தமிழ்ப் பழமொழிகள்-4/

விக்கிமூலம் இலிருந்து


தொகுதி 4

பெ


பெட்டிப் பாம்பு ஒட்டி அடங்கினாற் போல.

பெட்டிப் பாம்பு போல் அடங்கினான்.

பெட்டிப் பாம்பு போல் ஒட்டி இருக்கும். 15970


பெட்டி பீற்றல், வாய்க்கட்டுத் திறம்.

பெட்டி பீற்றலாயினும் மட்டைக்கட்டுத் திறமாயிருக்க வேண்டும்.

பெட்டியில் அடக்கின குட்டிப் பாம்பு போல.

பெட்டியும் முடியும் பிளந்தாற் போல.

பெட்டைக்கு எட்டாத அகமுடையானும் பல்லுக்கு எட்டாத பாக்கும். 16975


பெட்டைக் குதிரைக்கு இரட்டைக் கொம்பு முளைத்தன என்றாளாம்.

பெட்டைக் கோழி கூவியா பொழுது விடிகிறது?

பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?

பெட்டை நாயைப் போலக் கத்தாதே.

பெண் அரமயை கூத்துக்குப் போய்ப் பேய்க் கூத்து ஆச்சுதே. 16980


பெண் அழகு எல்லாம் பெட்டியிலே.

பெண் ஆசை ஒரு பக்கம்; மண் ஆசை ஒரு பக்கம்.

பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது.

பெண் ஆனையைத் தொடரும் பேரானையைப் போல.

(போராணையை.)

பெண் இருக்கிற அழகுக்குப் பூசினாளாம் வண்டி, மசியை; தான் இருக்கிற அழகுக்குப் பூசிக் கொண்டாளாம் வேப்பெண்ணெய். 16985


பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றிக் காட்சியும் இல்லை.

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண் என்று பிறந்த போதே புருஷன் பிறந்திருப்பான்.

பெண் அதை சொன்னசன் பொழுது விடியும்.

பெண்கள் இருப்பிடம் பெரிய சண்டைக்கு இடம். 16990


பெண்களுக்கு அன்பு பெருவாழ்வு அளிக்கும்.

பெண்கிளை பெருங்கிளை.

(பெண்குடி பெருங்குடி..)

பெண் கொடுத்த மாமியோ; கண் கொடுத்த சாமியோ?

பெண் சம்பாதித்தால் பழங்கலம் ஏறும்.

பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல. 16995


பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை,

பெண்சாதி கால்கட்டு; பிள்ளை வாய்க்கட்டு.

பெண்சாதி கால் விலங்கு: பிள்ளையொரு சுள்ளாணி.

பெண்சாதி சொந்தம்; போக்குவரத்துப் புறம்பே.

பெண்சாதி பேச்சைக் கேட்பவன் பேய் போல் அலைவான். 17000


பெண்சாதி முகத்தைப் பார்க்கா விட்டிாலும் பிள்ளை

முகத்தைப் பார்க்க வேண்டும்.

பெண்சாதியைக் குதிரைமேல் ஏற்றிப் பெற்ற தாயின்

தலையிலே புல்லுக்கட்டை வைத்து அடிக்கிற காலம்.

பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.

பெண் சிரித்தாற் போயிற்று; புகையிலை விரித்தாற் போயிற்று.

பெண்டிாட்டி ஆசை திண்டாட்டித்தில் விட்டது. 17005


பெண்டிசட்டி ஆத்தா பெரியாத்தா; பிழைக்கும் வழியைச் சொல் ஆத்தா.

பெண்டாட்டி இல்லாதவன் கழுதையோடு போனான்.

பெண்டாட்டிக்கு ஆற்றமாட்டிாதவன் சட்டி பானையை உடைத்தானாம்.

பெண்டாட்டிக் கால்கட்டு: பிள்ளை வாய்க்கட்டு,

பெண்டாட்டி குதிச் போல: அகமுடையான் கதிர் போல, 17010


பெண்டாட்டி கொண்டதும் போதும்; திண்டாட்டம் பட்டதும் போதும்.

பெண்டாட்டி செத்தவன் போல முக்காடு போடுகிறாய்.

பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை.

பெண்டாட்டி செத்துப் பெரிய மகள் தாலி அறுத்த மாதிரி.

பெண்டிாட்டி பாடு திண்டாட்டம். 17015




பெண்டாட்டி மெய்க்கப் புழைக்கடை வெட்டியது போல.

பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவார் உண்டா?

(யோவாரா?)

பெண்டாட்டியை அடிக்கடி பிறந்தகத்துக்கு அனுப்பாதே.

