உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/026

விக்கிமூலம் இலிருந்து

கச்சு

பெருங்கச்சு நிறீஇ நற். 220

தண்பனி வைகிய வரிக் கச்சினனே ஐங். 206

கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் அகம். 76

கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
... ... ... புனயைந்தாடும் அத்தி அகம். 376

பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க பெரும். 70-72

இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர் முல்லை. 46-47

நிறங்க வரிபு புனைந்த நீலக் கச்சினர் மதுரை. 639

துளை யெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி சிலப். 12.59-60

கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர் பெருங். 1.34:121

கண்ணியும் கழங்கும் கதிர் முலைக் கச்சும் பெருங். 1.34:162

கச்சி யாப்புறுத்த கால் வீங்கின முலை பெருங். 1.34.202

வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும் பெருங். 1.38:169

இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி பெருங். 1.40:143-44

சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும் பெருங். 2.5:143-44

கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட பெருங். 3.5:108

வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு
புணர்ந்த அணியினராகி பெருங். 3.17:127-29

பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
உத்திப் பூணும் உளப்படப் பிறவும் பெருங். 3.17:165-66

அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு
போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ பெருங். 3.17:171-2

பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர் பெருங். 3:20.3

கலாவப் பல்காழ் கச்சு விரிந்திலங்க பெருங். 5.1:138

கண்ணியன் கழலினன் கச்சினன் தாரிகை பெருங். 5.4:36

தேங்காத மன்னர் திரிதோளிணைச் சிக்க யாத்த
பூங்கச்சு நீக்கி பொறி மாண்கல நல்லசேர்த்தி சீவக. பதி. 16

கச்சுலா முலையினார்ச் கணக்காகிய
சச்சந்தன் என்னும் தாமரைச் செங்கணான் சீவக. 157

வெங்கட் கதிர் முலைக் கச்சின் வீக்கி சீவக. 459

கால்பரந்திருந்த வெங்கட் கதிர்முலைக் கச்சின் வீக்கி சீவக. 541

வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர். சீவக. 632

சுரிகை அம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கி சீவக. 698

முகிழ் முலைக் கச்சின் வீக்கி சீவக. 971

வண்ணப் பொற் கடகமேற்றா வார்கச்சிற் றானை வீக்கா சீவக. 978

பொற்கச்சார்ந்த பூணணி பொம்மன் முலையாளை சீவக. 1060

கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலின் சீவக.1092

வரிக்கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன சீவக. 1133

கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறுபோல் சீவக. 1153

கவள யானையினுதற்ற வழுங் கச்சொத்தவே
கச்சு விரித்து யாத்த கதிர் முலையர் மணியயில்வாள் சீவக. 2015

கருங்கணிளமுலை கச்சற வீக்கி மருங்குல் தளர சீவக. 2116

பெரும் புறத் தலமரப் பிணித்த கச்சினர் சீவக. 2224

கச்சொடு பொற் சுரிகை காம்பு கனகவளை நாலா. திவ். பெரி. திரு. 1:2:8

செங்கச்சு கொண்டு கண்ணாடையார்த்து நாலா. நாச்சி. திரு. 2:4

தாளுண்ட கச்சின் தகையுண்ட முலைக் கண்மீது
வாளுண்ட கண் நீர் மழையுண்டென வாரநின்றாள் கம்ப.988

முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற கம்ப. 1070

அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால் கம்ப. 1308

சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடைதோன்ற ஆர்த்து கம்ப. 1809

கொள்ளுமேவு திசையானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாகணம் விரித்து வரிக்கச்சொளிரவே கம்ப. ஆரணிய. 15

கச்சும் வாளும் தம் காறொடர்ந்து ஈர்ப்பன காணார்
அச்ச மென்பதொன்றுருவு கொண்டால் எனவழிவார் கம்ப. ஆரணிய. 501

சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய சுந்தர. 1085

வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தான் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி கம்ப. 9787

