உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலம்பின் கதை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திறனாய்வுக் கட்டுரைகள்


1. கண்ணகி

கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். 'ஈகை வான் கொடி அன்னாள்' என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள். 'ஈகை' என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே காவியத்தின் செய்தியும் ஆகிறது.

இவள் வடிவு, திறம் இவை சிறப்பிக்கப்படுகின்றன. திருமகளைப் போன்ற வடிவும், அருந்ததி போன்ற கற்பும் உடையவள் என்று சிறப்பிக்கப்படுகிறாள். மாதரார் தொழுது ஏத்தத் தக்க நற்குணங்கள் நிரம்பியவள் என்றும் கூறப்படுகிறாள்.

“அவளுந்தான்
போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய
பெருங்குணத்துக் காதலாள்”

இதில் மூன்று செய்திகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன. இவள் தெய்வத்தோடு உவமிக்கப்படுகின்றாள். மற்றொன்று இவள் கற்பின் திறம்; மூன்றாவது இவள் நற்குணங்கள்; இந்த மூன்றுமே கண்ணகியின் குணச் சித்திரங்கள் என்று கூறலாம்.

இவள் தெய்வம் ஆகிறாள் என்பதற்கு முன் அறிவிப்புகள் காவியத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.

–13–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/186&oldid=936507" இலிருந்து மீள்விக்கப்பட்டது