பெண்டாட்டியைத் தாய் வீட்டில் விட்டவனும் பூவைக் குரங்கு

கையில் கொடுத்தவனும் போல.

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல். 17020


பெண்டு இரண்டு கொண்டால் பெரு நெருப்புச் சாமளவும். பெண்டு

இல்லாதவன் பிணத்தைக் கட்டி அழுத கதை.

பெண்டுகள் அம்பலம் பொழுது விடிந்தால் கூத்து.

பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்த இடம்.

(பெண்டுகள் இருப்பிடம் பெரிய சண்டையாம்.)

பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையாம். 17025


பெண்டுகள்கூடச் சண்டைக்கு வருவார்கள்.

பெண்டுகள் கூத்துப் பேய்க் கூத்து.

பெண்டுகள் சமர்த்து அடுப்பங் கரையில்தான்.

பெண்டுகள் சமர்த்துச் சமையற்கட்டிலும் படுக்கைக் கட்டிலிலுத்தான்.

பெண்டுகள் செட்டி. 17030


பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.

(தடை இல்லை.)

பெண்டுகள் வைத்தியம்,

பெண்டுகளாலே பெருமாள் குடி கெட்டது.

பெண்டுகளுக்குப் பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பு இல்லை.

பெண்டு கொண்டதும் போதும்; பிண்டு விழுந்ததும் போதும். 17035


பெண்டு மிரண்டால் வீடு கொள்ளாது.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணாய்ப் பிறப்பதிலும் மண்ணாய்ப் பிறக்கலாம்.

பெண்ணாய்ப் பிறப்பதுவும் பாவம்; பெண்ணோடே கூடிப்பிறப்பதுவும் பாவம்.

(யாழ்ப்பாண வழக்கு )

பெண்ணிடம் அகப்பட்ட பணமும் ஆணிடம் அகப்பட்ட

குழந்தையும் உருப்படா. 17040

பெண்ணின் குணமும் அறிவேன்; சம்பந்தி வாயும் அறிவேன்.

(குணம், வாய்.)

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணுக்கு ஒரு கும்பிடு, வில்லுக்கு ஒரு கும்பிடு.

(அவள் சொகுசுக்கு ஒரு கும்பிடு.அழகுக்கு ஒரு கும்பிடு.)

பெண்ணுக்குக் குணந்தான் சீதனம்.

பெண்ணுக்குக் கேடு பிறந்தகத்தார்; மக்களுக்குக் கேடு மாதா பிதா, 17045


பெண்ணுக்குச் சந்துரு பிறந்தகத்தார்.

பெண்ணுககுப் பெண ஆசை கொள்ளும் பேரணங்கு.

பெண்ணுக்குப் பெண்தான் சீதனம்.

பெண்ணுக்குப் பொன் இட்டுப் பார்; சுவருக்கு மண் இட்டுப் பார்.

பெண்ணுககுப் போட்டுப் பார்: மண்ணுக்குத் தீட்டிப் பார். 17050


பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?

பெண்ணுககும் உண்டா பிசுககு?

பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பும் தேய்ப்பும் உண்டா?

பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்.

பெணணுககு முநதிப் பூட்டிக் கொள்; மாட்டுப் பெண்ணுக்கு

முந்திச் சாப்பிட்டுக கொள். 17055


பெண்ணும் அல்லாமல் ஆணும் அல்லாமல் பெரு மரம்

போல் வளருகிறது.

பெண்ணை அடிதது வளர்க்க வேணும்; முருங்கை மரத்தை

ஒடித்து வளர்கக வேணும்.

பெண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்; பிள்ளை பெறச் செய்யலாமா?

(பிள்ளை பெறுவதற்கும் பிணைக்கப் படுவார்களா?)

பெண்ணைக் கட்டிக் கொடுப்பவர்கள் பிள்ளை பெறுவதற்குப்

பிணைபடுவார்களா?

பெண்ணைக் காட்டிப் பொன்னைப் பறித்தது போல, 17060

பெண்ணைக் கொடுத்த மாமன். கண்ணைக் கொடுத்த கடவுள்.

பெண்ணைக் கொடுத்தாயோ? கண்ணைக் கொடுத்தாயோ?

பெண்ணைக் கொண்டு பையன் பேயானான்; பிள்ளை பெற்றுச்

சிறுக்கி நாயானாள்.

பெண்ணைத் திருத்தும் பொள்.

பெண்ணைப் படைத்தாயோ? பேயைப் படைத்தாயோ? 17065

பெண்ணைப் பற்றி மலத்தைத்தின்னு,

(பெற்று... தின்ன வேணும்.)

பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?

(வேண்டும்.)

