உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/027

விக்கிமூலம் இலிருந்து

கோதை

சிலைகொணாணெடிய கோதை யொலியேறு கம்ப. ஆரணிய. 24

தடக்கைக்கு, இனிய கோதையும் துறந்தனர் கம்ப. 1658

வீரம், பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான் கம்ப. 9154

கோலம்சார் நெடுங்கோதையும் புட்டிலும் கட்டி கம்ப. 9791

புட்டிலொடு கோதைகள்... அங்கையின் இலங்கைக் கட்டி கம்ப. 9821

கோவணம்

சுருள் கோவணம் தற்றவர் தேவா. திருநா. 17:5

கோவணத் தோடக்கணிந்த வம்மானை தேவா. திருநா. 19:2

கோவணமுடுத்தவாறும் கோரைவசைத்தானும் தேவா. திரு. 77:2

சங்கக் கலனும் சரிகோவணமும் தேவா. திருநா. 112:2

அரைப்பாலுடுப்பன கோவணம் தேவா. திருநா. 114:7

கொண்ட கோவண வாடையன் தேவா. திருநா. 120:9

விரிகொள் கோவண வடை விருத்தரோ தேவா. திருநா. 124:4

உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே தேவா. திருநா. 126:5

சடையனைச்சரி கோவண் வாடை கொண்டுடையன் தேவா. திருநா. 131:8

குறைகொள் காதினர் கோவண வாடையர் தேவா. திருநா. 152:1

அரையார் கோவண வாடையன் தேவா. திருநர். 167:7

கோவணத்தர் வெண்ணூன் மார்பர் தேவா. திருநா. 216:9

விரிகோவணமசைத்த வெண்ணீற்றான் தேவா. திருநா. 236:8

வெளுத்தமைந்த சீளொடு கோவணமுந்தற்று தேவா. திருநா. 275:2

தூவெளுத்த கோவணத்தை யரையிலார்த்த தேவா. திருநா. 281:1

கோவணம் மேற்கொண்ட வேடம் சுந். 5:10

அரையார் சீளொடு கோவணமும் அரவும் அசைத்து சுந். 27:6

கோவணம் கொள் குழகனை சுந். 40:8

கந்தை கீளாடை கோவணம் கருத்தறிந்துதவி பெரிய. அமர்நீதி. 3

கறைக் களத்திறை கோவணம் பெருமை முன்காட்டி பெரிய. அமர்நீதி. 6

தஞ்சை மாமறைக் கோவண ஆடையினதசைவும் பெரிய. அமர்நீதி. 8

யாணர் வெண்கிழிக் கோவணம்ஈதல் கேட்டு பெரிய. அமர்நீதி. 11

உணங்கு கோவணம் வைத்து
குணங்கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்தது பெரிய. அமர்நீதி. 13

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறுமக்கே பெரிய. அமர்நீதி. 14

கொடுத்த கோவணம் கைக்கொண்டு பெரிய. அமர்நீதி. 15

கந்தை சீருடை கோவணம் அன்றி பெரிய. அமர்நீதி. 16

போனவேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கி பெரிய. அமர்நீதி. 17

நான் தந்த கோவணத்தைக் கொண்டுவாரும் பெரிய. அமர்நீதி. 19

வைத்த கோவணம் முன் செய்ததென் பெரிய. அமர்நீதி. 20

பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின பெரிய. அமர்நீதி. 21

கீறு கோவணம் அன்று பெரிய. அமர்நீதி. 24

நல்ல கோவணம் கொடுப்பன் பெரிய. அமர்நீதி. 26

இக்கோவணம் அன்றி பெரிய. அமர்நீதி. 28

அணியும் கோவணம் நேர்தர அமையும் பெரிய. அமர்நீதி. 29

அலர்ந்த வெண்ணிறக் கோவணம் பெரிய. அமர்நீதி. 30

உடுத்து கோவணம் ஒழிய பெரிய. அமர்நீதி. 31

அடுத்த கோவணம் இது பெரிய. அமர்நீதி. 31

கோவணம் ஒரு தட்டில் இட்டார் பெரிய. அமர்நீதி. 32

அலகில் கோவணம் ஒத்திய பெரிய. அமர்நீதி. 34

தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத்தட்டு பெரிய. அமர்நீதி. 35

எங்கள் கோவணம் நேர்நிற்க வேண்டுவ பெரிய. அமர்நீதி. 37

சிவன் விரும்பிய கோவணமிடுஞ் செழுந் தட்டுக்கு பெரிய. அமர்நீதி. 39

பாங்குடை உடையுங்கீளும் முழுதில்
கோவணமும் நெய்வார் பெரிய. நேச. 3

உடைபெபாடு நல்ல சீறாம் ஒப்பில்
கோவணமும் நெய்து பெரிய. நேச. 4

சட்டை

நிணச் சட்டையிட்டு நின்ற கலிங். 156

சாலிகை

சாலிகை யுடம்பினர் தறுகணாளரே சீவக. 2217

சாலிகை யாக்கையர், தணிப்புஇல் வெஞ்சர
வேலியைக் கடந்திலர் கம்ப. 9606

திண்மார்பின் மிசைச் செறி சாலிகையின் கம்ப. 9643

சாலிகை முதல ஆன போர்ப்பரம்
தாங்கிற்று எல்லாம் கம்ப. 97:9

சிதர்

துய்ப்போர் தம்மனைத் துணிச் சிதர் உடுத்து மணி. 11:109

சிதர்வை

நின்னரைப் பாசியன்ன சிதர்வை நீக்கி பெரும். 462-68

சிதவல்

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் குறுந். 146

சிதவற்றுணி

சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினை
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய உடையினன் மணி. 3:106-7

சிதாஅர்

நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன
நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை பதி. 2:2

வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதாஅர் புறம். 69

சிதார் உடுக்கை முதாரிப் பாண புறம். 138

பாறிய சிதாரேன் புறம். 150

திறனில் சிதாஅர் வறுமை நோக்கி புறம். 337

என்னரை, நிலத்தினஞ் சிதைந்த சிதாஅர் களைந்து புறம். 385

ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி புறம். 392

ஈன்ற வரவினாவுரிக் கடுக்குமென்
தொண்டு படு சிதாஅர் துவர நீக்கி புறம். 393

விரும்பிய முகத்தனாகி என்னரைத்
துரும்புபடு சிதாஅர் மருங்குநீக்கி புறம். 400

ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி பொருநர். 79-81

பாசிவேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கி பொருநர். 153-54

சீரம்

தீரா மனத்தாள் தர வந்தன சீரம் கம்ப. 1838

சீரை

சீரை தைஇய யுடுக்கையர் திருமுருகு. 126

சீரையுடுக்கை வார் வளர் புன்சடை பெருங். 2.15:40

சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் கம்ப. 251

ஆய்தந்த மென்சீரை அணித்தடி தாழ்ந்து நின்ற கம்ப. 1842

திருஅரைத் துகில் ஓரீஇ சீரை சாத்தியே கம்ப. 1843

தான் புனை சீரையைத் தம்பி சாத்தி கம்ப. 1844

பொன் அரைச் சீரையின் பொலிவும் நோக்கினான் கம்ப. 1853

தாழ்வினை அது வரச்சீரை சாத்தினான் கம்ப. 1854

சுற்றிய சீரையின் தொடர்ந்த தம்பியன் கம்ப. 1861

துன் நெடுஞ் சீரையும் சுற்றிஅப்
பொன் நெடுந் தேரினிடை கம்ப. 1878

திருஅரைச் சுற்றிய சீரை ஆடையின் கம்ப. 1883

பழுது சீரையின் உடையினன் கம்ப. 1909

புனையும் சீரை துணிந்து புனைந்தனள் கம்ப. 1919

சீரைச் சுற்றித் திருமகள் பின்செல கம்ப. 1925

ஊரை நூறும் கருங்கனலுட் பொதி
சீரை நூறவை சேமஞ் செலுத்துமோ கம்ப. சுந்தர. 1144

சீவரம்

சீவரம் போற்கட்டில் செப்புவதென்னோ நீல. 372

சேலம்

சேலம் திருத்தி பெருங். 4:12:97

சேலை

சேலையாற் செய்ய வாய் புதைத்த செங்கையன் கம்ப. ஆரணிய. 570

சேலையின் வாங்கும் புதுமது மூவரு. 3.410-11

தழை

பல்பூம் பகைத் தழை நுடங்கு மல்குல் நற். குறிஞ். 8

தழையோர், கொய்தழை அரும்பியஞாழல் நற். குறிஞ். 54

நெய்தலும் ஓம்புமதி...அணியுமார் அவையே நற். குறிஞ். 60

தழையும் தாரும் தந்தனென் இவனென நற். குறிஞ். 80

அம்பகை நெறித் தழை அணி பெறத் தைஇ நற். குறிஞ்.96

காவி, அம்பகை நெறித் தழை அணிபெறத்தைஇ நற். குறிஞ். 123

பிணையல் அம் தழை தைஇய நற். குறிஞ். 170

தளிர்சேர் தண்தழை தைஇ நற். குறிஞ். 204

தழையணிந்து அலமரும் அல்குல் நற். குறிஞ். 320

உடுக்கும் தழை தந்தனனே நற். குறிஞ். 358

பைந்தழை சிதைய, கோதை வாட நற். குறிஞ். 363

கோடேந்து அல்குல் தழையணிந்து நற். குறிஞ். 368

ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ நற். குறிஞ். 390

கூந்தலாம்பல் முழு நெறி அடைச்சி குறுந். 80

சாரற் றழையணி அல்குல் மகளிர் குறுத். 125

தழையணி அல்குல் தாங்கல் செல்லா குறுந். 159

திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவி குறுந். 214

அய வெள்ளாம்பல் அல்லி அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கினூழ் மாறலைப்ப குறுந். 293

