உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மதி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




தாய்மதி

மேலாண்மை பொன்னுச்சாமி

மீனாட்சி புத்தக நிலையம்

60, மேலக்கோபுரத் தெரு
மதுரை - 625001.

முதற்பதிப்பு : ஆகஸ்ட்டு 1994
உரிமைபதிவு
மீனாட்சி எண் : 241
விலை ரூ : 22/00


நூல் தலைப்பு : தாய்மதி
ஆசிரியர் பெயர் : மேலாண்மை பொன்னுச்சாமி
முதற்பதிப்பு : ஆகஸ்ட்டு 1994
தாளின் தன்மை : வெள்ளைத்தாள்
நூலின் அளவு : 18X12.5cm.
அச்சு எழுத்து அளவு : 10 பாயிண்ட்
பக்கங்கள் : 174 பக்கங்கள்
நூலின் விலை : ரூ. 22.00
அச்சிட்டோர் : அலைகள் அச்சகம்
36, தெற்குச் சிவன் கோவில் தெரு,
கோடம்பாக்கம்
சென்னை - 24.
நூல் கட்டுமானம் : பாக்ஸ்போர்டு பைண்டிங்
நூலின் தன்மை : சிறுகதைகள்
நூல் வெளியிட்டோர் : மீனாட்சி புத்தக நிலையம்
60, மேலக் கோபுரத்தெரு
மதுரை-625001.

Meenakshi Puthukala Nilayam

60 West Tower Street, Madurai-625001.

பதிப்புரை

திரு. மேலாண்மை பொன்னுச்சாமி, தான் பிறந்து வளர்ந்த கிராமத்தையும், கிராம மண்ணையும், கிராம மக்களையும், அவர்களின் சுகதுக்கங்கள் ஆசைகள்—அவலங்கள் வெற்றிகள் யாவற்றையுமே ஆழமாக நேசிப்பவர். அவருடைய கதை மாந்தர்கள் எல்லோரும். அவரைச்சுற்றி உயிரும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவரது கதை எல்லை காமராசர் மாவட்டத்தைத் தாண்டி நீள்வதில்லை.

வறுமையால் வாடும் கிராம மக்களும் அந்த வறுமையால் பாரத்தை அதிகமாகத் தாங்க நிர்ப்பந்திக்கப்படும் கிராமப் பெண்களும் நம்மைப் பலமாகச் சிந்திக்க வைக்கிறார்கள்.

தற்கால நாகரிகமும் விஞ்ஞான வளர்ச்சியும் நாட்டின் கிராமங்களை வளமாக்க உதவாமல், கிராமங்களை அழித்து கிராம மக்கள் நகரச் சேரிகளில் குவிய வழி செய்யும் நிலையை நினைத்து வருந்தும் ஆசிரியர் ஒரு நன் நம்பிக்கைவாதி. எத்தனை துயரங்கள் வந்தாலும் முடிவில் மனித சமுதாயம் அவைகளை வென்று முன்னேறவே செய்யும் என்ற நம்பிக்கை இக்கதைகளில் பரவி நிற்பதைக் காணலாம்.

நூலாசிரியருக்கும், வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் நன்றி உரியதாகுக.

மதுரை
16-7-1994

செ. செல்லப்பன்
மீனாட்சி புத்தக நிலையம்

முன்னுரை

த் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் சிறுகதை ‘தாய்மதி’ எனக்கு மிகவும் பிடித்த கதை. அது சிறுகதையா குறு நாவலா என்ற வடிவரீதியான சர்ச்சைக்குரிய சிறுகதைதான். இருப்பினும் எனது நேயத்திற்குரிய கதை.

உசிலம்பட்டியில் ‘சிசு கொலை’ நடப்பதாக எழுத்தாளர் சௌபாவினால் ஜூனியர் விகடனில் எழுதப்பட்டு, அப்புறம் அது தேசிய அளவிலான விஷயமாக பேசப்பட்ட நாளிலேயே இப்படி யொரு கதை எழுத ஆசைப்பட்டேன். ஆனால் எழுதிவிடவில்லை.

காத்திருந்தேன். சிசுவை கொலை செய்ய ஒரு தாய்க்கும் பெண்களுக்கும் எப்படி மனசு வரும் என்று புரியாமல் தவித்தேன்.

நான் வாழும் பகுதியிலேயே இதே மாதிரியான ஒரு கருணைக்கொலை நடந்த நிஜத்தைப் பார்த்தவுடன், முழுசாக அதிர்ந்து போனேன். அந்த அதிர்வில் அனுபவமாகிப் போன உணர்வுகளே ‘தாய்மதி’யில் பதிவாகியிருக்கிறது.

