பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அகத்திணைக் கொள்கைகள் முதல் பயில்வு ஈறாகவுள்ள இந்த உணர்ச்சி ஏழினாலும் எழும் மன நிகழ்ச்சியை ஒன்றோடொன்று ஒவ்வாத வேறுபட்டனவாகி இருபொருள் பயக்கும் சொற்களாலே ஆராய்வாள் தோழி என்பது[1] இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் நயமான உரையும் அறிந்து உளங் கொள்ளத் தக்கது. " இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் : தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த வழித் தலைவன் வருதலால் தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் கண்டு உணர்தல். அஃதாவது, தலைவியும் தோழியும் தினைப்புனங் காத்து நின்ற விடத்துத் தலைவன் கையுறை கொண்டுவந்து நின்று, இத்தழை நுமக்கு உடையாதற்கு ஏற்றது எனவும், இவ்வணி நீவிர் அணிதற்கு உரியது எனவும் கூறி அவள்பாற் குறை வேண்டுவான்போல நிற்க, தோழி அப்போது நிகழும் அவ்விருவர் மெய்ப்பாடுகளையும் உணர்ந்து அவ்விருவர்க்கும் கூட்டமுண்மை துணிவள். ஏனல் காவல் இவளும் அல்லள்: மான்வழி வருகுவன் இவனும் அல்லன்; நரந்தங் கண்ணி யிவனோடிவனிடைக் கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே; எம்முன் நானுநர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ப; சொல்லும் ஆடுப, கண்ணி னானே." என்ற பாடலிலும் இவள்வயிற் செலினே இவற்குடம்பு வறிதே இவன்வயிற் செலினே இவட்கும் அஃதே காக்கை யிருகனின் ஒருமணி போலக் குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் மன்னிய சென்றுவாழ் உயிரே. 7 என்ற பாடலிலும் தோழியின் உய்த்துணர்வு கூறப்பெறுதலைக் கண்டு மகிழ்க.

மேற் கூறிய மூன்று முறையாலும் முறையே ஆராய்வதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம் இது: இம்மூன்றினுள் ஒன்று

  1. ௸-24(இளம் உரை)