உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலம்பின் கதை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

சிலம்பின் கதைஇவள் கற்பின் திறம் வெளிப்படும் சூழ்நிலைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

தேவந்தி இவளைத் தெய்வத்தை வழிபடும்படி கூறுகிறாள். “சோம குண்டம் சூரிய குண்டம் இத்துறை களில் முழுகி எழுந்து காமனை வழிபட்டால் கணவனை அடைந்து இன்புறுவர்” என்று கூறுகிறாள்.

'பீடு அன்று' என்று கூறுகிறாள் கண்ணகி, கணவனை வழிபடுகின்றவள் காமனை வழிபட அவள் நினைக்க வில்லை. 'தெய்வம் தொழாள்' என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறாள். அது மட்டுமன்று; இன்பம் அவள் குறிக்கோள் அன்று. 'இன்புறுவர்' என்று கூறுகிறாள் தேவந்தி. இல்வாழ்வுக்கு இன்பம் அடிப்படையன்று; அன்பு தான் அடிப்படை என்பதை அறிவித்துவிடுகிறாள். 'பீடு அன்று' என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியிருக்கக் காண்கின்றோம்.

அவள் கற்பின் திறத்துக்கு மற்றும் ஓர் எடுத்துக் காட்டுச் சிறப்பாக அமைந்துள்ளது.

கோவலன் உண்டு இனிது இருந்து அவள் செயலை வியக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் வருந்தினார்கள் என்று கூறினாளே தவிரத் தான் வருந்தியதாகக் கூறவில்லை. அவர்கள் வருந்தும்படி போற்றா ஒழுக்கம் புரிந்தான் என்றுதான் கூறுகிறாள்.

அவன் செயல் அவள் மனத்தில் எந்தச் சலனமும் ஏற்படுத்த வில்லை; அவனை அவள் வெறுக்கவே இல்லை. “யாவதும் மாற்றா வாழ்க்கையேன்” என்று கூறுவது அவள் கற்பின் திறத்தைக் காட்டுவதாகும்.

சோழ நாட்டுக் கற்புடைப் பெண்டிர் பொற்புறு செயல்களைக் கூறித் தன்னை ஒரு பத்தினி என்று தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/189&oldid=936510" இலிருந்து மீள்விக்கப்பட்டது