பசுங்குழைத் தழையினும் உழையிற் போகான் குறுந். 294

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழையணிப் பொலிந்த ஆயம் குறுந். 295

குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த குறுந். 342

தழை தாழ் அல்குல் இவள் புலம்ப அகல குறுந். 345

மணலாடு மலிர்நிறை விரும்பிய வொண்டழைப்

புனலாடு மகளிர்க்குப் புணர்துணையுதவும் ஐங். 15

நுடங்கு தழைத் திதலை அல்குல் ஐங். 72

வண்ண வொண்டழை நுடங்க வாலிழை
ஒண்ணுதல் அரிவை ஐங். 73

தண்டழை விலையென நல்கினன் நாடே ஐங். 147

நெய்தலம் பகைத் தழை பாவை புனைமார்
உடலகம் கொள்ளாரின்மையின் ஐங். 187

கானல் ஞாழற் கவின் பெறு தழையள் ஐங். 191

தானும் மலைந்தனன் எமக்குத் தழையாயின ஐங். 201

செயலையம் பகைத் தழை வாடுமன்னாய் ஐங். 211

வண்டுபடு கூந்தற் தண்டழைக் கொடிச்சி ஐங். 256

ஆய்தழை நுடங்கு அல்குல் ஐங். 291

அலர்ந்த ஆம்பலக மடிவையர் பதிற். 27

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழைத் தூங்கும் பதிற். 53

தழையுங் கோதையு மிழையு மென்றிவை
தைஇனர் மகிழ்ந்து கலித். 102

இலங்கேர் எல்வளையேர் தழை தைஇ கலித். 125

ஒலிக்குழை செயலையுடை மாணல்குல் அகம். 7

தலைமுடி சான்ற தண்டழை தைஇ அகம். 7

மணிப்பூம் பைந்தழை தைஇ அகம். 20

அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் அகம். 59

பாசளைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழைஅணிக் கூட்டும் அகம். 70

கழனியாம்பல் முழுநெறிப் பைந்தழை அகம். 156

அரிமலராம்பலோடார் தழை தைஇ அகம். 176

வயலையம் பிணையல் வார்ந்த கவா அன் திதலை அல்குல் அகம். 189

தழையணிப் பொலிந்த கோடேந்து அல்குல்
அம்பகை மடிவைச் குறுந்தொடி மகளிர் அகம். 201

பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல் அகம். 230

தாருந் தையின தழையுந் தொடுத்தன அகம். 259

பொலங்காசு நிரைத்த கோடேந்தல்குல்
நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வர அகம். 269

ஐதகல் அல்குல் தழையணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது அகம். 275

தழையணி அல்குல் செல்வத் தங்கையர் அகம். 320

முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி அகம். 348

பைங்குழைத் தழையர் பழையர் மகளிர் அகம். 331

அல்குல் தழைக் கூட்டு அங்குழை யுதவிய அகம். 383

கொண்டைக் கூழை தண்டழைக் கடைசியர் புறம். 61

கூம்பவிழ் முழுநெறி புரள் வருமல்குல் புறம். 116

ஆம்பல், இளையமாகத் தழையாயினவே புறம். 248

மெல்லிழை மகளிர் ஐதக அல்குற்
றொடலையாகவும் கண்டனம் இனியே புறம். 271

தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல் புறம். 280

பைந்தழை துயல் வருஞ் செருவிறற் புறம். 339

அணித் தழை நுடங்க ஓடி புறம். 340

ஏந்து கோட்டம்பூந் தொடலை அணித் தழையல்குல் புறம். 341

கருங்கால் வேங்கைச் செம்பூம் பினையல்
ஐதேந்தல்குல் யாமணிந்து உவக்கும் புறம். 345

பைவிரி யல்குற் கொய்தழை தைஇ குறிஞ்சி. 102

பைந்தழை மாமகளிரொடு பட்டி. 9

புனைபூந்தழையற் ஐந். ஐம். 14

ஆம்பலணித் தழை யாரந் துயல் வருந்
தீம்புனலூ ரன் மகளிவள் திணை. மொழி. ஐம். 40

அன்னை யானீயு மருந்தழையா மேலாமைக்
கென்னையோ நாளை யெளிது திணைமாலை. நூற். 20

தன் குறையி தென்னான் தழை கொணருந் தண் சிலம்ப திணைமாலை. நூற். 31

பைந்தழை அல்குற் பாவாய் சீவக. 1499

பிடிமுதிர் முலையினாடன் றழைத்துகிற் பெண்ணினொடும் சீவக. 1231

காந்து தண்டழையுஞ் சுரமங்கையர்க் கேந்தி நின்றன சூளா. 752

வயலாம்பல் நெறித்தவகைத் தழையள் சூளா. 809

விரையேற்று தளிரீனல் விழையாய் வாழி சூளா. 1126

அம்பொன் செய் கலாப வல்குலந் தழை புனைந்து சூளா. 1633

அல்குற்றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப்
பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசுந்தழையே தஞ்சை. 98

தழைப்பீலி மரவுரிமேல் சார எய்தி பெரிய. கண். 48

தானை

அரிவையது தானை என்கோ பரி. 11:28

இருந்துகிற் றானை யினொன்றிப் பொருந்தலை பரி. 16:23

பாய்ந்தாய்ந்த தானை பரிந்தானா மைந்தினை கலித். 96

பையென நோக்குவேன் தாழ்தானை பற்றுவேன் கலித். 96

தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறுபோல புறம். 276

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் நாலடி. 131

நிலனக முளியன் நீலத் தானையன் சிலப். 16:204

பட்டுடைத் தானைப் பைம்பூண் சுடர பெருங். 1.34:207

பூந்துகிற் றானைப் பற்றிக் காய்ந்தது பெருங். 1.35:202

வெண்டுகில், ஈரத்தானை நீரிடைச் சோர பெருங். 1.40:99-100

பாப்புரியன்ன மீக் கொடானை
இரு புடைமருங்கினும் வருவளிக் கொசிந்து பெருங். 1.42:244-45

சேடக மகளிர், தன்மை கடுக்குந் தானைக் கச்சையர் பெருங். 1.46:242-43

பானில் வெண்டுகிலானத் தானையர் பெருங். 2.4:147

மேற்பட வெருவி நோக்கித் தானையை
விட்டிட்டொல்கி சீவக. 675

கச்சிற் றானை வீக்கா சீவக. 978

தானையாற் தடங்கணீரைத் துடைத்து மெய்தழுவிக் சீவக. 1051

ஒன்றிய வுதிரச் செச்சை யொண்ணிண மீக்கொடானை சீவக. 1080

விடுகணை தெரிந்து வீக்கற விசித்து சீவக. 1086

குழைந்த தார் நெகிழ்ந்த தானைக் கொற்றவன் சீவக. 2720

வணங்கி நாணி வாய்புதைத்து இலங்குதானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பன் கம்ப. 10516

தாளில் வாழ் செருப்பர் தழைத்த நீடு தானையர் பெரிய. கண்ணப்ப. 68

துகில்

மூரி எக்கர் நுண்துகில் நுடக்கம் போல் நற். 15

துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பு நற். 43,90

பல்வியர், அந்துகில் தலையின் துடையினள் நற். 129

வீடுறு நுண்துகில் ஊடு வந்து இமைக்கும் நற். 366

பூந்துகில் அல்குல் தேம்பாய்க் கூந்தல் பதி. 6-4

மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால்
வெண்டுகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் பரி. 10:79-80

துகில் சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று பரி. 12:93

துகில் பொகி புனலிற் கரை காரேற்றன்று பரி. 12:98

ஞாயிற்று, அணி வனப்பமைந்த பூந்துகில் பரி. 13:2

தேம்படு மலர் குழைபூந்துகில் வடிமணி
ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ பரி. 17:1-2

அந்துகிற் போர்வை அணிபெறத்தைஇ கலித். 65

தைஇய பூந்துகில் ஐது கழல் ஒருதிரை கலித். 85

வேல் வலானுடைத் தாழ்ந்த விளங்கு வெண்துகிலேய்ப்ப கலித். 105

யானை கொண்ட துகிற் கொடி போல அகம். 111

துகிலாய்ச் செய்கைப்பா விரித்தன்ன
வெயிலவிர்பு நுடங்கும் வெவ்வெங்களரி அகம். 293

துகில் விரிகடுப்ப நுடங்கி அகம். 337

பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல் அகம். 387

தன்னரைப் புகை விரிந்தன்ன பொங்கு துகிலுடீஇ அகம். 398

கோபத்தன்ன தோயாப் பூந்துகில் திருமுருகு. 15

மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன் திருமுருகு. 214

வேறு பஃறுகிலினுடங்கி அகில் சுமந்து திருமுருகு. 296

துகிலணி யல்குறுளங்கியன் மகளிர் சிறுபாண். 262

துணங்கையம் பூதம் துகிலுடுத்தவை போல் பெரும். பாண். 235

பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க பெரும். பாண். 329

துகில் முடித்துப் போர்த்ததூங்கல் ஓங்கு
                 நடைப் பெருமூதாளர் முல்லை. 53-4