பொன்றுன்னிய உடையினர் துதைந்த கச்சினர்
... ... ... ... ... ... ... ... ...
அன்னவர் அடிமுதல் காவன் நண்ணினார் சூளா. 83

வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன் சூளா. 1319

உருவிய வாளினன் உடுத்த கச்சினன் சூளா. 1380

கஞ்சுசு முகத்த முலைகச்சு மிக வீக்கி சூளா. 1796

கச்சது கடிந்தே கல். 45-4

ஆர்கொல் பொர அழைத்தார் என்றரியேற்றிற் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடைமேல் வீக்கி பெரிய. ஏனாதி. 11

கச்சை

அரைச் செறி கச்சை யாப்பழித்தசைஇ நற். முல். 21

நீலக் கச்சைப் பூவாராடை பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் புறம். 274

காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரிக் கச்சைப் புகழோன் தன்முன் சிறு. 238-39

வண்ணவரி வில்லேந்தி அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி குறிஞ். 124-25

வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி சிலப். 5:141-2

விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்க சிலப். 26:230-31

முரசம், கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி மணி. 1:28

பொற்கச்சற வீசிக் கதிந்தெழுந்த தனம் தஞ்சை. 235

கையார் கடகத்துக் கதிர் வாட்கச்சையர் பெருங். 1.37:7

செம் பொற் கச்சையர் பெருங். 1.39:31

வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர் பெருங். 1.40:378

மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர் பெருங். 1.4:198

செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர் பெருங். 1.43:126

வீக்கிய கச்சையர் பெருங். 1.46:18

உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென
கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன் பெருங். 1.46:96-7

திண்மை செறிவில் சேடக மகளிர்
தன்மை கடுக்குந் தானைக் கச்சையர் பெருங். 1.46:242-43

வாடாத் தாரினர் சேடார் கச்சையர் பெருங். 2.6:124

குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் பெருங். 2.18:18

நீலக் கச்சை நிறைகழல் மறவரை பெருங். 3.17:237

தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த
                                                                        வேழம் சீவக. 800

கழலன் காழகம் வீக்கிய கச்சையன் சீவக. 939

கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து சீவக. 1836

கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற கம்ப. 1424

ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர் சூளா. 92

கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான் சூளா. 139

மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர் சூளா. 376

வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு
இரிந்து பாய சூளா. 583

மணித் தொடர் மருங்கின் வீழ்த்து
வரிபுரிக் கச்சை வீக்கி சூளா. 913

கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும்
                                                                    வாளர் சூளா. 916

கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று
                                                            சொன்னான் சூளா. 1157

கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா
                                                             வலத்தினாலும் சூளா. 1189

அச்சுவக் கிரீவனுக்கு இளைய காளையர்
கச்சையங் கருங்களி யானை வல்லவர் சூளா. 1260

கைவலப் படையர் கழலர் கச்சையர் சூளா. 1270

கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார் சூளா. 1279

வரிந்துவீழ் கச்சையின் வளைந்த தாடியன் சூளா. 1420

கஞ்சுகம்

கஞ்சுக முதல்வர் ஈரைந் நூற்றுவர் சிலப். 27:188

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் சிலப். 28:80

கஞ்சயன் முதலாத் தலைக் கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைந் நூற்றுவரும் சிலப். 26:137-38

கஞ்சுக மாக்கள் எஞ்சா நாவினர் சிலப். 26:166-67

காவலற் றொழுது கஞ்சுகனுரைப்போன் மணி. 25:11

கைதொழுதிறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் மணி. 28:178

காவன் மாக்களும் காஞ்சுகி முதியரும் பெருங். 1.44:111

காஞ்சுகி முதியர் பெருங். 1.46:318

காஞ்சுகி முதியர் பெருங். 1.47:167

அச்சுறு நோக்கினறுபது கழிந்த
கஞ்சுகி மாக்கள் சோர்ந்து புடைகாப்ப பெருங். 3.5:109-10

