தேசீய ஒருமைப்பாடு
தேசீய ஒருமைப்பாடு
கல்வி, நிதியமைச்சர்
சி. சுப்பிரமணியம்
தி. மு. ௧. தலைவர்
சி. என். அண்ணாதுரை
விற்பனை உரிமை:
வள்ளுவர் பண்ணை
137, பிராட்வே - சென்னை.1
தொகுப்பு:
மு. நமசிவாயம்
வெளியீடு 98
முதற் பதிப்பு: ஜனவரி 1962
உரிமை பதிப்பகத்தாருக்கு
விலை ரூபாய் 1-50
மெட்ரோபாலிடன் பிரிண்டர்ஸ்,
சென்னை-2
வெளியிடுவோர்:
மனோன்மணிப் பதிப்பகம்
சென்னை - 14
பதிப்புரை
“தேசீய ஒருமைப்பாடு” என்ற பிரச்சினையும் பேச்சும் இன்று நாட்டின் முக்கியமானதொரு அம்சமாகிவிட்டிருக்கின்றது.
தேசீய ஒருமைப்பாடு மிகவும் அவசியம் என்ற கருத்தும் அதற்கான ஆக்க பூர்வமான வழி வகைகளைக் கண்டு செயல்படுத்திடும் போக்கும் முயற்சியும், ஒரு பக்கம் பெரிதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மற்றொரு பக்கம் “தேசீய ஒருமைப்பாடு” அவசியந்தானா? என்ற கேள்வி மட்டுமல்ல, தேசத்தைப் பிரிவினை செய்ய வேண்டுமென்ற கருத்தும் ஓரளவுக்கு நடமாடி வருகின்றது.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 13—11—61-ல் “தேசீய ஒருமைப்பாடு”, குறித்து விவாதம் நடைபெற்றது. உதவி சபாநாயகர் திரு. பி. பக்தவத்சலு நாயுடு தலைமை வகித்தார். இந்த விவாதத்தை நிதி அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் துவக்கி வைத்துப் பேசினார். பிரிவினையை வலியுறுத்தும் தி. மு. கழகத் தலைவர் திரு. சி. என். அண்ணாதுரை இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தார். விவாத முடிவில் திரு. சுப்பிரமணியம் பதிலளித்தபோது தேசீய ஒருமைப்பாட்டின் அவசியம் குறித்து விளக்கினார்.
மேற்குறிப்பிட்ட மூன்று பேச்சுகளையும் ஒன்றாகத் தொகுத்து, நூலாக வெளியிட்டுள்ளோம். “தேசீய ஒருமைப்பாடு” குறித்த வாதப் பிரதிவாதங்களை மக்கள் ஒரு சேரப்படித்து நல்லதொரு விளக்கமும் தெளிவும் பெற இந்நூல் பயன்படும் என்று நம்புகிறோம். இதனைத் தொகுத்துத் தந்த ‘நவ இந்தியா’ நாளிதழ் நிருபர் திரு. மு. நமசிவாயம் அவா்கட்கு எங்கள் நன்றி.
—பதிப்பகத்தார்.
பொருளடக்கம்
பக்கம்
| | 9 |
| | 45 |
| | 76 |