உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் அகராதிக் கலை/நான்காம் பாகம்

விக்கிமூலம் இலிருந்து

நான்காம் பாகம்

தமிழ் அகராதிகள்

அகராதிகள்

Iநிகண்டு நூற்களைப்போல் செய்யுள் வடிவில் இல்லாமல், தனித் தனிச் சொற்களை ஒன்றன் பின் ஒன்ருக அகர வரிசையில் நிறுத்திப் பொருள் கூறிச் செல்லும் நூல் அகராதி எனப்படும். இத்தகைய தமிழ் அகராதி நூற்கள் பதினேழாம் நூற்றண்டிலேயே தோன்றத் தொடங்கி விட்டன. பதினேழாம் நூற்ருண்டில் தோன்றிய இந்த அகராதிக் குழந்தை பதினெட்டாம் - பத்தொன்பதாம் நூற்ருண்டுகளில் முன்னிளமைப் பருவத்தையும் பின்னிளமைப் பருவத் தையும் கடந்து இவ்விருபதாம் நூற்ருண்டில் குமரப் பருவத்தை எட்டியுள்ளது. இன்னும் அடையவேண் டிய வளர்ச்சிகள் - பெறவேண்டிய நிறைவுகள் எவ்வளவோ உள்ளன. . -

பதினேழாம் நூற்ருண்டில் தமிழுக்குத் தமிழ் அகராதிகளும் (அதாவது, தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் அகராதிக்ளும்) 370

தமிழுக்குப் போர்ச்சுகீசிய அகராதியும் தோன்றின. 18, 19, 20-ஆம் நூற்ருண்டுகளிலோ, இவற்றுடன், போர்ச்சுகீசியத்திற்குத் தமிழ் அகராதியும் (போர்ச்சு கீசியச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கொடுத் தல்), இவ்வாறே, தமிழ் - இலத்தீன் அகராதிகளும் இலத்தீன் - தமிழ் அகராதியும், தமிழ் - பிரெஞ்சு அகராதிகளும், பிரெஞ்சு-தமிழ் அகராதியும், தமிழ் - ஆங்கில அகராதிகளும், ஆங்கில - தமிழ் அகராதி களும், வடமொழி - தமிழ் அகராதியும், இந்தி-தமிழ் அகராதியும், ஆங்கிலம் - இந்தி - மராத்தி - தெலுங்கு - தமிழ் அகராதியும் மற்றும் பலவகை அகராதிகளும் தோன்றின.

இந்த நூற்ருண்டுகளில், போர்ச்சுகீசியர், பிரெஞ் சுக்காரர், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்களின் ஆட்சியும் செல்வாக்கும் நம் காட்டில் நிலவியதால் அவர்தம் மொழிகளோடு பிணைந்த தமிழகராதிகள் பல தோன்றின. இருபதாம் நூற்றண்டில் ஐரோப் பியர்களின் செல்வாக்கு மங்கியதால், அத்தகைய அகராதிகள் புதியனவாகத் தோன்ற இடமில்லாது போயிற்று அந்தப் பழைய அகராதிகளும் மறுபதிப் புக்கள் பெறவில்லை. ஆனல், ஆங்கில மொழி மட்டும் இன்னும் கம் நாட்டில் நடமாடுவதால், ஆங்கிலத் தோடு தமிழ் பிணைந்த அகராதிகள் மட்டும் புதிது புதிதாகத் தோன்றுகின்றன; பழைய அகராதிகள் சிலவும் புதுப் புதுப் பதிப்புக்கள் பெற்று வருகின்றன. அது போலவே, பிரெஞ்சு மொழி நடமாடும் புதுச்சேரி யில், பிரெஞ்சோடு தமிழ் பிணைந்த பழைய அகராதிகள், புதுவை மாதாகோயில் அச்சகத்தில் புதுப் பதிப்புக்கள் பெற்று வருகின்றன. 371

மற்றும், நீண்டகாளாக கம் காட்டில் நிலவுகிற வடமொழியோடு தமிழ் பிணைந்த அகராதியும், பின் வந்த இந்தி மொழியோடு தமிழ் பிணைந்த அகராதியும் தோன்றியிருப்பதிலும் வியப்பொன்றுமில்லை.

இனி நூற்ருண்டு வாரியாக அகராதிகளைப் பற்றி ஆய்வாம் : பதினேழாம் நூற்ருண்டு அகராதிகள்

அகராதி மோனைக்கு அகராதி எதுகை

முதல் எழுத்து ஒன்றியிருப்பது மோனை என்பதும் இரண்டாம் எழுத்து ஒன்றியிருப்பது எதுகை என்பதும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அகராதி மோனைக்கு அகராதி எதுகை என்பது, சொற்களின் முதல் எழுத்தை ஒட்டிமட்டும் அகரவரிசைப் படுத்து வதை நிறுத்திக் கொள்ளாமல், இரண்டாம் எழுத்தை ஒட்டியும் சொற்களை அகரவரிசைப் படுத்திப் பொருள் கூறும் நூல் இது என்று அறியலாம். இவ்வகராதியில், சொற்பொருள் விளக்கம் செய்யுளா யில்லாவிடினும் கிட்டத்தட்ட நிகண்டு நடையில் உள்ளது.

இந்த அகராதியின் ஆசிரியர் பற்றியோ, காலம் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. இது பதினேழாம் நூற்ருண்டின் இறுதியில் தோன்றி யிருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது.

இச் சிறுநூலில் ஏறக்குறைய 7500 சொற்கள் பொருள் விளக்கம் செய்யப்பெற்றுள்ளன. எளிய சொற்கள் பல இதில் காணப்படவில்லை. அகல்வுற்று' என்பது போன்ற எச்சச் சொற்களும், செய்பொழில்’ என்பது போன்ற தொடர்களும், காண்போதல் உற்ருர் என்பது போன்ற வாக்கிய உருவங்களும் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாம். 373

பத்துச் சொல் அகராதி

இந்த அகராதியில், திவாகரம், சூடாமணி முதலிய நிகண்டுகளில் உள்ள சொற்கள் அகரவரிசைப் படுத் தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. இது பத்துத் தொகுதிகளை யுடையது. முதல் தொகுதியில் ஒரே எழுத்தாக உள்ள சொற்களும், இரண்டாந் தொகுதி யில் இரண்டு எழுத்துக்களா லான சொற்களும்...... இப்படியே...பத்தாக்தொகுதியில் பத்து எழுத்துக்களா லான சொற்களும் இடம் பெற்றுள்ளன. ஒரு சொல்லுக் குப் பொருள் அறியவேண்டுமாயின், அச்சொல்லில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று எண்ணிப் பார்த்து, அத்தனையாவது தொகுதியில் சென்று அக்ர வரிசைப்படி தேடினுல் மிக எளிதில் அச்சொல்லையும் பொருளையும் கண்டுபிடித்து விடலாம். ஆல்ை, பத்துக்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய சொல் லுருவங்கள் இந்த அகராதியில் இல்லை.

வைணவ விளக்கவுரை அருஞ்சொல் அகராதி

திருவாய் மொழி போன்ற வைணவத் திவ்யப் பிரபந்தங்கட்கு மணிப் பிரவாள (தமிழ்ச் சொல்லும் வட சொல்லும் கலந்த) நடையில் விரிவான விளக்க வுரை எழுதப்பட்டிருப்பது பலரும் அறிந்த செய்தி. அவ்வுரையில் உள்ள அருஞ்சொற்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ள நூல்தான் இந்த அகர்ாதி. பதின்மூன்று - பதின்ைகாம் நூற் ருண்டுகளில் பேச்சு வழக்கில் இருந்த சொற்கள் பல் வற்றை இதில் காணலாம். 374

இவ்வகராதியே யன்றி, சம்பிரதாய அகராதி என ஒன்றும் உள்ளது. வைணவச் சார்புடைய இந்தச் சம்பிரதாய அகராதி இருபதாம் நூற்ருண்டில் அச் சிடப்பட்டாலும், தோன்றிய காலம் திட்டமாகத் தெரியவில்லை.

தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி

பதினேழாம் நூற்ருண்டில் நம் நாட்டில் கிறித் துவ மதத்தைப் பரப்புவதற்காக ஐரோப்பாவிலிருந்து கிறித்துவத் துறவியர் பலர் வந்திருந்தனர். அவர்கள் இலத்தீன், போர்ச்சுகீசியம், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளை அறிந்தவர்கள். தம் மதத்தைத் தமிழ் மக்களிடையே பரப்பவேண்டுமாயின் அவர்கள் தமிழ் மொழியில் பேசில்ைதான் மக்களைக் கவர முடியும். அதற்காகத் தமிழ் கற்றர்கள்; தமிழ்ச் சொற்களை ஆராய்ந்தார்கள்; சொற்பொருள் களஞ்சிய மான அகராதிகளும் ஒரு மொழிக்கு ஒரு மொழியில் படைத்தார்கள். இவ்விதமாக ஐரோப்பிய மொழி களோடு தமிழ் பிணைந்த அகராதிகள் பல தோன்றின. தமிழ் மக்கள். ஐரோப்பிய மொழிகளை அறிந்து கொள்ளவும், புதிதாக வரும் ஐரோப்பியர்கள் தமிழ் மொழியை அறிந்து கொள்ளவும் இவ்வகராதிகள் பெருந்துணை புரிந்தன. இவற்றுள் காலத்தால் முக்தி யது தமிழ்- போர்ச்சுகீசிய அகராதியாகும்.

தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி என்பது, தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் முதலில் நிறுத்தி, அவற் றிற்கு நேரான போர்ச்சுகீசியச் சொற்களை எதிர்ப் பக்கத்தில் கொடுத்திருக்கும் அகராதியாகும். இதன் 375

ஆசிரியர் ஆந்தம் தெ ப்ரோயன்சா (Fr. Antem de Proenca) என்னும் மேலைப் புலத்துறவியார். இது. தோன்றிய காலம் கி. பி. 1679 ஆகும். மலையாளத்தி லுள்ள அம்பலக்காடு என்னும் இடத்தில் இது பதிப் பிக்கப்பட்டது. பதினேழாம் நூற்ருண்டில் ஏறக் குறையத் தமிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றே யாதலின், மேலைப் புலத் துறவியார் இவ்வக ராதியை மலையாளப் பகுதியில் உருவாக்கியதில் வியப் பொன்றுமில்லை.

இஃதொன்று தவிர, ஐரோப்பிய ம்ொழிகளேடு தமிழ் பிணைந்த மற்ற அகராதிகள் பதினெட்டாம் நூற்ருண்டிலும் பத்தொன்பதாம் நூற்ருண்டிலும் தோன்றின. பதினெட்டாம்நூற்ருண்டு அகராதிகள்

திக்சியனரியம் தமுலிசம்

“534lucarifluub 350p603ibo Dictionarium Tamulicum) என்னும் இந்தத் தமிழ் அகராதியை, பதினெட்டாம் நூற்ருண்டில் தோன்றிய முதல் அகராதியாகக் கொள் :ளலாம். இதன் ஆசிரியர் பர்தோல்மாஸ் சியஜன் பல்க்' (Bartholmaeus ziegenbalg) groörgyib Qalgir&ruuf. GT(195Ú பட்ட காலம் கி. பி. 1712 ஆகும். இவ்வகராதி ஒன்றும் பரவியதாகத் தெரியவில்லை.

சதுர் அகராதி

ஆசிரியர் வரலாறு

சதுர் அகராதியின் ஆசிரியர் பெஸ்கி Father) 1Beschi) என்னும் மேலைப்புலக் கிறித்துவத் துறவியார். இவர் கிறித்துவ மதம் பரப்ப இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாடு போக்து கி. பி. 1710-ஆம் ஆண்டிலிருந்து

1747-வரை வாழ்ந்தார்.

இவர் தமிழ் மக்களின் உள்ளங் கவர்வதற்காகக் காவி யுடுத்துக் கால் குறடு அணிந்து புலாலும் நீத் தார்; தைரியநாதசுவாமி எனவும் வீரமா முனிவர் எனவும் அழைக்கப்பட்டார்.

இலத்தீன், போர்ச்சுகீசியம் முதலிய ஐரோப்பிய மொழிகளை நன்கறிந்த வீரமாமுனிவர் தமிழ் மொழி 377

யினையும் நன்கு க்ற்று, சதுர் அகராதி முதலிய பல

அகராதிகள் இயற்றினர்; அகராதிகளேயன்றி, கொடுக் தமிழ், தேம் பாவணி, வேதியர் ஒழுக்கம், வேத விளக்

கம், வாமன் கதை முதலிய நூல்களும் இயற்றினர்.

திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட்பாலையும்

இலத்தீன் மொழியில் பெயர்த்தார். இவருடைய படைப்

புக்களுள் மிக்க பயனுள்ளது சதுர் அகராதி'யாகும்.

இஃது எழுதப்பட்ட காலம் கி. பி. 1732 ஆகும்.

நூல் அமைப்பு

இக்காலத்தில் காணப்படும் தமிழ் அகராதிகட் கெல்லாம் முன் மாதிரியாக உள்ளது சதுர் அகரா தியே. முதல் எழுத்து அல்லது இரண்டாம் எழுத்தோடு, கின்று விடாமல் சொற்கள் கடைசி எழுத்து வரைக்கும் அகரவரிசைப் படுத்தப்பட்டு, தமிழுக்கு நேரே தமிழ்ச் சொல்லிலேயே பொருள்கூறும் முதல் அகதிரா, இதுவே ! அதல்ை, இதனை யியற்றிய வீரமாமுனிவர் *தமிழகராதியின் தந்தை' எனச் சிறப்பிக்கப் பெற்றர். இந்நூல் தமிழ் என்னும் பெருங்கடலைக் கடக்க உதவும் ஒரு மரக்கலமாகத் திகழ்கிறது என இதன் பாயிரத் தில் கூறப்பட்டுள்ளது.

சதுர் என் ருல் நான்கு என்று பொருள். இவ்வக ராதி பெயரகராதி, பொருள் அகராதி, தொகையகராதி, தொடையகராதி என்னும் நான்கு பிரிவுகள் உடைய தாதலின் சதுர் அகராதி' என்னும் பெயர் பெற்றது. பெயர் அகராதி என்னும் பிரிவில், ஒவ்வொரு சொல் லுக்கும் உரிய பலப்பல பொருள்கள் (அர்த்தங்கள்) கூறப்பட்டுள்ளன. இதில் 12000 சொற்கட்குமேல் இடம் பெற்றுள்ளன. பொருளகராதியில், சிவன், திரு மால், நிலம் போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் உரிய 378

பலப்பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொகை யகராதியில் இருசுடர், முக்குணம் என்பன போலத் தொகைப் பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. தொடை யகராதியில், அகம் - இகம் - உகம் என்பன போலவும், ஊற்றம் - ஏற்றம் - கூற்றம் என்பன போலவும், முதல் எழுத்து தவிர மற்ற எழுத்துக்கள் எல்லாம் ஒத்து வந்து, செய்யுட்கு உதவக்கூடிய எதுகைத் தொடைச் சொற்கள் (Rhyming words) அகரவரிசையில் பொருள் விளக்கப்பட்டுள்ளன.

நான்கனுள் பெயரகராதியும் தொடையகராதியும், திவாகரம், சூடாமணி ஆகிய நிகண்டுகளிலுள்ள பதினேராக்தொகுதி போன்றனவாகும் - அதாவது - ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதி என்னும் இரண்டாம் பெரும் பிரிவைச் சேர்ந்தனவாம். பொரு ளகராதியோ, அங்கிகண்டுகளிலுள்ள முதல் பத்துத் தொகுதிகளைப் போன்றதாகும் - அதாவது - ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி என்னும் முதல் பெரும் பிரிவைச் சார்ந்ததாகும். தொகையகராதியோ, அக். நிகண்டுகளின் பன்னிரண்டாங் தொகுதியைப் போன்ற தாகும் - அதாவது - பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்ரும் பெரும் பிரிவைச் சேர்ந்ததாகும். பிற்காலத்தில் எழுந்த சில அகராதி களும் நான்கு கூறுகளாகப் பகுக்கப்பட்டமைக்குச் சதுரகராதியின் இந்த நான்கு கூறுகளுமே முன் மாதிரியாகும். இதைக்கொண்டு இவ்வகராதியின் சிறப்பினை யுணரலாம்.

பதிப்புக்கள்

சதுரகராதி பதினெட்டாம் நூற்றண்டில் (1732)

எழுதப்பட்டாலும் பத்தொன்பதாம் நூற்ருண்டில்தான் 379

அச்சிடப்பட்டது. இதன் இரண்டாம் தொகுதி

யாகிய பொருளகராதிமட்டும் திருச்சிற்றம்பல ஐயர்

என்னும் அறிஞரின் உதவியுடன் எல்லிஸ் (Ellis), என்னும் வெள்ளையரால் 1819-ஆம் ஆண்டில் பதிப் பிக்கப்பட்டது. பின்னர் நான்கு தொகுதிகளும்

கொண்ட நூல் முழுவதுமே, ரிச்சர்டு கிளர்க் (Richard Clarke) என்பவரின் ஆணைப்படி, தாண்டவராய முதலி யார், இராமச்சந்திரக் கவிராயர் ஆகியோரின் மேற் பார்வையில் 1842-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1835-ஆம் ஆண்டில் ரெவரன்ட் ஜே. ஸ்மித் (Rev.Smith) என்பவரால் வெளியிடப்பட்டது. பின் வந்த பதிப்பாசிரியர்கள், வீரமாமுனிவர் அமைத்த சொற்களுக்குமேலும் சில சொற்களைப் புதியனவாகச் சேர்த்துக் கொண்டதாகச்

சொல்லப்படுகிறது. மற்றும், ஆசிரியரால் ஒரு சொல் லுக்கு உரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தி யிருப்பதாகத் தெரிகிறது.