நண்பிற் றிரியாது பண்பொடு புணர்ந்த
காஞ்சுகி மாந்தரும் தாம் சென்று தருகென பெருங். 4.15:145-6

காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி பெருங். 4.16:45

பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்
சாதகர் என்னவும் தகைத்து அம்மாலையே கம்ப. 626

தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் கம்ப. 880

கற்றைச் சுடர் விட்டெரி கஞ்சுகியான் கம்ப. ஆரணிய. 83

மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத்
துன்னிடு கஞ்சுகத் துகிலர் கம்ப. ஆரணிய. 569

முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொழி கண்ணினன் கம்ப. ஆரணிய. 6926

நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாமக்
கஞ்சுகத்தர் சுதை பற்றிய கையர் கம்ப. 7000

கஞ்சுகி அயல் நின்றானை, ஈண்டு நம் தூதர் தம்மை கம்ப. 7404

கஞ்சுகியவர் கண்மெய் காவல் ஓம்பினார் சூளா. 92

தொண்டை தொலைவித்தத் துவர்வாய் மகளிர் சூழக்
கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியவர் காப்ப சூளா. 867

கஞ்சுகி மாந்தரும் காவன் முதியரும் சூளா. 1648

விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
கஞ்சுகி அவரொடு மிழிந்து சூளா. 1276

கஞ்சுக முகத்த முலைக்கச்சு மிக வீக்கி சூளா. 1796

அரசனுக்கு வெப்படுத்தது என்றருகு கஞ்சுகிகள்
உரைசெயப் பதைத்து ஒருதனித் தேவியர் புகுத பெரிய. திருஞான. 710

ஆம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க சிறுத். 31

கம்பல்

தீருத்தறைந்த தலையுந் தன் கம்பலும் கலித். 65

கம்பலம்

கம்பலத்தன்ன மைம்பயிர்த்தா நற். 24

கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி சீவக. 837

சேண் குலாம் கம்பலம் செய்ய தொன்றனால்
மாண் குலாங் குணத்தினாள் மறைத் திட்டாளரோ சீவக. 2233

செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர்
அந் நெருப்பளவாய் பொற் கம்பலம்
மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார் சீவக. 2686

நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற்போத்துக்
கலவியிற் படுத்த தாப்பொற் கம்பல மொத்த
                                                                     தன்றோ சீவக. 2711

கருவி

கையமைத் திளைஞருங் கருவி வீசினார் சீவக. 2214

கலிங்கம்

கலிங்கம் துயல்வர, செடி தொடிதெளிர்ப்ப வீசி நற். 20

புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு நற். 90

மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும் நற். 380

கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇ குறுந். 167

நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ பதி. 2:2

கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி பதி. 8:6

அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள்
நல்கூர்ந்தார் செல்வ மகள் கலித். 55

காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய கலித். 69

ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை
முடிதாழ் இருங்கூந்தல் பற்றி கலித். 92

கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் புறம். 86

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ புறம். 136

பாம்புரியன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண் பூங்கலிங்க முடீஇ புறம். 283

நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ புறம். 392

பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ புறம். 393

பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம் புறம். 397

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை திருமுருகு. 109

காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் சிறு. 85-86

நிழல் திகழ் நீலம் நாகம் நல்கிய கலிங்கம் சிறு. 95

ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீஇ பெரும். 469-70

வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற்
கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம்
புரளும் தானை மது. 431-33

பொன்னுரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் மது. 513

மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப மது. 554

சோறமைவுற்ற நீருடை கலிங்கம் மது. 721

காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை நெடு. 134-35

அம்மாசூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு நெடு. 146

இழைமருங்கறியா நுழை நூற்கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ மலை. 561

கோடிக் கலிங்கமுடுத்து குழல் கட்டி
நீடித் தலையை வணங்கி சிலப். 21:32

நுரையென விரிந்த நுண் பூங்கலிங்கம் சிலப். 22:21

மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்திளையோர் பெருங். 1.35:120-21

