பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#12 அகத்திணைக் கொள்கைகள் கண்ணினை நினைந்து அதனை நயந்து கூறுவான். கண்ணயந்து உரைக்கும் கூற்றினை மணிவாசகப் பெருமான், ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன் பாசத்தில் கார்என்று அவன்றில்லை யின்னொளி போன்றவன்தோள் பூசத் திருநீறு எண்வெளுத்து ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே.' [அன்பின்-அன்புபோல்; பாசத்தின்-பாசம் போல; தோள் பூசு:தோள்களில் சாத்தும்; நீறு-விபூதி, பூம்கழல்பூப்போலும் திருவடிகள்: என்று மிக அழகுடன் கருத்து நுட்பங்களுடன் விளக்கிக் கூறுவது 莎门”邸Tö· இங்ங்ணம் தலைமகன் கூறக் கேட்ட தோழி இனியும் இவனை இவ்வாறு அலைத்தல் தகாது என்று இரங்கி இவ்வாறு ஏற்றல் எங்கள் குடிக்கு ஏலாதாயினும், நீங்கள் முன் செய்த உதவியையும் பேரன்பினையும் நினைந்து ஏற்றுக் கொள்வேன்' எனத் தழையை ஏற்பள். இது தழை எதிர்தல்’ என்ற துறையாகும். இங்ஙனம் ஏற்றவள் தலைமகளை நெருங்கி அவள் குறிப்பறிந்து இச் செய்தியைக்கூறுவள். இவை குறிப்பறிதல்', 'குறிப்பறிந்து கூறல்” என்ற துறைகளாகும். பெருநாணினளாதலான் தலைவி அத்தழையைவாங்காது நிற்ப, அக்குறிப்பறிந்து, இருவகையானும் நமக்குப் பழி வரும்; நமக்கு உதவி செய்தாருக்கு நாமும் உதவி செய்தல் வேண்டும் என வகுத்துக் கூறுவாள். தோழி தலைமகன் செய்ததாகப் பாராட்டிக் கூறும் உதவியாவது இயற்கைப் புணர்ச்சியின் முன்னர் தினைப்புனங் காத்தபொழுது மதங் கொண்டு பிளிறித் திடீரென்று அவர்கள்மீது சீறி வந்த கிபி ) யானையை அம்பிட்டுக் கடிந்ததாகும். இதனை, கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும் துவளத் தகுவன வோசுரும் பார்குழல் துரமொழியே .'" 71. டிெ-109. 72. ,ெ-112.