உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலம்பின் கதை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

சிலம்பின் கதைஇல்வாழ்க்கையின் குறிக்கோள் இன்பம் என்று அவர் குறிப்பிடவே இல்லை. இந்த இரண்டு பண்புகளும் கண்ணகிபால் தலையோங்கி நிற்கின்றன.

இன்பக் களிப்பில் கோவலன் இன்னுரைகள் பல பேசுகிறான்; பாராட்டுகிறான். அவள் வாய் திறந்து ஒரு சொல்கூடக் கூறியவள் அல்லள். இன்பத்தில் அவள் மகிழ்ச்சியைக் காட்டவே இல்லை. அவள் அன்பு அவள் செயல்களில் வெளிப்படுகின்றது.

'இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்று கூறக் கேட்ட அளவில் 'சிலம்புஉள கொள்ளும்' என்று விரும்பிக் கொடுக்கிறாள். மற்றும் அவன் 'எழுக' என்றதும் உடன் புறப்பட்டுச் செல்கிறாள். அவனுக்கு வழித் துணையாக இருந்து பணி செய்கிறாள். அவனுக்கு இன்.அமுது படைத்து அருகிருந்து பரிமாறும் நிலையில் அவள் அன்பு வெளிப் படுகிறது.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்”

என்று பாராட்டுகிறான். அவன் துயரை அவள் களைவதை அறிந்து சுட்டிக் காட்டுகிறான்.

இதே கருத்தைக் கவுந்தியடிகளும் கூறக் காண் கிறோம்.

“கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு
நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி”-

மற்றும் இதே கருத்தை மாதரியும் கூறக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/191&oldid=936512" இலிருந்து மீள்விக்கப்பட்டது