தமிழர் ஆடைகள்/028
பட்டு
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி
பொருநர். 155
பட்டு நீக்கித் துகிலுடுத்தும்
பட்டினப். 107
அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்ப
அகம். 236
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து
நாலடி. 264
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்
சிலப். 5:16-17
அரத்தப் பூம்பட்டு அரைமிசையுடீஇ
சிலப். 14:86
நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
சிலப். 20:14
பிணர் முரிப்பட்டுடைப் பெருநல அல்குல்
பெருங். 1:40:226
கொட்டு மடிவிரித்தப் பட்டுடைத் தானையன்
பெருங். 1:40:268
பார்வை முள்கிய பட்டு நிறம் பயப்ப
பெருங். 1:45:4
பட்டு சுமந்தசைந்த பரவை அல்குல்
பெருங். 2:4:123
நீலப்பட்டுடை நிரைமணி மேகலை
பெருங். 4:12:262
நற்சுணப் பட்டுடைப்பற்ற நாணினால்
சீவக. 91
பகுதியும் குறுமுயலின் குருதியும் போன்றின்
னரத்தப்பட்டு அசைந்திந்திரற்கும் புகழ்வரிதே
சீவக. 173
பால் பரந்தன்ன பட்டார் பூவணை
சீவக. 541
பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு காணம்
சீவக. 591
பட்டு வீக்கிய வல்குலர்
சீவக. 632
குலவிய குருதிப் பட்டின் கலைநலம் கொளுத்தி
சீவக. 673
பட்டிற் கலைநலம் கொளுத்துதலின்
சீவக. 684
பூம்பட்டு எழினி வீழ்த்தார்
சீவக. 740
பூம்பட்டு எந்திர எழினி வாங்கி
சீவக. 838
நானநீரில் கலந்து நலங் கொள் பூம்பட்டு ஒளிப்ப
சீவக. 923
பட்டுவாய்க் கிடந்த செம்பொற்கலையணி பரவை அல்குல்
சீவக. 1145
அளித்த பூம்பட்டு அணிந்து திகழ்ந்ததே
சீவக. 1330
பூம்பட்டு அழித்து மட்டொழுகு தாரான்
சீவக. 1986
பட்டுநிணர் கட்டில் பிரிவின்றி உறைசென்றார்
சீவக. 2030
பட்டுவாய்க் கிடந்த செம்பொன் பவள மொடிமைக்கு மல்குல்
சீவக. 2047
பச்சிலைப்பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்குல்
சீவக. 2090
கோடிப் பட்டிற் கொள்கொடிகூட புனைவாரும்
சீவக. 2331
உறைந்த வெண்பட்டு உடுத்துஒளிசேர் பஞ்சவாச கவுட்கொண்டு
சீவக. 2358
ஆணமாகிய வருவிலை வண்ணப்பட்டு உடுமின்
சீவக. 2389
உருவமார்ந்த உரோமப்பட்டு உடுத்து
சீவக. 2425
கண் கொளாப்பட்டு டுத்தாள்
சீவக. 2444
தேசிக முடியும் திருந்து பட்டுடையும்
சீவக. 2549
கெட்டதுன் றுகின் மற்றென்ன உடுத்த பட்டொளிப்ப
சீவக. 2666
அம்மலர் உரோமப்பட்டு உடுத்தபின்
சீவக. 2667
புகையார் வண்ணப்பட்டு டுத்து
சீவக. 2694
தீம்பானுரை போற் றிகழ் வெண்பட்டு டுத்து
சீவக. 3046
பூம்பட்டு கொண்ட, அரட்டன் வந்து
நாலா. திவ். பெரி திரு. 2:1:4
பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு
நாலா. பொய்கை. 53
பட்டைப் பணித்தருளாயே
நாவா. நாச்சி. திரு. 3:3
படிற்றை எல்லாம் தவிர்ந்து
பட்டைப் பணித் தருளாயே
நாலா. நாச்சி. திரு. 3:6
போரவிடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்தேறி யிராதே
நாலா. நாச்சி. திரு. 3:7
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடை
நாலா. நாச்சி. திரு. 8:2
பட்டு டுக்கும் அயர்ந்திரங்கும் பாலை பேணாள்
திருநெடுஞ். 11
வரைச் சந்தனக் குழம்பும் வான்கலனும் பட்டும்
இயற்பா. 2-76
வாசகம் செய் மாலையே
வான் பட்டாடையு மஃதே
திருவாய்மொழி. 4:3:2
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே
திருவாய்மொழி. 5:5:4
அந்தரமேல் செம்பட்டோடு அடியுந்திகை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதிவிட
