நம் நேரு/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 6

ஜவஹர்லால் நேரு மீண்டும் தேசியப் பணியில் மும்மரமாக ஈடுபட்டார். காங்கிரஸில் செல்வாக்குப் பெற்றவர்கள் நகரசபைகளில் முக்கிய பங்கு பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட காலம் அது. ஆகவே நேரு அலகாபாத் முனிசிபல் தலைவர் ஆனார்

நேருவுக்கு நாட்டில் இருந்த மதிப்பையும், அவருடைய ஆற்றலையும் உணர்ந்த ஆங்கிலேயர் அவர் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆசைபடுவது போல் காட்டி, திசை திருப்பிவிட அவாவினர். அவர் விரும்பினால் நேருவுக்குக் கல்வி மந்திரி பதவி கிடைக்கும், அதன் மூலம் சமுதாயத்தைச் சீர்திருத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும் என்று கூறிச் சில ஆங்கிலேயர்கள் மறைமுக முயற்சிகள் புரிந்தனர். ஆயினும் அவர்களது ‘பச்சாப் பலிக்கவில்லை’.

காங்கிரஸில் பிரிவு ஏற்பட்டிருந்தது. தேசபந்து தாசும், மோதிலாலும் சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்து சேவை செய்து வந்தனர். நேருவுக்குக் காந்தியின் தலைமையில் நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவருடைய திட்டங்களில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை அவருடைய ஆராய்ச்சி உள்ளம் சுட்டிக்காட்டி வந்தது. காந்திஜீயின் ஆலோசனைகளையோ தெளிவான விளக்கவுரைகளையோ பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத வகையிலே அவர் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்.

1923-ம் வருஷம் நம் ருேவுக்கு விசித்திரமானதும் எதிர்பாராததுமான ஓர் அனுபவம் ஏற்பட்டது. அக் காலத்தில் சிக்கியர் கிளர்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. பஞ்சாப், பாட்டியாலா, நாபா சமஸ்தானங்களை ஆண்டு வந்த சீக்கிய மன்னர்களிடையே சொந்தப் போராட்டங்கள் வேறு நடைபெற்றன. அவற்றின் விளைவாக நாபா சமஸ்தான அரசர்பட்டம் இழந்தார். ஆட்சிப் பொறுப்பு இந்திய அரசாங்கத்தினரிடம் வந்து சேர்ந்திருந்தது. பிரிட்டிஷார் நாபா சமஸ்தானத்துக்கு ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர்’ நியமித்தனர்.

அந்த அதிகாரி சீக்கியரின் மதஉரிமையில் குறுக்கிட்டு ஜெய்தோ எனும் இடத்தில் நிகழவிருந்த ஒரு விழாவை நடைபெறாமல் தடுத்துவிட்டார். அதை எதிர்த்துப் போராடவும், விழாவை நடத்தவும் சீக்கியர் கோஷ்டி கோஷ்டியாக ஜெய்தோவுக்குப் போனார்கள். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, மூர்க்கத்தனமாக அடித்துக் கைதுசெய்து, காட்டு வெளிகளுக்குத் தூக்கிச் சென்று ஆங்காங்கே விட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டார்கள்.

பத்திரிக்கைகளில் இவ்விதமான செய்திகள் அடிக்கடி வருவதைக் கண்டார் நேரு. டில்லியில் கூடிய விசேஷக் காங்கிரஸ் முடிவுற்றிருந்த சமயத்தில், மற்றுமோர் சீக்கிய ஐநா ஜெய்தோவுக்குக் கிளம்புகிறது என்று நேரு அறிந்தார். அக் கோஷ்டியுடன் சென்று, என்ன தான் நடக்கிறது என்று நேரடியாக ஆராய விரும்பினார் அவர். "இதனால் பிரமாத நஷ்டம் எதுவும் வந்து விடாது. ஒரே ஒரு நாள் தான் வீணாகும்” என்று நினைத்தார். அவர் ரயில் மூலம் சென்று, தனிப் பாதை வழியாக ஜெய்தோ எல்லை யை அடைய வேண்டியது; சீக்கிய கோஷ்டி வரும்போது காபா சமஸ்தான எல்லேயில் நின்று அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

நேருவுடன், கித்வானியும், கே.சந்தானமும் சென்றனர். காபா சமஸ்தானத்தை அவர்கள் சேர்வதற்கும் சீக்கிய கோஷ்டி அங்குவருவதற்கும் சரியாக இருந்தது. கோஷ்டி முன்னே செல்ல, நேருவும் நண்பர்களும் சற்று விலகியே சென்றார்கள். சமஸ்தானத்தினுள் பிரவேசித்ததும், போலீசார் கோஷ்டியைத் தடுத்து நிறுத்தினர். நேருவிடமும் மற்ற இருவரிடமும் பிரிட்டிஷ் அதிகாரி கையெழுத்திட்ட உத்திரவை ஆளுக்கு ஒன்றாக் கொடுத்தனர்.