ஆவுதி மண்ணி அவிர்துகின் முடித்து மது. 194

பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல் நெடுநல். 145

அவிர் துகில் புரையு மவ்வெள்ளருவி குறிஞ்சி. 55

பட்டு நீக்கித் துகிலுடுத்தும் பட்டினப். 107

பட்டும் துகிலும் உடுத்து நாலடி. 264

மானீல மாண்ட துகிலுமிழ்வதொத்தருவி திணை. மா. நூற்குறி. 6

தகரக் குழல் புரளத் தாழ்துகில் கையேந்தி திணை. பாலை. 77

மாதர், படாஅ முலைமேல் துகில் குறள். 1087

அந்துகின் மேகலை அசைந்தன வருந்த சிலப். 4:30

மென்றுகில் அல்குல் மேகலை நீங்க சிலப். 4:48

நிறங்கிளர் பூந்துகினீர்மையினுடீஇப் சிலப். 6:88

தொண்டி யோரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் சிலப். 14:107-8

அற்றங்காவர் சுற்றுடைப் பூந்துகில் மணி. 3:140

விரைமர மென்றுகில் விடுநிதிக் குப்பை மணி. 16:123

துகிற்கொடித் தொகுதியும் நீல. 26

தன்றுகிலிடைமேகலை துளங்க நீல. 60

துகிலிடை அல்குல் துளங்கும் நீல. 72

நுண்டுகிலும் மேகலையும் சூழ்ந்தவரை நீல. 129

மாண்டதுகிலல்குல் மாதர் நீல. 667

ஆவி நுண்டுகில் யாப்புறுத்தாயினும் பெருங். 1.36:64

ஆவி நுண்டுகில் யாப்புறுத்து பெருங். 1.36:165

தூத்துகில் உடுத்துத் தொடியுடைத் தடக்கை பெருங். 1.39:21

பல்காசு நிரைஇய அல்குல் வெண்டுகில் பெருங். 1.40:9

நனைந்து நிறங்கரந்த நார்நூல் வெண்டுகில் பெருங். 1.40:148

ஆவி நுண்டுகில் அணிநலம் நனைப்ப பெருங். 1.40:148

நுரை புரை வெண்டுகில் அரைமிசை வீக்கி பெருங். 1.40:286

நுரையொடு பொங்கும் நுண்ணூல் வெண்டுகில் பெருங். 1.40:295

புனலக மூழ்கிப் பூந்துகில் களையார் பெருங். 1.41:92

மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர் பெருங். 1.41:98

புதுநூற் பூந்துகில் இருமடியுடீஇக் பெருங். 1.42:145

நறுநெய் தோய்ந்த நார்நூல் வெண்டுகில் பெருங். 1.43:125

அவிழ்ந்த பூந்துகில் அங்கை யினசைஇ பெருங். 1.43:147

பூந்துகில் தழீஇக் குறிவயினின்ற குறள் வயின்
                   நோக்கார் பெருங். 1.44:36-7

மறுவில் வெண்டுகில் மருங்கணி பெறீஇ பெருங். 2.2:36

யாணர்ப் பூந்துகில் அணிந்த அல்குல் பெருங். 2.4:118

பானில வெண்டுகிலானத் தானையர் பெருங். 2.4:147

மங்கல மணைமிசை வெண்டுகில் புதைஇ பெருங். 2.5:78

கடுங்கதிர்க் கலாவம் புதைத்த நிலா
வெண்டுகிலினர் பெருங். 2.5:84-5

சித்திர நுண்டுகில் சேர்ந்த அல்குல் பெருங். 2.5:109

கூந்தல் சோர பூந்துகில் அசைஇ பெருங். 2.5:118

வெண்டுகிலிணைமடி விரித்தனர் உடீஇ பெருங். 2.5:131

ஈரநுண்டுகில் அகற்றிப் பேருடைக்
கோடிப் பூந்துகில் கொய்து விளிம்புரீ இச் பெருங். 2.5:164-5

வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ பெருங். 3.1:95

பைந்துகில் அணிந்த பரவை அல்குலள் பெருங். 3.5:17

பூண்ட ஆகத்துப் பூந்துகில் அல்குல் 3.8:54

வெண்பூந்துகிலும் செம்பூங் கச்சும் பெருங். 3.17:127

கொய்து கொண்டுடீஇயக் கோடி நுண்டுகில் பெருங். 3.22:228

விழுத்தகு வெண்டுகில் விரித்தனன் உடுத்து பெருங். 4.6:79

நறுநீராட்டி செறிதுயில் உடீஇ பெருங். 4.14:160

கோடி நுண்டுகில் கோலமாக பெருங். 4.16:35

நிலாவுறழ் பூந்துகில் நெகிழ்ந்திடைதோன்ற பெருங். 5.1:137

இசைந்த வெண்டுகில் ஏற்ற தானையன் பெருங். 5.2:21

உலாலெனப் போந் தோனிலாவுறழ்ப் பூந்துகில் பெருங். 5.8:80

பூத்த அகிலார் துகிலாய் பொனல்குல் சீவக. பதி. 25

குழுவின் மாடத் துகிற் கொடி போன்றவே சீவக. 34

ஆவியன்ன பூந்துகில் அணிந்த அல்குல் சீவக. 67

காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை சீவக. 71

இளையவர், அந்துகில் பற்றவிற் சீவக. 121

துகிற் சேக்கை மேற் காமமே நுகர்வார் சீவக. 135

ஒண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோல் சீவக. 164

நீனிற வண்ணனன்று நெடுந்துகில் கவர்ந்து சீவக. 209

கலையாந் துகில் ஏந்து அல்குல் சீவக. 216

பல்கிழியும் பயினும் துகினர் லொடு சீவக. 235

சோர்துகில் திருத்தல் தேற்றாள் சீவக. 302

அணங்கு நுண்டுகில் மேலசைந்தாள் சீவக. 344

பூந்துகில் செறிந்த அல்குல் சீவக. 399

பைந்துகில் அருவி நெற்றி சீவக. 428

நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் சீவக. 431

விலைவரம்பறிதலில்லாத வெண்டுகில் அடுத்து சீவக. 617

வெண்டுகிற் கலாபம் வீக்கி சீவக. 624

ஆரந்துயல்வர வந்துகில் சோர்தர சீவக. 631

நுண்டுகில் அல்குல் சீவக. 631

நுரை கிழித்தனைய நொய்ம்மை வெண்டுகில் சீவக. 699

தூமமார்ந்த துகிலுறை நல்யாழ் சீவக. 719

வாட்கணீர், தோழித் தூத்துகிற் றோகையினீக்கினாள் சீவக. 762

நிணத் துகில் உடுத்து சீவக. 803

உடுப்பன துகில்களு முரைக்குநானமும் சீவக. 831

ஆவியந்துகிலார் அமர்ந்தார்களே சீவக. 873

தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குல் சீவக. 875

தட்டிடை அந்துகின் மூடியதன் பினர் சீவக. 880

குருதித்துகிலின் உறையைக் கொழும் பொன்
                                                                  விரலின் நீக்கி சீவக. 926

பூந்துகிலார்ந்த தோணி சீவக. 967

நெகிழ்ந்து சோர் பூந்துகில் நோக்கியே சீவக. 1004

புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலால் சீவக. 1015

தூமங்கமழ் பூந்துகில் சோர அசையாத் சீவக. 1071

புகைநிறத் துகிலிற் பொன்னாண் டுயல்வர சீவக. 1077

பாலாராவிப் பைந்துகில் ஏந்திய சீவக. 1094

பான்மலிந்த வெம்முலைப் பைந்துகில் அரிவையர் சீவக. 1105

மணியியல் யவனச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கி சீவக. 1146

பூந்துகிற் மகளிரிற் பொலிந்து போர்த்ததோர்
பேய்வனம் பெரிய காண்டியே சீவக. 1181

துன்னினராட்டிச் செம்பொற் செப்பினிட்டுகிலுஞ் சாந்தும்
இன்னறும் புகையும் பூவும் கலத்தொடும்
                                                              ஏந்தினாரே சீவக. 1299

புகைய வாவிய பூந்துகில் ஏந்து அல்குல் சீவக. 1307

பானிறத் துகில் பையர வல்குலார் சீவக. 1361

கோடி நுண்டுகிலுங் குழையும் நினக்கு சீவக. 1369

அரைவ வெண்டுகில் ஆக்கினான் இருதுணி சீவக. 1409

வெண்ணிறத் துகிலிலாங்கண் வீழ்ந்து மாசாகி நின்ற சீவக. 1433

நுண்டுகில் வேதலஞ்சி நெருப்பகம் பொதிந்து நோக்கி சீவக. 1434

அகழ் கிடங்கு அந்துகில் ஆர்ந்த பாம்புரி
புகழ் தரு மேகலை சீவக. 1444

பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம் முலை சீவக. 1492

பைந்துகின் முடி அணிந்தவர்பின் உலவு சீவக. 1558

நெடுந்துகில் விளிம்பொன்று ஏந்தி சீவக. 1568

சிறுநுதற் புருவ மேற்றாச் சேர்துகிற் றானைசோர சீவக. 1572

மாசில் வெண்டுகிலை நீர் தோய்த்து சீவக. 1649

தூமமார்ந்த துகிலணைப் பள்ளி மேற் சீவக. 1715

மணிபொதி துகிலிற் றோன்று மஞ்சு சூழ்வரைகள் சீவக. 1742

அந்நுண்டுகிற் கல்லரத்த அல்குலது வருத்த
செந்நுண்டுசி லுத்தரியம் புதைந்து சுவல்வருத்த சீவக. 1783

பைந்துகின் மகளிர் தேன் சோர் பவளவாய் சீவக. 1819

பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை சீவக. 1855

தொடுகழற் குரிசினோக்கித் தூத்துகில் வீசினான் சீவக. 1863

வேய் நிறத் தோளினார்க்கு வெண்டுகில் மாலை சீவக. 1892

பூந்துகில் மாலைசாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப் பட்ட அடிசில் நீர் இன்ன
                                                           வெல்லாம் சீவக. 1896

சூழ்ந்த காக தோன்ற வந்துகின் னெகிழ்ந்து சீவக. 1958

தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை சீவக. 1966

நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில் சீவக. 1982

மேனிகிளர் வெண்டுகிலும் விழுப்பொலிய நூலும் சீவக. 2024

கூந்தலகிற் புகையும் துகிற்கொழுமென்னும் புகையும் சீவக. 2032

நுண்டுகில் நெகிழ்ந்த அல்குல் மணிபரந்திமைப்ப சீவக. 2086

துளங்கொளி மாடத்துச்சித் துகிற் கொடி நுடங்கும்
                                                                           வீதி சீவக. 2129