பட்டியற் கலிங்கமொடு பாசிழை நல்கி
இலைத் தொழிற் றடக்கையள் பெருங். 1.37.156-57

கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கி பெருங். 1.37:239

கலிங்க வட்டியும் கலம் பெய் பேழையும் பெருங். 1.38:285

அரவிற் பரந்த அல்குல் மீமிசைக்
கலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம் பெருங். 1.42:140-41

கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையினன் பெருங். 1.46:97

பையர வல்குற் பவழப்பல்காசு
கைபுனை கலிங்கத்து ஐது கலந்து ஒன்றி பெருங். 14.6:259-60

காடிக் கலந்த கோடிக் கலிங்கம்
கழும மூட்டும் நறும் புகை பெருங். 1.54:9-10

நுரைபுரைக் கலிங்கம் ஒருமுலை புதைப்ப பெருங். 2.5:86

பானீர் நெடுங்கடல் பனிநாள் எழுந்த
மேனீராவியின் மெல்லிதாகிய கழுமடிக் கலிங்கம் பெருங். 2.7:154-6

கையமைத்தியற்றிய கலிங்கத் துணியினர் பெருங். 3.1:99

கண்ணெழிற் கலிங்கம் திண்ணென அசைத்து பெருங். 3.9:61

நுரைவிரித்தன்ன நுண்ணூற் கலிங்கம் பெருங். 3.17:170

கல்லுண் கலிங்கம் கட்டிய அரையினன் பெருங். 4.7:158

கல்லுண் கலிங்கம் நீக்கி பெருங். 4.16:33

உடுத்தாள் கற்றோய் கலிங்கம்
உரவோன் சிறுவன் உயர்கெனவே சீவக. 353

மின் விரித்தனைய தொத்து விலைவ ரம்பறியலாகா
இன்னுரை கலிங்கம் ஏற்ப சீவக. 697

வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும் சீவக. 863

தேம்புகை யுள்ளுறவுண்ட கலிங்கமுடுத்தபின் சீவக. 1476

கன்னிக் கலிங்கமகிலார்ந்து கவவிக்கிடந்த குறங்கினாள் சீவக. 1658

வந்துபனி வார்ந்து முலைக் கலிங்கமது நனைப்ப சீவக. 1785

காதிற் கடிப்பிட்டு கலிங்க முடுத்து நாலா. திவ். பெரிய. திரு. 10:8:1

கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல்என கம்ப. 9120

ஒட்டிய கலிங்கந் தாண்மேல் திரைத்துடுத்து சூளா. 842

ஊதாவியானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க
         மொன்று சேர்த்தி சூளா. 1538

