பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் بالاة மரபுகள் 95 தலைவளால் நிகழ்த்தப்பெறும். அவை: புனலொலிப்படுத்தல், புள்ளெழுப்புதல் முதலியன. இங்ஙனம் தலைவன் தன் வரவை அறிவிக்கச் செய்யும் குறிகள் அத்தலைவன் செய்கையாலன்றி வேறு வகையாகவும் நிகழ்வதுண்டு. எடுத்துக் காட்டாக, புன்னைக்காய் முக்கு ஊழ்த்தியதாலும், வளி எறிவதாலும், புள்துளக்குவதாலும் விழுந்து புனலொலிப் படுத்தும். அங்ஙனமே புள் எழுதலும் வெருவியும் எழும்; வேற்றுப் புள் வரவும் எழும். இவற்றைத் தலைவன் வருகை குறிப்பனவாகக் கொண்டு, தோழி தலைவியைக் குறியிடத்துச் செலுத்தித் தவறுதலும் உண்டு. இதுவே அல்ல.குறிப் படுதலாம். அல்ல குறிப்படுதல்-குறியல்லாத குறியிலே மயங்குதல். இதனைத் தொல்காப்பியர், அல்ல.குறிப் படுதலும் அவள்வயின் உரித்தே அவன்குறி மயங்கிய அமைவொரு வரினே.”* என்றும், குறியின் ஒப்புமை மருள்தற் கண்ணும்' என்றும் குறிப்பிடுவர். அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட மணியரவம் என்றெழுந்து போந்தேன்-கணி விரும்பு புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய் உள்ளுருகு நெஞ்சினேன் யான்.'" (பரிமா-குதிரை, அரவம்-ஒலி.) என்ற தலைவியின் கூற்றால் அவள் அல்ல.குறிப் பட்டதை அறிய லாம். இன்னும், - கொடுமுள் மடற்றாழைக் கூம்பவிந்த ஒண்பூ இடையுள் இழுதொப்பத் தோன்றிப்-புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன் செய்தான் தைளிவாக் குறி." (கூம்பு-குவிதல்; இடைஉள்-நடுவே உள்ள சோறு: இழுது-வெண்ணெய், புடை-பக்கம்) 34. களவியல்-43 (இளம்) இறையனார் களவியல் நூற் பாவும் போலவே அமைந்துள்ளது. . * 35. டிெ-11 (அடி 24) 36. ஐந். ஐம்-50 37. ആു.-49.