பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Xi

 என்ற குலசேகராழ்வாரின் திருவாக்கினையொட்டி அவனைத் தானே பற்றவேண்டும்? எனவே, எனக்கு எல்லா நலன்களையும் ஈந்து (ஈயும்) என்னைக்கொண்டு இந்நூலை எழுதுவித்து, தமிழக அரசினிடமிருந்து மானியமும் பெறச்செய்து, இந்நூல் வெளிவரக் காரணமாயிருக்கும் ஏழுமலையப்பனை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்குகின்றேன்.


இன்றுஆக, நாளையே ஆக, இனிச்சிறிது
நின்று ஆக, நின்அருள் என்பாலதே, நன்றாக
நான் உன்னை அன்றிஇலேன் கண்டாய், நாரணனே,
நீஎன்னை அன்றி இலை.

[1]

சென்னை-40

திசம்பர் 21, 1981} ந. சுப்புரெட்டியார்

  1. நான்காம் திருவந்தாதி.1