பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 107

இவளே,
கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகனே;
நீயே,
நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதன் மக்னே
நிணச்சுறா வறுத்த வுணங்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றிமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே.

[கானல் - கடற்கரைச் சோலை; நண்ணிய - பொருந்திய; காமர் - அழகிய; மீன்எறி - வலைவீசி மீனைப் பிடிக்கும்; நியமம் - கடைத்தெரு; உனக்கல் - உலர்த்துதல்; இனப் புள் - காக்கைகள்; ஒப்பும் - ஒட்டும்; செல் நின்ற - அகன்று போய் நிற்க, புரை வது அன்று - ஒக்க உயர் வுடைத்து அன்று; செம்மல் - செல்வ மகன்] இதில் 'கடலைக் கலக்கும் வன்மையர்' என்றது, 'எமர் மூர்க்க ராதலின், நின்னைக் கானின் ஏதம் இழைப்பர் என அஞ்சி அச்சுறுத்தியது. மினெறிவர் மகள் என்றது இரக்கமின்றி மீனையெறிந்து கொல்லும் பரதவர் மகளாதலின் நீபடும் துன்பத் திற் கெல்லாம் இரங்காள் என்று கூறியது. உணக்கல் வேண்டிப் புள் ஒப்புவோம்’ என்றது, 'நீ இங்ஙனம் வரினும் உடம்பட வொட்டாது போக்குவோம்’ என்பதாம். இது தோழி தன் காவ லொடு மாறு கொள்ளாமை கருதியதாம். புல!ை நாறும் என்றது எம்போலும் புலவு நாற்றத்தோடுவரின், இயையும் என்றதாகும். இது முன்பு கூறியவற்றைக் கேட்ட தலைவன் ஆற்றானாக . அவனாற்றுதல் வேண்டிக் கூறப்பட்டதாகும். செல நின்றி, என்றது குறியிடம் இது தகுதியுடையதன்று என மறுத்ததாம், இங்ஙனம் சொல்லைச் சுருக்கிப் பொருளை விளக்கும் கருத்துட் கொண்டும், சொல்லும் பொருளும் இணைந்து விரவி நிற்குமிடத்து அச் சொல்லியல்புக்கும் பொருளியல்புக்கும் ஏற்றவாறு ஒன்றோ 68. தற்.45,