பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழியிற் கூட்ட மரபுகள் - 83


    "நறைபரந்த சாந்தம் அறஎறிந்து நாளால் 
    உறையெதிர்ந்து வித்தியஊழ் ஏனல்-பிறைஎதிர்ந்த 
    தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்! காணீரோ 
    ஏமரை போந்தன கண்டு".7 

[நறை-மணம்; சாந்தம்-சந்தன மரம்; உறை-மழை பெய்யும் காலம்; ஊழ்-முதிர்ந்த; ஏனல்-தினை; ஏ -அம்பு; மரை-மான்]

என்ற பாடலில் இச்செய்தியைக் காணலாம்.

    "பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்
    ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
    நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
    தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி
    குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்"8

என்ற நூற்பாவின் பகுதியாலும் அதற்கு உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள் செய்யுட்களாலும் அறியலாம். இறையனார் களவியலும்,

    "பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப் 
    புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து"9

(பதி-ஊர்)

என்று இதனை விதி செய்து காட்டும். இவையெல்லாம் அக இலக்கியங்களில் 'வேழம் வினாதல்', 'கலைமான் வினாதல்', 'வழி வினாதல்’, 'பதி வினாதல்', 'பெயர் வினாதல்', மொழி பெறாது கூறல்" எனனும் துறைகளாகப் பேசப் பெறும்10. இங்குக் 'கெடுதி' என்று கூறப்பெறுவது தலைமகனால் அம்பு விட்டுக் கெடுக்கப் பெற்ற வேழம், கலைமான் முதலியவை. அவற்றைக் கண்டீரோ?, என்று கேட்டல் 'கெடுதி வினாதல்’ ஆகும். இதனை மணிவாசகப் பெருமான்.

     "இருங்கண் அனைய கணைபொரு
     புண்புணர் இப்புனத்தின்

7.  திணைமாலை - 1 
8.  களவியல்- 11 (இளம்) 
9.  இறை. கள- 6

10. இவற்றிற்கு மேற்கோள் செய்யுட்களை நூற்பா 6 இன் உரையில்

   காண்க.

  7.திணைமாலை-1
  8. களவியல்-11 ( இளம்).
  9. இறை. கள-6. 
  10. இவற்றிற்கு மேற்கோள் செய்யுட்களை நூற்பா 
    6 இன் உரையில் காண்க.