பக்கம்:சிலம்பின் கதை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

191



‘தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக் கொல்’

எனக் கூறி வியப்பு உறுகிறாள்.

இவள் இல்வாழ்க்கையில் அறத்தைக் கடைப் பிடித்தவள் என்பது அவள் கோவலனுக்குத் தரும் விடையில் வெளிப்படுகிறது.

‘அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை’

என்று தன் நிலைமையை எடுத்துக் கூறுகிறாள்.

அறவாழ்க்கை இழந்தமைக்குத்தான் அவள் வருந்தி இருக்கிறாள். இன்ப இழப்பைப்பற்றி அவள் எங்கும் எப்பொழுதும் பேசவே இல்லை. அவள் வாழ்க்கையின் பண்பு அன்பும், அறமும் என்பதைச் சுட்டிகாட்டி வாழ்ந்தவள் என்பது தெரிகிறது.

வள்ளுவர் 'பெண்' அவள் நற்குண நற்செயல்களைத் தொகைப்படுத்திக் கூறுகிறார்.

‘தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்பர்.

நாணமும் மடமும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக வாழ்ந்தமை அவள் தற்காத்தலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தன் துயர் காணாமல் அவனைப் பேணிக் காத்தமை அவள் செயல்களால் விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/192&oldid=936513" இலிருந்து மீள்விக்கப்பட்டது