இந்த அகராதியின் மாதிரிக்காக, தாரம், ஊர்தி என்னும் இரு சொற்கட்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள்கள் வருமாறு :

தாரம் = அரும்பண்டம், நாக்கு, மனைவி, உச்சவிசை, பொன், மூக்காற் பாடு மிசை, யாழ் நாம்பிலொன்று, விண் மீன், வெள்ளி, வெண்கலம். நல்ல பணியாரம், வில், ஒசை,

கண்.

ஊர்தி = எருது, குதிரை, சிவிகை, தேர் யானை, பண்டி முதலிய வாகனங்கள், வினைமுற்று.

24 380

பாடல்கள்

செய்யுளால் நிகண்டு இயற்றிய பழைய ஆசிரியர் களின் மரபை யொட்டி, வீரமா முனிவரும், செய்யுள் நடையில் இல்லாத தமது சதுரகராதியின் தொடக்கத் தில் செய்யுளாலேயே சிறப்புப்பாயிரம் இயற்றியுள் ளார்; மற்றும், சதுரகராதியின் ஒவ்வொரு தொகுதி யையும் தொடங்குவதற்கு முன்பும், கடவுள் வணக்க மும் தொகுதி விவரமும் அறிவிக்கும் செய்யுள் பாடி யமைத்துள்ளார். நூலின் இறுதியிலும் முடிவுரைப் பாடலொன்று பாடியுள்ளார். இ த் தா லி காட்டு பெஸ்கி தமிழ்ப் புலவராகவே மாறிவிட்டதை நோக் கின் வியப்பேற்படுகிறது. இனி முறையே அந்தப் பாடல்கள் வருமாறு :

சிறப்புப் பாயிரம்

மூவுல கனத்து முயன்றடி யேத்த யாவுல கனத்து மேந்தியாள் கடவுளைப் பணிந்துநான் சூடிய பதமல ருலகெலா மணிந்து வாழ்த்த வருந்தமி முைம்பொருண் முன்னு றெளிந்து முன்னர்த் தந்த தொன்னூல் விளக்கந் துதித்துக் கொண்டனர் நூற்பதக் கருவியா நூங்கென வேண்டு நாற்பத விளக்கமு நவில்கென வேண்ட யாப்புற மறைவுறு மென்றுணர்ந் தொளிபெறப் பாப்புறத் தவைதனிப் பகர்ந்தக ராதியா வவ்வப் பெயர்ப்பொரு ளவ்வவ் பொருட்பெயர் காட்டிய பின்னர் மீட்டியை வழக்கொடு தொகைவரும் பலபொருள் வகைவர விளக்கியு முதல்வரு மெழுத்தொழி முழுதெலா மொன்றி நுதல்வரும் பதமொரு நுண்டொடை யாக்கியும் பெயர்பொரு டொகை தொடைபிரித்த நான்முகத் 381

துயர்பொரு டொடர்பத முரைத்து நூல் வழங்க மதுர வனாதி வளந்தாச் சதுரக ராதி சாற்றுது மன்றே .

இப்பாடலின் கருத்தாவது :- சொற்கட்குப் பொருள் விளக்கம் தரும்படிச் சிலர் கேட்டுக்கொண் டதற்கிணங்க, பெயர் அகராதி, பொருள் அகராதி , தொகையகராதி, தொடையகராதி என்னும் நால் வகைத் தொகுதிகளுடன் சதுர் அகராதி எனப் பெயரிட்டு நான் இந்நூலை இயற்றுகிறேன் - என்ப

தாகும்.

து

பெயரகராதி - காப்பு நம்முத லவனடி யிறைஞ்சி நாவலர்

தம்முதன் மொழிப்பயன் றரப் பதார்த்தங் கம்முத லெழுத்தணி யணவித் தந்திடு

மிம் முதற் பெயராக ராதி யென்பவே. இறைவனை வணங்கி, முதலாவதான பெயரகராதி யைத் தொடங்குகிறேன் - என்பது இதன் கருத்து.

பொருளகராதி - காப்பு "அருளகத் தனைத்துமே யாளு நாதனை மருளகத் தகற்றிட வணங்கி நூற்படி தெருளகத் தொரு பொருட் செப்பும் பற்பெயர்ப்

பொருளகராதியும் புகலு வாமரோ. கடவுளைத் தொழுது பொருளகராதியைப் புகலு கிறேன் - என்பது இதன் கருத்து.

தொகையகராதி - காப்பு அருட்டொகை வகைவகுத் துலகனைத்து

மங்கையி லேந்திய தயையிற்காத் திருட்டொகை துடைத்தெழும் பகுதியைப்போ

லெங்கணும் விளக்கிய வோரொன்பான் 382

மருட்டொகை விலகெனப் பணிந்தேத்தி

வழக்கொடு புலமையோர் முன்னுரைத்த பொருட்டொகை வகைப்பட விரித்துணர்த்திப்

புகலுதுந் தொகையாக ராதியென்றே.

இறைவனை ஏத்தித் தொகையகராதியைத் தொடங்குகிறேன் என்பது கருத்து.

தொடையகராதி - காப்பு பார்முத லுலகெலாம் பணிந்தேத்தும்

பரமனைப் புகழ்ந்தடி தொடையாகச் சார்முத லெழுத்தொழித் தொருங்கொன்றித்

தருமருந் தொடைத்தலை யாகெதுகை நேர்முத லாகுறிற் பற்றிய பின்

னெடிற்றொடர் தொடைப்பதந் தொடுத்திணக்கிச் சீர்முத லொன்றொழி சிறப்பெதுகை

செப்புதுந் தொடையக ராதியென்றே.'

தெய்வத்தை இறைஞ்சி, முதலெழுத்துத் தவிர இரண்டாமெழுத்து முதலாகிய மற்ற எழுத்துக்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ள எதுகைத் தொடைச் சொற்களுக்குப் பொருள் கூறும் தொடையகராதி யைத் துவக்குகிறேன் - என்பது இப்பாடலின் பொருள்.

நூல் இறுதிப் பாடல் |

"அடைக்கல நாயகி யம் புயச் சேவடி

யுடைக்கலா மாம் பிறை யொப்பத் தோன்றிய சுத்த சதுர்த்தி சுங்கநாட் பாகுலத் தொத்த வில்லிடை யுடைகுளங் குளிப்ப மூவாட்டை யாடான் முதல்வன் கோயிற் 383

பூவாட்டி வைத்துப் புக்கன நாளென மண்ணாண்ட சாலிவாகன சகாத்தத் தெண்ணான் கைம்பது மெண்ணாறு மாறுமா

மத்திருக் கன்னிதானாதியை யீன்ற பத்துறழ் நூறெழுபது மெண்ணான் காண்டுமா மருக்காவ னீழற்கீழ் வதிந்தவ ளாளுந் திருக்காவ லூரிற் றேவதாய் துணை செய

வீரா ரியனெனும் வேதியன் தாராய் முடித்த சதுரக ராதியே.

சாலிவாகன சகம் 1654 - ஆம் ஆண்டிற்கு நேரான கி.பி. 1732- ஆம் ஆண்டில், திருக்காவலூரில் எழுந் தருளியிருக்கும் அன்னையின் அருள் கொண்டு, வீராரிய னாகிய வேதியனாகிய வீரமாமுனிவன் இயற்றிய சதுரகராதி முற்றிற்று - என்பது இப்பாடற் கருத்து. பெஸ்கியவர்கள் தமிழ் நாட்டு அந்தணர் போலத் தம்மை மாற்றிக்கொண்டதால் 'வீர ஆரியன்' என்றும் வேதியன்' என்றும் இப்பாடலில் தம்மைத் தாமே சுட்டிக்கொண்டுள்ளார்.

வீரமாமுனிவரின் உள்ளப் போக்கையும், தமிழ் முன்னோரின் மரபைத் தாமும் மதித்துப் பின் பற்றிய பான்மையினையும், புதிதாகத் தமிழ் கற்ற அவ்வெள்ளை யரின் செய்யுள் அமைப்பினையும் அறிவிக்கும் மாதிரி யாக மேலுள்ள ஆறு பாடல்களும் இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டன.

(1)

புதுமை வீரமாமுனிவர் சதுரகராதியில் தொடையகராதி என ஒரு தொகுதி அமைத்திருப்பது புதுமையானது. அதையும் குறிற்கீழ் எதுகை', 'நெடிற்கீழ் எதுகை' 384

என இரண்டாகப் பகுத்துள்ளார். குற்றெழுத்தை முதலிலே உடைய எதுகைச் சொற்களெல்லாம் குறில்கீழ் எதுகையிலும், நெட்டெழுத்தை முதலிலே உடைய எதுகைச் சொற்கள் எல்லாம் நெடில்கீழ் எதுகையிலும் அடக்கப்பட்டுள்ளன. அகம், நகம், மகம் என்பன போன்றவை குறிற்கீழ் எதுகைச் சொற்களாம். ஆகம், நாகம், மாகம் என்பன போன் றவை நெடிற்கீழ் எதுகைச் சொற்களாம். இவ்வாறு பல்வகை எதுகைச் சொற்களையும் தேடிப் பிடித்து அகர வரிசைப்படுத்திப் பொருள் எழுதியிருப்பது பெரிய முயற்சியாகும். செய்யுள் இயற்றுவோர்க்கு எதுகைச் சொற்கள் வேண்டுமாயின் இத்தொகுதியில் வந்து மொண்டு கொள்ளலாம்.

பாராட்டு ஆங்கில நாட்டில் 'சாமுவேல் ஜான்சன்' (Samuel Johnson) என்னும் ஆங்கிலப் பேரறிஞர் 1747- ஆம் ஆண்டில் ஒரு தலைசிறந்த ஆங்கில அகராதி இயற்றி னார்; அதற்காக மிகவும் பாராட்டப் பெற்றார். அந்த அகராதி தோன்றுவதற்குப் பதினைந்து ஆண்டுகட்கு முன்பே (1732-இல்) தமிழ் நாட்டில் சதுர் அகராதியை இயற்றிய வீரமாமுனிவர் மிகமிகப் பாராட்டத் தக்கவ ரன்றோ? கீதம் பால்க்

பெஸ்கி தமிழ்-இலத்தீன் அகராதி

சதுர் அகராதியேயன்றி, ஐரோப்பிய மொழிகள் ளுடன் தமிழ் பிணைந்த வேறு சில அகராதிகளும் வீரமா முனிவர் இயற்றினார். அவற்றுள், தமிழ்ச் சொல்லுக்கு நேரே இலத்தீன் சொல்லால் பொருள் கூறும் அகராதியும் ஒன்று. இஃது எழுதப்பட்ட

கா 385 காலம் கி.பி. 1742. இதில் 9000 சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இலத்தீன் - தமிழ் அகராதி இலத்தீன் சொல்லுக்கு நேரே தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதி யிது. ஆசிரியர் வீரமா முனிவர் (பெஸ்கி).

தமிழ் - பிரெஞ்சு அகராதி தமிழ்ச் சொல்லுக்கு நேரே பிரெஞ்சுச் சொல்லால் பொருள் கூறும் அகராதி யிது. ஆசிரியர் (பெஸ்கி)

விரமா முனிவர். காலம் : கி. பி. 1744.

இந்த அகராதி மிகவும் அழகாகக் கையால் எழுதப்பட்டு, 1806 - ஆம் ஆண்டில், எழுதியதை அப்படியே படியெடுக்கும் 'சைகிளோஸ்டைல் (Cyclostyle) பொறி மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மிக மிக நீளமாகவும் அகலமாகவும் உயரமாகவும் உள்ள இந்த சைக்கிளோஸ்டைல்' பதிப்பு, பார்க்கப் பார்க்க மிகவும் நேர்த்தியாயிருக்கிறது. அவ்வளவு அழகாகப் பொறுமையுடன் எழுதிய கை யாருடையதோ? அந்த கைக்கு என்ன பரிசளிப்பது!

தமிழ் - ஆங்கில அகராதி இது, தமிழ்ச் சொல்லுக்கு நேரே ஆங்கிலச் சொல் லால் பொருள் கூறுவது. ஆசிரியர் வீரமாமுனிவர் (பெஸ்கி).

போர்ச்சுகீசியம் - இலத்தீன் - தமிழ் அகராதி

போர்ச்சுகீசியச் சொல்லுக்கு நேரே இலத்தீன் சொல்லாலும் அதனையடுத்துத் தமிழ்ச் சொல்லாலும் 386

பொருள் கூறும் அகராதி யிது. ஆசிரியர் வீரமா முனிவர். காலம் : 1744.

வட்டார வழக்குத் தமிழ் அகராதி ஆங்காங்கே பொதுமக்கள் பேசும் வழக்குச் சொற்களுக்குத் தமிழாலேயே பொருள் கூறும் அகராதி யிது. ஆசிரியர் வீரமா முனிவர்.

மேற் குறிப்பிடப்பட்டுள்ள அகராதிகளை ஆராயுங் கால், வீரமா முனிவரின் தமிழ்த் தொண்டு மிகவும் பரந்துபட்டது என்பது புலனாகும்.

ஃபாபிரிசியஸ் தமிழ் - ஆங்கில அகராதி இது தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் அகராதி. 'ஜான் பிலிப் ஃபாபிரிசியஸ்' (John Philip Fabricius), 'ஜான் கிறிஸ்தியன் ப்ரெய் தாப்ட்' (John Chrisitian Breithaupt) என்னும் செர்மானி யக் கிறித்துவச் சங்கத்தார் இருவரால் இவ்வகராதி இயற்றப்பட்டது. இருவருள் முதல்வர் பெயரால் இவ் வகராதி அழைக்கப்படுகிறது. அச்சிடப்பட்ட காலம் கி.பி. 1779.

பொதுவாக ஐரோப்பியர்கள் - சிறப்பாக ஐரோப் பியக் கிறித்துவத் தூதர்களும் ஐரோப்பிய வாணிகர் களும் தமிழ் அறிந்துகொள்ள உதவவேண்டும் என் னும் தலையாய நோக்கத்துடன் இஃது எழுந்ததாகத் தெரிகிறது. இலக்கியச் சொற்களோடு அன்றாட வழக்குச் சொற்களும் மரபுத் தொடர்களும் உட்பட 9000 உருப்படிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவ் வகராதியின் முதல் பக்கத்தில் (Title - Page ) பின் வருமாறு உள்ளது :

(

பாக 387

“ [Fabricius, John Phil., and Breithaupt John Chr.] தமிழும் இங்கிலேசுமா யிருக்கிற அகராதி. A Malabar and English Dictionary, wherein the words and phrases of the Tamulian language, commonly called by Europeans the Malabar Language, are explained in English; by the English Missionaries of Madras. Printed at Wepery, near Madras, in the year MDCCLXXIX.

மேலுள்ள பகுதியில், 'தமிழும் இங்கிலேசுமா யிருக்கிற அகராதி' என்று முதலில் தமிழிலும், அடுத்து 'Malabar and English Dictionary' என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. தமிழ் மொழியை மலபார் மொழி என்று ஐரோப்பியர்கள் அழைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலபார் என்பது மலையாளம். இதனால், தமிழும் மலையாளமும் ஒன்று என்பது உறுதிப்படும். பழைய தமிழ்ச் சேரநாடாகிய மலையா ளத்தில் வழங்கிய மொழியும் தமிழ்நாட்டில் வழங்கிய மொழியும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களின் செவிகட்கு ஒன்றாகவே தெரிந்ததில் வியப்பில்லை. 'லீலா திலகம்' என்னும் நூலில், தூய்மை யான மலையாள மொழி பழந்தமிழ் என்னும் பெயரால் அழைக்கப்பட்டிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

இவ்வகராதி 1779 - ஆம் ஆண்டில் சென்னை வேப் பேரியில் அச்சிடப்பட்டதாக மேலே கொடுக்கப் பட்டுள்ள பகுதியில் காணப்படுகிறது. ஆனால் அதில் 1779 என இந்திய - அரபு எண்ணால் குறிக்கப்படாமல், MD ( C LXXIX என ரோமன் எண்ணால் குறிக்கப் பட்டுள்ளது. அப்படியென்றால் 1779 என்று பொருள். 388

இதன் விளக்கம் வருமாறு:- அன்று ரோமானியர்கள் இலத்தீன் எழுத்தினாலேயே எண்களைக் குறிப்பிட்டு வந்தார்கள்.

M என்றால் ஆயிரம் 1000 D என்றால் ஐந்நூறு 500 C என்றால் நூறு 100 C என்றால் நூறு 100 L என்றால் ஐம்பது X என்றால் பத்து X என்றால் பத்து - IX என்றால் ஒன்பது

50

ஆக, M D C C L.XXIX என்றால் =

1779 ஆகும்.

இவ்வகராதியின் இரண்டாம் பதிப்பு, 'ரெவரன்ட் பொய்சால்டு' (Rev. Mr. Poezold), 'வில்லியம் சிம்சன்' (Mr. William Simpson) ஆகியோரால் ஒழுங்கு செய்யப் பட்டு 1809 - ஆம் ஆண்டில் அதே வேப்பேரியில் அச்சிடப்பட்டது.

இவ்வகராதியில், வரிகிறது, வரிந்து போடுகிறது என்பன போன்ற வினையுருவங்களும் கொடுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதிகள்


அகராதித் தமிழ்


Dictionnaire Francais - Tamoul Tamoul-Francais


மேலுள்ளாங்கு நான்கு வரிகளில் பெயர் சொல்லப் பட்டிருப்பது ஓர் அகராதியாகும். 282 பக்கங்கள் கொண்ட இவ்வகராதியில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் பாகத்தில் பிரெஞ்சுச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருளும், இரண்டாம் பாகத்தில் தமிழ்ச் சொல்லுக்குப் பிரெஞ்சுச் சொல்லால் பொருளும் கூறப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களிலுமே பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரு மொழிகளும் இடம் பெற்றிருப்பினும், நூலின் பெயராக முதலில் 'அகராதித் தமிழ்' என்னும் அழகிய பெயர் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் புதுமையாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது.

