உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்

தொகுதி – 4

பேரறிஞர்
டாக்டர் சி. என். அண்ணாதுரை, எம்.ஏ.

பூம்புகார் பதிப்பகம்

63, பிரகாசம் சாலை (பிராட்வே),

சென்னை - 600 108.

தொலைபேசி : 5267543

விலை ரூ. 250.00

பூம்புகார் வெளியீட்டு எண் : 514

முதற் பதிப்பு : ஜூலை, 2002

வடிவமைப்பு, உரிமை : பூம்புகார் பதிப்பகம் P.C:98108611


அச்சிட்டோர் : ஈகிள் பிரஸ், சென்னை - 600 013.

முன்னுரை

"20ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."

அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."

அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.

அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.

கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.

கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.

‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:

துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக் கொள்ளுமா?, தமிழர் திருநாள்.

அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.

1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.

இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.

தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!

அன்புடன்,



தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்

தொகுதி – 4



பொருளடக்கம்