பெண்ணைப் பெற்றவள் கைக் கொள்ள.

பெண்ணைப் பெற்றுக் கெட்டுப் போகாதே.

பெண்ணைப் போற்றி வளர்; ஆணை அடக்கி வளர். 17070

(அடித்து.)


பெண்ணை மஞ்சத்தில் வை: மகனை நெஞ்சத்தில் வை.

பெண்ணை விட்டுப் பிரியலாம்; கண்ணை விட்டுப் பிரியலாமா?

பெண்ணையும் வேண்டிப் பிள்ளையையும் வேண்டுகிறதா?

பெண்ணை வெறுத்தல் பேரின்பம்,

பெண்ணை வேண்டும் என்றால் இனியற் கண்ணை நக்கு 17075


பெண்ணோடு, ஆனோடு பிறக்காத பெரும்பவி.

பெண்ணோ, போத்தோ?

பெண் தந்த மாமியாரே கன் தந்த தெய்வமாக,

பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?

பெண் படையோ? அம்பலமோ? 17080


பெண் பாவம் பொல்லாது,

பெண் பிறந்ததற்கு மண் பிறக்கலாம்.

பெண் பிறந்த வீடோ புடைளை காய்த்த பந்தலோ?

பெண் பிறப்பதற்குள் பூட்டிக் கொள்; மாட்டுப் பெண்

வருவதற்குள் சாப்பிட்டுக் கொள்,

பெண்புத்தி கேட்கிறவன் பேயன், 17085


பெண் புத்தி பின்புத்தி,

பெண் புத்தி மலம் தினைப் போம்.

பெண் மகிழப் பிறந்தகம் வாழ.

பெண் மூப்பான வீடு பேர் அழிந்து போம்.

பெண் மூலம் நிர்மூலம். 17090

(மூலம்; மூல நட்சத்திரம்.)


பெண் வளர்த்தியோ, பீர் வளர்த்தியோ?

பெண் வளர்த்தி, பீர்க்கங்கொடி.

பெண் வளர்த்தியோ, புடலங்காய் வளர்த்தியோ?

பெண் வளர்வதும் பீர்க்கங்காய் வளர்வதும் யார் கண்டது?

பெய்த மழைக்கும் சரி; காய்ந்த வெயிலுக்கும் சரி. 17095




பெய்த மழையும் காய்ந்த வெயிலும் சரி.

பெய்தால் பெய்யும் புரட்டாசி; பெய்யாவிட்டால் பெய்யும் ஐப்பசி.

பெய்தும் கெடுத்தது, காய்ந்தும் கெடுத்தது.

பெய்து விளைகிறது மலையாளச் சீமை, பாய்ந்து விளைகிறது

தஞ்சாவூர்ச் சீமை; காய்ந்து விளைகிறது இராமநாதபுரம் சீமை,

(பேய்ந்து.)

பெயர் சொல்ல ஆள் இல்லை. 17100


பெரிது ஆனால் பேயும் குரங்கு ஆகும்.

பெரிய இடம் என்று பிச்சை கேட்கப் போனாளாம்; கரியை வழித்து

முகத்திலே தேய்த்தாளாம்.

பெரிய பருவதத்தினமேல் பிரயை கால இடி விழுந்தாற் போல.

பெரிய தனம் கொடுத்தால் சீதனம் கற்கலாமா?

பெரிய தேர் ஆனாலும அச்சாணி இல்லாமல் ஓடாது. 17105


பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளியும் சாகாது.

(மல்லியும்.)

பெரிய மனிதன் என்று பிச்சைக்குப் போனால் கரியை அரைத்து முகத்தில் :தடவினான்.

பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்த மாதிரி.

பெரிய வீட்டுக் கல்யாணம், பூனைக்குட்டிக்குச் சோறு இல்லையாம்.

பெரிய வீடு என்று பிச்சைக்குப் போனேன்; கரியை வழித்துக் கையில :தடவினார்கள். 17110

(கன்னத்தில். முகத்தில் தீற்றினார்கள்.)


பெரியார் பெருந்தலை பேய்த்தலைக்கு நாய்த்தலை.

பெரியார் வரவு பெருமான் வரவு.

பெரியாரைத் துணைக் கொள்.

பெரியோர் உள்ளம் பேதிக்கலாகாது.

பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்ல. 17115


பெரியோர் செய்த புண்ணியம்.

பெரியோர் திருவுள்ளம் பேதித்தால் எப்பொருளும் பேதிக்கும்.

பெரியோர் தின்றால் பலகாரம்; சிறியோர் தின்றால் நொறுங்கு தீனி.

