பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 அகத்தினைக் கொள்கைகள் வெயில் படாதவாறு மறைத் தன் என்பதும் வரலாற்றுச் செய்திகள். ஏனைப் பறவைகளெல்லாம் செல்லவும்'தான் செல்ல லாற்றாமையின் கூகை நாணி வருந்தியிருந்ததைப்போல் தலைவியும் பகலில் வெளியிலே வர நானுகின்றனள் என்பதைத் தோழி தலைவனிடம் கூறுவதைப் பாடலில் காணலாம். வர லாற்றுச் செய்தியை அகத்திணையில் அருமையாக இணைத்துக் காட்டும் பரணர் திறம் போற்றத் தக்கது. மணிவாசகப் பெருமான் பகற்குறி தலைவிக்கு இயலாததை மிக அருமையாகக் கூறுவர். மாதிடம் கொண்டுஅம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப் போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கவென்று தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரிய நின்று சோதிடம் கொண்டிதெம் மைக்கெடு வித்தது துரமொழியே.”* (மாது-பார்வதி, அம்பலம்-சபை; பொன் வேங்கை-பொன் போலும் மலரையுடைய வேங்கை, தாது-மகரந்தம்; பொன் வீசி.பொன் போலும் மலரைக் கொடுத்து; கள். தேன்; சோதிடம்-நிகழவேண்டியதை முற்கூறுதல்; கெடு வித்தது-கெடுத்தது) தினைமுதிர்தலும் வேங்கை பூத்தலும் ஒரே காலத்தில் நிகழ்வன. வேங்கை பூத்தது என்பதால் தினை அறுவடையாகும் என்பதும், இனி திணைப்புனங்காவலுக்கு தலைவி வாராள் என்பதும் குறிப் பிட்டவாறு காண்க. மேலும் இது தலைவியின் இற்செறிப் பினையும் அறிவிக்கின்றது. இதில் தற்குறிப்பேற்றமாக வேங்கை தினை கொய்யச் சோதிடங் கூறுவதாகச் செப்பியது மகிழ்ச்சி அளிக்கின்றது. வேங்கை சோதிடங் கூறுவதாகச் சங்க இலக்கியங் களிலும் கூறப்பெற்றுள்ளது. பகற்குறி இடையீடு: பகலில் பழக நேரிடும் தடைகள் பகற்குறி இடையீடு என வழங்கப்பெறும். பெரும்பாலும் தோழி தினைப் புனங்காவலில் இருக்கும்பொழுதுதான் பகற்குறி 25. திருக்கோவை-136