பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 அகத்திணைக் கொள்கைகள் இந்த அம்பலும் அலரும் பெரும்பாலும் உள்ளுர்ப் பெண்டி ராலேயே நிகழும். இவர்களின்றேல் ஐந்திணை இலக்கியம் உப்பில்லாத உணவுபோல் சாப்பிட்டுத் தோன்றும். தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் இவர்கள் செய்வது நன்றல்லதே யாயினும், சமுதாய நெறிக்கு நல்லது என்ற கருத்தால், தமிழ்ச் சான்றோர் இவ்வூர்ப் பெண்டிரையும் அகத்திணை இலக்கியத்தில் போற்றிக் கொள்வாராயினர். களவியலும் கற்பிலும் ஊரார்க்கு இடன் உண்டு. ஊரார் என்பது இருபாலாருக்கும் பொதுச் சொல்லேயாயினும் அகத்திணை இலக்கியத்தில் இச் சொல் பெண்டிரையே குறிக்கும்." வீட்டகத்துச் செய்திகளை அட்டில் அறைப் புகைபோல் நுழைந்து கானும் ஆசையும், கூடியிருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் எப்படியோ பெண் சமுதாயத் திற்குப் பிறவிக் குணம்போல் அமைந்துவிட்டன. இத்தகைய வாய்ப்பட்டிகளை வெவ்வாய்ப் பெண்டிர்’** அலர்வாய்ப் பெண்டிர்' அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்' அலர் ர்' என்று அகத்தினைப் வினை மேவல் அம்பர் பெண்டிர் புலவர்கள் குறிப்பிடுவர். ஊர்ப் பெண்டிர் பரப்பும் அலரால் பல நன்மைகள் விளையும். இதனைத் தலைவியும் தோழியும் நன்கு அறிவர். அலர் எழுவதால் காதலர்களின் காதல் நோய் பெருகி வளரும், இதனை, களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது." என்கின்றான் திருவள்ளுவர் படைத்த தலைவன். கள்ளுண் பார்க்குச் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல, தன் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றதாகக் கூறு கின்றான். அங்ங்ணமே அவர் படைத்த தலைவியும், ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும் இந் நோய்.” (கெளவை-பழிச் சொல்; நோய்-காமநோய்) 42. தொல்-பொருள் 1107 43. குறள்-1147. (பரிமேலழகர் உரை) 44. குறுந் 373; அகம்.50 45. நற்-36 46. டிெ. 143 47. அக்ம்-203 48. குறள்-1145 49. குறள்-1147