இதன் ஆசிரியர் ப்ளான்' (A. Blin) என்னும் பிரெஞ்சுக்காரர். நூல் தோன்றிய காலம் கி.பி. 1831. இவ்வகராதி முழுதும் அழகாகக் கையால் எழுதப் பட்டு, அப்படியே படி எடுக்கும் 'சைகிளோஸ்டைல்' (Cyclostyle) பொறியின் மூலம் பல படிகள் (பிரதிகள்) எடுக்கப்பட்டுக் கட்டடமும் (Binding) கட்டப் பட்டுள்ளது. நூலைத் திறந்து பார்த்தால் கையெழுத்துப் 390

யடி போல்தான் தோன்றும். இம்முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது மிகவும் வியப்பாயிருக்கிறது.

இவ்வகராதியின் தொடக்கத்தில், தமிழ் எழுத்துக் களைப் பிரெஞ்சுக்காரர் ஒலிப்பதற்கு உதவும் வகையில், ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் நேரே ஒலியொற்றுமை யுள்ள பிரெஞ்சு எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருப்ப தும் ஒரு புதுமையே.

பலவிடங்களில் தமிழ்ச் சொற்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுவது இவ்வகராதிக்கு ஒரு குறை

யாகும்.

தமிழ் - ஆங்கில அகராதி ஆங்கிலம் - தமிழ் அகராதி

தமிழுக்குத் தமிழ் அகராதி இம் மூன்றுவித அகராதிகளையும் தொகுத்து வெளியிட, யாழ்ப்பாணத்து அமெரிக்கக் கிறித்துவச் சங்கம் (American Mission at Jaffna) 1833 - ஆம் ஆண் டில் திட்டம் தீட்டியது. அச் சங்கத்தைச் சேர்ந்த 'ரெவரன்ட் ஜே. னைட் (Rev.I. Knight) என்பவர், 'கபிரியல் திசரா' (Gabriel Tissera), 'ரெவரன்ட் பீட்டர் பெர்சிவல்' (Rev. Peter Percival) ஆகியோரின் உதவி யுடன் இம்மூன்று அகராதிகளும் வெளியாவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். ஆனால் இடையிலேயே அவர் இறந்துவிட்டதால் இவை வெளிவராமல் நின்றுவிட்டன.

ராட்லர் தமிழ் - ஆங்கில அகராதி இது தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் அகராதியாகும். இதில் தமிழ்ச் 391

சொல்லாலும் பொருள் கூறப்பட்டுள்ளது. இதனை 1830- ஆம் ஆண்ட ளவில் ராட்லர் (Dr. J. P. Rottler) என்பவர் தொகுத்தார். இது நான்கு தொகுதிகளை யுடையது. சதுர் அகராதியிலிருந்து மிகுந்த அளவில் சொற்பொருள்களை இவ்வகராதி எடுத்துக்கொண் டுள்ளது. இதன் முதல் தொகுதி வேப்பேரியில் 1834 - ஆம் ஆண்டிலும், இரண்டாம் தொகுதி 1837 - இலும், மூன்றாம் தொகுதி 1839-இலும், நான்காம் தொகுதி 1841 - இலும் பதிப்பிக்கப்பட்டன. இப்பதிப்புக் களில், தாய்லர் (Rev. W, Taylor), வேங்கடாசல

முதலியார் ஆகிய இருவரும் எடுத்துக் கொண்ட பங்கு, மிகப் பெரியது.

இவ்வகராதியில், வரிகிறது, வரிந்தேன் , வரி வேன், வரிய, வரிதல், வரிக்கிறது, வரித்தேன் , வரிப் பேன், வரிக்க- என வினைச் சொல்லின் பல்வகை உருவங்களும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்

தக்கது.

க!

வின்சுலோ ஆங்கிலம் - தமிழ் அகராதி ( வின்சுலோ (Rev. M. Winslow) என்பவரால் ஆங் கிலச் சொல்லுக்கு நேரே தமிழ்ச் சொல்லால் பொருள் T அமைக்கப்பட்ட அகராதி யிது. காலம் : 1842 - ஆம். ஆண்டு.

யாழ்ப்பாணத் தமிழ் அகராதி இது யாழ்ப்பாணத்து அறிஞர் சந்திரசேகர பாண்டி தரால் தொகுக்கப் பெற்றது. தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் இவ்வகராதி யில் ஏறக்குறைய எல்லாத் தமிழ்ச் சொற்களும் இடம் 392

பெற்றிருப்பதாகத் தெரிகிறது. 58,500 சொற்கட்குப் பொருள் கூறும் இவ்வகராதி சதுரகராதியினும் நான்கு மடங்கு பெரியது. இவ்வகையில் நோக்கின், தமிழுக்குத் தமிழ் அகராதிகளுக்குள் இதுவே முதல் பெரிய அகராதியாகும். இதில் சொற்களேயன்றி அவற்றின் பொருள்களும் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. சதுர் அகராதியைப் போலவே இஃதும் நான்கு தொகுதிகளையுடையது.

இது, மானுவல் தமிழ் அகராதி (The Manual Dictionary of The Tamil Language) என்றும், யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் . அகராதி (Manippay - Akarathi) என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது. 'ரெவரன்ட் லெவி ஸ் பால்டிங் (Rev. Levi Spaulding) என்பவரால் 1842 - ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப் பட்டது.

ஸ்பால்டிங் ஆங்கிலம் - தமிழ் அகராதி

ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் 'பொருள் கூறும் அகராதி யொன்று ஸ்பால்டிங் (Rev. L. Spaulding) அவர்களால் 1844- இல் உரு வெடுத்தது.

பெர்சிவல் ஆங்கிலம் - தமிழ் அகராதி வின்சுலோ , ஸ்பால்டிங் ஆகியோரைப் போலவே, பெர்சிவல் (Rev. Peter Percival) அவர்களின் பெயராலும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் T கூறும் அகராதி யொன்றுள்ளது. இது, An English - Tamil Dictionary எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 393

“ Dictionarium Latino - Gallico - Tamulicum" "'Dictionaire Latin - Francais - Tamoul இலத்தீன் - பிராஞ்சு - தமிழ் அகராதி'

மேலுள்ளவாறு மூன்று மொழிகளில் பெயர் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அகராதி உள்ளது. இம் மூன்று பெயர்களும் ஒரே பொருள் (அர்த்தம்) உடைய வையே. மூன்றுமே ஒரே அகராதியைத்தான் குறிக் கின்றன. இம் மூன்றனுள் முதல் பெயர் இலத்தீன் மொழியாகும்; இரண்டாவது பெயர் பிரெஞ்சு மொழி; மூன்றாவது பெயர் தமிழ் என்பது படிப்பவர்க்குத் தெரியும். தமிழ்மொழி , Tamulicum என்று இலத்தின் மொழியிலும் , Tamoul என்று பிரெஞ்சு மொழியிலும் எழுதப்படுகிறது.

இவ்வகராதியில், இலத்தீன் சொல்லுக்கு நேராகப் பிரெஞ்சு சொல்லாலும், அதையடுத்துத் தமிழ்ச் சொல் லாலும் பொருள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதனை, கிறித்துவத் துறவியர் இருவர் இணைந்து இயற்றியதாக நூலின் முகப்பு அறிவிக்கிறது. புதுச் சேரி மாதா கோயில் அச்சகத்தாரால் கி.பி. 1846-ஆம் ஆண்டில் இந்நூல் அச்சிடப்பெற்றது. இந்த அச்சகத் தில் மேலும் பல ஆண்டுகள் கழித்து அச்சான தமிழ் - பிரெஞ்சு அகராதியின் மறுபதிப்பில், அவ்வகராதியை, 'முய்சே ' (L. Mousset), 'துய்புய் (L. Dupus) என்னும் அறிஞரிருவர் இணைந்து இயற்றியதாகக் கூறப்பட் டுள்ளது. இந்த இருவரே இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதியையும் இயற்றியவராவர் எனக் கொள்ள லாம். 394

இவ்வகராதியின் மாதிரிக்காக, இதிலுள்ள ஒரு சொற்பொருள் வருமாறு:

Abba = Pere = அப்பன், பிதா

Abba என்பது இலத்தீன் சொல் ; Pere என்பது பிரெஞ்சு சொல்; அப்பன் தமிழ்ச்சொல். Abba (அப்பா) என்றாலும், Pere (பேர்) என்றாலும் அப்பன் (தகப்பன்) என்று பொருளாம். இலத்தீனிலுள்ள அப்பா (Abba) என்னும் சொல்லும், தமிழிலுள்ள அப்பா என்னும் சொல்லும் ஒத்திருப்பதை நோக்கும்போது, பெரு. வியப்பும் பெருமகிழ்ச்சியும் தோன்றுகின்றன. இலத் தீனிலும் தமிழிலும் மொழி யடிப்படையில் ஒற்றுமை யுள்ள செய்திகள் தனி நூலாக எழுதும் அளவுக்கு மிகப் பல உள்ளன. ஈண்டு கூறின் மற்றொன்று விரித்தலாகும்.

ஒரு சொல் பல பொருள் விளக்கம் இது நிகண்டுகளின் பதினோராந் தொகுதிபோல் பெயர் உடையதாயிருக்கிறது. இதில் ஒரு சொல் லுக்குப் பொருளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொல் லுக்கும் இன்னொரு சொல்லால் விளக்கம் தரப்பட் டுள்ளது.

ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:

வரி = சுணங்கு = தேமல்

எழுத்து = அக்கரம் பாட்டு = இசைப் பாட்டு வாரிதி = கடல் இறை = குடியிறை நெல் = சாலி 395

சி

.

வரி என்னும் ஒரு சொல்லுக்குப் பொருளாக ஆறு சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதையும், அந்த ஆறு சொற்களையும் விளக்க வேறு ஆறு சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பதையும் மேலே காணலாம். இதன் ஆசிரியர் அண்ணாசாமி பிள்ளை என்பவர். காலம் கி.பி. 1850.

ஆங்கிலம் - தெலுங்கு - தமிழ் அகராதி (

ஆங்கிலச் சொல்லுக்குத் தெலுங்குச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறுவது இவ்வகராதி. ஆசிரியர் டி. எம். கிருஷ்ணசாமிபிள்ளை என்பவர். காலம் கி.பி. 1851.

தமிழ் - பிரெஞ்சு அகராதி தமிழ்ச் சொல்லுக்குப் பிரெஞ்சு சொல்லால் பொருள் கூறும் அகராதி யிது. இரண்டு பாகங்கள் இதில் உள்ளன. தலையணை போன்ற இவ்வகராதியின் முதல் பாகம் 932 பக்கங்களும், இரண்டாம் பாகம் (இறுதியில் ஏடுகள் கிழிந்துள்ளன) 1106 பக்கங்கட்கு மேலும் உடையன. புதுச்சேரி மாதா கோயில் அச்சகத் தாரால் கி.பி. 1855- ஆம் ஆண்டில் இஃது அச்சிடப் பட்டது. இருவர் துறவியர் இணைந்து இயற்றியதாக இந்நூலின் முகப்பு அறிவிக்கிறது. இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதி இயற்றிய அதே துறவியர்களே இவர்கள் என்று எண்ண இடமுண்டு. இதே அச்சகத் தில், 1875-ஆம் ஆண்டிலும், 1895 - ஆம் ஆண்டிலும் அச்சான இந்தத் தமிழ் - பிரெஞ்சு-அகராதியின் மறு பதிப்புக்களில் முய்சே ' (L. Mousset), 'துப்புய்' (L. Dupus) என்னும் இருவரும் இணைந்து இயற்றியதாகச் சொல் லப்பட்டுள்ளது. எனவே, இவ்வகராதியின் ஆசிரி யர்கள் இவ்விருவருமே.

25 396

(சிறிய) தமிழ் - பிரெஞ்சு அகராதி மிகவும் சுருக்கமான சிறிய தமிழ் - பிரெஞ்சு அகராதி யொன்றும் புதுவை மாதாகோயில் அச்சகத் தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு - தமிழ் அகராதி பிரெஞ்சு சொல்லுக்குத் தமிழ்ச்சொல்லால் பொருள் கூறும் அகராதியிது. தமிழ் - பிரெஞ்சு அகராதி தொகுத்த முய்சே, துய்புய் என்னும் அறிஞரிருவரும் தாம் இதனையும் தொகுத்து உருவாக்கினார்கள். இதுவும் மிகப் பெரிய அகராதிதான். இதன் மூன்றாம் பதிப்பு, புதுச்சேரி மாதாகோயில் அச்சகத்தாரால் 1952 - இல் வெளியிடப்பட்டது.

போப் தமிழ் - ஆங்கில அகராதி இது ஜி.யு. போப் (Rev. G. U. Pope) அவர்களால் தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் எழுதப்பட்ட அகராதி . காலம் 1859 ஆகும். ஜி. யு. போப் என்னும் ஆங்கிலேயர் ஒரு தலை சிறந்த தமிழ்ப் பித்தர்; தாம் இறந்த பிறகு தமது கல்லறையின் மேல் தம்மை ஒரு தமிழ் மாணவன்' என்று குறிப்பிடும்படி உயிரோடிருந்த போதே கோரியிருந்தார். அவ்வாறே ஆங்கில நாட்டுக் கல்லறையில் பொறிக்கப்பட் டுள்ளது. தமிழ் நாட்டில் கிறித்துவம் பரப்ப வந்தப் போப் அவர்கள், உலகில் தமிழ் பரவும்படிச் செய்துள்ள தொண்டுகள் மிகப் பல. இவர் திருக்குறள், திரு வாசகம், நாலடியார் ஆகிய நூற்களை ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார். இந்த ஆங்கிலத் தமிழ்ப் பெரு மகனார் தமிழ் - ஆங்கில அகராதி படைத்ததில் வியப் பென்ன! 397

வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் அகராதியிது. தமிழ் ஆங்கில அகராதி என்று இது பெயர் சுட்டப்பட்டாலும், ஆங்கிலச் சொல்லின் பக்கத்தில் தமிழ்ச் சொல்லாலும் பொருள் தரப்பட்ட டுள்ளது. எனவே, தமிழ் மட்டும் அறிந்தவர்க்கும் இஃது உதவும். இது அச்சிடப்பட்ட காலம் கி.பி. 1862 ஆகும்.

இதன் ஆசிரியர் வின்சுலோ (Rev. M. Winslow) என்பவர். ஆனால் இவ்வகராதி முற்றிலுமே வின்சுலோ அவர்களின் சொந்தப் படைப்பன்று. ஜே. நைட் (Rev.I. Knight), திசெரா (M. Tissera), பெர்சிவல் (Rev. P. Percival), WUN GULQI (Rev. L. Spaulding), L. 8619 (Rev. S. Hutchings) ஆகிய அறிஞர்களின் தொகுப்புக் களைப் பார்வையிட்டு, தள்ள வேண்டியதைத் தள்ளிச் சேர்க்க வேண்டியதைச் சேர்த்துச் செப்பஞ் செய்து வெளியாக்கிய பெருமையே வின்சுலோ அவர்கள் ளுடையது. இவ்வகராதியை உருவாக்கியதில், இராமா நுசக்கவிராயர், விசாகப் பெருமாள் ஐயர், வீராசாமி செட்டியார், ஆதி மூல முதலியார், அப்ரகாம் அல்லியன் முதலிய தமிழறிஞர்களும் வின்சுலோவுக்குப் பெருந் துணை புரிந்துள்ளனர்.

இவ்வகராதியில் பல்துறைக் கலைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. வடமொழிச் சொற்கள் தனியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தத் தில் 67,452 சொற்கள் பொருள் விளக்கப்பட்டுள்ளன.

இவ்வகராதியில் வினையுருவங்களை அமைத்துள்ள முறை கவனிக்கத்தக்கது. அஃதாவது: 398

வரி, கிறேன், ந்தேன், வேன், ய. வரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க.

மேலே, வரி என்னும் வினைப் பகுதியிலிருந்து முக்கால வினைமுற்றுக்களும் வினையெச்சமும் எப்படி உருவாகி அமைகின்றன என்பது நன்கு தெளிவாகும் படி வரி என்பதன் பக்கத்தில் கால் புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. நம்மவர் வெளியிடும் தமிழ் அகராதிகளில், வரி, வரிதல், வரித்தல் எனத் தொழிற் பெயர் உருவங்களே இருக்கும். ஃபாபிரிசியஸ், ராட்லர், வின்சுலோ முதலிய வெள்ளையர்களால் வெளியிடப்பட்ட அகராதிகளிலோ, வரிகிறது, வரிகிறேன், வரிய, வரிக்க முதலிய முற்று உருவங்களும் எச்ச உருவங்களும் உள்ளன. வெள்ளைய ருள்ளும் வின்சுலோவின் அகராதியில் தான் மேலுள்ள வாறு பகுதிக்குப் பக்கத்தில் கால்புள்ளி யிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தமிழர்கள் வழிவழி வழக்கத் தினால் முற்றுருவங்களையும் எச்ச உருவங்களையும் பேசவும் எழுதவும் இயற்கையாகவே தெரிந்துவைத் துள்ளனர். ஆனால், புதிதாகத் தமிழ் கற்கும் வெள்ளை யர்களுக்கு இந்த வாய்ப்பு எப்படியிருக்க முடியும்? எனவேதான், வின்சுலோ அவர்கள், ஒரு வினைப் பகுதி யிலிருந்து மற்ற வினையுருவங்கள் எப்படி யெப்படி யெல்லாம் உருவாகின்றன என்று கால் புள்ளி யிட்டுக் காட்டியுள்ளார். ஆராய ஆராயத்தான் புதுப்புது வசதிகள் வளரும் என்னும் இயற்கை அடிப் படை யை யொட்டி வின்சுலோவின் அமைப்பில் இந்த வசதி உருவாகியுள்ளது. வெள்ளையர்கள் தங்கள் நன்மைக்காக இவ்வித வேலைகள் புரிந்தாலும், அவர் களால் மறைமுகமாகவாவது உலகில் தமிழ் பரப்பப் 399

பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு தமிழரும் எண்ணிப் பார்த்தால், தாமும் அப் பணியைத் தொடரத் தொடங் குவர்.

