ட உடையினன் சிலப். 22.67

சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர் சிலப். 26.25

நாணமு முடையும் நன்கனம் நீத்து மணி. 3.88

ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன் மணி. 3.107

மரவுரியுடையன் விருச்சிகன் என்போன் மணி. 17.2

மரவுரியுடையன் சீவக. 1213

பூப்புடை அணிந்த பொய்கை மணி. 2772

உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை சீவக. 1874

உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை நாலா. திவ். பெரி. திரு. 3:2:9

உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான் நாலா. திவ். 3:4

உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே நாலா. திவ். 10:7

வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர் நாலா. திவ். 7-1

மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ பேயாழ். 3.41

செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு பெரு. திரு. 6.7

துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர் பெரிய. திருமொழி. 5.6.8

சிவளிகைக் கச்சென்கின்றாளால் பெரிய. திருமொழி. 8:1:7

திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும் திருவாய். 8:4.7

தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
                                            உடையும் காட்டி திருவாய். 10:3:8

உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான் கம்ப. ஆரணிய. 242

சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி கம்ப. 9790

அங்கையினயிற் படையர் ஆணுடையர் சூளா. 861

மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான் சூளா. 1098

பேரொளிப் பீதக வுடையர் சூளா. 1879

கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி பெரிய. அமர். 3

ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம் பெரிய. அமர். 11

முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
             கோவணம் அன்றி பெரிய. அமர். 16

சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில் ஏலாதி. 11

அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
                 வன்தோலார் கண்ணப்ப. 7

உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
                                                                  அன்றே கண்ணப்ப. 53

முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
                                                    வாங்கிக் கொண்டு கண்ணப்ப. 54

பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
                        செய்ததீவினை திருஞான. 724

உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர் திருஞான. 766

உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர் திருநாவு. 85

கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
                                                                     புனைந்து ஏயர். 300

உத்தரியம்

உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை கலித். மரு. 96

நாணுத்தரீகம் தாங்கி பெருங். 4.16:40

இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
                                                                         வொல்கி சீவக. 472

இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
                                     தாங்கலாற்றா சீவக. 835

அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த சீவக. 1783

உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
                           வைத்தார் சீவக. 2457

உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல் நந்திக். 29

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே கம்ப. 832

மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன கம்ப. 4011

திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த கம்ப. 4294

அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே கம்ப. 4359

ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத் கம்ப. சுந்தர. 41

உத்தரீயங்களும் சரிய வோடுவர் கம்ப. சுந்தர. 146

அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான் கம்ப. சுந்தர. 174

நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற கம்ப. சுந்தர. 411

உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி கம்ப. சுந்தர. 421

கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா கம்ப. சுந்தர. 1205

சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ கம்ப. சுந்தர. 6991

ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர் கம்ப. சுந்தர. 8262

மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க பெரிய. தடுத். 30

யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
                  தாங்கி மேற்சென்று பெரிய. தடுத். 39

பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர் பெரிய. தடுத். 117

தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே பெரிய. திருஞான. 95


நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி பெரிய. திருஞான. 1209

உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
                               விரித்துப் பள்ளி மேவினார் பெரிய. ஏயர். 49

மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார் வெள்ளானைச். 13

ஒலியல்

உடையும் ஒலியலும் செய்யை பரி. 19.97

உடைக்கியைந்த வொலியற்றாலூன்
                    றருவார்க்குணர்த்துமால் நீல. 173

கச்சம்

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி மது. 436

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/025&oldid=1841606" இலிருந்து மீள்விக்கப்பட்டது