பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#14 அகத்திணைக் கொள்கைகள் போக்கிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஏதும் முரண்பாடு இல்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. - இச்சேட்படைப் பகுதியை ஆசிரியர் தொல்காப்பியனார், தோழி, நீக்கலினாய நிலைமையும் நோக்கி”* என்பதன்கண் அடக்குவர். இதற்கு நச்சினார்க்கினியர், தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலின் தனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து' என்று உரை கூறுவர். அதன் பின்பு இதுவே மடன்மா கூறுவதற்கு ஏது வாயிற்று’ என்று விதந்துரைப்பர். மேற்கூறிய நூற்பாவின் அடியை அடுத்து வரும், மடன்மா கூறும் இடனுமா ருண்டே' என்ற அடிக்கு உரை எழுதுங்கால் அச்சேட்படையான மடல் ஏறுவல் எனக் கூறும் இடனும் உண்டு என்றும் நோக்கி மடன் மா கூறும் என்க’ என்றும் கூறினார். இதனால் தொல்காப்பியர் மடன்மா கூறுதற்கு ஏதுவாகச்சேட்படைப் பகுதியை முன் நிறுத்தி மற்று அதன் விளைவாக மடன்மாப் பகுதியை அதன்பின் நிறுத்தி நூற்பா இயற்றினார் என்னும் அவர் கருத்துப் புலனாயிற்று. ஆனால், மணிவாசகப்பெருமானோ சேட்படைக்கும் மடன்மாக் கூற்றுக்கும் ஏதோர் ஏதுவும் விளைவும் தோற்றுவியாது மடன் மாப் பகுதியை முன்னும், சேட்படைப் பகுதியைப் பின்னுமாக அமைத்துவிட்டனர். இங்ஙனம் அமைத்தமைக்கு அதன் உரையாசிரியராகிய பேராசிரியரும் தொல்காப்பியனார் கருத் தோடு ஒத்தவகையில் யாதோர் இயைபும் காட்டவில்லை. மற்று அவர் காட்டும் இயைபும் வேறாகவே உள்ளது. இவ்வாறு இக் கருத்தில் தொல்காப்பியக் களவியலும் திருக்கோவையாரும் பொதுநோக்கத்திற்கு மாறு பட்டனபோல் காணப்படுகின்றன. மேனோக்கில் இவ்விரு பெரு நூல்களும் மாறுபட்டனபோல் தோற்றுவதால் உள்நோக்கிலும் மாறுபாடுடையனவா என்று ஆய்ந்து அறிதல் நம் கடமையாகும். அங்ஙனம் அறிய முற்படுங் கால் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் இடை நின்று நமக்கு ஒளி காட்டித் தெளிவிக்கின்றன. இவை மடற்றிறப் 14. களவியல் - 11. (நச்.) அடி 18, 19 73. இடி - 11 (நச்) விரி, 20 76. 10 மடற்றிறம், 11. குறைநயப்புக்கூறல், 12. சேட்படை என அமைத்துள்ளமை கவனிக்கத்தக்கது.