உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!

தொகுதி – 5

அறிஞர் அண்ணா

தமிழ் வளர்ச்சி இயக்ககம்

எழும்பூர் சென்னை 600008.

நூல் விவரக் குறிப்பு


நூல் தலைப்பு

 :  தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!

  தொகுதி - 5

ஆசிரியர்

 :  அறிஞர் அண்ணா

வெளியீட்டாளர்

 :  இயக்குநர்,

  தமிழ் வளர்ச்சி இயக்ககம்,

  எழும்பூர், சென்னை-600 008.

பதிப்புரிமை

 :  தமிழ்நாடு அரசு

மொழி

 :  தமிழ்

பதிப்புஆண்டு:

 :  2021

விலை

 :  130

பக்கம்

 :  164 + X

படிகள்

 :  1500

தாள்

 :  70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்

நூலின் அளவு

 :  1/8 டெமி

அச்சிட்டோர்

 :  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

  இரண்டாம் முதன்மைச் சாலை,

  சி.ஜ.டி. வளாகம், தரமணி,

  சென்னை - 600113.

நூல் கிடைக்குமிடம்

 :  தமிழ் வளர்ச்சி இயக்ககம்,

  தமிழ் வளாகம், ஆல்சு சாலை,

  எழும்பூர், சென்னை - 600 008.

 :  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

  இரண்டாம் முதன்மைச் சாலை,

  சி.ஜ.டி. வளாகம், தரமணி,

  சென்னை - 600 113.

முனைவர் கோ.விசயராகவன் எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.

இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008

அணிந்துரை

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!

புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.

அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.

தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"

இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.

தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் தொள்கிறேன்.

இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி.

இயக்குநர்

.

முன்னுரை

"20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."

அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."

அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.

அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.

கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.

கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.

‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:

துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக் கொள்ளுமா?, தமிழர் திருநாள்.

அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன” என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.

1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.

இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.

தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!

அன்புடன்,



தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்

தொகுதி - 5



பொருளடக்கம்