தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
கழக வெளியீடு, எ௫௨
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
ஆசிரியர்:
சேலங்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்,
திரு ஞா தேவநேயன் அவர்கள், எம் ஏ
☐
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி–6.சென்னை–1.
1962
முகவுரை
விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம். ஆட்டு = ஆட்டம்.) அது சிறுவர் பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும் பொதுவேனும், முன்னவர்க்கே சிறப்பாக உரியதாம். மக்கள் நிலைத்த குடும்பவாழ்க்கை வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, விளையாட்டுவினை உலகில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. வேலை செய்யாத பருவத்தில் அல்லது ஓய்வு நேரத்தில், சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த திறமே விளையாட்டுத் தோற்றமாகத் தெரிதலின், அது முதன்முதல் சிறுவரிடையே தோன்றிற்றெனக் கொள்ளுதல் தவறாகாது.
விளையாட்டு நிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு பண்ணையென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறு புலி முதலிய விலங்குகளாலும் ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழிவந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது கெடவரல் என்றும்; பெயர்பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. (பண்ணை = வயல்.)
“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (தொல். உரி. 21)
பிற்காலத்தில் அவ்விரு பெயர்களின் சிறப்புப் பொருளையும் அறியாதார், அவற்றை விளையாட்டு என்னும் பொதுப்பொருளிலேயே வழங்கினர் போலும்!
விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். ஒருவன் ஓர் அருவினையை எளிதாகச் செய்துவிடின், அவன் அதை ஒரு விளையாட்டுப்போற் செய்துவிட்டான் என்பர். விளையாட்டு இன்பந் தருவதுபற்றியே,
“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
றல்லல் நீத்த உவகை நான்கே”
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
| சேலம், | ஞா. தே. | ||||
| 1—12—'54. | |||||
உள்ளுறை
I. இளைஞர் பக்கம்பக்கம்
1. ஆண்பாற் பகுதி: 1
| 1 |
௧. கோலி ❠
(௧) பாண்டி நாட்டு முறை ❠
(௨) சோழ கொங்கு நாட்டு முறை 4
I. பேந்தா ❠
(i) சதுரப் பேந்தா ❠
(ii) வட்டப் பேந்தா 7
II. அஞ்சல குஞ்சம் 10
III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14
IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) 17
௨. தெல் 19
| 20 |
(௧) பாண்டி நாட்டுமுறை ❠
(௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24
I. கில்லித் தாண்டு ❠
II. கிட்டிப்புள் 26
| 27 |
I. பேய்ப்பந்து ❠
II. பிள்ளையார் பந்து 28
| 30 |
| 31 |
| 32 |
| 33 |
| 35 |
I. ஓயாக்கட்டை ❠
II. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
| 40 |
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
| 43 |
| 46 |
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
| 49 |
க. கிளித்தட்டு ❠
| 54 |
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
| 55 |
| 57 |
| 61 |
| 62 |
| 63 |
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
| 64 |
2. பெண்பாற் பகுதி:
65
|
❠ |
௧. தட்டாங்கல் ❠
I. மூன்றாங்கல் ❠
II. ஐந்தாங்கல் (இருவகை) 66
III. ஏழாங்கல் (இருவகை) 69
IV. பலநாலொருகல் 73
V. பன்னிருகல் 74
VI. பலகல் 75
VII. பதினாறாங்கல் ❠
| 76 |
| 79 |
| 80 |
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠
| 82 |
| 84 |
| 86 |
௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠
| 89 |
| 90 |
| 91 |
| 92 |
3. இருபாற் பகுதி : 93
|
❠ |
௧. பண்ணாங்குழி ❠
I. பொதுவகை 93
II. கட்டுக்கட்டல் 96
II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97
IV. அசோகவனத்தாட்டம் 99
| 101 |
(க) பாண்டிநாட்டு முறை ❠
| 104 |
I. ஒற்றைச் சில்லி ❠
II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) 107
III. வானூர்திச் சில்லி 109
IV. வட்டச் சில்லி 111
V. காலிப்பட்டச் சில்லி 112
VI. கைச் சில்லி 114
| 115 |
| 116 |
| 117 |
| 118 |
௧. கண்ணாம்பொத்தி ❠
| 120 |
| 121 |
| 122 |
| 123 |
| 124 |
| 125 |
௧. நொண்டி ❠
௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127
| 128 |
| 129 |
| 130 |
| 131 |
| 133 |
| 134 |
௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ ❠
| 135 |
| 136 |
(1) பகலாட்டு ❠
தாயம் ❠
(2) இரவாட்டு ❠
கழியல் ❠
(3) இருபொழுதாட்டு 137
முக்குழியாட்டம் ❠
| 138 |
(1) பகலாட்டு ❠
க. பண்ணாங்குழி ❠
௨. தாயம் ❠
(2) இருபொழுதாட்டு 138
கும்மி ❠
பின்னிணைப்பு :
| 139 |
1. அறியப்பட்டவை
(1) ஆண்பாற் பகுதி ❠
வட்டு ❠
(2) பெண்பாற் பகுதி ❠
௧. பலபந்து ❠
௨. அம்மானை ❠
௩. குரவை 140
| 141 |
கோழிக் குஞ்சு—1 ❠
கோழிக் குஞ்சு—2 ❠
| 143 |
(1) புனல் விளையாட்டு ❠
(2) பொழில் விளையாட்டு 144