திருவாய்மொழி. 7:6:6
உண்டயலே தோன்றுவ தொருத்தரியப்பட்டு
தேவா. திருநா. 6:2
அரை துகிலொடுபட்டு வீக்கி
பெரிய. சுந். 5:10
மிக்க பட்டு வகையுடன் வெண்மைசேர்
தக்க தூசுடன் சாற்றும் வரிசைகள்
கம்ப. 10365
அம்பொற் பட்டுடையாளனி யாயினாள்
சூளா. 147
பாசிழைப்பட்டு நூற்கழி பரப்பிய
கல். 81-36
அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணிகொள் பட்டாடை சாத்தி
பெரிய. தடுத். 16
நயத் தகுந்தன நல்லபட்டாடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டருளும்
பெரிய. அமர். 28
பூம்பட்டுப் பொலிந்தசைய
பெரிய. ஆனாய். 17
விற்பொலி வெண்பட்டாடை மேதக விளங்க சாத்தி
நற்றிரு உத்தரீய நறுந்துகில் சாத்தி
பெரிய. திருஞான. 1209
அயிலும் கரும்பார் பலர்ச்சிகழி முடிமேல் அணியா உத்தரீய
வெயிலுந்திய வெண்பட்டதன் மேல் விரித்துப்
பெரிய. ஏயர். 49
பரவு சேரன் தனக்குனக்குப்பைம்பொற் காணம்பட்டாடை
...தர நம் ஓலை தருகின்றோம்
பெரிய. கழறிற். 27
படம்
அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு
பெரும். 69
படம்புகு மிலேச்சர் உழையராக
முல்லை. 6
சித்திரப் படத்துள் புக்கு, செழுங்கோட்டின் மலர் புனைந்து
சிலப். 7:1
படம் புனைந்தவர் கடாம் பலருமுண்ணும் நீர்
நீல. 360
படம் புதைத்திருந்தான்
நீல. 476
வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம்
எழுதுவினைக் கம்மமொடு முழுது முதல் அளைஇ
பெருங். 1.42:34-5
எலிப்பூம் போர்வையொடு மயிர்படம் விரித்து
பெருங். 1.47:179
படர்
இது செம்படர்கள் இறைவன் உறையும்
நீல. 464
படாம்
உடாஅ போரா வாகுதலறிந்தும்
படாஅ மஞ்ஞைக்கு ஈந்த எங்கோ
புறம். 141
மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்
படாஅமீத்தக் கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானை கலிமான் பேக
புறம். 145
கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில்
குறள். 1087
மண்ணக மடந்தை
புதையிருட்படாம் போக நீக்கி
சிலப். 5:4
வித்தகரியற்றிய விளங்கியக் கைவினைச்
சித்திரச் செய்கைப்படாம் போர்த்ததுவே
மணி. 3:167.8
தாணினா பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே
சீவக. 80
வண்டின முகபடாம் அணிந்து
சீவக. 182
நன்பொன் முகபடாம் வைப்ப
சீவக. 1486
மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழை
காப்புடை வளநகர் காளை எய்தினான்
சீவக. 2011
மணிநிறப் படாமுது கிடையறப்பூத்து
கல். 63-4
சூழ்பனியால்
குவிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்
பெரிய. திருஞான. 329
பாவாடை
பதம் பெற்றார்க்குப் பகல் விளக்கும்
பாவாடையுமாக் கொள்ளீரே
கலிங். 561
பன்மலர் நறும் பொற்சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன்னிழிந் தருளி வந்தார்
பெரிய. திருஞான. 1226
நாடுமகிழ அவ்வளவு நடைக் காவணம் பாவாடையுடன்
மாடுகதலி பூக நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து
பெரிய. ஏயர். 57
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடனமைத்து
பெரிய. கழறிற். 124
பரிசுவிளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றி
பெரிய. சிறுத். 73
பிரச்சை
பெரிய பிரச்சையினாய்
நீல. 497
புட்டகம்
புட்டகம் பொருந்துவ புனைகுவாரும்
பரி. 12:17
புடைவை
பாத்தில் புடைவை யுடை யின்னா
இன்னா. 7
வெண்புடைவை மெய்சூழ்ந்து
......