நேரு சமஸ்தானத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது; எல்லையைத் தாண்டி உள்ளே வந்திருந்தால் உடனடியாக வெளியேறி விடவேண்டும் என்று அந்த உத்திரவில் கண்டிருந்தது. மற்றவர்களுக்கும் இதே உத்திரவுதான் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

"நாங்கள் ஜதாவில் கலந்து கொள்ள வரவில்லை. நிகழ்ச்சிகளைக் கண்டு போகவே வந்திருக்கிறோம். நாபா சமஸ்தான விதிகளை மீறும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது” என்று நேரு எடுத்துச் சொல்லியும், போலீசார் கேட்கவில்லை.

"நாங்கள் நாபாவினுள் வந்தாயிற்று, உள்ளே வரக்கூடாது என்கிற உத்திரவை இப்பொழுது கொடுப்பதில் அர்த்தமே கிடையாது. மேலும் சட்டென எவ்வாறு நாங்கள் போய்விட முடியும்? காற்றோடு காற்றாகக்கலந்து விடும் சக்தி எங்களுக்கு இல்லையே! என்று நேருவும் அவர் நண்பர்களும் சொன்னார்கள். ஜெய்தோவிலிருந்து கிளம்பும் ரயிலுக்குப் பலமணி நேரம் காத்திருக்க வேண்டும், அதுவரையில் அங்கேயே தங்கியிருக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

போலீசார் மூவரையும் கைது செய்து 'லாக்கப்'பில் அடைத்தனர். பிறகு சீக்கியரிடம் வழக்கம் போல் தங்கள் கைவரிசைகளைக் காட்டித் தீர்த்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மாலைவரை லாக்கப்பில் வைத்திருந்து பின்னர் ஸ்டேஷனுக்கு. இட்டுச் சென்றனர். சந்தானத்தின் இடதுகையோடு நேருவின் வலது கையைப் பிணைத்து விலங்கிட்டு, அதிலுள்ள சங்கிலியைப் பிடித்து அவர்களை ஜெய்தோவின் வீதிகள் வழியாக அழைத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள், “நாயைச் சங்கிலியல் கட்டி இழுத்துச் செல்வதுபோல் இருக்கிறது" என்ற எண்ணமே நேருவின் மனதில் எழுந்தது. இரவில் ரயிலிலும். நாபா 'லாக்கப்’பிலும் அவர்கள் இந்நிலையிலேயே பொழுது போக்கநேர்ந்தது. மறுநாள் மத்தியானம் பாபா ஜெயிலில் சேர்ப்பிக்கப்பட்ட பிறகுதான் அவர்களைத் தனித்தனியாக்கினார்கள்.

“ஒருவர் சகாயமில்லாமல் மற்றவர் நகரக்கூட இயலாத நிலை. ஒரு இரவும் பகலில் பாதிநேரமும் இன்னொருவர் கையோடு சேர்த்து விலங்கிட்டுக் கிடக்கிற கசப்பான அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்கும் ஆசை எனக்கு எழவே எழாது." என்று நேரு குறிப்பட்டிருக்கிறார்.

நாடா ஜெயிலில் சுகாதாரக் குறைவான அறையில் அவர்களை அடைத்து வைத்தார்கள். ஈரம்பிடித்த சின்னஞ்சிறு அறை அது. உயரமும் மிகக்குறைவு. தரையில் தான் அவர்கள் படுத்து உறங்கவேண்டும். பாதி ராத்தியில் பதறி எழவேண்டிய அவசியமும் நேர்ந்து விடுமாம்" ஆராய்ந்தால். எலியோ. சுண்டெலியோதான் முகத்தின் மீது ஏறிவிளையாடியிருக்கிறது என்று புரியுமாம்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மூவரும் விசாரணைக்குக் கொண்டு போகப்பட்டனர். கல்வி ஞானமே அற்ற ஒருவர் நீதிபதியாக இருந்தாராம். வழக்கு அநேக நாட்களுக்கு நீண்டது. திடீரென்று ஒரு மாற்றமும் பெற்றதாம். வேறொரு இடத்தில் வேறொருவர் முன்னிலையில் சதிக்குற்றத்துக்காக விசாரணை நடைபெற்றதாம். பொய்வழக்கு ஜோடித்து. அதையும் தங்கள் இஷ்டம்போல் வளர்த்து, விசாரணை நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள் சமஸ்தான நிர்வாகிகள்.