தமிழ் - இலத்தீன் அகராதி தமிழ்ச் சொல்லுக்கு இலத்தீன் சொல்லால் பொருள் கூறும் இவ்வகராதியின் ஆசிரியர் ஆர்.பி. குரிபாதிரி யாரவர்கள். காலம் கி.பி. 1867.

கிளாசிகல் தமிழ் - ஆங்கில அகராதி தமிழுக்கு ஆங்கிலத்தால் பொருள் கூறும் இந்த உயர்தர (Classical Tamil English Dictionary) அகராதி, 1870- இல் , சென்னை மாநிலக் கல்வித்துறைத் தலைவரின் கண்காணிப்பின் கீழ் வெளியானது.

பதார்த்த பாஸ்கரம் (கிரந்தம் - தமிழ் அகராதி

கிரந்த எழுத்திலுள்ள சமசுகிருதச் சொற்கட்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறும் அகராதியிது. சமசுகிருதத்தை எழுதுவதற்குத் தமிழ் மக்கள் பயன் படுத்திய ஒருவகை எழுத்துதான் கிரந்த எழுத்து எனப்படுவது. ஒரு புது மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொள்வது போலவே கிரந்த எழுத்துக்களையும் கற்றுக்கொண்டால்தான் கிரந்த நூற்களைப் படிக் கவும் கிரந்த மொழியினை எழுதவும் முடியும். ஸ, ஜ, ஷ, ஹ, க்ஷ முதலிய எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களாம். இந்தக் கிரந்த எழுத்து வடிவிலுள்ள வடமொழிக்குத் தமிழால் பொருள் கூறுவது இவ்வகராதி. 40C

பத அர்த்தம் = பதார்த்தம் = அதாவது, பதங் களுக்கு அர்த்தம் = சொற்பொருள். பாஸ்கரன் = என்றால் ஞாயிறு (சூரியன்). இருட்டிலிருந்து பொருள்களை விளக்கும் ஞாயிற்றின் ஒளி போல, தெரியாத வட மொழிச் சொற்கட்குப் பொருள் விளக்குவதால் 'பதார்த்த பாஸ்கரம்' என இவ்வகராதி பெயர் பெற்றது.

இதன் ஆசிரியர் கடலூரையடுத்த திருவகீந்திர புரம் - தி க. நாராயண அய்யங்கார் என்பவர். ஆசிரி யரே நூலின் முன்னால், தற்சிறப்புப் பாயிரமாகத் தமிழில் ஓர் அகவற்பா பாடியுள்ளார்.

நூல் வெளியான காலம் ஈசுவர ஆண்டு என நூலின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 ஆண்டுகட்கு ஒரு முறை ஓர் ஈசுவர ஆண்டு வருகிறது. எனவே இது எந்த ஈசுவர ஆண்டு? கிடைத் துள்ள பதிப்பின் தாள்கள் மிகவும் பழமையாய்த் துளை போடப்பட்டிருத்தலின், இது கி.பி. 1937-ஆம் ஆண்டில் வந்த ஈசுவர ஆண்டாக இருக்க முடியாது; எனவே, கி.பி. 1877-ஆம் ஆண்டில் வந்த ஈசுவர ஆண்டே இது. ஆகவே இவ்வகராதியின் காலம் கி.பி. 1877 ஆகும்.

பில்டர் ஆங்கிலத் தமிழகராதி

ஆங்கிலத்துக்குத் தமிழால் பொருள் கூறும் இந்த (A Builder's Vocabulary in English and Tamil) அகராதி யின் ஆசிரியர் டி. எஸ். வீராசாமி முதலியார். காலம் கி.பி. 1880. 401

அகராதிச் சுருக்கம் தமிழ் பாக்கெட் அகராதி (Tamil Pocket Dictionary) என அழைக்கப்படும் இவ்வகராதி தமிழுக்குத் தமிழால் பொருள் கூறும் சுருக்கமான ஓர் அகராதியாகும். மாணவர்க்குப் பயன்பட வேண்டும் என்னும் நோக் குடன் இது கையடக்கமாக 'பாக்கெட் சைசு' என்னும் அளவில் வெளியிடப்பட்டது. இதில் 3000 சொற்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் தலைப் பிலும், ஒவ்வொரு குறள் அமைக்கப்பட்டிருப்பது இவ் வகராதிப்பதிப்பில் உள்ள ஒரு சிறப்பாகும். இவ்வக ராதி திரட்டியவர் C. விசயரங்க முதலியார். காலம்

கி.பி. 1883.

விசுவநாதபிள்ளை தமிழ் - ஆங்கில அகராதி

A Dictionary Tamil And English என்ற பெயருடைய இவ் வகராதியைத் திரட்டியவர் V.விசுவநாதப் பிள்ளை என்பவர், காலம் கி.பி. 1888.

தரங்கம்பாடி அகராதி தரங்கம்பாடி சங்கத்தாரால் கி.பி. 1897-ஆம் ஆண்டில் தோற்ற மெடுத்த இவ்வகராதி தமிழுக்கு ஆங்கிலத்தால் பொருள் கூறுவதாகும். இது ஃபாபிரி சியஸ் அகராதியை ஆதாரமாகக் கொண்டது. இதிலும், வினைப் பகுதியும் அதிலிருந்து உருவாகும் வினையுரு வங்களும் வின்சுலோ அகராதியில் உள்ளதுபோல் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 33,000 சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பதிப்பு 'பெப்சனெர்சு' (Rev. H. Beisenherz) என்பவரால் 1910 - ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 'பெக்செல்' 402

Rev. D. Bexell) என்பவரால் 1933- ஆம் ஆண்டிலும் வெளியாயின. இவ்வகராதியில் உள்ள ஒரு சிறப்பு அமைப்பாவது:

டாக்டர் க்ரால் என்பவர், ஐரோப்பிய மொழிகளில் வினைச் சொற்கள் வகைப்படுத்தப்பட்டு விளைவிகற்பப் பட்டி (Conjugation) கொடுக்கப்பட்டிருப்பது போன்று, தமிழ்வினைச் சொற்களின் விகற்பங்களையும் முக்காலங் கட் கேற்ப ஆராய்ந்து, வினைப் பகுதிகளைப் பதின் மூன்று வகையாகக் கணக்கிட்டிருக்கிறார். அதைப் பின் பற்றி, ஒவ்வொரு வினைப்பகுதியும் பதின்மூன்று வகை களில் இவ்வகையைச் சார்ந்தது எனக் கூறுகிறது இவ்வகராதி. இது மிகவும் சிறந்த அமைப்பன்றோ ?

இருபதாம் நூற்றாண்டு அகராதிகள்

இருபதாம் நூற்றாண்டு அகராதிகளைப் பற்றி இந்நூற்றாண்டினர் நன்கறிவர். இந்நூற்றாண்டில், போர்ச்சுகீசியம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழி களுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் புதிதாகத் தோன்றுவது நின்றுவிட, தமிழுக்குத் தமிழ் அகராதி களும் ஆங்கிலத்தொடு தமிழ் பிணைந்த அகராதிகளும் மட்டுமே புதிது புதிதாகத் தோன்றலாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றின பிரெஞ் சொடு தமிழ் பிணைந்த பழைய அகராதிகள் மட்டும், இருபதாம் நூற்றாண்டில், புதுச்சேரி மாதா கோயில் அச்சகத்தாரால் மறுபதிப்பு செய்யப்பெற்றன.

உரிமை பெற்ற இந்தியாவில் வேற்று நாட்டு மொழிகளின் ஆட்சி மறைய, இந்திய மொழிகள் தலை தூக்கத் தொடங்கியதால், சமசுகிருதம், இந்தி, மராட்டி, தெலுங்கு போன்ற இந்திய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. தமிழுக்குத் தமிழிலுங்கூட, பல்துறை யகராதி வகைகள் பல்கலாயின. இனி, இவ்விருபதாம் நூற்றாண்டு அகராதிகளைக் காலவாரி யாக ஆய்வாம் :

பதினெண் சித்தர் அகராதிகள் பதினெண் சித்தர் என்னும் பெயரால் பின்வரும் அகராதிகள் காணப்படுகின்றன : இருபதாம் நூற்றாண்டு அகராதிகள்



இருபதாம் நூற்றாண்டு அகராதிகளைப் பற்றி இந்நூற்றாண்டினர் நன்கறிவர். இந்நூற்றாண்டில், போர்ச்சுகீசியம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழி களுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் புதிதாகத் தோன்றுவது நின்றுவிட, தமிழுக்குத் தமிழ் அகராதி களும் ஆங்கிலத்தொடு தமிழ் பிணைந்த அகராதிகளும் மட்டுமே புதிது புதிதாகத் தோன்றலாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றின பிரெஞ் சொடு தமிழ் பிணைந்த பழைய அகராதிகள் மட்டும், இருபதாம் நூற்றாண்டில், புதுச்சேரி மாதா கோயில் அச்சகத்தாரால் மறுபதிப்பு செய்யப்பெற்றன.

உரிமை பெற்ற இந்தியாவில் வேற்று நாட்டு மொழிகளின் ஆட்சி மறைய, இந்திய மொழிகள் தலை தூக்கத் தொடங்கியதால், சமசுகிருதம், இந்தி, மராட்டி, தெலுங்கு போன்ற இந்திய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. தமிழுக்குத் தமிழிலுங்கூட, பல்துறை யகராதி வகைகள் பல்கலாயின. இனி, இவ்விருபதாம் நூற்றாண்டு அகராதிகளைக் காலவாரி யாக ஆய்வாம் :

பதினெண் சித்தர் அகராதிகள் பதினெண் சித்தர் என்னும் பெயரால் பின்வரும் அகராதிகள் காணப்படுகின்றன : 404

வைத்திய மூலிகை யகராதி வைத்திய மூலிகை விரிவகராதி

வைத்திய மலையகராதி இவ்வகராதிகள், பதினெண் சித்தர் அருளியதாகக் குறிப்பிடப்பட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆயினும், இவற்றை அகராதி உருவத்தில் பதினெண் சித்தர்கள் இயற்றி யிருக்க முடியாது. சித்தர்கள் இந்த நூற்றாண்டினர் அல்லர். அவர்கள் கடந்த நூற்றாண்டுகளில் செய்யுள் நடையில் மருத்துவ (வைத்திய) நிகண்டுகள் இயற்றி' யுள்ளனர். அம் மருத்துவ நிகண்டுகளில் கூறப் பட்டுள்ள சொற்களையும் அவற்றின் பொருள்களையும் (அர்த்தங்களையும்) இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் தொகுத்து அகராதியாக உருவாக்கி அச்சிட்டனர் என்பதுதான் உண்மை .

பதினெண் சித்தர் அகராதிகளுள், வைத்திய மூலிகை விரிவகராதி, சென்னை வித்யாரத்நாகர அச்சுக் கூடத்தில் கி. பி. 1902- இல் பதிப்பிக்கப்பட்டது. வைத்திய மலையகராதி என்னும் நூல், சென்னை பத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் 1908- இல்

அச்சிடப்பட்டது.

1949-இல் மறு பதிப்பான வைத்திய மூலிகை விரிவகராதியைத் தொடர்ந்து, பதினெண் சித்தர் பெயரில்

அரும்பெயர் அனுபந்த அகராதி

தொகை யகராதி என்னும் அகராதிகளும் உள்ளன. மாதிரிக்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொற்பொருள் வருமாறு: 405

வைத்திய மூலிகையகராதி - அகத்தி = ஓர் மரம். அரும்பெயர் அனுபந்த அகராதி - அக்காரப்

பட்டை = மாமரப் பட்டை - தொகையகராதி:- அகிற் கூட்டு 5 = சந்தனம்,

கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம். மேற்கூறிய அகராதிகளே யன்றி, ஊர்பேர் விவரம் தெரியாத அகராதிகள் சிலவும் உள்ளன. அவை. யாவன :

பச்சிலை மூலிகை அகராதி பரிபாஷை அகராதி கருப் பொருள் அகராதி மறைப்பு வெளிப்படை யகராதி

மேற் கூறிய அகராதிகளின் பெயர்களைப் பார்க்குமளவில், மருத்துவ அகராதிகளும், கலைச் சொல் லகராதிகளும் படைக்கும் முயற்சி பரவலாக இருந்தமை புலனாகும்.

ந. கதிரைவேற் பிள்ளை யகராதி இது தமிழுக்குத் தமிழ் அகராதியாகும். இந்நூற். றாண்டின் தொடக்கத்தில் ந. கதிரைவேற் பிள்ளையவர் களால் ஆக்கப்பட்டது.

பிகா

தமிழ்ச் சொல்லகராதி ( இது தமிழுக்குத் தமிழ் அகராதி. சங்க அகராதி, தமிழ்ச்சங்க அகராதி என்றுங்கூட இது அழைக்கப் படும். ஆசிரியர் இலங்கை சி. டபிள்யூ. கதிரைவேற் பிள்ளையவர்கள் காலம் 1904. தலையணை போன்ற பெரிய இவ்வகராதி மூன்று பாகங்கள் உடையது; ஏறத்தாழ . 406

1800 பெரிய பக்கங்களைக் கொண்டுள்ளது. இக் காலத்தில் வளர்ந்துள்ள பல்வகைக் கலைச் சொற்கள் உட்பட ஏறக்குறைய 63,900 சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் அடுத்த பதிப்பு மதுரைத் தமிழ்ச் - சங்கத்தாரால் அச்சிடப்பெற்றது.

இலங்கை சி. டபிள்யூ. கதிரைவேற் பிள்ளையின் இவ்வகராதி 1904-ஆம் ஆண்டிலேயே அச்சாயினும், அடுத்த பதிப்பாக இதன் முதல் பாகம் 1910-இலும், இரண்டாம் பாகம் 1912-இலும், மூன்றாம் பாகம் 1923-இலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அச்சேறின. இப்போது இதன் முழு உருவத்தையும் ஒருசேரக் காணலாம்.

தமிழ்ப் பேரகராதி தமிழுக்குத் தமிழான இவ்வகராதியும் மிகப்பெரிது; சதுர் அகராதிபோல் நான்கு தொகுதிகள் உடையது; த. குப்புசாமி நாயுடு என்பவரால் தொகுக்கப் பெற்றது; சென்னை கோபால விலாச அச்சியந்திர சாலையில் 1906-இல் பதிப்பிக்கப்பட்டது.

சிறப்புப் பெயர் அகராதி சிறந்த தெய்வங்கள், ஊர்கள், நூற்கள், புலவர்கள் முதலான பல்வகைப் பொருள்களின் சிறப்புப் பெயர்களை அகரவரிசைப்படுத்திப் பொருள் கூறும் தமிழுக்குத் தமிழ் அகராதி யிது. ஆசிரியர் ஈக்காடு - இரத்தினவேலு முதலியார். காலம் 1908.

இராமநாதன் தமிழ் அகராதி The Twentieth Century Tamil Dictionary GTOOTOJO தலைப்புடைய இவ்வகராதி தமிழுக்குத் தமிழாகும்; 407

நான்கு தொகுதிகளுடன் மிகப் பெரியதாக உள்ளது; எங்கோ சில விடங்களில் சொல்லால் பொருள் விளக்குவ தல்லாமல் படங்களும் கொடுக்கப்பட்ட டுள்ளமை இவ்வகராதிக்கு ஒரு தனிச் சிறப்பு. சொல்லால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத பொருள்களைப் படத்தின் துணைகொண்டு புரிந்து கொள்ளலாமல்லவா? இதன் ஆசிரியர் : P. இராம நாதன், B.A., M - R.A.S., F.R.H.S. அவர்கள். காலம் 1909.

ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி The School Dictionary English-English Tamil என்னும் பெயருடைய இது, ஆங்கிலத்துக்கு ஆங்கிலத். தாலும் தமிழாலும் பொருள் கூறும் அகராதி. தொகுப்பாளர் டி. ஏ. சுவாமிநாத ஐயர். காலம் 1909.

06

அபிதான சிந்தாமணி தமிழ் மொழியில் தோன்றிய முதல் கலைக் களஞ்சியம் (Encyclopaedia) அபிதான சிந்தாமணி யாகும். இஃது, தனித் தனிச் சொல்லுக்குத் தனித் தனிச் சொல்லால் பொருள் கூறும் மற்ற அகராதிகளைப் போன்றதன்று. கடவுள்கள், முனிவர்கள், அரசர்கள், புலவர்கள், நூற்கள், பறவை - விலங்குகள் முதலிய பல்வகைப் பெயர்களை அகரவரிசைப்படுத்தி விரிவாக விளக்கம் கொடுத்திருக்கும் நூல் இது. சில பெயர் களைப் பற்றிப் பல பத்திகளும், சில பெயர்களைப் பற்றிக் கட்டுரை யமைப்பில் பல பக்கங்களுங்கூட எழுதப்பட்டுள்ளன. சிறப்புடைய யாராவது ஒருவரைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றியோ விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் மானால் இந்நூலின் துணையை நாடலாம். 408

அபிதானம் என்றால் பெயர் என்று பொருளாம். கேட்ட பொருள்களை யெல்லாம் அளிப்பதாகச் சொல்லப் படும் சிந்தாமணி' என்னும் தெய்வ மணிக்கல்லைப் போல, தேவையான பெயர்களைப் பற்றி யெல்லாம் விவரம் தெரிந்து கொள்ள உதவும் நூலாதலின் இஃது

அபிதான சிந்தாமணி என்னும் பெயர் பெற்றது.

