பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 105 அணுக்கமாய் நினைத்த அவனது நெஞ்ச நினைப்பை அகற்றுதல் என்று கொள்ளல் வேண்டும். இறையனார் களவியல் இதனை சிறையுறக் கிளந்து சேட்பட நிறுத்தலும்' என்று குறிப்பிடும். இதன் உயர் பெருஞ் செறி பொருள் நுட்பத்தை உருவி எடுத்து விளக்கும் நக்கீரர் திறன் வியத்தற்குரியது. அவர் உரை 'சிறை என்பது காப்பு, உற என்பது மிக, கிளத்தல் என்பது சொல்லுதல், சேண் என்பது அகற்றல், பட என்பது நிகழ்தல், நிறுத்தல் என்பது தழிஇக் கோடல் என்றவாறு; காப்பு மிகுதி சொல்லி அகற்றித் தழிஇக் கோடலும் என்றவாறு; ஆற்றாத்தன்மைக்கண் நிறுத்தல்” என்னும் சொல் தழிஇக் கொள்ளும் என்பது; எனவே, தலைமகனை ஆற்றாமை செய்வன போன்று வைத்து ஆற்று விப்பன சில சொற் சொல்லும் என்பது போந்தது.”** மணி வாசகப் பெருமான் தழை கொண்டு செறல் முதல் தழை விருப் புரைத்தல் ஈறாக இருபத்தாறு துறைகளாக இதனை எடுத்துக் காட்டி விளக்குவர்"" நம்பியகப் பொருள் போன்ற பிற்கால நூல்கள் இச்சேட்படையைப் பல கிளவிகளாக விரித்துப் பேசும். கூட்டுவித்தலின் அருமை புலப்படுமாறு பல்வேறு காரணங்களைக் கூறும் தோழியின் மதி நுட்பத்தை ஈண்டுக் கண்டு மகிழலாம். ஐங்குறுநூற்றுத் தோழி ஒருத்தி களவுக் காலத்தில் தன்னைத் தலைவியோடு கூட்டுவிக்க வேண்டும் என்று தன்பால் வந்து குறையிரக்கும் தலைவனுக்கு அவன் வேண்டுகோட்கு இணங்காதாள் போன்று தலைவி வயதால் மிகவும் இளையவள். விளைவு அறியாதவள்’ என்று கூறி அகற்றுகின்றாள். நெறிமருப் பெருமை நீலவிரும் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழநி யூரன் மகளிவள் - பழன வெதிரின் கொடிப்பிணை யலனே." (நெறிமருப்பு-அறல்பட்ட கொம்பு நீல இரும்போத்துநீல நிறமான பெரிய கடா, வெறி-மணமுள்ள மயக்கும் - கெடுக்கும்; அதாவது தின்று கெடுத்தல்; கழனி - வயல், 63. இறை. கள. 12. 64. ைெடி நூற். 12 இன் உரை. 65. திருக்கோவை-செய் (90-115) காண்க, 66. ஐங்குறு-91.