நம் நேரு/அத்தியாயம் 11

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 11.


1936 பிப்ரவரி 28-ம் தேதி கமலாநேரு மரணமடைந்தார். மனைவி காலமாவதற்குத் சற்று நேரத்திற்கு முன்பு தான், நேரு இரண்டாவது முறையாக அகில இந்தியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அவருக்குக் கிடைத்தது. சில தினங்களிலேயே அவர் விமானம் மூலம் இந்தியா திரும்பினர். திரும்புகிற வழியில் அவருக்கு அதி விசேஷமான சம்பவம் ஒன்று குறுக்கிட்டது. அக்காலத்திலே, உலகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து கொண்டிருந்த இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முலோலினி நேருவைச் சந்தித்துப் பேச ஆசை கொண்டிருந்தார். கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் அவர். ஆனால் நேரு அவரைக் கண்டு பேச விரும்பவில்லை. தன்னைச்சந்தித்துச் செல்கிற இந்தியத் தலைவர்களின் பெயரைத் தனக்குப் பிர்சார பலமாக ’பாஸ்ட் ஜடாமுனி’ உபயோகித்துக் கொள்வதை நேரு அறிந்திருந்தார். தனது பெயரும் அவ்விதம் பயன்படக் கூடாது என்று அவர் கருதினர். ஆகவே மறுத்து வந்தார்.

என்றாலும், இந்தியாவுக்குத் திரும்புகிற பாதையில் நேரு ரோம் நகரில் ஒருநாள் தாமதிக்க நேர்ந்தது அன்று மாலையில் சந்தித்துப் பேச நேரம் குறித்திருப்பதாக முலோலினி உயர்தர உத்தியோகஸ்தர் மூலம் அழைப்பு அனுப்பினர். நேருவுக்கும் அந்த அதிகாரிக்கும் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாகவே விவாதம் நடந்தது. நேருவின் சமாதானங்களை அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனினும், பேட்டிக்காகக் குறிக்கப்பட்ட நேரம் கடந்து போகிற வரையில், ஜவஹர்லால் அந்த அதிகாரியுடன் பேசிக் காலக் கொலை செய்து சர்வாதிகாரியைச் சக்திக்காமலே விமானம் ஏறிவிட்டார்.

உலகத்தில் யுத்தமேகம் கனத்துத் தொங்கியது. ஐரோப்பியாவில் எரிமலை உள்ளுறக் குமைந்து கொதித்துக் கொண்டிருந்தது. ஆபீஸினிய யுத்தம், ஸ்பானிஷ் கலகம். சீனச் சண்டை, பாலஸ்தீனக் குழப்பம் போன்ற விவகாரங்கள் மகாயுத்தத்துககுத் தளம் அமைத்துத் கொண்டிருந்தன.

இந்தியா திரும்பிய நேரு காங்கிரசின் கவனத்தை சர்வதேச திருஷ்டியில் திருப்பினார். துயருற்ற நாடுகளுக்கு அனுதாபங்களும் சிறு சிறு உதவிகளும் அனுப்ப ஏற்பாடு செய்தார்.

 பிரிட்டிஷார் தங்கள் நலன்களைப் பாதிக்காத வகையில் அரசியல் பேரம் செய்து வந்தனர். புதிய சமஷ்டி, மாகாண சுயாட்சி என்றெல்லாம் திட்டங்கள் வகுத்துக் காட்டினர். காங்கிரஸ் அவற்றை முழுவதும் அங்கீகரிக்கா விட்டாலும், மாகாண சுயாட்சி அடிப்படையில் தேர்தலில் கலந்து கொள்ளத் துணிந்தது.

நாடு பூராவும் தேர்தல் ஜூரம் பரவியது. உற்சாகமும் பரபரப்பும், பொங்கி எழுந்தன. நேரு தேர்தலுக்கு wiற்கவில்லே. ஆயினும் சூறாவளிச் சுற்று பிரயாணம் செய்து காங்கிரசுக்கு செல்வாக்குத் தேடினார். தேர்தல் பிரச்சார சரிதையிலேயே அவ்வருஷம் நேரு பெரியதொரு ‘ரிகார்டு ஸ்தாபித்து விட்டார் என்றே சொல்லவேண்டும்.

நான்கு மாத காலத்தில் நேரு சுமார் ஐம்பதினாயிரம் மைல் பிரயாணம் செய்தார். சுற்றுப் பிரயாணத்திற்காக அவர் உபயோகிக்காத வாகனம் எதுவுமில்ல. ஏரோப்ளேன், ரயில் வண்டி, மோட்டார், லாரி, பலரகமான குதிரை வண்டிகள், மாட்டு வண்டி, பைஸைக்கிள், யானை, ஒட்டகை, குதிரை, ஸ்டீமர், தோணி, சிறுபடகு எல்லாம் அவருக்கு உதவின. சரியான போக்குவரத்து வசதியற்ற தூரதூர ஊர்களுக்கெல்லாம் அவர் போக தேர்ந்தது. அப்போது அவர் நடந்து திரிய அஞ்சவில்லை.

