திருமணம்
தோற்றம்
திருமணம்
C. N. அண்ணாதுரை M. A.,
மலர் மன்றம்
விருதுநகர்
- பதிப்புரிமை பெற்றது.
- முதற் பதிப்பு: 1962.
- விலை ரூ.1-00
- அச்சிட்டோர்:
- கலைப்பொன்னி அச்சகம், மதுரை.
- நன்றி உரை...
- வானத்திலே ஒரு நிலவு! வையகத்திலே ஒரு அண்ணா! தென்னகத்தின் பெர்னாட்ஷாவாக இன்று நாலரைக் கோடி திராவிட மக்களின் இதயங்களில் மட்டுமல்ல, நாளைய உலக மக்களின் உள்ளங்களிலெல்லாம் ஊடுருவி நிற்கக்கூடியவர் காஞ்சி தந்த செல்வம் நமது அறிஞர் அண்ணா!
- மணமக்களுக்காக பல அறிவுரைகள் தருகிறார் அண்ணா என்றால், அது மணமக்களுக்கு மட்டுமல்ல—திராவிட மக்களுக்கே தான் என்ற அடிப்படையில் திருமணம் என்ற தலைப்பிலே இந்நூலை வெளியிட்டோம். திராவிடத்தில் இந்நூலுக்கு மக்கள் தந்த வரவேற்பை நாங்கள் எழுத்தால் எழுதி தெரிவிக்க எங்களுக்குத் தெரியவில்லை. எனவே பொதுவாக திராவிடத்திற்கு, அதில் வாழ்கின்ற மக்களுக்கு, கடல் கடந்து வாழ்கின்ற திராவிட மக்களுக்கு அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
- இனியும் தங்களின் ஆதரவை என்றும் எதிர்பார்க்கிறோம் என்று கூறிக்கொண்டு புதிய பதிப்பான இந்நூலை உங்கள் முன் படைக்கிறோம்.
வணக்கம்!
பதிப்பகத்தார்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்.
மணமகன்:மணமகள்:
- வள்ளுவராண்டுதிங்கள்ம்
நாள் நடந்த திருமணத்தின் போது
மனமுவந்தளித்த
மண வாழ்த்து மலர்
வாழ்வுப் பூங்காவின் வண்ண மலர்களே!
வாழிய நீவீர். வளர்க நும் காதல். வாழ்க்கைப் பூங்காவிலே நுழைந்துவிட்டீர். அங்கே வண்ண மலர்களுண்டு. பண்பாடும் ஈக்களுண்டு. மலரின் மணத்திலே மகிழ்வு கொள்ளும் போது அதை மறந்துவிடாதீர். துன்பமா துவளாதீர். இன்பமா இளகாதீர். அயலாரின் தூற்றலா அயர்ந்துவிடா தீர். மதமா மயங்கிவிடாதீர்.
அவையல்ல உங்கள் வாழ்வை வளமாக்குவது, வள்ளுவரின் வாய்மை, கவிஞரின் இன்பமொழி, அண்ணாவின் அருந்தமிழ் அதில் தான் இருக்கிறது உங்கள் வாழ்வுக்கு வழி என வாழ்த்துகிறேன்.
தங்களன்புள்ள,
இடம்:
உள்ளடக்கம்