நீதியின் பெயரால் நடந்த கேலிக்கூத்து இரண்டு வார காலம் நீடித்த பிறகு, நேருவுக்கும் அவர் நண்பர்களுக்கும், இரண்டு குற்றங்களுக்குமாக இரண்டு அல்லது இரண்டரை வருஷச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நேரு கைதான செய்திமட்டும் தான்சமஸ்தானத்தை விட்டு வெளியே சென்று பரவியிருந்தது. விசாரணை விவரங்களோ பிறவோ பத்திரிகைகளை எட்டவில்லை. சமஸ்தானங்களின் தர்பாரை ஓரளவு உணர்ந்திருந்த மோதிலால் வைஸிராய்க்குத் தந்தி கொடுத்தார். ஜவஹரைக் காண அனுமதி கோரினர். முதலில்அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு கிடைத்தது. நேருவையும் மற்றவர்களையும் சிறையில் வந்து பார்த்த மோதிலால் துக்கப்பட முடிந்ததே தவிர வேறு எவ்வித உதவியும் செய்ய இயலாது போயிற்று.

விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறப்பட்டதும் பின் பிரதிகள் வேண்டுமென்று நேருவும் அவரது சகாக்களும் கோரினர். உரிய முறையில் மனுச்செய்தால் கோரிக்கை கவனிக்கப்படும் என்ற பதில் தான் கிடைத்தது.

அன்று சாயங்காலம் ஜெயில் அதிகாரி அவர்களை அழைத்து, சமஸ்தானத்தை நிர்வகித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரியின் உத்தரவுகள் இரண்டைக் காட்டினர். தீர்ப்பை அமுல் நடத்தும் செயல் காலவரையறை இன்றி ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்பது ஒன்று. அவர்கள் நாபா சமஸ்தானத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். விசேஷ அனுமதி இல்லாமல் மறுபடியும் நாபாவினுள் பிரவேசிக்கக் கூடாது என்பது மற்றொரு உத்திரவு.

இவ் இரண்டு உத்தரவுகளின் பிரதிகள் வேண்டுமென்று நேரு கேட்டார். கொடுக்கமறுத்துவிட்டார்கள். போலீசார் மூவரையும் ரயில்வே ஸ்டேஷனுக்கு இட்டுச் சென்று விடுதலை கொடுத்து விட்டார்கள். நேருவுக்கும் நண்பர்களுக்கும் நாபாவில் யாரையும் தெரியாது. மேலும் இரவு கால பந்தோபஸ்தாக நகரின் வாசல்கள் மூடப்பெற்று விட்டன. ஸ்டேஷனில் காத்திருந்த மூவரும் அம்பாலாவுக்கு ஒரு ரயில் வண்டி சீக்கிரம் கிளம்பும் என அறிந்து மகிழ்ந்தனர். அதில் ஏறி அம்பாலா சேர்ந்தார்கள்.

நேரு அம்பாலாவிலிருந்து டில்லி போய், பிறகு அலகாபாத் சேர்ந்தார். அங்கிருந்து, சமஸ்தான அதிகாரிக்கு, தீர்ப்பின் பிரதிகளையும் அவருடைய இரு உத்திரவுகளின் பிரதிகளையும் அனுப்பி வைக்கும்படி, கடிதம் எழுதினர். அந்த பிரிட்டிஷ் அதிகாரி பிரதிகளை அனுப்ப முடியாது என மறுத்து விட்டார். நேரு எவ்வளவோ முயன்றும் பலனில்லே.

இந்த அனுபவங்களின் மூலம், இந்திய சமஸ்தானங்களின் நிர்வாகம் எப்படி இருந்தது. அங்கு நீதி என்ன பாடுபட்டது என்பதை எல்லாம் நேரு நன்றாக அறிந்து கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_6&oldid=1377000" இலிருந்து மீள்விக்கப்பட்டது