‘தமிழ் அரசி’ சிறுகதைப் போட்டியில் ரூ.50000 பரிசையும், எம்.ஜி.யார் உருவம் பொதித்த தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தது, இக்கதை. இயக்குநர் பாலச்சந்தர் கதையின் நடையை மெய்மறந்து பாராட்டினார். பரிசளிப்பு விழாவில், இயக்குநர் பாரதிராஜா சால்வை போர்த்த... இதழின் ஆசிரியர், ம. நடராஜன் பதக்கம் அணிவித்தார்.

இந்த நிகழ்வின் முழு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல்... அன்று தலைவலியால் தவித்துக் கொண்டிருந்தேன்.

‘தாய்மதி’ மாதிரித்தான் எனது மற்றைய கதைகளும். நெஞ்சைப்பாதிக்கிற எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும்.. எனது அனுபவமாகி என்னுள் உணர்வு ரீதியான உண்மையான பிறகே... அது எண்ணிலிருந்து எழுத்தாக வெளிப்படும்.

யதார்த்தவாதம் சிறுகதைத் துறையில் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போதும் பெரும் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது.

மேஜிகல் ரியலிஸம், அதிவினோதக் கற்பனாவாதம் போன்ற நவீன (?) இனங்கள் வந்து தானடித்த மூப்பாக யதார்த்தவாதத்தின் மீது மோதிப் பரிகசிக்கின்றன.

யதார்த்தவாதம் என்பது காலாவதியாகிப் போன பழைய வடிவமா? உண்மை எந்த நாளில் பழமையாகும்?

வாழ்வின் உள்ளும் புறமுமான உண்மையின் உயிர் முகங்களை தரிசிக்கும் கலைவடிவமாக சிறுகதை இருக்கும் வரை... யதார்த்தவாதமே அதற்குரிய வடிவமாக இருக்கும்.

சற்றுத் தாமதமாகி விட்டாலும்... இத்தொகுப்பை மிகச்சிறப்பாகக் கொண்டு வருகிற புகழ்மிகு மீனாட்சி புத்தகநிலைய அதிபர் செ.செல்லப்பன் அவர்கட்கும்,

எனது எல்லா நூல்களையும் தோளில் தூக்கி நெஞ்சில் போற்றி சகல கலை இலக்கிய இரவுகளிலும் மக்களிடம் கொண்டு செல்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்களுக்கும்,

என் கதைகளை உடனுக்குடன் படித்து, நேரிலும் கடிதங்களிலும் விமர்சித்தும் பாராட்டியும் என்னைச் செதுக்குகிற ச. தமிழ்ச் செல்வன் போன்ற எனது சமகாலப் படைப்பாளிகளுக்கும்,

எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

நன்றி!


20-7-94
மேலாண்மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்.

என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி

சமர்ப்பணம்

வனும் நானும் வேறு வேறு ஜாதி. என்னைவிட மூன்று வயது மூத்தவன். எல்லா நிலையிலும் ‘வா, போ’ என்று ஒருமையிலேயே பேசிக் கொள்கிற ஆழ்ந்த நட்பு.

சின்ன வயதிலேயே இருவருக்கும் கல்வியை இழந்த இழப்புணர்வு. இரண்டு குயர் நோட்டுகளில் இருவரும் கதை எழுதிப் பார்ப்போம். இழந்த கல்வியை ஏதேனும் ஒரு வழியில் மீட்கிற வேட்கை இருவருக்குள்ளும் நெருப்பாக...

நான் எழுத்தாளனாகவே ஆகிவிட்டேன்.

அவனுள் அந்த வேட்கை நெருப்பு தணியவில்லை. சிமிண்டாலை கல்குவாரியில் கல்சுமக்கும் தொழிலாளியாகி... உழைப்பும் படிப்புமே உயிர் மூச்சென வாழ்ந்து, சிமிண்டாலையின் கல்குவாரி உதவி மேலாளர் எனும் உயர் அந்தஸ்துக்கு உயர்ந்தபின்னும்—

எல்லோருக்கும் அவர் ஆபிஸர்.
எனக்கு மட்டும் அவன் பழைய நண்பன்.

நட்பைக்கூட கற்பைப்போல காத்து வந்த உயர் மனிதன்; உயிர் நண்பன்.

ஒரு மழை நாளில் கற்குவாரியில் வெடி வெடித்து தகர்கிறயோது... அவனும் சதைச்சிதறலாய்...

என் இனிய நண்பனே
து. ராஜா எனும் தீபமே...
இன்றும் நீ என்னுள் ஒளியாய் சுடர்கிறாய்...

பொருளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்மதி&oldid=1835652" இலிருந்து மீள்விக்கப்பட்டது