சென்றடைந்தார்
பெரிய. திருநாவு. 61
பூங்கரை நீலம்
தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப்பாங்கரும்
முல்லையும் தாயப் பாட்டங்கால் தோழி நாம் ஒருங்கு
விளையாட
கலித். முல்லை. 11
நீங்கிப் புறங்கடை போயினாள் யானுமென்
சாந்துளர் கூழை முடியா நிலந் தாழ்ந்த
பூங்கரை நீலம் தழீஇத் தளர் பொல்கி
கலித். முல்லை. 15
பூண்
சுரும்பூண அற எறிந்தாங்கு
சீவக. 2265
போர்வை
விரிந்த,
பலவுறு போர்வை பருமணல் மூஉய்
பரி. 10-4
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
பரி. 288
தெண்கிணை மாக்கிணை இயக்கி
பரி. 387
என்றெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்தமைத்த புதுக்காழ்ப் போர்வை
பரி. 399
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
பொருநர். 8
தோல் போர்வை மேலும் தொளைப்பலவாய் பொய்ம் மறைக்
கும் மீப்போர்வை மீட்சித்து டம்பானால்
நாலடி. 42
செயது போர்த்தாள் போல்
கள. நாற். 32
மோட்டுடைப் போர்வையோடு
ஆசாரக். 91
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும்
பழமொழி. 74
புழுக்குலங்களா னிறைத்த போர்வை யெனவோரா
நீல. 108
முழு மெய்யும் போர்த்திருந்து தின்கின்றான்
நீல. 190
புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந் தோய்புடுத்து நெடுந் நுண்ணாடையர்
பெருங். 1:32:63.64
வடகப் போர்வையை வனப்பொடு திருத்திக்
கடக முன்கைக் காஞ்சனமாலை
பெருங். 1:45.10-11
புலிப்பொறிப் போர்வை போக்கி
சீவக. 266
துணியிருட் போர்வை
சீவக. 335
முழு மெய்யும் சிலம்பி வலந்தது
போற் போர்வை போர்த்துச் செல்லலுற்றாள்
சீவக. 340
விளக் கழலுறத்த போலும் விசியுறு சோர்வைத் தீர்ந்தேண்
துளக்கற வொழுகியன்ன
சீவக. 559
பொருந்து பூம் பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்
சீவக. 1033
தெண்ணீர் சிறு திரைப்போர்வை போர்த்து
மீன் சென்ற நெறியும் போல
சீவக. 1390
தடக்கை நீட்டி, மையிருட் போர்வை நீக்கி
சீவக. 1406
கொடி நடுக்குற்ற தொப்ப
நுண்டுகிற் போர்வை சோர நுழை மழை மின்னிற
சீவக. 1570
அணிநிறப் போர்வை யாய வரும்பெறனாணும் விற்று
பணிநலம் புதிய துண்டான் பன்மலர் மாலை கொண்டோன்
சீவக. 1665
பூவுடைத் தெரியலான் போர்வை நீத்து
சீவக. 1812
மயிரெலியின் போர்வையொடுயெம்மன்னன் விடுத்தானே
சீவக. 1873
பூத்தகிற விழும் போர்வை பூசு சாந்து
சீவக. 1906
பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனிமயிர் குளிர்ப்பன கண் கொளாதன
எலிமயிர்ப் போர்வை வைத் தெழினி வாங்கினார்
சீவக. 2471
எலிமயிர்த் தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை
சீவக. 2680
அருவிலை நன்கலம் செய்போர்வையன்ன
நாணவடி யொதுங்கி
சீவக. 2586
பொன்னணிகலத்தின் குப்பைபுரிமணிக் கோவைப் போர்வை
சூளா. 919
கடும்பனித் திங்கள் தன்கைப்போர்வையாக