இதன் ஆசிரியர், சென்னை பச்சையப்பன் கல்விச் சாலையில் தமிழ்ப் பேராசிரியரா யிருந்த ஆ. சிங்கார வேலு முதலியாராவர். 1910-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் இது முதலில் வெளியிடப் பட்டது. முதல் பதிப்பு மிகவும் நீள - அகல முடைய 1050 பக்கங்கள் கொண்டது. பின்னர் ஆசிரியர் மேலும் பல செய்திகளைச் சேர்த்து விரிவாக்கித் தாமே இரண்டாம் பதிப்பைத் தொடங்கினார். 1936 - இல் வெளியான இரண்டாம் பதிப்போ 1634 பக்கங்களைக் கொண்டது.

இந்நூலில், அகத்திய முனிவர் முதலாக வெளவால் ஈறாகப் பல பெயர்கள் விளக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க் கையாக, சைவத் திருப்பதிகள், வைணவத் திருப் பதிகள், அரச மரபுகள் முதலியன பற்றிய பலவகைச் செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

தமிழாசிரியர்க்கும், சொற்பொழிவாளர்க்கும், எழுத் தாளர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எய்ப்பினில் வைப்பே போல் பெருந்துணை புரிந்து வரும் பெரு நூல் இது என்றால் மிகையாகாது.

கார்னேசன் தமிழ் மொழி யகராதி தமிழுக்குத் தமிழான இந்தும் மிகப் பெரிய அகராதி ( தான். நா.கதிரைவேற்பிள்ளையவர்களின் படைப்பில் 409

மேலும் தம் கைவண்ணம் கூட்டி வண்ணக் களஞ்சியம் காஞ்சி - நாகலிங்க முதலியார் இவ்வகரா தியைப் புதிய வடிவில் அமைத்தார். இதிலும் நான்கு தொகுதிகள் உள்ளன. காலம் 1911.

பழமொழி பகராதி அகர வரிசையில் தமிழ்ப் பழமொழிகள் தரப்பட் டுள்ள இவ்வகராதியின் ஆசிரியர் சு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள். இது, சென்னை ரிப்பன் அச்சியந்திர சாலையில் 1913-இல் அச்சிடப்பட்டது.

இலக்கியச் சொல் அகராதி இது, கலித்தொகை, இராமாயணம், சிந்தாமணி, நிகண்டுகள் முதலிய இலக்கியங்களில் உள்ள இன்றி யமையாப் பெயர்ச் சொற்கள் அகரவரிசையில் பொருள் கூறப்பட்டிருக்கும் அகராதியாகும். இதன் ஆசிரியர் சுன்னாகம் (யாழ்ப்பாணம்) அ. குமாரசாமி பிள்ளை யவர்கள். அச்சான காலம் 1914.

ஆங்கிலம் - தமிழ் - ஆங்கில அகராதி Junior School Dictionary (English-Tamil-English) என்னும் பெயருடைய இவ்வகராதி, ஆங்கிலத்துக்குத் தமிழாலும் ஆங்கிலத்தாலும் பொருள் கூறும் அகராதி யாகும். ஆசிரியர் பி. என். சங்கர நாராயணப் பிள்ளை .

முதல் பதிப்பின் காலம் 1914.

தமிழ் மொழி யகராதி ( தமிழுக்குத் தமிழாய் 1918-இல் வெளியான இவ் வகராதி கா.நமச்சிவாய முதலியாரது முயற்சியின் வடிவமாகும். 410

.

.

விசாகப் பெருமாள் தமிழகராதி ( தமிழுக்குத் தமிழான இவ்வகராதி, விசாகப் பெருமாள் ஐயரது உழைப்பின் உருவமாகும்.

பைபிள் அகராதி (The Tamil Bible Dictionary) பைபிள் செய்திகள் அகரவரிசையில் தரப்பட்டுள்ள இத் தமிழகராதியின் ஆசிரியர் கிலேற்றன் ஏ. சி. (Clayton, A. C.) என்பவர். இது, சென்னை சி. எல். எஸ்.

அச்சகத்தில் 1923-இல் அச்சாயிற்று.

தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சியின் கீழ் வெளியான இவ் வகராதி, 'Tamil Lexicon' என்று ஆங் கிலத்திலும், 'சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி' என்று தமிழிலும் அழைக்கப்படும். இது தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறும் ஒரு தலை சிறந்த அகராதியாகும். தமிழர்கள் தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் அறிந்து கொள்ளப் பயன்படுவதோடு, ஆங்கிலம் தெரிந்த அயல் மொழிக்காரர்கள் தமிழ் கற்பதற்குப் பெருந்துணை புரிவது இவ்வகராதி. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பதோடு, பக்கத்தில் ஆங்கில எழுத்துக்களாலும் எழுதப் பட்டுள்ளன. அந்த ஆங்கில எழுத்துக்களின் துணைகொண்டு, ஆங்கிலமறிந்தவர்கள் தமிழ்ச் சொற்களை எளிதில் திருத்தமாக ஒலிக்க (உச்சரிக்க) முடியும். தமிழ் எழுத்துக்களுக்கேற்ப ஆங்கில எழுத்துக்களின் கீழும் மேலும் தக்க அடையாளம் இருக்கும். அ என்பதற்கு a என்பது; ஆ என்னும் நெடிலுக்கு a என்னும் எழுத்தின் மேல் சிறு கோடு ; ந என்பதற்கு N; ங என்பதற்கு N மேலே ஒரு புள்ளி ; 411

ண என்பதற்கு N கீழே ஒரு புள்ளி ; ன என்பதற்கு N கீழே ஒரு கோடு - இப்படியாக எழுத்துக்கள் தக்க முறையில் அடையாளப்படுத்தப்பட்டு, முகப்பில் அடையாள விவரமும் தரப்பட்டிருப்பதால், ஆங்கில மறிந்த அயலார் எளிதில் தமிழ்ச் சொற்களை ஒலிக்க முடியும்.

மற்றும் இவ்வகராதியில், தூய தமிழ்ச் சொற்கள் அல்லாத சொற்கள் - அதாவது - பிற மொழிகளில் லிருந்து தமிழுக்கு வந்த சொற்கள். * இந்த உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. சொற்களின் வேர்ப் (Root) பகுதி இடையில் - இந்தச் சிறுகோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கூட்டுச் சொற்களின் உறுப்புக் களும் இடையிடையே சிறுகோடிட்டு ஆங்கில எழுத்துக்களால் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. இம் முயற்சிகள் தமிழ்கற்பார்க்கு மிகவும் பயனுடையவை யன்றோ ? மேலும், இவ்வகராதியில் சிலவிடங்களில் குறிப்பிட்ட தமிழ்ச் சொல், மலையாளம், கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் அதே உருவத்தில் - அல்லது - சிறிது திரிந்த உருவத்தில் வழங்கப்பட்டு வருவதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இது, ஒப்பியல் மொழியாராய்ச்சியாளர்க்கு நல் விருந்து.

இவையேயன்றி இவ்வகராதியில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, ஒரு சொல்லுக்குரிய பொருள் கொடுக்கப்பட்டதும், அதன் பக்கத்திலேயே, இந்தச் சொல் இதே பொருளில் இன்ன நூலில் எடுத் தாளப்பட்டுள்ளதென நூல் மேற்கோளும் கொடுக்கப் பட்டுள்ளது.

6 412

0

பல்துறைக் கலைநூற்களிலுள்ள சொற்களேயல் லாமல், உலகியல் வழக்குச் சொற்களும் இவ்வகராதி யில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. அவற்றின் பக்கத் தில் உலக வழக்குச் சொல் என்ற அறிவிப்பும் கொடுக் கப்பட்டிருக்கிறது.

மிகமிக நீளமும் அகலமும் உடைய தாளில் ஏறக் குறைய 4000 (நாலாயிரம்) பக்கங்களுடைய இப் பேரகராதி ஆறு (Volumes) பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பெரும் பிரிவிலும் பல உட்பிரிவு கள் (Parts) உள்ளன. ஆறு பெரும் பிரிவுகளிலும் மொத்தம் இருபத்தைந்து உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொர் உட்பிரிவும் தனித்தனி நூலாக அச்சிடப் பெற்றது. முதல் உட்பிரிவு 1923 ஆம் ஆண்டிலேயே அச்சு தொடங்கப்பட்டு 1924-இல் தான் முடிவுற்று வெளியாகியது. இப்படி ஒவ்வோர் உட்பிரிவும் அச் சாகிக் கொண்டுவர, இறுதி உட்பிரிவு 1936- இல் தான் அச்சாகி முடிந்தது. ஆக, 1923-இல் அச்சு தொடங்கப் பட்ட இவ்வகராதி 1936 - இல் தான் முழு உருவம் பெற்றது. இப்பேரகராதியில் 1,04,405 சொற்கள் பொருள் விளக்கப்பட்டுள்ளன.

இந்த இருபத்தைந்து பிரிவுகளில் அடங்காமல் விடுபட்ட 20,000 சொற்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டுத் தொகுக்கப்பட்டன. அவையும் அகரவரிசையில் பொருள் விளக்கப்பட்டு, மூன்று பாகங்களாக்கப்பட்டு, பிற்சேர்க்கைத் தனிப் பதிப்பாக (Supplement Edition) 1938- ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.

பன்னூறாயிரம் ரூபாய் செலவிட்டுக் கொண்ட இவ் வகராதி தோன்றின் வரலாறும் தெரிய வேண்டு மல்லவா? இப்படியொரு தமிழ்ப் பேரகராதி தோற்று 413

விக்கவேண்டும் என்னும் திட்டம் 1911 - ஆம் ஆண்டில் சென்னை அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட டது. அரசு முயற்சி எடுத்துக்கொள்ளவே, அகராதி அமைப்புக்குழுவும் ஆசிரியர் குழுவும் தோன்றின. அக ராதி வேலையின் மேலாட்சிப் பொறுப்பு சென்னைப் பல் கலைக் கழகத்திடம் (University of Madras) ஒப்படைக்கப் பட்ட து. ஆசிரியர் குழுவின் தலைவராக (Chief Editor) ரெவரன்ட் ஜே. எஸ். சண்ட்ல ர் (Rev.T. S. Chandler)

அமர்த்தப்பட்டார்.

நான்!

ஒருவிதமாக 1913 சனவரியில் அகராதி வேலை தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இடையில் முதன்மையாசிரியர் பதவியிலிருந்து சண்ட்ல ர் விலகிய தால் 1922 - இல் . சு. அனவரத விநாயகம் பிள்ளை அவ் விடத்திற்கு அமர்த்தப்பட்டார். பின்பு அவரும் விலகியதால் 1924 - இல் சி. பி. வேங்கடராம ஐயர் அமர்த்தப்பட்டார். பின்னர் அவரும் விலகியதால் 1926 - இல் எஸ். வையாபுரிப்பிள்ளை அமர்த்தப்பட்டார். இவர் முதன்மையாசிரியர் பொறுப்பில் இறுதிவரையும் நிலையாக இருந்து அகராதிப் பணியை முடித்து வைத்தார். முதன்மையாசிரியர்க்குத் துணையாசிரியர் களாக, நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர் பலர் அமர்த்தப் பட்டுப் பணிபுரிந்தனர்.

பல்லாண்டுகளையும் பன்னூறாயிரம் ரூபாய்களை யும் பலருடைய உழைப்பினையும் விழுங்கிவிட்ட இத் தமிழ்ப் பேரகராதி மொத்தத்தில் பெறும் பயன் தரத் தக்கதொன்றாம். இதனைப் பயன்படுத்துவோர்க்கு உதவும்படியாக இதன் தொடக்கத்திலும் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள் மிகவும் பாராட்டம் பாலவை. 414

இனி, இவ்வகராதியின் மாதிரிக்காக, 'அஃகுதல் என்னும் சொல்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருள் விளக்கங்கள் வருமாறு:

அஃகு - தல் (1) akku, 5 v. intr. [K. akkudisu.] Prob. அல்கு - , 1. To be shortened, as a vowel ; அளவிற் குறுகுதல். (நன்னூல் - 60). 2. To be reduced , to shrink; சுருங்குதல். 'கற்பக் கழிமடம் அஃகும்' (நான் மணிக். கடிகை - 29). 3. To be dejected; மனங்குன்றுதல். 4. To be acute, refined; நுண்ணிதாதல். 'அஃகியகன்ற அறிவு' (திருக்குறள் - 175). 5. To pass away; கழிந்து போதல். 'அல்லாயிரமாயிரம் அஃகினவால்' (கம்பராமாயணம் - அயோத்தியா காண்ட ம் - 69). 6. To become closed, com - pressed, as a flower ; குவிதல். 'ஆம்ப ல் ........ மீட்ட ஃகு தலும் (காஞ்சிப் புராணம் - திருக்கண். 104).

அஃகு (2) akku, N. < அஃகு - Oozing water ஊறுநீர். (திவாகர நிகண்டு).

மேலே முதல் பத்தியில் அஃகு என்னும் வினைச் சொல்லுக்குரிய ஆறு பொருள்களும், இரண்டாம் பத்தியில் அஃகு என்னும் பெயர்ச் சொல்லுக்குரிய ஒரு பொருளும், பல்வகை அடையாளக் குறிகளுடனும், ஆங்கில விளக்கத்துடனும், இலக்கியச் சான்றுகள் ளுடனும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். (K. akkudisu) என்றால், அஃகுதல் என்பது கன்னட மொழியில் 'அக்குடிசு என்று வழங்கப்படும் என்று பொருளாம். இவ்வாறே மற்ற குறிப்புக்களையும், அகராதியின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள அடை யாள் விவரங்களின் படிப் படித்தறிந்து கொள்க.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற படி, மேலே தரப்பட்டுள்ள ஒரு மாதிரியிலிருந்தே இவ்வகராதியின் பெரும்பயன் புலனாகுமே! 415

தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி இது ச.பவானந்தம் பிள்ளையவர்களால் தொகுக்கப் பெற்று 1925-இல் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தம் காலத்தில் புதிதாய் வழக்கத்துக்கு வந்த பல்வகைக் கலைச்சொற்களைத் தொகுத்துப் பொருளுடன் வெளி யிட்டதால் தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி' எனப் பெயரிட்டார். இதன் முதல் பதிப்பைச் சென்னை மாக் மில்லன் நிறுவனத்தார் வெளியிட்ட 1925- ஆம் ஆண் டிற்கும் இன்றைய 1965-ஆம் ஆண்டிற்கும் இடையில் இன்னும் எத்தனையோ 'தற்காலத் தமிழ்ச் சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளனவே!

சுப்பையர் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழகராதி The Excelsior Senior School Dictionary English-English Tamil என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ள இவ்வக ராதி, ஆங்கிலத்துக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறுவது. ஆசிரியர் K. V. சுப்பையர் M. A. L. T., M. R. A. S. முதல் பதிப்பின் காலம் 1932.

ஜூபிலி தமிழ்ப் பேரகராதி தமிழுக்குத் தமிழான இவ்வகராதி, நான்கு தொகுதிகளுடன் 1386 பெரிய பக்கங்கள் கொண்ட பேரகராதியாகும். தொகுப்பாசிரியர் நெல்லை எஸ் சங்கரலிங்க முதலியாரவர்கள். முதல் பதிப்பான காலம் 935. ஆங்கில நாட்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நினைவாக வெளியிடப்பட்ட தால் இது 'ஜூபிலி' என்னும் அடைமொழி பெற்ற தாம். திரு. வி. கலியாண சுந்தர முதலியார் முதலிய பெரும் புலவர்கள் பலர் இதற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளனர். 416 ஆனந்த விகடன் சித்திரப்போட்டி அகராதி

இஃது, ஆனந்தவிகடன் குறுக்கெழுத்துச் சித்திரப் போட்டியில் ஈடுபட்டோர் பயன்படுத்தும் நோக்கத் துடன் உருவான அகராதியாகும். இதனைப் பொது வாக மற்றவரும் பயன்படுத்தலாம் என முன்னுரை யில் கூறப்பட்டுள்ளது. 2040 பக்கங்கள் உள்ள இவ்வகராதியின் காலம் 1935 ஆம் ஆண்டு.

இராமநாதன் ஆங்கிலத் தமிழகராதி ஆங்கிலத்துக்குத் தமிழால் பொருள் கூறும் அக ராதி. ஆசிரியர் பி. இராமநாதன் M: A. காலம் 1936.

மதுரைத் தமிழ்ப் பேரகராதி புலவர் பலரால் தொகுக்கப்பட்டு நான்கு தொகுதி களுடன் கூடிய இப் பேரகராதி இரண்டு பாகங்களாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் 1229 பெரிய பக்கங்களும், இரண்டாவது பாகத்தில் 1058. பெரிய பக்கங்களும் உள்ளன. இதனை வெளியிட்டவர் : மதுரை இ.மா. கோபால கிருணக்கோன் அவர்கள்.

முதற்பதிப்பின் காலம் : 1937.

தமிழ் - சம்சுகிருத அகராதி இது, தமிழ்ச் சொல்லுக்கு சம்ஸ்கிருத எழுத்தா லான சம்ஸ்கிருதச் சொல்லால் பொருள் கூறும் அகராதி. இதன் ஆசிரியர் கே.ஈ. வேங்கடேச சர்மா அவர்கள். சென்னை பியர்லெஸ்" அச்சுக்கூடத்தில் ஈசுவர ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பதிப் பிக்கப்பட்டதாக நூலின் முன்னுரை கூறுகிறது. எப்போது வந்த ஈசுவர ஆண்டெனில், கிடைத்துள்ள 417

பதிப்பின் தாள் ஓரளவு நன்றாக - புதிய நிலையில் இருப்பதால் அண்மையில் வந்த ஈசுவர ஆண்டாகத் தான் இருக்கவேண்டும். அப்படியெனில் இதன் காலம் கி. பி. 1937 ஆகும்

சம்சுகிருதம் - தமிழ் அகராதி இது, சம்ஸ்கிருத எழுத்தாலேயே எழுதப்பட்டுள்ள சம்ஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதி . இதன் ஆசிரியர் 1937 - ஆம் ஆண்டில் தமிழ் - சம்ஸ்கிருத அகராதி எழுதி வெளியிட்ட அதே நே. ஈ. வேங்கடேச சர்மா

வடசொல் தமிழ் அகரவரிசை இது ஆகாசம், சலம், சந்தோஷம் முதலியவைபோல, வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்து தமிழ் எழுத்துக்களாலேயே எழுதப்பட்டுள்ள வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறும் அகராதியாகும். எனவே, மேலே கூறப்பட் டுள்ள சம்ஸ்கிருதத் தமிழ் அகராதிக்கும், இந்த வட சொல் தமிழ் அகரவரிசைக்கும் உள்ள வேறு பாட்டை யுணரவேண்டும்.

