பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 97 குரைக்கும். ஓயாது குரைத்து அயன்று அக்கூரிய பல்லையுடைய நாய் ஒருக்கணம் கண் சாயினும், வெண்ணிலவு வானத்து நின்று பகல் போலப் பேரொளி வீசும். மதியும் தண்கதிர் சுருக்கி மலைக்குள் மறையும்போது, இன்னாக் குரல் கொண்ட கோட் டான்கள் வீட்டெலிகளை இரைகொள்வான் வேண்டி, பேய் திரியும் நள்ளிரவில் விடாது குழறும். கூகை கத்துதல் நின்ற போது விடிதலை அறிவிக்கும் கோழி கூவும். இவையெல்லாம் நீங்கிய ஒரு நல்லிரவு வரப்பெற்றேனாயின், நாள்தோறும் பயனின்றி வந்த அவர் (தலைவன்) அன்று வராதிருந்து விடுவார். தித்தனின் உறந்தைக் காட்டுநெறி எவ்வளவு முட்டுப் பாடு உடையதோ அவ்வளவு இடர்ப்பாடு நிரம்பியது நம் களவு நெறி' என்கின்றாள். to a ii. sa svi இந்திணை ஒழுக்கத்தில் களவு நெறியிலிருந்து கற்பு நெறிக்குச் செல்லத் துணை புரிவது அலர். இளங்குமரியின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் அகத்திணை இலக் கியம் பேசும். பரவாத களவை அம்பல் என்றும் களவை, அலர்’ என்றும் கூறுவர் பேராசிரியர்." அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல் என்றும், அலர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர்." இறையனார் களவியலுரையாசிரியர், "அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்வதர் யிற்று; இன்னதின் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது இன்னானோடு இன்னாளிடை இதுபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது, பெரும் போதாயச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது, அப்பெரும் போது தாதும் 禽 > அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமையென +. - - * - * - 。函基 வேற்றுமை சொல்லப்பட்டதாம்' என்று விளக்குவர். 33. அகம்-122 39. திருக்கோவை-180 இன் உரை. 40. களவியல்-48 இன் உரை - 41. இறை. கள-22 (உரை) அ-7