முத். 7
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும் கண்ணுதலாரை
பெரிய. திருநாவுக். 344
மடி
மாசி றூமடி விரித்த சேர்க்கை
அகம். 13
திருமலரன்ன புது மடி கொளீஇ
புறம். 390
தெண்டிரை அவிர் விறல் கடுப்ப
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து
மது. 519-20
தூமடி விரித்த சேக்கை
நெடு. 135
குடிசெய்வல் எனும் ஒருவற்குத் தெய்வம்
மடி தற்று தான் முந்துறும்
குறள். 1023
தேமென் கூந்தல் சின் மலர்ப்பெய்து
தூ மடி யுடீஇத் தொல்லோர் சிறப்பின்
சிலப். 15-134
மங்கல வனப்பினதோர் கோடி மடி தாங்கி
சூளா. 1093
மீக்கோள்
புரிநூன் மீக்கோள் பூம்புறத் தேற்றதன்
தெரிநூல் வாங்கி யிருநூற் கொளீஇ
பெருங். 2:15:126-7
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத் தசைஇ
பெருங். 3:17:172
மெய்ப்பை
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
முல்லை. 59-61
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவிற்
சிலப். 16:105-1
மெய்யாப்பு
மெய்யாப்பு மெய்யார மூடுவார்
பரி. திரட்டு. 2:19
மேலாப்பு
விண்ணில மேலாப்பு விரித்தாற் போல்
நாலா. திவ். நாச்சி. திரு. 8:1
மேலாப்பின் கீழ் வருவானை
நாலா. திவ். நாச்சி. திரு. 14:3
வட்டம்
நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்
பெருங். 1:42:218
வட்டு
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
மணி. 3:122-3
வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு
பட்டு சுமந்தசைந்த பரவை அல்குல்
பெருங். 2:4:122-123
வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்டபோதே
பட்டுடை சுமந்த காசுபஞ்சி மெல்லடியைச்சூழ
சீவக. 468
வட்டுடை மருங்கில் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கி
சீவக. 767
வடகம்
வடகப் போர்வையைவனப் பொடு திருத்தி
பெருங். 1:45:_0
வல்லாண் தோன்றலை வடகம் வாங்கி
பெருங். 1:56:99
வடகமும் துகிலும் தோடு மாலையும்
சீவக. 462
வடகத்தோடு உடுத்த தூசும் மாசு இல் நீர் நனைப்ப
சீவக. 945
கலிங்க நுண்நூல்
வடகமும் மகரயாழும்
கொடுத்து வட்டாடும் இடம்பலவும் கண்டார்
கம்ப. 580
மீதியல் வடகம் பற்றி
சூளா. 1565
மீது கொண்ட வடகம் புடைசூழ
சூளா. 1568
வப்பு
வப்பினார் முலைகாய்வது
நீல. 548
வம்பு
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான்யாற்று
அகம். 11
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறைமுடிதரும்
மது. 514
அம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்பு விசித்தியாத்த வாங்கு சாய் நுசுப்பின்
நெடு. 149-50
வம்பு விரிகளத்திற் கவின் பெறப் பொலிந்த
குறிஞ். 198
வம்பு மீக்கூறும் பொங்கிள முலையின்
நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின்