இவ்வகராதியின் ஆசிரியர் : தனித்தமிழ் வேந்த ராகிய மறைமலையடிகளின் மகளார் தி. நீலாம்பிகை யம்மையார். நூலின் பெயராக அகராதி என்று கூறா மல் 'அகரவரிசை என்று கூறியிருப்பதிலிருந்தே அம்மையாரின் தனித்தமிழ்ப் பற்று வெளிப்படுகிறது. 292 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 5000 வடசொற் கட்குமேல் பொருள் கூறப்பட்டுள்ளன. 418

வடசொல் அகரவரிசைச் சுருக்கம் தி. நீலாம்பிகையம்மையாரால் இயற்றப்பட்டதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடசொல் தமிழ் அகர வரிசை என்னும் அகராதியின் சுருக்கமே இவ்வகராதி யாகும். குறிப்பிட்ட சில வட சொற்கள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பதிப்புக்கூட 1938-இல் தமிழ்ப்பாதுகாப்புக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி

இவ்வ கராதி, An Etymological And Comparative Lexicon of the Tamil Language என முதலில் ஆங்கிலத் தில் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் : இலங்கையில் தலைசிறந்த பேரறிஞரான ஞானப்பிர காச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, O.M.I.) ஆவர். இதன் அச்சுத் தொடக்க ஆண்டு 1938 ஆகும். இவ் வகராதியின் சிறப்புக்கள் சொல்லி முடியா!

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி யின் (Tamil Lexicon) சிறப்புக் கூறுகளுள் பல அமைந் திருப்பதோடு, மேலும் சொற்பிறப்பும் மொழி ஒப்பிய லும் விரிந்த அளவில் கூறப்பட்டிருப்பது இவ்வக ராதிக்குத் தனிச்சிறப்பாகும். அதாவது, - தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லா லும் பொருள் கூறப்பட்டிருக்கும் இவ்வகராதியில், எடுத்துக் கொண்ட ஒரு சொல், எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாகிறது என்பது காட்டப்பட்ட டிருப்பதோடு, அத்தமிழ்ச் சொல், மற்ற இந்திய மொழி களிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ஒத்த நிலையில் வழங்கப்படுகிற அவ் வ ம் மொழியுருவங்களும் 419

(Indexes of Words Quoted From Indo-European Lang uages) கொடுக்கப்பட்டிருப்பது, இவ்வகராதிக்கு மட்டு மன்றித் தமிழ் மொழிக்கும் மாபெருஞ் சிறப்பளிப்பதா யுள்ளது.

ஆம், தமிழுக்குச் சிறப்புதான் ! இவ்வகராதியின் ஆசிரியர் ஞானப்பிரகாச அடிகளார் தமது முன்னுரை யில் பின்வருங் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் : -

தமிழ்ச் சொற்கள் முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படுங் கருத்துக்கள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப் படையாகும்; எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங் கொண்டன என்பது புலப்படும்.

இக்கருத்துப்படத் துணிந்து எழுதியுள்ளார் அறிஞர் ஞானப்பிரகாசர். தமிழ்ச் சொற்களிலிருந்து தான் இந்திய மொழிச் சொற்கள் தோன்றின என்பது பரவலான பழங்கருத்து. ஆனால், ஐரோப்பிய மொழிச் சொற்களும் தமிழ்ச் சொற்களிலிருந்தே தோன்றின என்னும் மாபெருங் கருத்து, ஞானப்பிரகாசர் போன்ற ஒரு சிலரால் மட்டும் ஆராய்ந்து சொல்லப்பட்ட புது விருந்தாம் .

இனி, இவ்வகராதியின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக, 'அகழ்தல்' என்னும் சொல்லுக்குக் கூறப் பட்டுள்ள விளக்கம் வருமாறு: 420

'அகழ் - தல் akal 4. v. tr. [From akal ; 2nd. format. differentiated into 1 for greater emphasis : 'to widen a hole' cf. al - அகலின் திரிபு ; மேல்வ. வியஞ் . உறுதியின் பொருட்டு ழகரமாயிற்று. 'ஓட்டையைப் பெரிதாக்கல் : ஆழ் தல் காண்க) 1. To excavate; தோண்டுதல் ; 2. To uproot அடியோடு களைதல் (சூத சங்கிதை. சிவ. 13. 31).

K. agal-Tu. agar, aguru, agal cf Lat. Allus 'deep; high,' alvus 'valley' G. alt. Eng. old. The Lat alo. Got. alan & C...

மேலே கொடுக்கப்பட்டுள்ள அகராதிப் பகுதியின் முதல் பத்தியில், 'அகழ்தல்' என்பதற்குச் சொற் பிறப்பும் ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருளும் கூறப்பட்டுள்ளன; இரண்டாம் பத்தியில், கன்னடம், துளு ஆகிய இந்திய மொழிகளிலும், இலத் தீன், செர்மனி, ஆங்கிலம், (கிழக்கு செர்மனியில் வழங்க கிய) கோதீக் ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும் அகழ் என்னும் தமிழ்ச் சொல்லோடு ஒத்துள்ள சொல்லுருவங் கள் ஒப்பியல் முறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இப்பகுதியின் இடையிடையே காணப்படும் சுருக்கக் குறியீடுகளை, அகராதியின் முகப்பில் தரப்பட்டுள்ள அடையாள விளக்கங்களின் துணை கொண்டு புரிந்து கொள்க; ஈண்டு விரிப்பிற் பெருகும்.

இப்படியொரு தலைசிறந்த - ஈடு இணையற்ற முயற் சியை எடுத்துக் கொண்ட பேரறிஞராகிய ஞானப் பிரகாச அடிகளார்க்குத் தமிழ் மக்கள் என்ன கைம் மாறு செய்ய முடியும்!

கலைச் சொல் அகராதி ( ஆங்கிலத்தில் உள்ள கலைச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறும் இவ்வகராதி, 421

திருநெல்வேலி - சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால் 1938-இல் பதிப்பிக்கப்பட்டது. இதில், 1. கணிதம் (Mathematics), 2. பூதநூல் (Physics), 3. வேதி நூல் (Chemistry), 4. பயிர் நூல் (Botany), 5. விலங்கு நூல் (Zoology), 6. உடலியலும் நலவழியும் (Physiology and Hygiene). 7. பூகோளம் (Geography), 8. வரலாறு முதலியன (History, etc.), 9. வேளாண்மை (Agriculture) ஆகிய ஒன்பது பிரிவுகளின் கீழ், இவ்வொன்பது கலை களைப் பற்றிய ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொல் விளக்கம் பெற்றுள்ளன. தமிழில் கலைச் சொற்கள் இல்லையெனும் குறையைப் போக்கும் முயற்சிகளுள் இஃதும் ஒன்று!

கலைச் சொற்கள் - பொதுவியல் பல்வகை ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ளன. ஆசிரியர் : சாமி வேலாயுதம் பிள்ளை. ஆண்டு : 1940.

கழகத் தமிழ்க் கையகராதி தமிழுக்குத் தமிழான இக்கையடக்க அகராதியை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1940 - இல் வெளி யிட்டது. இதன் ஆசிரியர்கள் : சேலை. சகதேவ முதலி யார், காழி, சிவ. கண்ணுசாமி பிள்ளை ஆகிய இருவர்.

சை

ஆனந்த விகடன் போட்டி ஆசான் ஆனந்தவிகடன் போட்டியில் விடையாக வந்த சொற்கள் அகர வரிசையில் தொகுக்கப் பெற்ற அக ராதியே யிது. ஒவ்வொரு சொல்லுக்கும் நேரே அத னதன் போட்டி வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு ஒன்று வருமாறு: 422

அகம் - இது பிடித்தவர்கள் பிறர் சொல்வதை அவ்வள வாக லஷ்யஞ் செய்ய மாட்டார்கள்.

இம்மாதிரி போட்டி ஆசான்கள் ஆங்கிலத்தில் உண்டு. அதுபோலவே இது ஆக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் கலந்துகொள்வோர்க்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்னும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனை 1940 - இல், சென்னை பி. என். சிம்மம் அண்டு கோ. வெளியிட்டது.

இந்தி - தமிழ் அகராதி இந்திச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் இவ்வகராதியை, தட்சிண பாரத இந்தி பிரசார சபையினர் வெளியிட்டுள்ளனர்.

நகா நாட்டாண்மைக் கழக

ஆட்சிமுறைச் சொல்லகராதி நகர நாட்டாண்மைக் கழக ஆட்சிமுறை பற்றிய ஆங்கிலக் கலைச் சொற்கட்கு நேரான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ள இவ்வகராதி தமிழ்ப் பாதுகாப்புக் கழகத் தால் 1941-இல் வெளியிடப்பட்டது.

ரகர - றகர அகராதி இது, அரம், மரம் - அறம், மறம் என்பன போல ரகர இன எழுத்துக்களும் றகர இன எழுத்துக்களும் வந்துள்ள தமிழ்ச் சொற்கள் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டிருக்கும் அக ராதியாகும். எந்த 'ர' போடுவது - இடையின் 'ர' போடு வதா - வல்லின ற' போடுவதா என்ற ஐயம் ஏற்படின் 423

இவ்வகராதி துணை செய்யும். வேறு பெரிய பொது அகராதியைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம்; ஆனால் அதில் பல பக்கங்களைப் புரட்டவேண்டும்; இதிலோ உடனடியாக எடுத்துவிடலாம். இஃது ஒரு. வகைப் புது முயற்சியே.

இதன் ஆசிரியர் புதுவை சுந்தர சண்முகனார். இது 1948- இல் எழுதி முடிக்கப்பட்டு, பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

இலக்கண அகராதி இலக்கண நூற்களிலுள்ள இலக்கணக் கலைச் சொற்கள் அகர வரிசைப்படுத்தப்பட்டு, சிறு சிறு . கட்டுரை போல் விரிவாக விளக்கஞ் செய்யப்பட்டுள்ள இவ்வகராதியின் ஆசிரியர் புதுவை சுந்தர சண்முகனார். இது 1948 - இல் எழுதப்பட்டது, அவ்வாண்டிலேயே சுந்தர சண்முகனாரால் எழுதப்பட்டு, புதுவைப் பைந் தமிழ்ப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட தமிழ்த் திருநாள், குழந்தைப் பாட்டு, ஆத்திசூடி அமிழ்தம், சிறுவர் செய்யுட் சோலை ஆகிய நூற்களின் இறுதி மேலட்டைப் பக்கத்தில் இலக்கண அகராதி - விரை வில் வெளிவரும் - என்று விளம்பரப்படுத்தப்பட்டும், இதுவரை இது வெளியாகும் சூழ்நிலை ஏற்படவே, யில்லை .

கார்த்திகேயினி புதுமுறை அகராதி புதுக்கோட்டை - இராமச்சந்திரபுரம் - கார்த்திகே. யினி பிரசுரத்தாரால் 1949-இல் வெளியிடப்பட்ட இப். புதுமுறை அகராதியின் தொகுப்பாசிரியர், முன்னாள் 'தாய்நாடு' ஆசிரியராகிய எஸ். நடராசன் என்பவர். 424

இதில், ண -ன; ர - ற; ல ழ ள - ஆகிய வேறுபாடுடைய எழுத்துக்களாலான சொற்கள் அகரவரிசையில் பக்கத் தில் பக்கத்தில் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப் பட்டிருப்பது ஒரு புது முறையன்றோ ? எடுத்துக் காட்டுக்கள் வருமாறு:

1

அணல் .......... அனல் ............... அரம் .......... அறம் ..... ..... ..... அகலி .......... அகழி ........ அகளி ............

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வாழ் வோர்க்கு ல-ள என்னும் எழுத்துக்களில் பிழையேற் படும்; தென் மாவட்டங்களாகிய பாண்டிய நாட்டில் வாழ்வோருக்கு ல ழ ள என்னும் மூன்றும் சிக்கலுக்குரிய வை; ஏனெனில், அவர்கள் வாலைப்பலம், கோலிக்குஞ்சு என்பன போல 'ழகரத்தை லகரமாக ஒலிப்பவர்கள். அதனால்தான் இப்புதுமுறை யகராதியில் வ-ழ-ள என்னும் மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் நோக் கம் வட மாவட்டத்தார் சிலர்க்குப் புரியாமற் போகலாம் மாதலின் ஈண்டு விளக்கப்பட்டது.

லிப்கோ ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழகராதி

ஆங்கிலத்துக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறும் இவ்வகராதி, 'லிப்கோ ' (Lifco) எனப் படும் சென்னை லிட்டில் பிளவர் கம்பெனியால் 1950-இல் வெளியிடப்பட்டது.

லிப்கோ தமிழ் - தமிழ் அகராதி தமிழுக்குத் தமிழான இவ்வகராதியும் 'லிப்கோ நிறுவனத்தால் வெளியானது.

III. 425

செந்தமிழ் அகராதி (

தமிழுக்குத் தமிழான இவ்வகராதியின் ஆசிரியர் க.சி. கந்தையா பிள்ளை. ஆண்டு 1950.

திருக்குறள் அகர வரிசை

இது, திருக்குறள் முழுவதிலும் உள்ள பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், ஆகிய அனைத்துச் சொற்களும் அகர வரிசைப் படுத் தப்பட்ட அகராதியாகும். குறிப்பிட்ட ஒரு சொல் திருக்குறளில் என்ன பொருளில் - என்னென்ன பொரு ளில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் நோக்கத்துடன் இஃது ஆக்கப் பட்டது. இதன் ஆசிரியர் புதுவை சுந்தர சண்முகனார்.

1950-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த இவ்வகராதி, சிறப்பான முறையில் திருக்குறள் சொல் லடைவு என்னும் படைப்பு சாமி. வேலாயுதம் பிள்ளை யவர்களால் வெளியிடப்பட்டு விட்டதால், ஆசிரியரால் சோர்ந்து கைவிடப்பட்டது. வெளிவராமல், கத்தை கத்தையாகக் கையெழுத்து வடிவில் உள்ள இவ்வக ராதியின் அலங்கோலத்தை' இன்றும் ஆசிரியரிடம் காணலாம்.

திருக்குறள் அகராதி (கந்தையா)

திருக்குறள் சொற்பொருள் விளக்க அகராதி யாகிய இது, ந. சி. கந்தையா பிள்ளையால் தொகுக்கப் பெற்று வெளிவந்துள்ளது. 426

காலக் குறிப்பு அகராதி காலங்களின் விளக்கக் குறிப்பாகிய இந்த அக ராதியின் ஆசிரியரும் ந. சி. கந்தையா பிள்ளை யவர்களே.

சங்கர் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழகராதி

The Shankar Dictionary எனப்படும் இது, ஆங் கிலத்துக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறுவது. ஆசிரியர் A.M.S. ராகவன், B.A., L.T. ஆண்டு 1952.

கழக ஆங்கிலத் தமிழ்க் கையகராதி ஆங்கிலத்துக்குத் தமிழான கையடக்க முள்ள இவ்வகராதியின் ஆசிரியர் கா. அப்பாதுரை பிள்ளை MA., L.T. அவர்கள். இது, சென்னை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால் 1952- இல் பதிப்பிக்கப் பட்டது.

கழகப் பழமொழி அகர வரிசை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1952 - இல் வெளியிடப்பட்ட இவ்வகராதியில், 10683 தமிழ்ப் பழமொழிகள் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இது நல்ல முயற்சி. பழமொழிகளைப் பற்றி யறிய விரும்பு வோர்க்கு இது ஒரு பெருங்கண்ணாடியாகும். மாதிரிக் காக, இந்நூலிலுள்ள முதல் பழமொழியும் இறுதிப் பழமொழியும் வருமாறு:

(1) அகங்குளிர முகம் மலரும். (10683) "'வெளவின பேர்க்கு முடிவது சுருக்கு. 427

தமிழ்ப் புலவர் அகராதி (கந்தையா)

(புலவர் அகர வரிசை ) இதில், அகத்தியர் முதல் வையாபுரி முதலியார் ஈறாகப் பல தமிழ்ப் புலவர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் ந. சி. கந்தையா பிள்ளை . காலம் 1952.

தமிழ் இலக்கிய அகராதி (கந்தையா)

(இலக்கிய அகர வரிசை ) இதில், அகத்தியம் முதல் வைராக்கிய தீபம் ஈறாகப் பல தமிழ் இலக்கியங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியரும் ந.சி. கந்தையா பிள்ளையே. ஆண்டு 1952.

திருக்குறள் சொல்லடைவு இந்த அரிய படைப்பின் ஆசிரியர் சாமி. வேலா யுதம் பிள்ளையவர்கள், வெளியீடு மொழியரசிப் பதிப் பகம் ; காலம் 1952- ஆம் ஆண்டு .

இவ்வெளியீட்டில், திருக்குறள் முழுவதிலும் உள்ள எல்லாச் சொற்களும் அகரவரிசைப் படுத்தப் பட்டு, திருவள்ளுவரால் இன்னின்ன பொருளில் கை யாளப் பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு, அது இத்தனை யாவது - இத்தனையாவது குறள்களில் வந்துள்ளது எனக் குறள்களின் எண்களையும், அவ்வக் குறள்களில் அச்சொல் தரும் பொருள்களையும் ஆசிரியர் வேலாயுதம் பிள்ளை அழகாக அறிவித்துள்ளார். சுருக்கக் குறியீடுகள் பலவும் தந்துள்ளார்.