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த கலிங். 63

ஒரு கலிங்கம் ஒருவன் உடுத்தாதே கலிங். 454

அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் கலிங். 466

வீழ்ந்த கலிங்கர் நிணக் கலிங்கம்
விரித்து விரித்துப் புனையீரே கலிங். 509

கலை

பட்டார் கலையுடையும் நீல. 130

முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற கம்ப. 1070

நீள்கலை தாங்கலர் கம்ப. 1485

கலைபுனை துகிலும் தோடும் ஒழிய போய்க் கரை கொள்வாரும் சூளா. 1694

காலு மொரொன்றுடையர் கலையிலர் சூளா.1975

கவசம்

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் புறம். 13

மெய்புகு கவசமும் சிலப். 14:169

கவசம் வீழ்ந்த சாமரையற்ற சீவக. 797

புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம்கீறி சீவக. 799

வின்மரிய தோள்விசயத் தத்தனுயிர்க் கவசம் சீவக. 1792

பொன்னணிக் கவசமின்ன சீவக. 2270

மெய்புகு பொன்னணி கவசம் ஒப்பன சீவக. 2819

கவசமா யாருயிராய் கண்ணாய் மொய்த்தவமாய்
......... காப்பானை கம்ப. ஆரணி. 99

கழலினர் தாரினர் கவச மார்பினர் கம்ப. ஆரணி. 404

உரம்படர் தோளின் மீளாக்
கவசமிட்டுடைவாள் ஆர்த்தான் கம்ப. ஆரணி. 421

சிலையன் வீரக் கவசத்தன் கம்ப. ஆரணி. 422

கைகள் வாளொடு களப்பட அழுத்தற கவச
மெய்கள் போழ்பட கம்ப. ஆரணி. 443

கேடகத் தடக்கைய கிரியின் றோற்றத்த
ஆடகக் கவசத்த கவசமாடுவ கம்ப. ஆரணி. 480

நிச்சயமென்னும் கவசத்தால் கம்ப. ஆரணி. 503

கருவியோடுவன்கச்சையுங் கவசமும் கழல கம்ப. ஆரணி. 511

காய்ந்த வெஞ்சரம் நிருதர் தம்கவசமார்புருவ கம்ப. ஆரணி. 512

கவசம்படர் மார்பிடைச் சுற்றினான் கம்ப. 7240

பூஇயல் மீன் எலாம் பூத்த வான் நிகர்
மேவு இரும் கவசம் இட்டு இறுக்கிவீக்கினன் கம்ப. 7254

ஆரத்தொடு கவசத்து உடல் பொடிபட்டுஉக கம்ப. 7316

அள்ளாடிய கவசத்து அவிர் மணி அற்றன கடிப. 7320

சூர் இழந்து வன்கவசமும் இழந்து தும்பு இழந்து கம்ப. 7377

கற்றை அம்சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான் கம்ப. 7385

இட்டம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் கம்ப. 7474

நல் நெடுங் கவசத்து நாமவெங்கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான் கம்ப. 7711

கண்ணுதல் பெருங் கடவுள் தன்
கவசத்தைக் கடந்தில கதிர் வாளி கம்ப. 7732

காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்று உகுதலும் கம்ப. 7734

பொன் தாள் கவசம் புகுதர, முகிலின் நின்றான் கம்ப.7875

வில் இடை அறுத்து, வேல்துணித்து வீரர்தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து கம்ப. 7962

நொய்து, அவன் கவசம் கீறி நுழைவன கம்ப. 8050

நூறுகோல் கவசம் கீறி நுழைதலும் கம்ப. 8051

எழுத்து அற்றார் கவசம் அற்றார் கம்ப. 8231

ஏழ் இரு நூறு வாளி
இலக்குவன் கவசத்து எய்தான் கம்ப. 8247

ஆறுநூறு அம்பு செம்பொன்
கவசம் புக்கு அழுந்த எய்தான் கம்ப. 8249

தோளின்மேல் மார்பின் மேலும்
சுடர்விடு கவசச் சூழல் கம்ப. 8250

கண்ட நாணும் கழலும் கவசமும்
.........
விண் தலத்தினின் மீன் என வீழ்தலால் கம்ப. 8270

கையினால் பெரிய அம்பால்
கவசத்தைக் கழித்து வீழ்த்தான் கம்ப. 8302

கவசத்தைக் கழித்து வீழ்ப்பக்
காப்புறு கடனின் றாகி கம்ப. 8303

அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று
அற்று அருகின கம்ப. 8419

துவசம் அன்ன தம் கூர்உகிர்ப்
பெருங்குறி தோள் தோள்மேல்
கவசம் நீங்கினர் கமப். 8498

அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம்பகழி நாட்டி
தம்பி தன் கவச மீதே இரட்டி கம்ப. 8552

தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சோர கம்ப. 8554

வடிநெடுஞ்சிலை அறும் கவசமார்பு அறும் கம்ப. 8623

கங்கணத் தொடு கலசமும் மூட்டு அறக் கழல
வெங்கடுங்கணை ஐஇரண்டு உருமென வீசி கம்ப. 8650

தனுவும் வெங்கணைப் புட்டிலும் கவசமும் கம்ப. 8638

கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் கம்ப. 9077

மின்மின் கொள் கவசம் இட்டான் கம்ப. 9154

ஏமத்தடங் கவசத்து இகல் அகலத்தன கம்ப. 9184

கலை வெங்கணை, கவசம் புக்கு ஆகமும் கழன்று ஓடிட கம்ப. 9188

கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக்கணை கழிய கம்ப. 9193

விள்ளா நெடுங்கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் கம்ப. 9194

நெடுங்கவசத்தையும் குலையாச் செல்லும்
கடுங்கணை யாவையும் கம்ப. 9196

ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில கம்ப. 9274

ஆயிடை இளையவன் விடமனையான்
அவன் இடு கவசமும் அழிவுபடத் தூயினன் கம்ப. 9275

தூக்கிய துணிவாங்கி தோளொடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவசபாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி கம்ப. 9321

கருணை அம் கடலே அன்ன
எல் ஒளி மார்பில் தீராக் கவசம் இட்டு கம்ப. 9505

கண்ணனே எளியேன் இட்டகவசமே கம்ப. 9507

சொல் அறுக்கும் வலிஅரக்கர் தொடுகவசம்
துகள் படுக்கும் கம்ப. 9537

அணிகண்டிகை கவசம் கழல் திலதம் முதல் அகலம் கம்ப. 9549

கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டிச்
செருவில் இந்திரன்தந்த பொன் கவசமும் சேர்ந்தான் கம்ப. 9786

ஒருதன்னின் பின்ன கவசத்த பொருள் இல்லை கம்ப. 9820

வில் ஒன்றால கவசம் ஒன்றால் கம்ப. 9859

கருங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று
இடம்படு சுரிகையும் சேர ஈந்தவன் கம்ப. 10375

மடுத்த வாளும் கேடகமும் கவசக் கண்ணு மார்பகமும்
மடுத்துக் குத்தினாற் போலக் கழிந்தது அம்பு சூளா. 1350

காம்பு

கச்சொடு பொற்சுரிகை காம்பு கன (க) வளை
உச்சி மணிச் சுட்டி நாலா. திவ். பெரி. திரு. 1:3:8

கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு
துகிலவை கீறி
நிச்சலும் தீமை செய்வாய் நாலா. திவ். பெரி. திரு. 2:7:3

காம்பொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் தேவா. சுந். 46:2

காழகம்

கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால் கலித். மரு. 73

ஒருத்தி வரியார் அகலல்குற் காழகம்
ஒருத்தி அரியார் நெகிழ்த்தணி சுறாதட்ப கலித். மரு. 92

நீயே வினை மாண் காழகம் வீங்கக் கட்டி
புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே கலித். பாலை. 7

களிறு மேற் கொள்ளவும் காழக நீப்பவும் புறம். 41

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலரவுடீஇ திருமுருகு. 183-84

காழகம் செறிந்த உடையினன் சிலப். 22:91

ஒண்ணிறக் காழகம் சேர்ந்த உடையினன் சிலப். 22:98

காளக உடையினன் கந்து நாமனும் சீவக. 320

காழகமூட்டப்பட்ட காரிருட் டுணியு மொப்பான் சீவக. 1230

காழம்

காழமிட்ட குறங்கினன் கம்ப. 650

குப்பாயம்

வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையர் பெருங். 1.40:378

வெங்கண் நேர்க்கிற் குப்பாய மிலேச்சனைச்
செங்கண் தீவிழியா சீவக. 438

நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே சீவக. 678

குப்பாயமென நின்று காட்சி தரும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே நாலா. திவ். பெரி. திரு. 3:5:6

கோர்த்த முத்தின் குப்பாயப் புகர்
மால்யானைக் கன்றே போல நாச்சி. திரு. 14-4

கூறை

அத்திட்ட கூறை அரைச் சுற்றி வாழினும்
பத்தெட்டுடைமை பலருள்ளும் பாடெய்தும் நாலடி. 281

