பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 91 நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். தினைமுற்றி அறுவடை யானதும் புனக் காவல் நின்று விடும். தல்ைவி வீட்டினின்றும் வெளிவருதற்கியலாது. அஃதன்றி அவளுக்கு வீட்டிலும் காவல் (இற்செறிப்பு) கடுமையாக இருக்கும். ஆகவே, பகற்குறி வாரற்க: இரவுக்குறி வருக எனத் தோழி இயம்புவள். தோழியின் மொழி அவள் உள்ளன்பைக் காட்டும். அகநானுாற்றில் இத்தகைய ஒரு நிகழ்ச்சி தோழி. பேசுகின்றாள்: தலைவ, பகலில் வாரற்க. ஏன் எனில் தாய் கண்ணினும் கடுமையான அன்புடையளாகித் தலைவியைக் காக்கின்றாள். தந்தையோ தன் மகள் வெளியில் ஏகுவதற்கு ஒருப்படாமல் இளைய மகளே, நின் சீறடி சிவக்க எங்குச் செல்கின்றாய்?’ என்கின்றான். தலைவியோ ஒருயிர் ஈருடல் கொண்ட இருதலைப் புள்ளைப்போல் நின்னிடம் நிறைந்த அன்புடையளாய் இருக்கின்றாள். என்று இதனை, யாயே, கண்ணினும் கடுங்கா தலளே: எந்தையும், நிலனுறப் பொறாஅன்; சீறடிசிவப்ப எவனில் குறுமகள் இயங்குதி? என்னும்: யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே” என்ற பாடற்பகுதியில் கண்டு மகிழ்க. இாவுக் குறி : மனையினுட் புகாது அங்குள்ளோர் கூறும் சொற்கள் காதலர்க்குக் கேட்கும் அணிமைக்கண் அமைவது இரவுக்குறி. இதனைத் தொல்காப்பியர், இரவுக் குறிவே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான.” என்ற விதியால் காட்டுவர். இளம்பூரணர் மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் கொள்ளப்படும் என்பர்; நச்சினார்க் கினியர் 'அகமனையிற் புகாக் காலையெனவே, இரவுக்குறி அங்ஙனம் (அகமனைக்கும் புறமனைக்கும் நடுவே) சிலநாள் நிகழ்ந்த பின்னர், அச்சமின்றி உள் மனையிற் சென்று கூடவும் பெறுவர் என்பதும் கூறியதாம்' என்று உரைப்பர். 26. அகம் - 12 27. களவியல் - 41(இளம்)