தினம் தினம் டஜன் கணக்கான பொதுக்கூட்டங்களில் பேசினார். ஆயிரமாயிரம் ஜனங்களுக்குக் காங்கிரஸின் லட்சியங்களை எடுத்துச் சொன்னார். இப்படி இமயம் முதல் குமரி வரை ஓய்வு ஒழிவு இன்றிப் பிரசாரம் செய்தார் நேரு. காங்கிரஸ் வெற்றி பெற்றது: மாகாண மந்திரி சபைகளை அமைத்து ஆளத் தொடங்கியது. நேருவின் சகோதரி ஐக்கிய மாகாண மந்திரிகளில் ஒருவராகி ‘இந்தியாவின் முதல் பெண் மந்திரி' எனும் அந்தஸ்தைப் பெற்றார்.

நேரு மூன்றாவது முறையாகக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ச்சியாக இரண்டு வருஷங்கள் தலைமைப் பொறுப்பை நிர்வகித்த நேரு அலுப்படைந்தார். மறு வருஷமும் அவரே தலைவர் என்ற பேச்சு அடிபட்டது. நேரு மீண்டும் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பவில்லை. தலைமையில் மாறுதல் தேவை என உறுதியாக நம்பினர் அவர். ஆகவே ஒரு ’வேலேத்தனம்' செய்தார்! அதை அவரே மிகுதியும் ரசித்துக் கொண்டார்.

ஜவஹர்லால் நேருவை மீண்டும் தலைமைக்குத் தேர்ந்து எடுக்கக் கூடாது; அவரே தொடர்ந்து மூன்று வருஷங்கள் காங்கிரஸின் தலைவராக இருப்பதால் பாதகங்களே ஏற்படும் என்று காரண காரியங்கள் காட்டிக் காரசாரமாக ஒரு கட்டுரை எழுதித் தன் பெயரை வெளியிடாமலே, கல்கத்தா ‘மாடர்ன் ரெவ்யூ’ பத்திரிகையில் பிரசுரமாகும்படி செய்து விட்டார். அந்தக் கட்டுரை யாரால் எழுதப்பட்டது என்கிற விஷயம் எவருக்குமே தெரியாது. பத்திரிகை ஆசிரியருக்குக் கூடத் தெரியாதாம். அக்கட்டுரை அரசியல் வட்டாரங்களில் எழுப்பிய எதிரொலிகளை அறிந்து மகிழ்ந்து போளுர் நேரு அவ் வருஷம் சுபாஷ் போஸ் தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவ் விஷயம், ஜான்கந்தர் தனது இன்ஸைட் ஏஷியா எனும் நூலில் அம்பலப்படுத்துகிற வரையில் ரகசிய மாகவே கின்று விட்டது.

நேரு அடிக்கடி அயல் நாடுகளுக்குப் போய்வந்து கொண்டு தானிருந்தார். ஐரோப்பாவில் புகைந்து வந்த யுத்த எரிமலை ஹிட்லரின் தயவால் அக்னி கக்கி உலக மகாயுத்தமாக மாறியது. வருஷக்கணக்கிலே வளர்ந்தது.

இந்தியாவில் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜிநாமா செய்தன. கால ஓட்டத்தோடு போட்டியிட்டுத் தீவிர சம்பவங்கள் நிகழலாயின. காலப்பாழிலே சரித்திரம் சார மற்று வறண்டுபோவதை உணர்ந்த காந்திஜீ வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டு, சுதந்திரப் போருக்குக் கொடியேற்றி வைத்தார். நாடு முழுவதும் கொந்தளித்து எழுந்தது, காந்தியும் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பிறகு நடந்தவை எல்லாம் நாட்டினரின் நினைவில் பசுமையாய் நிற்பவை தான் . தலைவர்கள் விடுதலை, பிரிட்டஷாரின் புதியதிட்டம், முஸ்லிம் லீகின் முரட்டுப் பிடிவாதம், நாடு துண்டாடப் பட்ட கதை, பிரிட்டிஷார் ஆட்சிப் பொறுப்பைக் காங்கிரஸிடம் ஒப்புவித்துவிட்டு வெளியேறியது. 1947-ல் சுதந்திர உதயம், பிறகு இந்து முஸ்லிம் கலவரம், காந்திஜீயின் நவகாளி யாத்திரை, ஒற்றுமைக்காக உபவாசம், 1948 ஜனவரி 30-ம் தேதி கோட்சே காந்திஜீயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது-இவை எல்லாம் இந்தியாவின் சுதந்திர சரித்திரத்தில் பெரிய பெரிய அத்தியாயங்களாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகும் பாக்கியம் ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்தது. சுதந்திர சர்க்காரைத் திறம்பட வகிப்பதுடன், நாட்டின் முன்நின்ற எத்தனையோ பிரச்னைகளுக்கு முடிவு காண வேண்டிய பொறுப்பும் நேருவுக்கு ஏற்பட்டது.