பெரியோர் முன் எதிர்த்துப் பேசில் வெள்ளத்துக்கு முன் மரம் போல் வீழ்வார்கள்,

பெரியோர் முன் தாழ்ந்து பேசில் நாணலைப் போல் நிமிர்ந்து கொள்வார்கள். 17120

பெரியோர் வாயில் பொய் நில்லாது.

பெரியோரைக் கண்டு எழாதவன் பிணம்.

பெருக்கப் பெருக்கப் பேயும் குரங்கு ஆனதாம்.

பெருக்காத இடத்துலும் பேசாத இடத்திலும் இருக்க மாட்டேன்.

(திருமகள் கூற்று.)

பெருக்கு ஆற்றில் நீச்சு அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும். 17125


பெருங்கயிறு முடி அழுந்தாது.

பெருங்காயக் குடுக்கை வாசனை போகாது.

பெருங்காயம் இருந்த பாண்டம் போல.

(பெட்டகம் போல,)

பெருங்காயம் இல்லாத சமையலும் பெரியவர்கள் இல்லாத குடித்தனமும் பாழ்.

பெருங்காயம் தின்ற நாய் போல. 17130


பெருங்காற்றில் அகப்பட்ட சோலையைப் போல.

பெருங்காற்றில் அகப்பட்ட பிள்ளையைப் போல.

பெருங்காற்றில் துரும்பு போல.

பெருங்காற்றில் பூனைப்பஞ்சு பறக்கிறது போல.

(கம்பராமாயணம் இலவம் பஞ்சு.)

பெருங்காற்றும் மழையும் போல. 17135


பெருங்குலத்தில் பிறந்தவன் புத்தி அற்றால் கரும்புப் பூப்போல் இருப்பான்.

(பிறந்தாலும்.)

பெருங் கொடை பிச்சைக் காரருக்குத் துணிவு,

பெருத்த மரங்களை வைத்தவன் உருக்கமாய்த் தண்ணிர் வார்ப்பான்.

பெரு நெருப்பில் புழு மேவுமா?

பெரு நெருப்புக்கு ஈரம் உண்டோ? 17140

(இல்லை.)


பெரும் பாம்பைத் தேரைகள் சுற்றிய கதை.

பெரும் புலியை நாய்கள் சுற்றின கதை.

பெரும்பேன் பிடித்தவருக்கும் பெருங்கடன் வாங்கினவருக்கும் கவலை இல்லை.

பெரும் பேன் பிடித்தவரும் பெருங்கடன் பட்டவரும் முன்னுக்கு வரமாட்டார்கள்.

பெரும் பேன் பிடித்தவனுக்கு அரிப்பு இல்லை;

பெருங்கடன் பட்டவனுக்கு விசாரம் இல்லை. 17145




பெரு மரத்தைச் சுற்றிய கொடியும் சாகாது.

பெருமரத்தைச் சுற்றிய வள்ளிக் கொடி போல.

பெருமழை விழுந்தால் குளிராது.

பெருமாள் இருக்கிற வரையில் கருடன் உண்டு.

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு. 17150


பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?

பெருமாள் என்ற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.

பெருமாள் செல்லும் வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்.

பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?

பெருமாள் புண்ணியத்தில் பொரிமாவு கிடைத்ததாம். 17155


பெருமாள் புளித்தண்ணிருக்கு அழுகிறார்; அனுமார் ததியோதனம் கேட்கிறார்.

பெருமாள் பெரிய பெருமாள் ஆனாற் போல்.

பெருமாளைச் சேர்ந்தவர்க்குப் பிறப்பு இல்லை; பிச்சைச் சேற்றுக்கு

எச்சில் இல்லை.
(பிழைப்பு இல்லை.)

பெரு மீனுக்குச் சிறு மீன் இரை.

பெருமை உள்ளங்கையிலே வளர்ந்தாலும் பேச்சுரை நல்ல சுரை ஆகாது. 17160


பெருமை ஒரு முறம்: புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.

பெருமைக்காரன் பின்னால் போனாலும் செருப்புக்காரன் பின்னால்

போகக் கூடாது.

பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளையின் கையில் காதைச்

சுட்டுக் கொடுத்தான்.

பெருமைக்குப் பன்றி வளர்க்கிறது போல.

பெருமை கண்டவர் சிறுமை கண்டால் அல்லது தேறார். 17165


பெருமை சொன்னால் கறவைக்குப் புல் ஆகுமா?

பெருமைதான் அருமையைக் குலைக்கும்.

பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக் கலம்.

பெருமையான தரித்திரன் வீண்.

பெருமையும் சிறுமையும் தான் தர வரும். 17170


பெரு ரூபத்தை உடையவர் எல்லாம் பிரயோசனமாய் இருக்க மாட்டார்.