அம்புகை யார்ந்த அந்துகில் அல்குல் சீவக. 2332

மண்கேழ் மணியினுழையுந் துகினூலின் வாய்த்த சீவக. 2346

விளங்கு வெண்டுகில் உடுத்து சீவக. 2388

பூந்துகில் புறம் போர்த்தன போன்றவே சீவக. 2395

பரந்து பூந்துகில் பன்மணிக் கலம்
சுரந்து கொள்கென சுமக்க நல்குவார் சீவக. 2401

மடியிருந் துகிலுடை மாக் கணாடியும்
புடைதிரள் பூரண குடமும் பூத்தவே சீவக. 2406

மின்னிருந் துகிலேந்தி சீவக. 2434

கரையுடைத் துகிலிற் றோன்றும் காஞ்சன வட்டின் சீவக. 2467

தூமணித் துகில்களார்ந்த வலம்புரித் துலங்குசெப்பும் சீவக. 2475

தோக்கையந் துகிலினாடன்றுணை முலை
                                                 பொருதுசேந்த சீவக. 2477

குறங்கினிற் வைத்துத் துகிலினிற் றுடைத்துத்
                                                                      தூய்தா சீவக. 2496

கடிமலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே சீவக. 2501

தூமம் கொப்புளிக்கும் துகிற் சேக்கைமேல் சீவக. 2505

பானுரைய்யன பைந்துகில் அணிந்தான் சீவக. 2520

வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட்டு அழுவதுபோல் சீவக. 2625

பைந்துகில் நூலினால் இயன்றன நுனித்த
                                                            வெண்மைய சீவக. 2634

பானிலாக் கதிரென வம்மென் பைந்துகில் சீவக. 2635

பூந்துகில் ஒரு கையேந்திப் புகுமிடம் காண்டல்
                                                                   செல்வார் சீவக. 2660

பூக்கமழ் துகிலுந் தோடு மாலையும் சொரிய சீவக. 2661

பண்ணுரை மகளிர் மாலை பைந்துகில் மாலை
                                           கவர்ந்துகொள்ள சீவக. 2663

கள் செய் மாலையார் கண்கொளாத் துகில் சீவக. 2685

தூநிறத் துகிலின் மூடிப் படலிகை சீவக. 2707

வெண்டுகில் மாலை சாந்தம் விழுக்கலம் சேர்த்தி சீவக. 2734

பொடிப் புகைத் துகிலின் நீக்கி சீவக. 2827

வங்க வான்றுகில் பொதிமணி செய் பாவைபோல் சீவக. 2832

துகினெருப்புற்றதே போல் மின்னுத்தார் மார்பன் சீவக. 2880

கோதையும் துகிலும் ஏந்தி குங்குமம் எழுதி சீவக. 2948

பைந்துகின் மகளிர் மேவார் சீவக. 2973

ஏந்து துகிற் புகையும் மாலைக் கிடும் புகையும் சீவக. 2977

கழுமிய துகிலின் காமன் கண்புடைத்திரங்கமாதோ சீவக. 2993

பூந்துகில் புனைகல மாலை...அருவி சீவக. 2997

மணியுறை கழிப்பதுபோல் மங்கலப்
பணிவரு பைந் துகினீக்கிப் பாற்கடல் சீவக. 3028

மலிந்த நலிமாலைகள் வண்ணப் பூந்துகில் சீவக. 3029

சேற்றால் எறிந்து வளைதுகிற் கைக்கொண்டு நாலா. திவ். பெரி. திரு. 2:10:1

வண்டமர் பூங்குழலாக துகில் கைக் கொண்டு நாலா. திவ். பெரி. திரு. 2:10:2

கொய்யார் பூந்துகில் பற்றி நாலா. திவ். பெரி. திரு. 3:1:4

துகிவேந்திள முலையுமென் வசமல்லவே நாலா. திவ். பெரி. திரு. 8:4:4

உடை நெகிழவோர் கையால் துகில்பற்றி நாலா. திவ். பெரி. திரு. 3:6:2

விசும்பில் வெண்துகிற் கொடியென நாலா. திவ். பெரி. திரு. 1:4:3

அணிமலர்க் குழலார்......
            துகிலும் ஆரமும் வாரி வந்து நாலா. திவ். பெரி. திரு. 1:4:4

துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் நாலா. திவ். பெரி. திரு. 3:8:8

அரிமலர்க் கண்ணீர் ததும்ப அந்துகிலும்
                                நில்லாவே நாலா. திவ். பெரி. திரு. 9:4:4

பந்து பறித்து, துகில் பற்றிக் கீறி நாலா. திவ். பெரி. திரு. 10:7:5

பூந்துகில் வாரி கொண்டிட்டு நாலா. திவ். பெரி. திரு. 10:7:11

பிழிந்துதறித் துகிலுடுத்தேறினர் நாலா. திவ். தொண்டர் திருப்பள்ளி 10

துகில் வண்ணத் தூநீர்ச்சேர்ப்பன் திருவாய். 7:2:11

சூழு மரவத் துகிலும் துகில் கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவளஞ்ச வஞ்சா தேவா. திரு. 2:9

போழிளங் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும்
                                                                             பாடி தேவா. திரு. 3:2

உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்றினி காண்
                                                            பதென்னே தேவா. திரு. 80:3

சீறு கோவண வைதுகிலாடையர் தேவா. திரு. 150:3

துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொல் தேவா. திரு. 312:2

நனைவார் துகிலும் இவை நாளுமிரா நந்திக். 13

துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் நந்திக். 63

அடிவிளக்கும் துகிலாடை விளக்கும் நந்திக். அதிகம். 4

மறிஉடை ஆயர் மாதர் வளைதுகில் வாரும் நீரால் கம்ப. 26

துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கம்ப. 76

முழுத் துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ கம்ப. 128

வாய்ந்த நல்துகிலொடு வரிசைக்கு ஏற்பன ஈந்தனர் கம்ப. 276

துகிற்கொடி மிதிலை மாடத்து உம்பரில்
                                                   துவன்றி நின்ற கம்ப. 567

கழல் இடு கூந்தலும் துகிலும் சோர்தர கம்ப. 606

வேலை வெண்முத்தும் பொன்னும் காகம்
                                                             நுண்துகிலும் வீசி கம்ப. 786

தொடர்ந்து பூங்குழல்களும் துகிலும் சோர்தர கம்ப. 805

சந்த நுண்துகிலும் வீழத் தளிர்க்கையால் அணைத்து கம்ப. 870

துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி கம்ப. 924

புனை நறுந் துகில் பூணொடுந் தாங்கினார் கம்ப. 1043

சரிந்த பூந்துகில்கள் தாங்கார் கம்ப. 1149

துகில் ஒன்றும் தாங்கி நின்றாள் கம்ப. 1159

ஆரமும் துகிலும் கலன் யாவையும் சோர கம்ப. 1188

சித்திரம் நிரை தோயும் செந்துகில் புனைவாரும் கம்ப. 1280

புனைதுகில் உறைதொறும் பொதிந்து தோன்றின கம்ப. 1527

பல்நிறத் துகிலிவைப் பறித்து நீக்கினர்
சின்ன நுண்துகிலினைப் புனைகின்றார் சிலர் கம்ப. 1885

தோகையர் துகிலிற் றோய்க்கு மென்பதோர்
         துணுக்கத் தோடும் கம்ப. ஆரணிய. 567

செறிபுனல் பூந்துகில் திரைக்கையால் திரைத்து கம்ப. 4368

கொண்ட பூந்துகிலும் கோவைக் கலன்களும் சோர கம்ப. சுந்தர. 283

அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி கம்ப. சுந்தர. 284

வெப்பினாற் புலர்ந்தொரு நிலையுறாத
                                            மென்றுகிலாள் கம்ப. சுந்தர. 337

ஆவியந்துகில் புனைவதொன்றன்றி வேற்றியாள் கம்ப. சுந்தர. 340

உடுத்த துகிலொடும் உயிர்உக்க உடலோடும் கம்ப. சுந்தர. 549

தன்றிருத் துகிலிற் பொதிவுற்றது கம்ப. சுந்தர. 685

நீரிடு துகிலர் அச்சநெருப்பிடு நெஞ்சர் கம்ப. சுந்தர. 745

சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய கம்ப. சுந்தர. 1085

நிலவிளக்கிய துகிலிளை நெருப்புண கம்ப. சுந்தர. 1206

வைத்த பின் றுகிலின் வைத்த மாமணிக்கரசை
வாங்கி கம்ப. சுந்தர. 1290

சுடு தியைத்துகிலிடைப் பொதிந்த துன்மதி கம்ப. 6536

கலன்களோடும் அச்சாத்திய துகிலோடும் கம்ப. 6710

நீல வான்றுகிலினை நீக்கி கம்ப. 6772

நனைந்த செந்துகில் பூண் உறும் அல்குலில்
          பொருந்திப் போதலால் கம்ப. 6816

தசைக் கொளீஇ கடல்நுரைத் துகில் சுற்றி கம்ப. 7471

தாங்கிய துகிலார் மெள்ளச் சரிந்து வீழ்குழலார் கம்ப. 8412

யாணர்ப் பூந்துகி லோடும் பூசல் மேகலை சிலம்பு
         பூண்ட மாந்தளிர் எய்த கம்ப. 89