27 428

குறிப்பிட்ட ஒரு சொல் உலகப் பெருநூலாகிய திருக்குறளில் இருக்கிறதா எனக் கண்டறியவும், அப்படியிருப்பின் அது திருவள்ளுவர் காலத்தில் நூல் வழக்கில் இருந்திருக்கிறது எனத் தெரிந்து கொள்ள வும், திருக்குறள் ஆட்சியைக் கொண்டு அச்சொல் லுக்கு இன்ன - அல்லது இன்னின்ன பொருள் உண்டு என வரையறுக்கவும் இவ்வெளியீடு பெருந்துணை புரி யும். எனவே, திருக்குறள் ஆராய்ச்சியாளர்க்கும் மொழியாராய்ச்சியாளர்க்கும் கால ஆராய்ச்சியாளர்க் கும் ஒரு சேரப் பயனளிப்பது இந்நூல் என்று துணிந்து கூறலாம். மாதிரிக்காக 'அகம்' என்னும் சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது வருமாறு:

அகம் (ஒன் . பொ. பெ.) = நெஞ்சம் 277,298,708, 787, 830. [அகப்பட்டி = (தன்னிற் )) சுருங்கிய பட்டி] (ப.தொ). 1074. வையகம், வானகம்) (ஒன் இட.) = இடம் 101,547, 1055.

சுருக்கக் குறியீடுகளின் விளக்கங்களை நூலின் முன்னுரையில் கண்டுகொள்க.


கலைக் களஞ்சியம்


Tamil Encyclopaedia அபிதான சிந்தாமணியை ஒரு சார் சிறு தமிழ்க் கலைக் களஞ்சியம் எனலாம். ஆனால், இந்தக் 'கலைக் களஞ்சியம்' என்னும் படைப்பே, உண்மையில் முழுமை பெற்ற முதல் தமிழ்க் கலைக்களஞ்சியம் (Tamil Encyclopaedia) ஆகும். அபிதான சிந்தாமணி யில், புராண இதிகாச - காவிய - இலக்கிய இலக்கண - நூற்கள் சார்பான சில்துறைக் கலைச் செய்திகளே ஒரளவு விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்தக் கலைக் களஞ்சியத்திலோ , அபிதான சிந்தாமணியில் உள்ளன 429

போன்ற செய்திகளுடன், இக்காலத்திலுள்ள பல் துறைக் கலைச் செய்திகளும் மிகவும் விரிவாக விளக் கப்பட்டுள்ளன. பல்வகைக் கலைகளைப் பற்றிய அறி வையும் பெற்றுக் கொள்ளத் தக்க களஞ்சியமாக இப் படைப்பு இருத்தலின் இது கலைக் களஞ்சியம் என்னும் பெயர் பெற்றது. இதனை ஆங்கிலத்தில் என்சைகிளோ பெடியா ' (Encyclopaedia ) என்ப ர்.

உலகத்தில் இருந்த இருக்கிற இன்றியமையாத எந்தப் பொருளைப் பற்றியும் - யாரைப் பற்றியும் தகுந்த பட விளக்கங்களுடன் தெரிந்து கொள்ள உதவும் கலைக் களஞ்சியங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளில் விரிவாக உள்ளன. அத்தகு அரும் பெரும் படைப்பு தமிழ்மொழியில் இல்லாத குறையை இந்தக் கலைக் களஞ்சியம் தோன்றிப் போக் கியது. இத் தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் இடம் பெற் றுள்ள கலைகளின் பெயர்கள் வருமாறு:

தமிழ், உயிரியல், தாவரவியல், விலங்கியல், புவி யியல், காட்டியல், தத்துவம், சமயம், உளவியல், அற வியல், அளவையியல், ஆங்கிலம், நாடகம், இசை, நடனம், மானிடவியல், தொல் பொருளியல், வரலாறு, அரசியல், பொருளியல், பெளதிகம், இரசாயனம், ஓவியம், சிற்பம், கட்டடச் சிற்பம், மொழியியல், கல்வி, பொறியியல், தொழில் நுட்பவியல், பொரியல், சுரங்கவியல், சட்டம், பூகோளவியல், மருத்துவம், இரண சிகிச்சை , உளவியல், உடலியல், உடல் நலவியல், கால் நடை மருத்துவம், சமசுகிருதம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, கணிதம், வானவியல், புள்ளியியல், விவசாயம் முதலியன. 430

மேற் கூறப்பட்டுள்ள தலைப்புக்களின் கீழ் ஆயிரக்கணக்கான செய்திகள் அகரவரிசையில் இதில் விளக்கப் பெற்றுள்ளன. விளக்கம் என்றால் ஒரு வரி யிலோ அல்லது சில வரிகளிலோ அன்று; மிகவும் நீள மும் அகலமுங் கொண்ட தாளில் - பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக - கட்டுரை வடிவில் விளக்கம் காணப் படுகிறது. சில தலைப்புக்களின் கீழ்க் கொடுக்கப்பட்ட டுள்ள செய்திகளைத் தனித்தனியாக அச்சிட்டால் ஒவ் வொன்றும் தனித்தனி நூலாகச் சிறந்து காட்சியளிக் கும். கலைக் களஞ்சியத்தின் இன்னுமொரு சிறப் பாவது : - பெரும்பாலார் பார்க்காத சில பொருள்களும், பார்க்க முடியாத சில பொருள்களும், எழுத்துக்களால் விளக்கிப் புரியவைக்க முடியாத சில பொருள்களும் பொருத்தமான படங்களின் துணைகொண்டு விளக்கப் பட்டுள்ளன. இத்தகு பயனுள்ள கலைக் களஞ்சியம் ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தனித் தனி யாக ஒன்பது பெரிய வெளியீடுகளாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இனி இது தோன்றிய வரலாறு வரும் மாறு:

சென்னை மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரவர்களின் முயற்சி யால் 1947 - ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம்' என ஒரு நிறுவனம் சென்னையில் தோன்றியது. அன்னா ரது விடா முயற்சியாலும் பலர் ஈந்த பொருளுதவியா லும் 1947 - அக்டோபர் - விசயதசமியன்று தமிழ் வளர்ச் சிக் கழகம் கலைக்களஞ்சிய வேலையைச் சென்னைப் பல் கலைக்கழகக் கட்டிடத்தில் தொடங்கியது. ஆசிரியர் குழுவின் தலைவராக (Chief Editor) ம. ப. பெரிய சாமித் தூரன் அமர்த்தப்பட்டார். பல் துறைக் கலைகளில் 431

வல்ல டாக்டர். மு. வரதராசனார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் முதலிய பேரறிஞர்கள் பலர் கட்டுரைகள் எழுதி வழங்கினர். பல ஆண்டுகள் தொடர்ந்து வேலை நடந்தது.

பலரது உழைப்பையும் பொருட் செலவையும் பல் லாண்டுகளையும் விழுங்கிய இக் கலைக் களஞ்சியத்தின் முதல் தொகுதி 1954 - இல் வெளியிடப்பட்டது. அடுத் தடுத்து மற்ற தொகுதிகளும் வெளியாயின. இறுதி ஒன்பதாம் தொகுதி 1962-ஆம் ஆண்டு வெளியாகியது.

கலைக் களஞ்சியம், தனித் தனிச் சொற்கட்குத் தனித் தனிச் சொற்களால் பொருள் கூறும் சொல்லக் ராதி வகையைச் சேர்ந்த தன்று; அன்றுதொட்டு இன்றுவரையான உலகப் பொருள்கள் பலவற்றைப் யற்றி விளக்கும் ஒரு மாபெருஞ் செல்வக் களஞ்சியமாம்.

சுருக்கத் தமிழ் அகராதி Concise Tamil Lexicon என ஆங்கிலத்தில் அழைக் கப்படும் இவ்வகராதி தமிழுக்கு ஆங்கிலத்தாலும் தமி மாலும் பொருள் கூறுவது. இது, சென்னை - மயிலாப் பூர் - மதராஸ் லாஜர்னல் அச்சுக் கூடத்தாரால் 1955 - இல் வெளியிடப்பட்டது. இஃதொன்றும் புதிய அக ராதியன்று ; தமிழ் லெக்சிகன் (Tamil Lexicon) எனப் படும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி யின் சுருக்கமேயிது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவு பெற்றே இது சுருக்கமாக வெளியிடப்பட்டது.

கோனார் தமிழ்க் கையகராதி தமிழுக்குத் தமிழாய்க் கையடக்கமாகவுள்ள இவ் வகராதியின் ஆசிரியர் ஐயம்பெருமாள் கோனார். இது

யா 432

பழநியப்பா பிரதர்சு நிறுவனத்தாரால் 1955 - இல் வெளி யிடப்பட்டது.

மாடர்ன் ஆங்கில - ஆங்கிலத் தமிழகராதி Modern Srimagal Pocket Dictionary (English - English - Tamil) எனப்படும் இவ்வகராதி ஆங்கிலத்துக்கு ஆங்கி லத்தாலும் தமிழாலும் பொருள் கூறுவதாகும். இதில் 20,000 சொற்கட்குமேல் பொருள் கூறப்பட்டுள்ளன. வெளியான ஆண்டு 1955.

தமிழ் இலக்கிய அகராதி (பாலூரார் ) இது, தமிழ் இலக்கியங்களின் சார்பாகவுள்ள பல் வகைப் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு விவ ரிக்கப்பட்டுள்ளது. இதில், சொல் அகராதி, தொகை யகராதி, பிரபந்த அகராதி, நூல் அகராதி, புலவர் அக ராதி, பிற்சேர்க்கை என்னும் பிரிவுகள் உள்ளன. அத திலும் அததைச் சார்ந்த பெயர்கள் விளக்கப்பட்ட டுள்ளன. பிற்சேர்க்கைப் பிரிவில் இக்காலப் பெரியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வகராதி, ஒரு சொல் லுக்கு ஒரு சொல்லால் பொருள் கூறுவதன்று; பத்தி பத்தியாகப் பல வாக்கியங்களால் விளக்கம் தருவது.

இதன் ஆசிரியர் : வித்துவான், பாலூர். கண் ணப்ப முதலியாரவர்கள். வெளியீடு : சென்னை சென்ட் ரல் புக் டிப்போ . ஆண்டு 1957.

தமிழ்ப் புலவர் அகரவரிசை (கழகம்) இவ்வகராதியில், அகத்தியப்ப முதலியார் முதல் வைத்தியலிங்கப் பிள்ளையீறாக 1595 தமிழ்ப் புலவர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு விவரங் கொடுக்கப் பட்டுள்ளார்கள். இது மூன்று பாகங்களாகப் பிரித்து 433

வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர். வெளியீடு: சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். காலம்: 1959-60 ஆம் ஆண்டுகள்

சிலேடை யகர வரிசை சிலேடை என்றால் இரு பொருள். இவ்வகராதியில், இரு பொருள் தரும் தொடர்கள் பல, அகரவரிசையில் அடுக்கப்பட்டு இரு இரு பொருள்கள் விளக்கப்பட்ட டுள்ளன. இ... தும் ஒரு வகைப் புது முயற்சியே. இதன் ஆசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்; வெளி யீடு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; ஆண்டு : 1960.

மாதிரிக்காக, இவ்வகராதியிலுள்ள முதல் தொட ருக்கும் இறுதித் தொடருக்கும் கூறப்பட்டுள்ள இரு பொருள்கள் வருமாறு:

முதல் தொடர் :

அகங்கார நந்த: அகங்காரம் நந்த = ஆணவமானது கெட;

அகம் கார் அநந்த = உடல் கருமையாகப் பெற்ற திருமாலே.

இறுதித் தொடர் :

வையம் பொருவா : வையம் பொருவா = பூமி ஒப்பா காத;

வை அம்பு ஒருவா = கூரிய அம்பு நீங்காத 434

இந்த அகராதியைப் பயில்பவர்கள், திரிபும் யமக முமாக உள்ள கடினமான செய்யுட்களை எளிதில் பிரித் துப் பொருள் காணும் ஆற்றலைப் பெறுவர்.

இப்படியாகப் புதுப்புது முறையில் பயனுள்ள பல் வகை அகராதிகளை வெளியிட்டுவரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் மிகவும் பாராட்டற்பாலர்.

தமிழ் ஆட்சிச் சொற்கள்

(அகராதியும் - விளக்கமும்) தமிழ் மொழியால் ஆட்சி நடத்துவதற்குத் தமி ழில் புதுக் கலைச் சொற்கள் வேண்டுமல்லவா? அதற்கு உதவும் வகையில், அகர வரிசையில் ஆங்கிலச் சொற் கட்கு நேரான தமிழ்ச் சொற்கள் இதில் கொடுக்கப்பட் டுள்ளன. பிற்பகுதியில் போதிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இவ்வகராதியின் ஆசிரியர் : கீ. இராம லிங்கனார் ; வெளியீடு : மதுரை விசாலாட்சி பதிப்பகம் : ஆண்டு : 1960.

A Dravidian Etymological Dictionary இந்த அகராதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், முதலிய பத்தொன்பது திராவிட இன மொழிகளில் உள்ள ஒத்த உருவமுடைய சொற்கள் சிலவற்றை ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதி, அவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறப்பட்டிருப்பதாகும். இந்த அகராதியில் திராவிட மொழிகளுக்குள் தமிழே மு தன்மை பெற்றிருக்கிறது. முதலில் ஒரு தமிழ்ச் சொல் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட் டுள்ளது; அதனை யடுத்து அதே பத்தியில் அந்தத் தமிழ்ச் சொல்லோடு ஏறக்குறைய ஒத்த தோற்ற 435

முடைய வேறு சில திராவிட மொழிகளின் சொற்கள் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. சில சொற்கட்குப் பொருள் கூறுமிடத்து, திராவிட மொழி களிலுள்ள ஒத்த உருவமுடைய சொற்களே யன்றி, திராவிட மொழிகளிலிருந்து இந்தோ-ஆரியன் மொழி களிலும் ஐரோப்பிய மொழிகளிலும் சென்று கலந் துள்ள சில சொற்களும் உடன் கொடுக்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன.

இந்த அகராதியில் சொல் விளக்கம் செய்யப் பெற்றுள்ள திராவிட மொழிகளின் பெயர்கள் வரும் மாறு:

1. தமிழ் (Tamil)

12. கடபா (Gadba) 2. மலையாளம் (Malayalam) [ ஒல்லாரி - Ollari) 3. கோடம் (Kota) [சாலுர்-Salur) 4. தூதம் (Toda) 13. கோந்த் (Gondi) 5. கன்ன டம் (Kannada) 14. கோண்டா (Konda)

[படகம் - Badaga) 15. கூ (Kui)

16. கூய் (Kuwi) 6. குடகு (Kodagu)

[ ஃபிட்செரால்டு - 7. துளு (Tulu)

Fitzgerald) 8. தெலுங்கு (Telugu) (ஸ்குல்சா - Schulza] 9. கொலாமி (Kolami) 17. குரூக் (Kurukh) 10. நாய்க்கி (Naiki) 18. மால்டோ (Malto) 11. பர்சி (Parji)

19. பிராகுய் (Brahui) 436

இந்த அகராதியில் சொல் விளக்கம் செய்யப்பெற் றுள்ள பதினைந்து இந்தோ - ஆரியன் மொழிகளின் பெயர்கள் வருமாறு: 1. சமசுகிருதம் (Sanskrit) 9. குசராத்தி (Gujarati) 2. பாலி (Pali)

10. ஹல்பி (Halbi) 3. பிராகிருதம் (Prakrit) 11. கொங்காணி (Konkani) 4. நேபாளி (Napali) 12. குமாவோன் (Kumaon) 5: மராத்தி (Marathi) 13. ஒரியி (Oriya) 6. இந்தி (Hindi) 14. சிந்தி (Sindhi) 7. அஸ்ஸாமி (Assamese) 15. சிங்களம் (Singhalese) 8. வங்காளம் (Bengali)

இந்த அகராதியில் இடம் பெற்றுள்ள மற்ற மொழிகள் வருமாறு: 1. அரபு மொழி (Arabic) 4. கிரீக் (Greek) 2. பாரசீகம் (Persian) 5. இலத்தீன் (Latin) 3. பலுச்சி (Baluchi) 6. ஆங்கிலம் (English)

தமிழ்ச் சொற்களும், தமிழிலிருந்து பிரிந்த தென் னிந்திய மொழிச் சொற்களும், தமிழோடு தொடர் புடைய மற்ற மற்ற திராவிட மொழிச் சொற்களும், தமிழிலிருந்து சென்று கலந்த வடமொழிச் சொற்களும் வட இந்திய மொழிச் சொற்களும், சிங்களம், நேபாளம், அரபு, பாரசீகம் முதலிய ஆசிய மொழிச் சொற்களும், கிரீக், இலத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் இன்ன பிறவும் இடம் பெற்றுள்ள இந்த அகராதி உண்மையிலேயே ஓர் அரும் பெரும் படைப்பே யாகுமன்றோ? 437

இப்படி ஓர் அகராதி . படைக்கவேண்டுமெனில் எத்தனை மொழியறிவு வேண்டும்! ஆம்! அத்தனை மொழியறிவும் பெற்ற பேராசிரியர்கள் இருவர் இணைந்து இந்த அகராதியை ஆக்கியுள்ளனர். அவர் களுள் ஒருவர், ஆக்சுபோர்டு பல்கலைக் கழகப் (Univer - sity of Oxford) பேராசிரியர் டி. பர்ரோ (T. Burrow) என் பவர், மற்றவர், கலிபோர்னியா பல்கலைக் கழகப் (Unit - versity of California) பேராசிரியர் எம். பி. எமினோ (M.B. Emeneau) என்பவராவர். இவர் தம் அரிய அயரா முயற்சியின் உருவமாகிய இவ்வகராதியால், தமிழ் மொழி அனைத்துலகினும் பரந்துபட்டுள்ள பெருமை புலனாகிற தன்றோ? அயல் நாட்டு வெள்ளையர்களாகிய இப்பேராசிரியப் பெருமக்கள் இருவரும் நம் நாட்டு மொழிகளைப் பற்றி இவ்வளவு அறிந்திருப்பதை எண் ணுங்கால், நம் நாட்டில் படித்தவர்கள் எனப்படுபவர் களுட் பெரும்பாலோர் தமது தாய் மொழியைப் பற்றிகூட ஒன்றும் அறியாதிருப்பது வருத்தப்படத் தக்கது மட்டுமன்றி வெட்கப்படத் தக்கது மாகு மன்றோ ?

