பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I (Jö அகத்திணைக் கொள்கைகள் பழனவெதிர் - கரும்பு: பழனம் - கழனி, வெதிர் - மூங்கில்: பிணையலள் : மாலையை யுடையவள்) இதில் பழனவெதிரின் கொடிப்பிணையலள்' என்பதன் கருத்து: கரும்பின் பூவினால் செய்யப்பெற்ற மாலை மணமில்லாதது: ஆகவே அதனை அணிந்திருக்கின்ற தலைமகளும் மணங் கமழாத வள்; அதாவது மணங் கமழ்தற்குரிய மலர்ச்சி பெறாதவள், மங்கைப் பருவத்தின் பூப்பில்லாத பேதைப் பருவத்தின் பூப்பில் லாத பேதைப் பருவத்தினள் என்பது. இன்னொரு குறிப்பும் இதில் வைத்துக் கூறப்பெறுகின்றது. அது: கதிரவன் மறைந்தான்; இவ்விடம் காவலுடைத்து நும்மிடமும் சேய்த்து: எம் ஐயன் மாரும் கடியர்: யான் தாழ்ப்பின் அன்னையும் முனியும்; நீரும் போய் நாளை வாரும் எனஇசைய மறுத்துக் கூறாநிற்றல்'." இது 'காப்புடைத்தென்று மறுத்தல் என்னும் துறையாம். இதனையே ‘எருமைப் போத்து ஆம்பல் மயக்கும் ஊர்’ என்ற தொடர் விளக்கி நிற்கின்றது. அதாவது, மேயத்தகுந்தது. இது, மேயத்தகாதது இது என்னும் உணர்ச்சியின்றி எருமைக் கடாக்கள் குளத்திலுள்ள ஆம்பல் மலரைக் கடித்துக் கெடுக்கும் ஊர் இவ்வூர் என்பது. எனவே, அவ்வெருமைக் கடாக்களைப் போலவே இங்குள்ள காவலாளர்களும் உளரார்களும் நல்லது இது, கெட்டது இது என்று எதனையும் ஆராயாது செய்து கெடுப்பர்; ஆதலால் நீங்கள் களவொழுக்கத்தில் நின்று உங்கள் காதலியைத் தேடி வரினும் அதன் நன்மையை அறியமாட்டாது உங்களையும் எங்களையும் ஊறுபடுத்தி வருத்துவர்; ஆதலால் இப்போது நீங்கள் இங்கு வருதல் பொருந்தாது என்பது பெறப்படும். நெறி மருப்பு 'நீல இரு என்னும் அடைமொழிகள் எருமையின் கொடுமையை யும், அதன்வழி ஊராரின் தீய தன்மையையும் விளக்கி நிற்கின்றன. அங்ஙனமே வெறிமலர்ப் பொய்கை என்பது ஆம்பலின் உயர்ந்த மென்மைத் தன்மையையும் அதன்வழி அத் தலைமகன் பொருந்திய காதலினிமைச் சிறப்பையும் உணர்த்து கின்றது. - நற்றிணைத் தோழியொருத்தியின் சேட்படுத்தும் திறனைக் காண்போம். இவள் தலைவன் தலைவி இருவர் குல முறையையும் கூறி மறுக்கின்றாள். 67. பேராசிரியர் உரை.