பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 87 கண்டுழி அவரவர் குறிப்பினாற் புணர்ச்சி யுணரும் என்றவாறு. குறையுணர்தல் முன் வைத்தார் நன்கு புலப்படுதலின். முன்னுறவுணர்தல் அதன் பின் வைத்தார், தலைவி வேறுபாடு கண்டு பண்டையிற் போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத் துணிவின்மையின் இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்" அதன்பின் வைத்தார், ஆண்டுப் புதுவோன் போலத் தலைவன் வருதலானும் தலைவி கரந்த உள்ளத்தளாய் நிற்குமாதலானும் அத்துணைப் புலப்பாடின்மையின். இக்கருத்தினானே மேற் சொல்லப் பெற்ற தோழி கூற்று மூவகையாகப் பொருள் உரைத்த தென்று கொள்க.”** இம்மதியுடம் பாட்டின் வகை மூன்றும் இறையனார் களவியலுரையிலும் நம்பியகப்பொருளிலும் வேறு படவும் கூறப்பெற்றுள்ளன. அவற்றை ஆண்டுக் கண்டு தெளிக. (ii) பகற்குறி, இரவுக்குறிகள் ஐந்திணை ஒழுக்கத்தில் தோழியின் உதவியால் காதலர்கள் சந்திக்கும் இடம் குறியிடம் என்று வழங்கப்பெறும். அது பகற்குறி, இரவுக்குறி' என இருவகைப்படும். இதனைத் தொல் காப்பியர், குறியெனப் படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப." என்று கூறுவர். பகற்குறி என்பது பகலில் சந்திக்கும் இடம்: இரவுக் குறி என்பது இரவில் சிந்திக்கும் இடம். இந்தக் குறி யிடங்கள் தலைவியாலும் தோழியாலும் காட்டப்பெற்று அவ் விடங்களில் பகலிலும் இரவிலும் தலைவன் சந்திப்பான். களவு நீட்டிக்க வேண்டும் என்பதும், காதலாயினார் இருவகைக் குறிகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அகத்திணையின் நோக்கம் இல்லை. பால தாணையால் தாமே கண்டு தம்முட் புணர்ந்த களவுக் காதலர்கள் வெளிப்படையாக மணந்து இல்லறம் நடத்த 18. டிெ-37 இன்உரை (இளம்) 19. டிெ-40 (இளம்). இந்நூற்பாவை இறையனார் களவிய லாசிரியர் சிறிது மாற்றத்துடன் தன் நூலில் அமைத்துக் கொண்டார் (நூற். 18). . . . . -