இரண்டாவது மகாயுத்தத்தின் விளைவுகளால் உலக நாடுகள் எல்லாமே பாதிக்கப்பெற்று விட்டன. யுத்தம் முடிந்திருந்தாலும், யுத்தபீதி மடிய வில்லை. எந்தச் சமயத்திலும் மற்றொரு உலக யுத்தம் கோரமாய் தலைதுாக்கலாம் என்ற பயங்கரம் நீத்தது. வல்லரசுகள் ஒன்றைக் கண்டு ஒன்று அஞ்சி, பயத்தினால் மற்றொரு யுத்தத்துக்கு விதை தூவு வதிலேயே ஆர்வம் காட்டலாயின.

உலக நாடுகள் எதையும் பகைத்துக் கொள்ளாமல், நிலையான சமாதானத்தை வலியுறுத்தும் முறையில், இந்தியாவில் அயல் நாட்டுக் கொள்கைகளை அமைத்தார் நேரு. ஆசியப் பிரச்னைகளில் அக்கறை காட்டினார்.

ஆசிய நாடுகள் நேருவின் தலைமையை எதிர் நோக்கின. உலக வல்லரசுகள் அவரது மேதைக்கும் திறமைக்கும் தலைவணங்கி, அவருடைய ஆலோசனைகளை அங்கீகரித்தன. உலகின் முன்னிலே நேருவின் மதிப்பு இமய அளவு உயர்ந்து விட்டது. ‘மனித குல மாணிக்கம்’, சமா தான தூதுவர் என்றெல்லால் போற்றப்படுகிறார், நேரு.

சுதந்தர இந்தியாவில் பொதுத் தேர்தல் வந்தது. அரசியல் கட்சிகள் பலவும் காங்கிரஸைத் தோற்கடித்து நேரு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றும் பலனில்லை. நாட்டினரின் நம்பிக்கை நேருவிடமே நிலைத்துவிட்டது. ‘எங்களுக்கு நேருஜீ தான் வேண்டும்; வேறு ஜீ எவரும் வேண்டாம்' என்று தீர்ப்பளித்து விட்டார்கள். ஆகவே நேருவே மறுபடியும் இந்தியாவில் பிரதமர் ஆனார்.

இந்தியாவில் பொருளாதார நிலையை வளப்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், பலதுறைகளிலும் வழிகாட்டும் ‘ஐந்தாண்டுத் திட்டம்', தீட்டப் பட்டது. சர்க்காரின் ஆட்சி முறையில் இந்தியாவில் நிகழ்த்துள்ள சாதனைகள் பெரியன. இனி வரப்போகும் வருஷங்களில் பலனளிக்கக்கூடிய முறையில் வகுக்கப் பெற்றுச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிறந்தன. உலகின் பல பகுதிகளிலும் உள்ள நாட்டினர் யாவரும் வியந்து பாராட்டும் வகையில் உள்னன அவை.

உலகின் வல்லரசுகள் புதிய குடியரசுக் குழந்தையான இந்தியாவையும் தங்களுக்குச் சமமான அந்தஸ்தில் மதித்திருப்பதற்கு நேருதான் முக்கிய காரணம் என்று சொன்னல் அது மிகையான கூற்று அல்ல.

காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் உறவு, கொரியாப் பிரச்னை, யுத்தக் கைதிகள் பிரச்னை, இலங்கை இந்தியர் பிரச்னை முதலியவைகளில் திருப்திகரமான முடிவு காண ஆர்வத்துடன் பாடுபட்டது நேருவின் திறமைக்கும் சமாதான ஆர்வத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

நேருவின் வாழ்க்கை அனைவரும் வியக்கத் தகுந்த வகையில் வெற்றிப் பாதையிலேயே அமைந்துள்ளது. தனது வாழ்க்கையைக் குறித்து நேரு ஒரு இடத்தில் இவ்விதம் எழுதியிருக்கிறார்.

“என்னுடைய வாழ்க்கையை நான் மீண்டும் அனுபவிக்கச் சந்தர்ப்பம் கிட்டுவது சாத்தியமானல், இன்றைய அறிவும், அனுபவமும் துணை நிற்கப் பழைய வாழ்வை வாழ முடியுமானல், எனது சொந்த வாழ்க்கை நியதியில் அநேக மாறுதல்களைப் புகுத்த நான் முயற்சிப்பேன் என்பது உண்மைதான். ஆனால் பொது வாழ்வு சம்பந்தப் பட்ட எனது முடிவுகளை நான் மாற்ற விரும்பவே மாட்டேன். அவற்றில் நான் மாறுதல் செய்ய முடியாது தான். ஏனெனில் என்னிலும் வலியவை அவை. எனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி தான் என்னை அவற்றிடம் இட்டுச் சென்றுள்ளது என்பதே உண்மையாகும்.”

ஆகவே இறந்த கால நிகழ்ச்சிகளை எண்ணி நேரு வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை. நிகழ் காலத்திய சரித்திரத்தை ஸ்தாபித்து வரும் நேரு எதிர் காலத்தில் நிச்சிய நம்பிக்கை கொண்டிருக்கிறார். இந்திய மக்களுக்கும் நம்பிக்கை அளித்து வருகிறார். அவரால் இந்தியா இன்னும் அதிகமாக மாண்புறும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_11&oldid=1377008" இலிருந்து மீள்விக்கப்பட்டது