பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 அகத்திணைக் கொள்கைகள் வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறது தக்க சாலம் வாயாவிடின் களவு நீடிக்கும். களவு நீளுங்காலத்தில் பகற்புணர்ச்சி இரவுப்புணர்ச்சிகள் நடைபெறும். இத்தகைய குறிகளை அமைத்தற்கும் ஒரு வரையறையை உணர்த்துவர் தொல்காப்பியர். . பகக்குறி: ஊரின் மதிற்புறமாய்த் தலைமகள் அறிந்து சேர் தற்குத் தகுதியுடையதாகிய இடமே பகற்குறியாகும். பகற்புணர் களனே புறனென மொழிப அவளறி வுணர வருவழி யான." என்பது அவர் கூறும் விதி. பெரும்பாலும் தலைவன் தலைவியைச் சந்திக்கும் காலம்வெயிலுறைப்பேறிய உச்சிக் காலமாக இருக்கும். ஆகவே, அக் கூட்டத்திற்குக் குறிக்கப்பெறும் இடம் நீர்த்துறை அருகே இருக்குமாறு அமையும். குறுந்தொகைத் தோழி யொருத்தி தலைவனுக்குப் பகற்குறி அமைத்துத் தருதலைக் காட்டும் பாடல் இது: ஊர்க்கும் அணித்தே பொய்கை, பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே: இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும் துன்னல்போ கின்றாற் பொழிலே யாம்என் கூழைக்கு ஒருமண் கொணர்கஞ் சேறும் ஆண்டும் வருவள் பெரும்பே தையே." (அணித்து-அருகிலுள்ளது: சேய்த்தும் அன்று-தொலைவி லுள்ளதன்று; கான்யாறு-காட்டாறு: குருகு-நாரை: துன்னல்-நெடுங்குதல்: கூழை-கூந்தல்) இதில் தோழி ஊர்க்கும் அணித்தே பொய்கை, அப்பொய்கைக்குக் கான்யாறு அருகிலுள்ள தென்றதனால் யாங்கள் வரல் எளிது என்பதைக் குறிப்பித்தாள். இங்ஙனம் வருதற்கு எளியதாகிய இடத்துத் தனியிடமும் உண்டாங் கொல்லோ என்னும் ஐயம் நிகழாதபடி வேறு எவ்வுயிரும் ஆங்கு நெருங்குதல் ஒழிந்ததாகும் அப் பொழில் என்கின்றாள். தான் வருவது தன் கூந்தலுக்கு எருமண் கொணர் தற்கே யாதலின் தானும் கான்யாற்றங் 29. டிெ-42 இளம்.) 21. குறுந்-113