ஊணொடு கூறை...மாணொடு கேட்டு ஏலாதி. 63

கருக்கினால் கூறை கொள்வார் பழமொழி. 321

நாறைங் கூந்தல் நடுங்கு துயரெய்தக்
கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும் சிலப். 15:98

படுத்துடன் வைத்த பாயற்பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள்ளெரியுறாஅ மணி. 16:29-30

பேனறாக் கூறை பெருமுருகு நாறுமேல் நீல. 256

கூறை யெய்தலும் நீல. 355

செங் கூறையாய் நீல. 534

கானெடு மனையும் கட்டுறுத்தியாத்த
கூறை, வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
தரும தருக்கர் தற்புறம் சூழ பெருங். 1.36:227-29

மூடு கூறையின் மூடுதல் வெண்டலை ஓடு கோடல் சீவக. 1427

நண்ணாச் சிறுகூறை பாகமோர் கையாக உடுத்து சீவக. 2625

கூறை சோறிவை தந்தெனக் கருவி நாலா. திவ். பெரிய. திரு. 7:7:8

கோலப் பணைக் கச்சும் கூறையுடையும் நாலா. திவ். பெரிய. திரு. 3:3:7

பூநிற கூறைசுற்றினாள் போல் கம்ப. 6772

வேசியர்கள் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற கம்ப. 10466

வெற்றரைச் சமணரோடு விலையுடை கூறை போர்க்கும் நற்றர் தேவா. திருநா. 68:9

கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே தேவா. திருநா. 77:9

குறியினின் றுண்டு கூறையிலாச்
சமண் நெறியை விட்டு தேவா. திருநா. 190:4

ஈறில் கூறையனாகி யெரிந்த வெண்நீறு பூசி தேவா. திருநா. 211:5

தங்கள் கூறை யொன்றின்றியே
...... அமணராற் தேவா. சுந். 33:9

இம்மையே தரும் சோறும் கூறையும் தேவா. சுந். 34:1

குற்றொருவரைக் கூறைகொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம் தேவா. சுந். 35:4

கூறை கொண்டு ஆறலைக்குமிடம் தேவா. சுந். 49:1

உயிர்க் கொலை பலநேர்ந்து நாடொறும்
கூறை கொள்ளுமிடம் தேவா. சுந். 49:3

பீறற் கூறையுடுத்து தேவா. சுந். 49:4

கொய்சகம்

மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம்
மருங்கு உறச் சேர்த்தி கம்ப. 9788

கோதையுங் குழைவின் பட்டின்
கொய்சகத் தலையுந் தாழ சூளா. 1640

கோசிகம்

பைங்காற் பாதிரி போது பிரித்தன்ன அங்கோசிகம் பெருங். 1.42:204

அங்கோசிக ஆடை பூத்தன பாதிரி சீவக. 1650

களிசெய்கோசிக நீர் விழக் கடிமாலை மேற்றொடர்ந்து சீவக. 1673

கோசிகத்தினுலுற்ற கொழுங்கனல் கம்ப. சுந்தர. 1205

முறைவிரித் தன்ன முறுக்கிய
கோசிக மருங்கில்
பிறைவிரித்தன்ன வெள் எயிற்று
அரவமும் பிணித்து கம்ப. 9788

பொற்பமை செங்கோடிக மொடு ஆடை புதைவுற்ற பேழை சூளா. 870

கோடி

கோடி கடையுள் விரியார் ஆசாரக்கோவை-44

மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல் சிலப். 11:45

கோடி ஏந்தினர் பட்டேந்தினர் சிலப். 20:14

கோடி மூடியெடுப்பதன் முன்னம்
கௌத்துவ மூடைக் கோவிந்தனோடு நாலா. திவ். பெரி. திரு. 4:5:8

மந்திரக் கோடியுடுத்தி
அந்தரிசூட்டக் கனாக் கண்டேன் தோழீநான் நாச்சி. திரு. 6:3

உயர்த்த கோடி கொண்டருளும் பெரிய. அமர். 28

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/026&oldid=1841607" இலிருந்து மீள்விக்கப்பட்டது