கோத்த மேகலையினொடும் துகில் மணிக் குறங்கை கம்ப. 8960

துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி கம்ப. 8967

திசை உறு துகிலது கம்ப. 9930

தோரணம் நட்டு மேல் துகில் பொதிந்து கம்ப. 10368

வாங்குதும் துகில் என்னும் மனம் கம்ப. 10465

துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் சூளா. 41

மின்னுப் பூந்துகில் பொலிந்த அல்குல் சூளா. 537

தோ மறிந்த சூழ் துகின் நெகிழ்ந்துடுத்து சூளா. 487

கோடி மென்றுகில் குய்யத் தடம்படிந்து சூளா.621

கண்டிரள் முத்தொடு காழகந் துகில் சூளா. 664

தமர்மொதிந் தெனத் துகிறரித்த காஞ்சியர் சூளா. 755

பாவு செந்துகிலுடைப் பற்றி போலுமே சூளா. 756

மாலைகள் துணர் கொளப் புனைவள துகிலிடை
                                                       புடைசோர சூளா. 886

மெல்கு பூந்துகில் விரித்தவா வருகின்ற சூளா. 887

பைந்துகிற் கதலிகை பரந்து தோன்றுவ சூளா. 953

தெளிந்த வாறெழுதிக் கொண்டு செந்துகில்
                                               உறையின் மூடி சூளா. 1006

துகிலிகைத் தொழில்கள் நோக்கி சூளா. 1009

அந்துகில் அசைத்ததோர் கை யவிழ்ந்தசைகின்ற
                                                                        தென்னும் சூளா.1024

துகிலார் கொடி சூளா.1078

செழுவரை செறிய முன்னுடுத்த செந்துகில் சூளா. 1516

ஏகாயமிட்ட வெண்டுகிலின் மகளிருழை நின்றேத்த சூளா. 1534

துன்னுபு தொடர்ந்து துகில் பற்றுபு கொணர்ந்தார் சூளா. 1614

நுண்ணூற் றுகிலிகை தெளிப்ப வாங்கி சூளா. 1637

மாலையும் துகிலும் வாரிவார் புனல்ஒழுகும்
                                                           போழ்தின் சூளா. 1680

அருமணிக் கலாப வல்கு லவிழ் துகிலசைத்து சூளா. 1681

ஆவியம் புனைதுகில் அல்குல் மேலுடீஇத் சூளா. 1689

அல்குல், மயங்கிருட் டுகிலை வாங்கி சூளா. 1702

வம்பத் துகிலின் வடம் சூழ்ந்து சூளா. 1754

கொய்போலத் துகிலசைத்த கொய்சகம்
                                                   தாழ்ந்தாட சூளா. 1755

அந்துகி லினிடைத் தோயுமகல் குல் தீண்டும் சூளா. 1756

வெண்டுகிலுடுத்து வெண்சாந்து மெய்வழி சூளா. 1874

வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர் சூளா. 2051

மூடிய நாற்றிசை முகிற்றுகில் விரித்து கல். 14:3

மருங்கிற் பாதிதருந் துகில் புனைந்தும் கல். 20:21

வெண்டுகி னுடங்கிப் பொன் கொழித்திழியும்
அருவி கல். 22:35-6

மண்மகள் களையா துடுக்கும் பைந்துகிலாகி கல். 23:14-15

துகினன்கு நுடங்கு மருவியேற்று கல். 28:23

கட்கயல் விழித்துப் பூந்துகின்மூடி கல். 42:24

கரியோன் கடுப்ப துகில் கவர்ந்தொளிர கல். 87:5

சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் மூவரு. 1:339

பைந்துகில் தானைப் பிடித்தலைக்கும் போதில் மூவரு. 418.9

காக்கும் துகிலும் இலங்கு பொலன் கலையும் மூவரு. 437

பட்டும் துகிலும் சுரப்ப மூவரு. 458

பைந்துகிற் காசுசூழ் அல்குற் கலையே மூவரு. 654-55

நின் சோணாட்டுப் பொற்பின் மலிவன பூந்துகிலும் மூவரு. 667

தூசும் துகிலும் கொடியும் மூவரு. 2:400

நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பா நின்
பொற்றுகிற்றந் தருளிப் போதென்பார் மூவரு. 435.6

உடுக்கும் துகிலும் சரியாமே மூவரு. 450

செம்பொற்றுகிலும் சரிந்தாள் மூவரு. 501

கருந்துகில் அக்கோவியரைக் கொள்வாய் கமலை
தருந்துகில் நோக்கத் தகாதோ மூவரு. 507-8

ஏந்து துகில் ஒன்றுடுததாளோ வில்லையோ மூவரு. 631

நெய்யாத பூந்துகினீக்கும் மூவரு. 674

தூசும் துகிலும் தொடியும் மூவரு. 23:425

வெண்டுகிலும் காஞ்சியும் மேகலையும் மூவரு. 543

புவனி விலையாய பொற்றுகிற்கெல்லாம் மூவரு. 659

துகிலசைந்த நானும் மூவரு. 723

துகிலேந்தி யேந்தும் துணைச் சிலம்பார்ப்ப தஞ்சை. 27

நுரைப்பால் முகந்தன்ன நுண்டுகிலாய் தஞ்சை. 217

வெண்டுகிலின் பாலாரமளியும் தஞ்சை. 366

ஒரு கை கீழலை செய்துகிலோடு கலிங். 46

அரையில் துகில் வீழ
சுற்ற நிணத்துகில் பெற்றனம் கலிங். 376

துகிலின் மேல் வரு துகிற்குல மொக்கும் கலிங். 289

நிணத்துகிலால் வடித்துக் கூழை வாரீரே கலிங். 566

துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித்தன்
                                                    தூயசெங்கை
உகிர்நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்
                                           சிகழி ஆர்த்தான் பெரிய. தடுத். 5-16

வெண்துகிலுடன் குசைமுடிந்துவிடு வேணாத்
தண்டொருகை கொண்டு பெரிய. தடுத். 15-31

பொன்னும் முத்தும் நன்மணிகளும் பூந்துகில்
                                                                      முதலா
எந்நிலத்திலும் உள்ளன வருவளத்தியல்பால் பெரிய. அமர். 2

இலங்கு பூந்துகில் கொள்வதற் கிசைந்தருள் செய்யீர் பெரிய. அமர். 830

பலவும் வென்துகில்பட்டுடன் இடஇட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்துமேல் இட்டார் பெரிய. அமர். 34

ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உள
                                                            அரங்கம் பெரிய. மானத். 5

நறுந்துகில் கொண்டு கண்கட்டிவிட்டார் பெரிய. மூர்த்தி. 31

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினர் பெரிய. திருநாவு. 421

செம்பொன்னும் நவமணியும் செழுந் துகிலும் முதலான
தகுதியின் வேண்டுவ கொடுத்தும் பெரிய. காரைக். 15

நிவந்த நீல நுண்துகில் விதானித்தது போன்றது பெரிய. திருஞான. 152

புடை இரண்டினும் கொடியோடு பூந்துகில் விதானம்
மிடையுமாலைகள் நிறைகுடம் விளக்குகொடு நிரைத்தார் பெரிய. திருஞான். 234

பொன்னும் முத்து மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி பெரி. திருஞான. 1070

போது சாந்தணி பூந்துகில் புனைந்த புண்ணியம்போல்
மீது பூஞ்சயனத் திருந்தவர் முன்பு போல் பெரி. திருஞான. 1186

நற்றிரு உத்தரீய நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவை சாந்தம் பான்மையின் அணிந்தபின்னர் பெரிய. திருஞான். 1209

துகில் புனை விதான நீழல் தூமலர்த் தவிசின் மீது பெரிய. திருஞான. 1231

விரிவெண் துகிலின் மிசை வைத்த விமலர் பார்த்தங்கருள்
                                                     செய்வார் பெரிய. சிறுத் தொண்ட. 73

ஓங்கிய, பொன்நவமணிகள் ஒளிர்மணிப் பூண் துகில்
                                                                    வருக்கம் பெரிய. கழறிற். 102

கரிபரித் தொகை மணிதுகில் சொரிவதாங் கலத்தால் பெரிய. அதிபத்த. 3

பதிகொண்ட சுற்றத்தார்க் கெல்லாம் பைந்துகில் நிதியம்
அதிகந் தந்தளிப்பதனுக் கழைமின்கள் கோட்புலி -7

துணி

மின்னுக் கொடிகள் துகிற் கொடிகள் விழவிற் காடு மூர்க்க. 1

நெருநற் றுணியரைச் சுற்றி நந்திக். 23

இவுளித்துணியிட்டு இருமருங்கும் கலிங். 552

தூசு

பாசிழைப் பகட்டல்குல்
தூசுடைத் துகிர்மேனி பட். 147-8

தூசுந் துகிரும் சிலப். 5-18

மேகலை விரீஇய தூசு விசியல்குல்
நீருடைக் களைதல் செல்லார் கலங்கி பெருங். 1:44:6-7

தொட்டிமை கலந்த தூசுவிரியல்குல் பெருங். 1:50:8

தூசுசூழ் பரவை அல்குல் சீவக. 109

தூசுலாய்க் கிடந்த அல்குல்
வருமுலைச் சாந்து நீக்கி சீவக. 550

தூசினால் அங்கை நீவியிருந்தனன் தோற்றமிக்கான் சீவக. 1302

தூசுலா அல்குலான் சீவக. 1451

தூசுலாம் பரவை அல்குல் சீவக. 1539

தூசுலா மல்குற் றிண்ட சீவக. 1987

தூசுறு பரவை அல்குற் றூமணிக் கொம்பனாள் சீவக. 2080

தூசுலாம் பரவை அல்குல் துணைமுலை
                                              மகளிரொடும் சீலை. 2268

தூசுபோல் சிறகன்ன சீவக. 2719

தூசார்ந்த வல்குற் றுளும்பும் நலந்தாரொடு சீவக. 2886

தூசுமழுக்காச்சி யங்கமங்காடிக் கிட்ட நந்திக். அதிகம். 18

தூசிலாக் கோலந்தூய்மை நறையிலா மலருங்கல்வி கம்ப. 183

அவர்க்கு அணி, தூசு ஆதிஆய் பாங்குள
                                                    மற்றனவ அருளி கம்ப. 218

