பக்கம்:சிலம்பின் கதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

193



“நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க
மதுரை மூதூர் யாது?”

என்று வினவுகின்றாள்.

விருந்தினர் ஒம்பும் வாழ்க்கை இழந்த நிலையில் கோவலனின் தந்தை தாய் வந்து வினவியபோதும் அவள் அப்பொழுதும் சிரிக்கவே முயன்று இருக்கிறாள். 'வாயல் முறுவற்கு' அவர் உள்ளகம் வருந்தினர் என்று கூறுகிறாள்.

எந்தப் பெண்ணும் செய்யாத, செய்ய முடியாத புரட்சி செய்தவள் இவள்; இவளை வீரபத்தினி என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

கற்பு என்பது அடக்கம் மட்டும் அன்று, சீற்றமும் கொண்டது எனபதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவள் கண்ணகி,

எனவே இவள் தெய்வக் கற்பு உடையவள் என்பதும், பெருங்குனத்துக் காதலாள் என்பதும் இவள் நற்குண நற் செயல்களால் புலப்படுகின்றன.

காவியத்தில் கண்ணகி பெரும் இடம் சிறப்பு மிக்கது: அவளைச் சுற்றி மூன்று நாடுகளின் சிறப்புகள் பின்னப்பட்டு இருக்கின்றன. இதனைச் சேரன் செங்குட்டுவனே அறிந்து தெரிவிக்கிறான்.

“சோழனின் ஆட்சிச் சிறப்பையும், பாண்டியனின் தீது தீர் திறத்தையும், சேரன் செங்குட்டுவனின் வீரச் செயலையும் வெளிப்படுவதற்குக் கண்ணகி காரணமாக இருக்கிறாள்” என்று அறிவிக்கிறாள்.

“தென்தமிழ்ப் பாவை செய்தவக்கொழுந்து
ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/194&oldid=936515" இலிருந்து மீள்விக்கப்பட்டது