உயரிய உழைப்பின் உருவமாகிய இவ்வகராதி யில் மொத்தம் 4572 சொற்கள் பொருள் விளக்கப்பட்ட டுள்ளன. மிகமிக நீளமும் அகலமுங் கொண்ட 610 பக்கங்களையுடைய இந்த வெளியீட்டின் விலையோ நூறு ரூபாய் எண்பது காசு (ரூ. 100-80) ஆகும். இந் நூல், இங்கிலாந்து நாட்டில் ஆக்சுபோர்டு நகரில் 1961 -

ஆம் ஆண்டில் அச்சிடப் பெற்றது.

புகழ்ச்சிக்குரிய இவ்வகராதியின் மாதிரிச் சுவைக் காக, இதன் தொடக்கத்திலும் இடையிலும் கடையில் லும் உள்ள மூன்று சொற்களின் பொருள் விளக்கங் களை இங்கே காண்பாம்.

T 438

முதலாவது 'அ' என்னும் எழுத்தைப் பற்றிய விளக்க மாதலின் அதனை விடுத்து, இரண்டாவதாகிய 'அஃகு' என்னுஞ் சொல்லின் பொருள் விளக்கங் காண் பாம்:

Ta, akku (akki --) to be reduced, shrink, be dejected, become closed (as a flower);? alku (alki-) to shrink, dimi nish, lessen; alkal deficiency, poverty. ka. akkudisu to be come small, wame.

மேலே , Ta. என்பது Tamil - தமிழ் ; Ka . என்பது Kannada = கன்னடம். மற்றும் மேலுள்ளவற்றுள் சாய் வெழுத்தில் உள்ளவை தமிழ்ச் சொற்களும் கன்னடச் சொல்லுமாகும். மற்றவை ஆங்கிலப் பொருள் விளக் கம். பின் வருவனவற்றிற்கும் இவ்வாறே கொள்க. இனி, அகராதியின் இடையில் 2812- ஆம் சொல்லாக உள்ள 'தெப்பம்' என்னும் சொல்லின் பொருள் விளக் கம் வருமாறு:

Ta. teppam, teppal raft, float. ka. teppa id. Tu. teppa id. Te. teppa, tepa id., catamaran. cf. Skt. tarpa-, talpa-, Pkt. tappam Mar. tapha, tarapha. cf. Periplus TPa îl îl aYa.

மேலே , Ta. என்பது Tamil - தமிழ் ; Ka . என்பது Kannada = கன்ன டம் ; Tu. என்பது Tulu = துளு; Te. என்பது Telugu = தெலுங்கு ; Skt. என்பது Sanskrit = சமசு கிருதம் ; Pkt. என்ப து Prakrit = பிராகிருதம்; Mar. என்பது Marathi = மராத்தி . இறுதியில் உள்ள

TPa II 11 aYa என்பது கிரீக் மொழிச் சொல்லாகும். இந்தப் பகுதியைக் காணுங்கால், தெப்பம் என்னும் தமிழ்ச் சொல், தென்னிந்தியத் திராவிட மொழிகளில் 439

ஊடுருவி நிற்பதன்றி, வட இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலுங்கூடச் சென்று கலந்துள் ளமை புலனாகுமே! இனி, அகராதியின் இறுதிச் சொல் லாக - அதாவது 4572- ஆம் சொல்லாக உள்ள

வையம்' என்னும் சொல்லின் பொருள் விளக்கம் வரும். மாறு:

Ta. Vaiyam earth; vaiy-akam id., world. Ma. vayyam, vaiyakam id.

மேலே , Ta.. என்பது Tamil - தமிழ்; Ma. என்பது, Malayalam = மலையாளம்.

மொத்தத்தில், இந்த அகராதியினால் தமிழ் மொழி யின் பரந்துபட்ட பான்மையும் ஆட்சியும் மாட்சியும். குன்றின் மேலிட்ட விளக்கென விளங்குவதால், இந்த அகராதியை ஆக்கிய பேராசிரியர்கள் இருவர்க்கும் தமிழ் மக்கள் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவராவர்.

ஆட்சிச் சொல்லகராதி glossary of Administrative Terms (English-Tamil). எனப்படும் இவ்வகராதியில் ஆங்கிலத்தில் உள்ள கலைச் சொற்கள் பலவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை அரசினர் அச்சுக்கூடக் கண்காணிப்பாளரால் அச்சிடப்பட்ட இவ்வகராதி வெளியான ஆண்டு, நூலின் எந்த இடத், திலும் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

தமிழ் - இந்தி அகராதி ( தமிழ்ச் சொல்லுக்கு இந்திச் சொல்லால் பொருள் கூறுவது இந்த அகராதி. வெளியீடு: தட்சிண பாரத இந்தி பிரசார சபை. ஆண்டு : 1962. 440

சமசுகிருதம் - தமிழ் அகராதி சம்சுகிருத எழுத்தால் எழுதப்பட்ட சம்சுகிருதச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதியிது. தொகுத்தவர் : பாபநாசம் - சிவன் அவர்கள். ஆண்டு : 1962.

பல்பொருள் ஆங்கிலத் தமிழ் வரிசை பல்துறைப் பொருள் பற்றிய ஆங்கிலச் சொற் கட்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறுவது இது. தொகுப்பாசிரியர்கள் : மு. சதாசிவம், சி. சிவராமலிங்கம் ஆகிய அறிஞர் இருவர். வெளியீடு: சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். ஆண்டு 1962.

நாலாயிரத் திவ்யப் பிரபந்த அகராதி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் தொகுப் பாகிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலுள்ள இன்றி யமையாச் சொற்கள் அகரவரிசையில் பொருள் கூறப் பட்டிருப்பது இவ்வகராதி. 'அஃகம்' என்பது முதல் 'வையம்' என்பது ஈறாகப் பல சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் தொகுப்பாசிரியர் : சீரங்கம் தேவதானப் பத்திரிகை ஆசிரியராகிய பார்த்தசாரதி ஐயங்கார். ஆண்டு : 1963.

திவ்யப் பிரபந்த அகராதி இந்தப் பெயரில் சிறிய அளவிலும் ஓர் அகராதி உள்ளது.

ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் -

English - Tamil - Dictionary. தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச்சொல்லாலும் பொருள் கூறும் 'தமிழ் லெக்சிகன்' 441

என்னும் பேரகராதியைப் படைத்த சென்னைப் பல்கலைக் கழகமே, இந்த ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியத்தையும் உருவாக்கியது. ஆங்கிலச் சொற் கட்கும் பெருவழக்கிலுள்ள சொற்றொடர்கட்கும் இயன்றவரை தூய தமிழ்ச் சொற்களாலும் தொடர் களாலும் பொருள் கூறுகிறது இவ்வகராதி. ஆங்கிலச் சொற்கட்கு நேரான நல்ல தமிழ்ச் சொற்களைத் தந் திருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

இப்படியொரு சிறந்த அகராதி படைக்க வேண்டு மென்று சென்னைப் பல்கலைக் கழக 'சிண்டிகேட்' அவை யானது, 1955 அக்டோபர் 27 -ஆம் நாள் கூட்டத்தில் தீர்மானித்தது. இதற்காகச் சூழ்வினைக் (ஆலோசனைக்) குழுவும் ஆசிரியர் குழுவும் ஏற்படுத்தப்பட்டன. ஆசிரியர் குழுவின் தலைவராக திரு. அ. சி. சிதம்பர நாதச் செட்டியார் அமர்த்தப்பட்டார். 1959 மார்ச்சு 16.

ஆம் நாள் வேலை தொடங்கப் பெற்றது.

இவ்வகராதி மூன்று பெரும் பாகங்களாகப் பிரிக் கப்பட்டுள்ளது. முதல் பாகம் 1963 - இலும், இரண்டாம் பாகம் 1964 - இலும் வெளியிடப்பட்டன. மூன்றாம் பாகம் 1965 - இல் முடிவடைந்தது.

தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞருள் ஒருவரான டாக்டர். அ. சிதம்பரநாதச் செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்ட பயன் மிக்க இவ்வகரா தியின் மாதிரிக்காக, 'arch' என்னும் ஆங்கிலச் சொல், பெயர்ச் சொல்லாகவும் (n = noun), குறிப்புப் பெயரெச்சம் மாகவும் (a - adjective), வினைச் சொல்லாகவும் (v= verb) நின்று தரும் பொருள்கள் முறையே வருமாறு: 442

arch, n. மேல் வளைவு , வில் வளைவு , கவான், பாலம் தளம் முதலியவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக் கோப்பு; வில் வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் ; வில் வளைவான கூரை; மேலே கவான் அமைந்த நடை வழி; a. முதன்மையான, விளங்கித் தோன்றுகிற; தந்திரமுள்ள ; சதுரப் பாடுடைய; வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற; V. வில் வளைவு அமை; கவான் ஆக்கு; மேல் வளைவு கட்டு; கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல் வளை.

மாணவர்க்கு உதவும்

ஆங்கிலம் - தமிழ் அகராதி ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறும் இவ்வகராதி யின் ஆசிரியர்கள் ரெவரெண்டு. அருள் தங்கையா, திரு. கே. எஸ். சாமிநாதன் ஆகியோர் ஆவர். இதில் 5000 சொற்கள் அடங்கியுள்ளன. காலம்: 1964

அடுக்கு மொழி அகராதி அடுக்கு மொழிகள் அகர வரிசையில் கொடுக்கப் பட்டுள்ள இவ்வெளியீட்டின் ஆசிரியர் உயர்திரு. சதாசிவம் அவர்கள்.

கம்பர் தமிழ் அகராதி ( கம்பர் தமிழ் அகராதி என்னும் பெயரில் ஒரு தமிழ் அகராதி வெளிவந்துள்ளது.

தி எலிட் ஆங்கில - ஆங்கிலத் தமிழ் அகராதி

The Elite English - English - Tamil Dictionary என்னும் பெயருடைய இது, ஆங்கிலத்திற்கு ஆங்கி லத்திலும் தமிழிலும் பொருள் கூறும் அகராதியாகும் 443

எதிர்ப் பத அகராதி எதிர்ப்பதங்கள் அகரவரிசையில் கொடுக்கப்பட் டிருக்கும் இவ்வகராதியின் ஆசிரியர் மு. சதாசிவம். காலம் 1965. வெளியீடு : பாரி நிலையம், சென்னை .

அரசினர் ஆங்கில - தமிழ் அகராதி தமிழ் நாட்டு அரசினரால் அமைக்கப்பட்டதான தமிழ் வெளியீட்டுக் கழகம், ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில - தமிழ் அகராதி ஒன்றை வெளியிடும் திட்டத்தை மேற் கொண்டுள்ளதாம். இந்த அகராதி முற்றுப் பெற்றதும், ஒவ்வொன்றும் 500 பக்கங்களைக் கொண்ட 4 அல்லது 5 தொகுதிகளையுடையதாக இருக்குமாம்.

தனித் தனி இலக்கிய அகராதிகள் பொதுவாகப் பொதுமக்கள் சொல்லுக்குப் பொருள் தெரிந்து கொள்ள உதவும் பொது அகராதி களே யன்றி, மற்றும், இலக்கிய அகராதி, புலவர் அக ராதி, பழமொழியகராதி, கலைச்சொல் அகராதி முதலிய சிறப்பு அகராதிகளைப் பற்றியும் மேலே கண்டோம்; மேலும், திருக்குறள் சொல்லடைவு, நாலாயிரத் திவ்யப் பிரபந்த அகராதி எனத் தனித்தனி இலக்கிய அகராதி களைப் பற்றியும் பார்த்தோம். இந்தத் துறையில் இன்னும் பல்வகை முயற்சிகள் நடந்து கொண்டிருக் கின்றன.

ஐயர் பதிப்பு தனித்தனி இலக்கிய அகராதிகளுக்கு முன்னோடி யாக, உ. வே. சாமிநாத ஐயரவர்கள் தாம் பதிப்பித்த புறநானூறு, குறுந்தொகை, மணிமேகலை முதலிய

28 444

இலக்கியங்களின் இறுதியில், அவ்வந் நூலிலுள்ள அருஞ்சொற்களையும் சிறப்புப் பெயர்களையும் திரட்டி அகரவரிசைப் படுத்திச் செய்யுள் எண்ணுடன் தந்துள் ளார்கள். மற்றும் ஐயரவர்கள், குறுந்தொகையின் தொடக்கத்தில் பாடினோர் வரலாற்றையும், புற நானூற்றின் தொடக்கத்தில் பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, சிறப்புச் செய்திகள் முதலிய வற்றையும் அகர வரிசையில் தந்துள்ளார்கள். இம் முன்னோடி முயற்சி, பின்னவர்க்குப் பெரிய வழிகாட்டி யாகும்.

ஐயரவர்களைப் போலவே, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார் போன்றவர்களும் தத்தம் நூற் பதிப்புக்களின் இறுதியில் அருஞ்சொல் அகர வரிசை, சிறப்புப் பெயர் அகர வரிசை முதலானவற்றைச் செய் யுள் எண்ணுடன் தந்து வருகின்றனர்.

சமாசப் பதிப்பு

சென்னை - சைவ சித்தாந்த மகா சமாசத்தினர் 1940- ஆம் ஆண்டில், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எனப்படும் சங்ககால மேற்கணக்கு நூற்கள் பதினெட் டினையும் சங்க இலக்கியம்' என்னும் தலைப்பில் வெளி யிட்டுள்ளனர். அவர்கள் அப்பதிப்பின் இறுதியில், சிறப்புப் பெயர் அகராதி, புலவர்கள் அகராதி , அரசர்கள் அகராதி முதலியன கொடுத்திருப்பது கூட ஒரு பெரிய செயலன்று; அவர்கள் அந்தப் பதி னெட்டுச் சங்க நூற்களிலுமுள்ள மொத்தம் 2381 செய் யுட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அமைத்திருப்பதே ஒரு வகை அகராதி முறையை ஒட்டித்தான். அவர்கள் அந்த 2381 செய்யுட்களையும் நூல் வாரியாக அமைக்க வில்லை; அவற்றைப் பாடிய புலவர் வாரியாகவே 445

அமைத்துள்ளனர். அதாவது, ஒரு புலவரின் பாடல் களே பல நூற்களிலும் உள்ளனவாதலால், ஐந்நூறுக்கு மேற்பட்ட புலவர்களின் பெயர்களை அகர வரிசையில் அமைத்து, ஒவ்வொருவர் பெயரின் கீழும் அவரவர் பாடிய பாடல்களைப் பல நூற்களிலிருந்தும் கொண்டு வந்து நிரல் செய்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு புலவர் எந்தெந்த நூலில் என்னென்ன செய்யுள் பாடியுள்ளார் என்பதை யறிவிக்கும் இப்பதிப்பு, சங்கப்புலவர்களைப் பற்றி ஆராய்வோர்க்கு மிகவும் பயனளிக்க வல்லது. மற்றும், இலக்கியச் சொல் அகராதியும் புலவர் அகரா தியும் தயாரிப்போர்க்கும் இந்த சமாசப் பதிப்பு பெருந் துணையன்றோ !

இப்படியாக இலக்கியச் சார்பான அகராதி துறையில் இன்னுஞ் சிலர் வேரை செய்துள்ளனர். கேரளப் பல்கலைக் கழகம் புறநானூற்று அகராதி தயா ரித்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் ஆர். பிச்சைக்கண்ணன் குமரகுருபரர் நூற்கட்கு அக ராதி ஆக்கியுள்ளார். சென்னை 'மர்ரே கம்பெனி பொறுப்பில் எஸ். இராசம் என்பவர் 'பாட்டும் தொகை யும்' என ஒன்று படைத்துள்ளார். மற்றும், அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆசிரியர் ச. தண்டபாணி தேசிக ரவர்கள் எட்டுத் தொகை பத்துப்பாட்டு இலக்கியங்

கட்கு அருஞ்சொல் அகரவரிசை ஆக்குவதாகத் தெரிவு கிறது. இஃதன்றியும், புதுச்சேரியில் பாரிஸ் அரசின் ரால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்வி கலைக் கழகத்தாரும் (French Institute) பிரெஞ்சு மொழியோடு பிணைத்துச் சங்க இலக்கிய அகராதியொன்று படைத்து வருவதா கத் தெரிகிறது. இவர்களே, பிரெஞ்சு மொழியொடு பிணைந்த தொகையகராதி யொன்றும் தொடங்கிச் செய்து வருவதாகத் தோன்றுகிறது. 446

இப்படியாகத் தமிழகத்தில் பல்வகை அகராதிகள் தோற்றம் எடுத்தன - எடுத்து வருகின்றன. இந்தி - மராத்தி - தெலுங்கு - தமிழ் ஆகிய நான்கு மொழிகள் பிணைந்த மிகச் சிறிய அகராதி யொன்றும் விற்பனைக் காகத் தெருக்களில் உலா வந்தது. இன்னும் பல அகராதி கள் இந்நூலில் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் வாய்ப்பு நேரும்போது அறிந்து கொள்க.