தூசொடும் அணியும் முந்நூல் தோல்
                           தரும் தோற்றம் போன்றும் கம்ப. 674

பொன்திணிகலன்களும் தூசும் போக்கினான் கம்ப. 821

மெய்யைச் சுதைக்கண் நுரையைப் பொருவும்
தூசுகொடு தூய்து ஆய் உதிர்த்தனர் கம்ப. 913

தூசினொடு வெண்படம் உடைக் குடில்கள்தோறும்
வாசமலர் மங்கையர் முகங்கள் கம்ப. 915

வடகத்தோடு உடுத்த தூசும் மாசுஇல் நீர் நனைப்ப கம்ப. 955

தூசுவீசி நிறைஅகல் அல்குல் புல்கும் கலன் கழித்து கம்ப. 1102

பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள கம்ப. 1103

வீக்கிய கலனும் தூசும் வேறு வேறு ஆனது ஓராள் கம்ப. 1162

விரிந்து ஒளிர்காசு பொன்காசு வீசினர் கம்ப. 1320

கண்அகல் நாடும் ஓடு காசு உயர் துரசும்
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக என்றார் கம்ப. 1342

துன்னு தூசினொடு சந்திவை சுமந்த சனகன் கம்ப. ஆரணிய. 5

தூசுறையிட்டது போன்று தோன்றிற்றே கம்ப. சுந்தர. 154

பொன்னிறத் தூசு கருவரை மருங்கில் தழுவிய
                                       விளவெயில் பொருவ கம்ப. சுந்தர. 413

மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
வயங்கு நுண் ரூசொடு காசும் கம்ப. சுந்தர. 42_3

புன்றொழில் அரக்கண் கொண்டு போந்த
                                   நாட்பொதிந்த தூசில் கம்ப. சுந்தர. 522

தொழுது வாங்கினன் சுற்றிய தூசினன் கம்ப. சுந்தர. 690

தூசினுத்தரீகத் தொடுஞ் சுற்றுறா கம்ப. சுந்தர. 1205

பாசிழை மடந்தையர் பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்
                                                        வுற்றே கம்ப. சுந்தர. 4324

சுண்ணமும் தூசும் வீசி சூடகம் தொடிக்கைம்
                                                    மாதர் கம்ப. சுந்தர. 4475

பொன்னினின் முத்தினின் புனை மென் தூசினன்
                                                                 மின்னின கம்ப. சுந்தர. 4495

சவிவுடைத் தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர்இழைக் குப்பையும், அளவிலாதது கம்ப. சுந்தர. 4661

மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடி ஆயிரம் ஈகுவெனால் கம்ப. சுந்தர. 7899

உத்தரிகத் தொடு, தூசுவீசினர் கம்ப. 8262

தேவர், எல்லாரும் தூசு வீசி ஏறிட ஆர்த்தபோது
கொல்லாத விரதந்தவர் தம் கடவுளர் கூட்ட
                                                         மொத்தார் கம்ப. 9307

வடகமும் தூசும் வீசினர்; துதித்தனர் கம்ப. 9993

கருவிளைமலரின் கட்சிக்காக அனு தூசும் காமர்
திருவிளை அல்குற்கு மேகலைத் தழுவச்சேர்த்தார் கம்ப. 10140

கோவொடு தூசு நல்குல மணிக் குலம் யாவும்
                                                            நல்கினான் கம்ப. 10356

கொம்புடை மலையும் தேரும் குரகதக் குழுவும் தூசும்
அம்பரம் தன்னை நீத்தான் அலரிகாதலனுக்கு
                                                                    ஈந்தான் கம்ப. 10512

மன்னும் நுண்தூசும் மாவும் மதமலைக் குழுவும்
                                                                            ஈயா கம்ப. 10514

புனைமென் தூசும் வன்திறல் சீயமும் மாவும்
                                                       வழங்கினன் கம்ப. 10516

கந்து அடுகளிறு, வாசி, தூசு அணிகலன்கள் மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவி
                                                                                னானே கம்ப. 10518

நவமணிக் காழும் முத்துமாலையும் நலம்கொள்
                                                                        தூசும் கம்ப. 10519

ஒளிமணிப்பூணும் தூசும்...... தனக்குத் தந்தான் கம்ப. 10521

வளன் அணிகலனும் தூசும் மாமதக் களிறும் கம்ப. 10522

பொன் திணி தூசும் வாசக் கலவையும்
புது மென் சாந்தும்...... ஈந்தான் கம்ப. 10525

தூசிடை மணிக் கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவனிருக்கை எய்தினான் சூளா. 194

பாசிலை மென்றழைப் பள்ளியுள் பாவையா
தூசினுணின்று சொரிமணிக் கோவையும் சூளா. 291

தூசினாற் றுளும்பு மல்குற் சுதஞ்சனை சுடரும்
                                                                பூணாய் சூளா. 536

தூசினொரு சூடக் கொடுக்கும் மூவரு. 1.141

தூசுபுடை பெயர்ந்து மூவரு. 1.656

தூசுறையின் மரகதமொப்ப மூவரு. 2.652

நீடிய தூசுகள் வெள்ளென்று தூயன மூவரு. 3.361

தூசும் துகிலும் தொடியும் சீவக. 4-5

தூசியுமிட்டு நின்றாடினவே கலிங். 586

சொன்னவர்க் கெல்லாம் இருநிதித் தூசுடன் அளித்து பெரிய. திருஞான. 1052

சொன்னவர்க் கெலாம் தூசொடு காசு
                                     பொன்னளித்தே பெரிய. திருஞான. 1070

விண்ணினை விழுங்க மிக்க வெண்துகிற்பதாகை வெள்ளம்
............
எண்ணிலா வண்ணத் தூகின் பொதிப் பரப்பொங்கும்
                                                        நண்ண பெரிய. திருஞான. 1201

பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும்
                                  பொழிந்தளித்தார் பெரிய. வெள்ளானை. 16

தூசுடைய துகள் மாசு கழிப்பார்போல் பெரிய. திருக். குறிப்பு. 114

தோ

தோ மறிந்த சூழ்துகின் நெகிழ்ந்துடுத்து சூளா.487

தோக்கை

நீடாழ்பு தோக்கை பரி. 22:49

தோக்கையந் துகிலினாள் தன் சீவக. 2477

தோகை

தூசுலா நெடுந் தோகையின ல்லவர் சீவக. 1320

தோகை செம்பொனிலந்திவள சீவக. 2698

தோல்

கொலையுழுவைத் தோலசைஇ
வரி கிளர் வயமான் உரிவை தைஇ அகம். கட. வாழ்த். 14

விளைக்கு வேண்டி நீ பூண்ட புலப்புல்வாய்
                                   கலைப் பச்சை புறம். 166

மானின் ரிவை தைஇய ஊன் கெடு
                                 மார்பு திருமுருகு. 128

வரியும் புள்ளியும் மயங்கு வான்புறக்
துரிவை மேகலை யுடீஇ சிலப். 12:29-30

கரியினுரிவை போர்த்து சிலப். 12:61-62

ஆனைத் தோல் போர்த்துப் புலியினுரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலை மேனின்றயால் சிலப். 12 பாடல் எண் 8

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழ நாலா. திவ். பெரி. திரு. 4:4:7

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் நாலா. திரு. பெரி. திவ். 10:9:4

முப்புரி நூலொடு மானுரியிலங்க நாலா. திவ். பெரி. திரு. திருமங்கை. திருவெழு. 7

அவனு மொரைய முண்ணியதளாடையாயதன்
                                         மேல் ஓர் ஆடரவம் தேவா. திருநா. 2:9

வேழவுரி போர்த்தே யிவராடுமாறு மிவள்
                                         காணுமாறு தேவா. திருநா. 8:3

உறைலது காடு போலு முரி தோலுடுப்பர் தேவா. திருநா. 8:5

கடமாவுரித்த வுடைதோறொடுத்த கலனார் தேவா. திருநா. 8:8

மதயானையுரிபோர்த்துப் பேய் வாழ்
         காட்டகத்தாடும் பிரான் தேவா. திருநா. 9:5

பொறியுறு புலியுரி யரையதாகவும் தேவா. திருநா. 10:9

கொல்லேற்றின் கொடியாடைப் பூவை காண் தேவா. திருநா. 12:8

சிறுமானுரியாடை கம்பட்டசைத்தானை தேவா. திருநா. 19:6

வேழத்துரி போர்த்தான் தேவா. திருநா. 19:7

பூதஞ்சூழப் புலியுரியதளனார் தேவா. திருநா. 22:5

மதக்களிற்றுரிவை போர்த்த மைந்தரைக்
                                         காணலாகு தேவா. திருநா. 22:7

இரும்பு கொப்பளித்த யானை யீருரிபோர்த்தஈசன் தேவா. திருநா. 24:1

ஆனையுரிவை போர்த்தாரதிகை
                                    வீரட்டனாரே தேவா. திருநா. 25:3

அத்தியினுரிவை போர்த்தாரதிகை
                                          வீரட்டனாரே தேவா. திருநா. 25:5

மடக்கினார் புலியின் றோலை தேவா. திருநா. 27:1

ஆனையினுரிவை வைத்தார் தேவா. திருநா. 23:1

உரித்திட்டார் ஆனையின் றோலுதிரமாறு ஒழுகியோட
விரித்திட்டார் தேவா. திருநா. 32:1

காருரி போர்த்த வீசர் தேவா. திருநா. 36:8

பாய் புலித் தோலும் வைத்தார் தேவா. திருநா. 38:3

கொல்புலித் தோலும் வைத்தார் தேவா. திருநா. 38:8

தொண்டலாற் றுணையுமில்லை தோலலாது
                                      உடையுமில்லை தேவா. திருநா. 40:4