பெருங். 1:41:79-80
வம்பு நெருகுற்றப் பொங்கின முலையர்
பெருங். 1:46:244
வம்பு கொண்டிருந்த மாதர் வனமுலை மாலைத்
தேன் சோர் கொம்பு கொண்டன்ன நல்லார்
சீவக. 439
வம்பு நீக்கி வருமுலையுட் கரந்து
அம்பினொய்யர் ஆனுடைத் தானையர்
சீவக. 633
வம்பிற் றுரும்பு முலை வாணெடுங்கட் மடவார்
சீவக. 1867
பத்திரக் கடிப்பு மின்னப் பங்கியை வம்பிற் கட்டி
சீவக. 2277
வம்பில் பொங்கும் கொங்கை சுமக்கும் வலிஇன்றி
கம்ப. பால. 1002
வம்பு அளவு கொங்கை யொடு வாலுகம்பார்க்கும்
கம்ப. பால. 1944
வம்பின் முலையாயுறையிடவும் போதார் கணக்கு வரம்புண்டோ
கம்ப. சுந்தர. 605
வம்பு சேர் முலை வாரி வளாகமே
சூளா. 345
கொம்பழகு கொண்ட குழை நுண்ணிடை நுடங்க
வம்பழகு கொண்ட மணிமென் முலை வளர்ந்தாங்கு
சூளா. 2028
வம்பழகு கொண்ட மணிமேனியவர் பூவார்
சூளா. 2037
வீக்கியவம்பற வீங்கும் வனமுலையாள்
மூவரு. 3:439-40
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று
பெரிய. தடுத். 153
வம்பணி மென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்றொண்டர்
பெரிய. ஏயர். 247
தரியாரை வென்று வம்பார் கழல் புனைவாணன்
தஞ்சை. 212
வம்பும் வல்லும் பொரும் கொங்கை
தஞ்சை. 330
வற்கலை
வற்கலை யுடையேன் யானோ வழங்கலேன்
கம்ப. 659
மாணாமரவற்கலையும் மானின்தோலும் அவைநான் காணாது
கம்ப. 1759
மாயப் பழியாள் தரவற்கலை ஏந்தி வந்தார்
கம்ப. 1837
ஏற்கலை திருவரை யெய்தி யேமுற
வற்கலை நோற்றன
ஆரணிய. 241
மருங்கலச வற்கலை வரிந்து
ஆரணிய. 4672
வற்கலையார் வார்கழலர் மார்பிலணிநூலர்
கம்ப. 607
தொடையுறு வற்கலை ஆடைசுற்றி
கம்ப. 7252
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
பெரிய. திரு. 363
வார்
ஆயிதழ் மடந்தை வார் முலை முற்றம்
அகம். 361
வாருடை முலைமுகம் நனைப்ப
சீவக. 274
வார் செல விம்மும் வனமுலை மகளிர்
சீவக. 469
வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர்
கம்ப. 632
வார் விளையாடிய மென்முலை, மைந்தர்
தார் விளையாட்டொடு
சீவக. 915
வாருலா முலையினாட்கும் வரிசிலை தடக்கையாற்கும்
சீருலாக் கோலம் செய்தார் செப்பினார் மணம்
சீவக. 1687
வீக்குவார் முலையினாற் போல்
சீவக. 1727
வார் முயங்கு மென் முலைய வண்டார் பூங்கோதையை
சீவக. 1970
வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்பவாடி
சீவக. 2352
வார் மீதாடி வடம் சூடி பொற்பார்த்து
இருந்த வனமுலையார்
சீவக. 2359
வாரணி முலையினாற்கு மன்னற்கு வகுத்து வாவி
ஏரணி கொண்ட விந்நீர் இறைவற் கண்டனனாக
சீவக. 2654
வார் கொண்மென்முலை வம்பணி கோதையார்
ஏர்கொள் சாயலுண்டாடு மற்றென்பவே
சீவக. 2668
வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக்
காரணி மயிலனார் சூழக் காவலன்
சீவக. 2892
வாரணி வனமுலை வஞ்சிக் கொம்பனார்
