உள்ளடக்கத்துக்குச் செல்

தராசு/STRAY THOUGHTS

விக்கிமூலம் இலிருந்து


STRAY THOUGHTS

The wise play for victory, but feel no pain a
defeat.

"L'art pour l'art"— A play for its own sake.

சில சங்கற்பங்கள்

யன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி முழு உலகின் முதற் பொருள் — அதனையே தியானஞ் செய்துகொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக்கொண்டிருக்க முயல்வேன்.

🞸🞸🞸

பொழுது வீணே கழிய இடங் கொடேன், லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும்பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.

மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.

மூடரின் உள்ளத்தில் என்னைப்பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு, இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இயலாவிடின் விதிவக் மென்று மகிழ்ச்சியோ டிருப்பேன்.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்றோ டிருப்பேன். ஓம்.

🞸🞸🞸

ஒரு நல்ல கதை.

பக்தா — இதுதான் பூலோகமா?

சங்கரச் செட்டியாரிடம் கேட்டவை:—

எலி பழைய எலியின் பாதையிலே வந்து பொறியில் விழும்.

நெடுந் தொலையினின்றும், ஈ, காற்றுச் சுழற்சியின் வழியே வளைந்து வளைந்து வந்து உணவுப் பொருளில் விழும்.

சிலந்திப்பூச்சி முதலிலே நூல் செய்து, அதைக் காற்றில் விட்டு விடும். அந்த நூல், காற்றின் செய்கையால் எதிர்ப் புறத்திலே போய் ஒட்டிக்கொள்ளும். பூச்சி அதை அசைத்துப் பார்த்துப் பற்றியிருப்பது தெரிந்துகொண்டு, அதன் பிறகுதான் நூல்மீது நடந்து செல்லும். அப்பால் வலை பின்னும்.

🞸🞸🞸

பழைய பத்திரிகைகளி லிருந்து தக்க விஷயங்களெடுத்துக் கோத்தால் நல்ல வசன நூல் கட்டலாம்.

🞸🞸🞸

The Brahmin who cooked in a fisherman's house:— This despecable orthodoxy is willing to suffer a social inferiority, but wants a theological and ritual superiority, I suppose!

🞸🞸🞸

Not do what all I can, but do what all I ought. முகத்தின் ஒளி:— What it means — I must write a long essay on this.

🞸🞸🞸

The young man's tune-Bhairava—Hindustani தோடி. Majority of love songs in N. India are in that tune.

The meaning of that raga :—Love and Despair. Despair reaches its depth in the பிரமத்தியமம்.

I must compose a song in Bhairava—in praise of that Raga.

🞸🞸🞸

பழைய கற்பனைகளைத் திருப்பிச் சொல்லுதல். தமிழ்நாடு சீர்கெட்டதன் காரணம். உவமைகள்.

சித்திர சாஸ்திரம், அவனீந்திரநாதடாகுர் தமிழ்க் கவிதை உவமைகளின் கருத்தை மறந்த வினோதம்.

🞸🞸🞸

தெலுங்கும், தமிழும் (ழ, ட)

தமிழ் தெலுங்கு
நிழல் நீட
ஏழு ஏடு
நாள் நாடு
கோழி கோடி

🞸🞸🞸

I must write a poem on "Darkness."

🞸🞸🞸

தீய மர்மங்களின் பயன் விடாது. இப்பிறப்பிலே பலிபோலத் தொடரும். ஆதலால் இன்பத்தை விரும்புவோன் தீச்செயல்கள் செய்யா தொழிக. தீய சிந்தனைகளும் தீச் செயல்களே யாம்.

🞸🞸🞸

The countryman's comment on seeing the train tumning — பார்த்தால் மலைப்பாம்பு — ஏறினால் அலுப்பு.

🞸🞸🞸

ராஜாவுக்கு லக்ஷ்மி மனைவி

செட்டிக்கு லக்ஷ்மி தாய்

The novelist can never give a true and complete reproduction of a real sentimental conversation.

Four women and an idle young fellow—subject.

An old domestic grievance.

Can we utilise a sound machine?

For an essay :—

Formalisation in Art, in Grammar, in Sruthis, in Literature. Is it possible in music?

The revolt of Europe against formalisation- The Renaissance.

The highest talent required for formalising— Shankaracharya.

🞸🞸🞸

Result, decay. Make provision for the future. The forces of decay.

Adaptation to environments. சித்திர சாஸ்திரம் — அளவு கணக்கு. The danger of a copyist's mistake.

🞸🞸🞸

ஒளியிலும் ஒலியிலும் ஸ்தாயிகள்.

ஸ்வர ஸம்பந்தங்கள். புலங்களின் வரம்பு நிலை.

ப்ரதிபா, வரம்பற்றது.

ப்ரதிபா, ஆத்மாவின்

🞸🞸🞸

சுக்கிராசார்யன், போர் முதல் சிற்பம் வரை அனைத்தையும் வகுத்தது.

🞸🞸🞸

Avocat, pessons an Delage!-Racin

🞸🞸🞸

ஐயங்கார் “ஆஹ்னிகம்” பெரிய புத்தகம்.

🞸🞸🞸

The absolute need of physical exercise.

"https://ta.wikisource.org/w/index.php?title=தராசு/STRAY_THOUGHTS&oldid=1777918" இலிருந்து மீள்விக்கப்பட்டது