பெரு வயிற்றை நம்பிச் சீமந்தம் வைத்தாற் போல்.

பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு நாள் இட்டுக் கொண்டானாம்.

பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு வளையல்

போட்டுக் கொண்டானாம்.

பெரு வயிறு கொண்டவனுக்குக் காரிய முய்கிறது லாபம். 17175


பெரு வயிறு கொண்டவனுக்க காறி உமிழ்ந்தது ஆதாயம்.

பெருவாரிக் கழிச்சலிலே தப்பிப் பிழைத்தவன் நாட்டாண்மைக் காரன்.

பெரு வாரி பெருக்க அகமுடையானிலே பெண்ணுக்கு ஓர்

அகமுடையான் கறுப்பாய்ப் போச்சு.

பெரு வெள்ளம் பாயும் கடலில் மல வாய்க் காலும் பாயும்.

பெலாப்பூரே பாபகோக்ரே, நாசதாளி முன்னே நிரந்தரம். 17180

(பெலாப்பூர்; செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஓர் ஊர்.)


பெற்ற தாய் ஆனாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?

(எவ்வளவு )

பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமற் பிரிந்த குயிலைப் போல.

பெற்ற தாய்க்கப் பிறகு பெற்ற அப்பன் சிற்றப்பன்.

(பெற்றதாய் செத்தால்.)

பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம செய்வித்தது போல.

பெற்ற தாய் மூதேவி; புகுந்த மனைவி சீதேவி. 17185

(புகுந்ததாரம்.)


பெற்ற தாயிடத்திலா கற்ற வித்தை காட்டுகிறது?

(கற்றது காட்டுகிறாய்?)

பெற்ற தாயுடன் போகிறவனுக்குப் பக்தம் ஏது?

பெற்ற தாயைப் பெண்டுக்கு இழுக்கிறதா?

பெற்றது எல்லாம் பிள்ளை ஆமோ? இட்டது எல்லாம் பயிர் ஆமோ?

பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? நட்டது எல்லாம் மரம் ஆகுமா? 17190


பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? பூத்தது எல்லாம் காய் ஆகுமா?

பெற்றது எல்லாம் பிள்ளையோ? நட்டது எல்லாம் பயிரோ?

பெற்றது எல்லாம் பிள்ளையோ, விளைந்தது எல்லாம் குசக்கலமோ?




பெற்றது வயிற்றுப் பிள்ளை; கொண்டது கயிற்றுப் பிள்ளை.

பெற்ற பிள்ளை உதவுவதற்குமுகி வைத்த பிள்ளை உதவும். 17195

(வைத்த பிள்ளை.தென்னம் பின்ளை.)


பெற்ற பிள்ளை சோறு போட விட்டாலும் வைத்த பிள்ளை சேன்று போடும்.

பெற்ற பிள்ளை துடையிற் பேண்டால் என்ன செய்யலாம்?

பெற்ற பிள்ளையும் சரி, செத்த நாயும் சரி.

பெற்ற மனம் பித்து; பின்னை மனம் கல்லு.

பெற்ற வயிற்றுக்குப் பிரண்டையைக் கட்டிக் கொள்ள வேண்டும். 17200


பெற்றவள் அறிவாள் பிள்ளை வருத்தம்.

பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள்; பெண் சாதி மடியைப் பார்ப்பாள்.

பெற்றவருக்குத் தெரியாத பேர் இட?

பெற்றவருக்குத் தெரியும் பிரசவ வேதனை.

பெற்றவருக்குத் தெரியும் பிள்ளை அருமை, 17205


பெற்ற வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பேர்.

(வளர்ந்த விட்டுக்கும்.)

பெற்றாயோ, பிழைத்தாயோ?

பெற்றாரை நினையாத தறிதலை.

பெற்றாலும் பிள்ளை நாயகம்; நட்டாலும் தில்லைநாயகம்.

பெற்றாள் ஒருத்தி; பெருமை கொண்டாள் மற்றொருத்தி. 17210


பெற்றுப் பிழைத்தாயோ? செத்துப் பிழைத்தாயோ?

பெற்றுப் பெற்றுப் பேர் இட்டது போல்.

பெற்றுப் பேர் இடாவிட்டாலும் இட்டுப் பேர் இடு.

பெற்று வைத்த பிள்ளையும் கொடுத்து வைத்த பணமும் எங்கேயும் போகா.

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். 17215


பெறப் பெறப் பிள்ளை ஆசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்-4/&oldid=1160398" இலிருந்து மீள்விக்கப்பட்டது