கரியலாற் போர்வையில்லை தேவா. திருநா. 40:5

புலியுரி வரையினானே தேவா. திருநா. 51:5

வேழத்தினுரிவை போர்த்து தேவா. திருநா. 53:2

புழைகைய போர்வை போர்த்து தேவா. திருநா. 55:4

கொல்புலித் தோலர் போலும் தேவா. திருநா. 56:2

பாய் புலித் தோலர் போலும் தேவா. திருநா. 56:7

கரியுரி போர்வையாகக் கருதிய காலகாலா தேவா. திருநா. 63:6

புலியதளுடையர் போலும் தேவா. திருநா. 66:3

வெம்பனை கருங்கையானை வெருவ
                           வன்றுரிவை போர்த்த
கம்பனைக் காலாற் காய்ந்த காலனை தேவா. திருநா. 71:6

படமலியரவர் போலும் பாய்புலித்
                             தோலர் போலும் தேவா. திருநா. 72:4

கரியுரி யுடையர் போலும் தேவா. திருநா. 72:6

மழகளி யானையின் றோல் மலை
               மகணவெகப் போர்த்த தேவா. திருநா. 74:8

புலியுரி யரையனாரை தேவா. திருநா. 77:2

புலியதலின் உருவிடை யம்மலை
                       மங்கை மணாளன் தேவா. திருநா. 80:2

புலியின்னுரிதோல் உடுத்திருந்தாய் தேவா. திருநா. 87:10

படுத்த புலியுரித் தோலுடையன் தேவா. திருநா. 89:7

பாய் புலித் தோலுடையும் தேவா. திருநா. 112:1

துளைக்கை வேழத்துரி யுடல் போர்த்தவர் தேவா. திருநா. 120:5

கண்டத்தன் கரியின்னுரி போர்த்தவன் தேவா. திருநா. 122:2

பற்றி னாரர வெம்புலி தோல்மிசை
சுற்றினார் தேவா. திருநா. 137:3

பனையினீருரிப் போர்த்த பரமர் தேவா. திருநா. 137:5

பற்றியாடுவார் பாய்புலித் தோலினர் தேவா. திருநா. 130:4

உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர் தேவா. திருநா. 138:9

போக வானையின் ஈருரி போர்த்தவர் தேவா. திருநா. 141:2

பனைக்கை வேழத்துரியுடல் போர்த்தவர் தேவா. திருநா. 141:4

வேழ வீருரி போர்த்ததோர் வண்ணமும் தேவா. திருநா. 142:8

ஆரித்த தோலுடை கட்டியோர் வேடனாய் தேவா. திருநா. 146:2

அருவனாய்த் தியீருரி போர்த்து தேவா. திருநா. 149:1

பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர் தேவா. திருநா. 150:8

தோலுடை யாடையர் தேவா. திருநா. 152:3

வேழத்தினுரி போர்த்த விகிர்தனார் தேவா. திருநா. 155:5

பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர் தேவா. திருநா. 160:8

கவள மாகளிற்றின்னுரி போர்த்தவர் தேவா. திருநா. 165:2

பைங்கண் ஆனையினீருரி போர்த்தவர் தேவா. திருநா. 167:9

வேங்கைத் தோலுடையாடை வீரட்டரே தேவா. திருநா. 168:4

புள்ளி கொண்ட புலியுரி யாடையும் தேவா. திருநா. 169:2

பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் தேவா. திருநா. 178:5

படையும் பூதமும் பாம்பும் புல்லாயதள்
உடையும் தாங்கிய உத்தமனார் தேவா. திருநா. 181:1

வாரணத்துரி போர்த்த மணாளனார் தேவா. திருநா. 182:2

பூத நாதன் புலியதளாடையன் தேவா. திருநா. 185:2

வாரணத்துரி போர்த்த மணாளனார் தேவா. திருநா. 194:2

பாய் புலித் தோலினர் தேவா. திருநா. 201:1

கருமானினுரியதளே யுடையா வீக்கி தேவா. திருநா. 215:3

காரானை ஈருரிவைப் போர்வை யானை தேவா. திருநா. 215:8

கலா வெங்களிற்றுரிவைப் போர்வை மூடி தேவா. திருநா. 216:18

தோல் போர்த்து தேவா. திருநா. 216:11

களிறு தன்னைவதை கெய்து மற்றதன்
உரிவை கொண்டு ... போர்த்தானே தேவா. திருநா. 218:8

கொல் வேங்கை யதளனே தேவா. திருநா. 218:11

வேழத்துரி வெருவப் போர்த்தாய்
                                        போற்றி தேவா. திருநா. 219:6

வேழத்துரி மூடும் விகிர்தா போற்றி தேவா. திருநா. 219:7

கரியுரிவை போர்த்துகந்த காபாலி தேவா. திருநா. 222:7

தோலுடுத்து நூல் பூண்டு தோன்ற தேவா. திருநா. 223:1

புலித்தோலுடையாகப் பூதம் சூழ தேவா. திருநா. 223:5

களிற்றுரிவை மெய்போர்த்தார் தேவா. திருநா. 224:2

புலித் தோலுடையினார் தேவா. திருநா. 224:3

களியானை யுரிவை போர்த்தார் தேவா. திருநா. 224:6

திகழுமா மதகரியினுரி போர்த்தானை தேவா. திருநா. 225:10

புலித்தோலர் தேவா. திருநா. 226:4

மத்தகத்த யானையுரிவை மூடி தேவா. திருநா. 228:5

நல்ல புலியதண் மேனாகங் கட்டி தேவா. திருநா. 227:6

களிற்றுரிவை போர்வை வைத்தார் தேவா. திருநா. 227:1

புலியுரியின தள் வைத்தார் தேவா. திருநா. 228:2

காரானை யீருரிவை போர்த்தார் தேவா. திருநா. 230:2

புலித்தோலர் தேவா. திருநா. 231:6

களிற்றுரிவைப் போர்வை தோன்றும் தேவர். திருநா. 232:7

வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல்
                                              தோன்றும் தேவா. திருநா. 232:7

மால் யானை யுரிபோர்த்தானை தேவா. திருநா. 236:8

புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரி சேராடைப் புனிதன் கண்டாய் தேவா. திருநா. 237:4

கோவணமோ தோலோ உடையாவது தேவா. திருநா. 239:4

கருலரை போற் களியானை கதறக் கையால்
உரித் தெடுத்துச் சிவந்த தன்மதால்பொருந்த மூடி தேவா. திருநா. 239:11

பொருலேழக் களிற்றுரிவை போர்வை
                                                         யானை தேவா. திருநா. 240:3

கொல்புலித் தோலாடைக் குழகர் தேவா. திருநா. 242:1

கரியதோர் களிற்றுரிவைப் போர்த்தார் தேவா. திருநா. 242:2

துணியுடையர் தோலுடையர் என்பர் போலும் தேவா. திருநா. 242:3

வேழத்தின்உரி விரும்பிப்போர்த்தான் தேவா. திருநா. 243:2

கொல்புலித் தோலாடைக் குழகன் தன்னை தேவா. திருநா. 243:7

களிற்றுரிவைப் போர்வையான் தேவா. திருநா. 244:4

மதயானை ஈருரி வைப் போர்த்தாய் தேவா. திருநா. 246:2

மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளே தேவா. திருநா. 247:10

மதகரி யுரிவைப் போர்வையானை தேவா. திருநா. 248:1

புலித்தோலுடையாய் புகுந்து நின்றார் தேவா. திருநா. 249:4

கொல் வேங்கைத் தோலன்றசைத்தார் தேவா. திருநா. 250:1

கொல் வேங்கைத் தோலொன்றுடுத்தான் தேவா. திருநா. 253:4

வேழத்தினுரி விரும்பிப் போர்த்தான் தேவா. திருநா. 253:3

பதைப்ப யானை போர்த்தானை தேவா. திருநா. 256:6

யானை யுரிவை போர்த்து தேவா. திருநா. 259:5

கானார் களிற்றுரிவைப் போர்வை மூடி தேவா. திருநா. 261:6

உழையுரித்த மானுரி தோலாடையானே தேவா. திருநா. 261:7

களியானை யீருரிவை கதறப் போர்த்த
                                                      வானவன் தேவா. திருநா. 262:2

வேழத்தினுரி வெருவப் போர்த்தான் தேவா. திருநா. 263:3

போரானை யீருரிவைப் போர்வையானை
புலியதளே யுடையாடை போற்றினானை தேவா. திருநா. 264:1

வெண் கோட்டுக் கருங் களிற்றைப் பிளிறப் பற்றி
யுரித்துரிவை போர்த்த விடலை தேவா. திருநா. 265:40

கைம்மாலின் உரிபோர்த்தான் காண் தேவா. திருநா. 266:10

கைம்மாவினுரிவை பேணிப் போர்த்தனை தேவா. திருநா.268:2

கையானை மெய்த் தோலுரித்தாய் போற்றி தேவா. திருநா. 270:9

காட்டானை மெய்த் தோலுரித்தாய் தேவா. திருநா. 271:1

கொலை நவின்ற களியானை உரிவை
                                                 போர்த்து தேவா. திருநா. 272:2

நூலும் தோலும் துதைந்திலங்கு திருமேனி தேவர். திருநா. 272:3

உடையேறு புலியதண் மேல் நாகம் கட்டி தேவா. திருநா. 273:4

கொலையானை யுரிபோர்த்த கொள்கை
                                                   யானை தேவா. திருநா. 27-:9

முன்னானைத் தோல் போர்த்த முதல்வர் தேவா. திருநா. 276:4

வெம்மான மதகளியினுரிவை போர்த்த
                                            வேதியனே தேவா. திருநா. 276:5