போரணி புலவுவேற் கண்கள்
சீவக. 2894
ஏறுபாய விளைவித்ததெல்லாம் வார்க்குங்குமக் கொங்கை
நந்திக். 86
வாரூரும் மென்முலை வார்த்தை கண்டூரு மதிமுகத்தில்
நந்திக். அதிகம். 21
வார் தந்த வனமுலையார் மணிவயிறு வாய்த்திலரால்
கம்ப. நந்திக். 86
வாருடை வனமுலை மகளிர் சிந்தை போல்
தாரொடும் சதியொடும் தாவும்
கம்ப. 836
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
கம்ப. 846
வார்ச்சிறை கொங்கை அன்ன கும்பமும் பருப்பும் காணா
கம்ப. 875
வார்முகம் கெழுவு கொங்கையார் கருங்குழலின் வண்டு
ஏர்முழங்கு அரவம் ஏழ்இசை முழங்கு அரவமே
கம்ப. 1122
கருங்குழல் பாரம் வார்கொள் வனமுலை கலைசூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப
கம்ப. 1164
வார் ஆர் முலையாரும் மற்று உள்ள மாந்தர்களும்
கம்ப. 1787
வார் உடை முலையொடு மதுகை மாந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன் என்று சொல்லுவேனோ
கம்ப. 1950
பொன்னிற் பொலி வாரணி முலையாள்
கம்ப. ஆரணிய. 76
வார்ப் பொற் கொங்கை மருகியை
கம்ப. ஆரணிய. 219
வார்தந்த முலையினார் தம் வயிறு தந்தாளு மல்லள்
கம்ப. ஆரணிய. 631
வார் கொண்டணி கொங்கையை வவ்வினர்பால்
போர் கொண்டனவோ
கம்ப. ஆரணிய. 1093
வார் ஏர் முலையாளை முறைக்குநர் வாழ்ஊரே அறியேன்
கம்ப. ஆரணிய. 4304
வார்க்கிடை மதுகைக் கொங்கை
கம்ப. ஆரணிய. 8337
வாரணிந்த முலையீர் நும்மருங்குறனின் வகைநோக்கி
சூளா. 175
வாரணி முலையவர் பரவ
சூளா. 373
வார் கலந்திலங்க கொம்மை வனமுலை மகளிரிட்ட
சூளா. 536
சுற்றுவார் முலையார்
சூளா. 6_6
வாரிரு புடையும் வீக்கி வடம் சுமந்தெழுந்து
சூளா. 760
வாரணி முரசம்
சூளா.845
வாரணி வனமுலை யவரொடென்பவே
சூளா. 1879
வார்புகா முலையினல்லார் மயங்கமர் தொடங்கினாரே
சூளா. 1675
வாரணியிள மென் கொங்கை வாரியுள் வளைத்துக் கொண்டார்
மணிவடமும் பொன் நாணும் வார்முலை மேலாட
சூளா. 1754
வாராகி மென் கொங்கை மையரிக்கண் மாதர்
வருந்தினா ணங்கையினிவருக வீங்கென்றான்
சூளா. 1758
கொங்கையும் வார் தயங்க
மூவரு. 240:1
பூவை கொங்கை வாராலணைப்ப வருந்தினை
தஞ்சை. 44
இழைவளர் வார்முலையேரிளந் தோகையை
தஞ்சை. 50
வார்திகழ் மென்முலையாளொரு பாகன்
பெரிய. திரு. 240
வாரின் மல்கிய வனமுலையாளுடன் மன்னினார்
பெரிய. திருஞான. 955
வாரின் மல்கிய கொங்கையாள்
பெரிய. திருஞான. 969
வாருமணிய அணியலாம் வளர்மென் முலைகள் இடை வருத்த
பெரிய. ஏயர். 209
வார்கொள் முலையாய்
பெரி. ஏயர். 239
வார்புனையும் வனமுலையார்
பெரி. ஏயர். 263
வாரேறும் முவைமாடவார்
பெரி. புகழ்ச்சோழ. 7
வாலிது
கலத்து முண்ணாள் வாலிது முடாஅள்
புறம். 262
வெள்ளை
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி
கலிங். 14
வெளிது
வெளிது விரித்துடீஇ
புறம்.—
வெளியதுடீஇ என்பகி களைந்தோனே
புறம். 385