மதகளிற் றினுரி போர்த்தானை தேவா. திருநா. 277:2

புலியதளினாடையானை தேவா. திருநா. 277:4

கரியினுரி போர்தித்தான் தேவா. திருநா. 278:7

உழுவையதள் உரிபோர்த்தான் தேவா. திருநா. 278:10

காரானை யுரிபோர்த்த கடவுள் தேவா. திருநா. 280:3

கொல் வேங்கை அதளானை தேவா. திருநா. 282:1

போர்த்தானையின் னுரிதோல் பொங்கப் பொங்கப்
புலியதளே யுடையாகத் திரிலான்றன்னை தேவா. திருநா. 282:6

புரையுடைய கரியுரிவைப் போர்வையானை தேவா. திருநா. 288:5

புலித்தோலாடையான் தேவா. திருநா. 290:6

சரியின்றோல் கொண்டூன் மறையப்
போர்த்த வடிவும் கண்டேன் தேவா. திருநா. 291:5

உடையாடை யுரிதோலே யுகந்தான் தன்னை தேவா. திருநா. 293:7

கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் தேவா. திருநா. 295:3

ஆனைத் தோலைப் போர்த்தான் காண் தேவா. திருநா. 299:1

உரித்தானை களிறதன்றோல் போர்வையாக
உடையானை யுடை புலியினதளேயாகத்
தரித்தானை தேவா. திருநா. 300:2

தும்பியிரி போர்த்தானை தேவா. திருநா. 304:10

கைம்மாவின் உரிவை போர்த்த
திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை தேவா. திருநா. 305:10

கொல் புலித் தோலாடைக் குழகனாகி தேவா. திருநா. 308:7

துணி புலித் தோலினை யாடை யுடையாகக் கொண்டார் தேவா. திருநா. 310:7

வலித் துடுத்த மான்றோ வரையிற் கண்டேன் தேவா. திருநா. 311:7

புலித்தோலுடை கண்டேன் தேவா. திருநா. 311:11

வேங்கை யதண் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த
உடையுடையான் தேவா. திருநா. 312:9

கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே தேவா. திருநா. 312:5

மான்றோலுடையாய் மகிழ்ந்து நின்றாய் தேவா. திருநா. 312:8

அரைக் கோவணத் தொடொடு தோல்புடை சூழ்தந்
தார்த்திட்டதும் தேவா. சுந். 2:1

துணி வண்ணத்தின் மேலுமோர் தோலுடுத்து தேவா. சுந். 2:8

அலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த
                                           தென்னே தேவா. சுந். 4:1

புலித்தோல் அரையில் வீக்கி தேவா. சுந். 6:1

வன்களிற்றைப் பீறிட்டமாகப் போர்த்தீர் தேவா. சுந். 6:6

குருதி சோர வானையின்றோல் கொண்ட குழற் சடையன் தேவா. சுந். 7:10

மானைத் தோலொன்றுடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு
யானைத் தோல் போர்ப்பதறிந்தோம் தேவா. சுந். 18:4

ஆர்த்தா யாடரவை யரையாற் புலியதண்மேற்
போர்த்தா யானையின் றோலுரிவை புலானாற தேவா. சுந். 23:6

பொன்னார் மேனியனே புலித் தோலையரைக் கசைத்து தேவா. சுந். 24:1

புலித்தோலை யரைக் கசைத்தீர் தேவா. சுந். 25:1

மறி சேர்க்கையினே மதமாவுரி போர்த்தவனே தேவா. சுந். 26:4

போராருங் கரியின்னுரி போர்த்துப் பொன்மேனியின் மேல்
வாராரும் முலையாளொடு பாக மகிழ்ந்தவனே தேவா. சுந். 28:4

மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே தேவா. சுந். 28:5

அத்தி யீருரி போர்த்திரோ தேவா. சுந். 36:8

கொல் புலித்தோலின் மேல் ஆடுபாம்பது அரைக் கசைத்த தேவா. சுந். 48:6

தயங்கு தோலையுடுத்த சங்கரா தேவா. சுந். 49:5

மத்தயானையின் ஈருரிபோரர்த்த மணாளன் தேவா. சுந். 50:1

காயும் புலியிதைனாடையார் தேவா. சுந். 53:2

மத்த யானையுரி போர்த்து தேவா. சுந். 53:5

கம்பமால் களிற்றின்னுரியானை தேவா. சுந். 55:10

கொலைக் கையானையுரி போர்த்துகந்தானை தேவா. சுந். 57:1

நடுங்க யானையுரி போர்த்துகந்தானை தேவா. சுந். 57:4

புலித்தோலுடையானை தேவா. சுந். 57:11

கரியின் ஈருரி போர்த்துகந்தானை தேவா. சுந். 61:13

கும்பமாகரியின் உரியானை தேவா. சுந். 68:1

வெய்ய மாக்ரியீருரியானே தேவா. சுந். 70:1

மரவுரி புலியதளரை மிசை மருவினன் தேவா. சுந். 72:2

உரவமுள்ள தொருழையின் னுரிபுலி யதளுடையானை தேவா. சுந். 75:8

கடமார் களியானை யுரி யணிந்த கறைக் கண்டன் தேவா. சுந். 80:2

அடுபுலி யாடையனை தேவா. சுந். 83:5

கம்பமருங் சரியுரியன் கறை மிடற்றன் தேவா. சுந். 89:4

கருமானினுரியானை தேவா. சுந். 90:5

கவளக் களிற்றின் உரிவை போர்த்தான் தேவா. சுந். 91:3

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் றோலை விருமபினாய் தேவா. சுந். 92:9

படைமலி கையன் மெய்யிற் பகட்டீ ருரிப்போர்வையினான் தேவா. சுந். 98:7

வென்றி மதகரியின் னுரிபோர்த்தது மென்னை கொலாம் தேவா. சுந். 99:4

பொக்கணத்தன் புலியதளாடையன்
வாரணத்து உரிவையான் கம்ப. 343

எயில் எரித்தவன் யானை உரித்தநாள்
பயில் உறுத்து உரிபோர்த்த நன்பண்புஎன கம்ப. 694

யானையின் உரிவை போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள் கம்ப. 713

புலித்தானைக் களிற்றுரிவைப் போர்வையான் கம்ப. 769

சுற்றி வாரண வுரித்தொகுதி நீவிதொடர கம்ப. 15

மான்வரு தனியுரி மார்பினை கம்ப. 112

புலியினதனாடையானும் பொன்னாடை புனைந்தானும் கம்ப. 556

கலைத்தோல் மூடிமுற்றியும் கம்ப. 63_6

புள்ளிமான் உரி ஆடையன் கம்ப. 6697

வேக வெங்களிற்றின் வன்தோல்
மெய்யுறப் போர்த்த தையல் கம்ப. 6982

ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் கம்ப. 9894

வெறி பொறிப்புலியின் வெவ்வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் கம்ப. 10505

கழற்கட்டரக்கின் சருமவாடையன் கல். 3:14-17

வெள்ளுடற் பேழ்வாய்த் தழல்விழி மடங்க
லுரிவை மூடிக் கரித்தோல் விரித்து
புள்ளி பரந்த வள்ளுகிர்த் தரக்கி
னதள் பிறக்கிட்டுக் குதிபாய நவ்வியின்
சரும மூடுத்து கரும்பாம்பு கட்டி கல். 26:11-15

உழுவை யுகிருழக்கு மேந்து கொட்டும்ப
லுரிவைமூடி யொளியினை மறைத்து கல். 29:14-15

காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
உரி செய்துடுத்துச் செங்சரம் தரித்து கல். 33:17-18

களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப கல். 72:6

கையினிற் கொள்ளவும் கரியுரி மூடவும் கல். 76:23-4

தீவாய்ப்புலியினைத் திருத்தவர் நகைப்ப
வெடுத்தணி பூண வுரித்துடை யுடுப்ப கல். 87:27.8

நிணச்சட்டையிட்டு நின்ற கலிங். 156

நீலம்

நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும் பெருங். 1:42:208

நீவி

சுற்றி வாரண வுரித் தொகுதி நீவி தொடர கம்ப. ஆரணிய. 15

தன்னிறத் தோடுமாறு தந்திமைக்கும் நீவியின் றழைபடஉடுத்த கம்ப. சுந்தர. 413

நேத்திரம்

அந்தர மின்றி தன்னெறி பங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து நாலா. திவ். பெரி. திரு. 3:4:8

பட்டம்

கட்டகமுத்தின் புதல்வனை மார்பின் மேற்
பட்டம் சிதைப்ப வரும் ஐங். எழு. 41

பஞ்சி

பஞ்சிறை கொண்ட பைம்பொற் கலைபுறஞ்சூழ்ந்து சீவக. 1538

பஞ்சிமேற் கிடந்துடை ஞாண்பதைத்திலங்க சீவக. 2240

ஆரவட மேற்றிசைக்கவிருந்தவ விர்பஞ்சிச்
சீர்நிறைய வரையகலந் திருத்தத் திருநோக்கும் சீவக. 2489

பஞ்சார கலல்குற் பாவையர் சூளா. 292

பஞ்சிலங்கு மல்குலார் பலாண்டு கூற சூளா. 495

பட்டும் பஞ்சுந் துகில்களும் பரப்பி சூளா. 918

பஞ்சிலங்கு தேரல்குற் பாடகக்காற் சூளா. 1035

பஞ்சுந் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன்மேல் சூளா. 1483

பஞ்சுடை யல்குல் பாக
வரசொடு பட்டங் கொண்டாள் சூளா. 1550

பஞ்சிவ ரல்குலார் பவழவாயினால்
அஞ்சுவை நறவமீங்கு மிழலானதே சூளா. 1588

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/027&oldid=1841608" இலிருந்து மீள்விக்கப்பட்டது