பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 16 - அகத்திணைக் கொள்கைகள் ஆற்றாமை பெருகப் பெருகத் தோழியின் நாணம் குறைந்து கொண்டே வரும். ஒருநிலையில் தோழிக்கு நாணம் என்பது முழுதும் சுருங்கி நிற்கும். இதனை இறையனார் களவியலுரை ஆசிரியர், அவனது ஆற்றாமையும் இதனிநாய்குப் பெருகு மாறில்லையெனப் பெருக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது; இவளது நானும் இதனிநூங்கு நுணுகுமாறில்லையென நுணுக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது. என்று அழகாகக் கூறுவது சிந்தித்து மகிழத் தக்கது. தோழியின் நாணம் இங்ஙனம் சுருங்கி இல்லை யென்ற நிலை ஏற்பட்டாலும், நாணம் என்பது பெண்டிர்க்கே உரிய இயல்பான உயிர்த்தன்மையாதலால் தோழி தானறிந்த தலைவியின் கருத்தைத் தலைமகனோடு துணிந்து பேசக் கூக வாள். இதனை, - முன்னுற உணரினும் அவன்குறை புற்ற பின்னர் அல்லது கிளவி தோன்றாது.” (கிளவி - சொல்) என்று இறையனார் களவியலாசிரியர் கூறிச் செல்வர். இங்ஙனம், தலைவன் பன்னாள் தோழியைக் குரையிரந்தும் தோழி மறும்ொழி ஏதும் கூறாதிருக்க, தலைமகன் ஒருநாள் தோழியும் தலைவியும் ஒருங்கிருக்கும் நிலையில் அவர்கள்பாற் சென்று தனக்குள் பெருகி வரம்பெய்தி நின்ற ஆற்றாத் தன்மையை, நீவீர் என் குறையை முடித்து அருள் செய்யாமை யால் என் உயிர் அழிகின்றது. இதனை அறிமின்கள் என்று கூறுவான். எனினும், பெண்டிர்க்கு நாணம் ஒரு பெருந் தடுப்பா யிருப்பதால் அவர்களிடமிருந்து ஒரு மொழியும் பெற்றான் இலன். இந்நிலையில் அவன், காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல் அல்லது இல்லை வலி..." (ஏமம்-ஆறுதல்; வலி-வலிமை) என்று கூறுவான். இங்கு ஏமம் என்பது துன்பத்தை நீக்கி ஆறுதலின்பம் தருவது போன்ற துன்பம். டேலேறுதல் என்ற செயல் காம எண்ணம் முதிர்ந்து தலை யெடுத்து நிற்கும்பொழுது ஆண்மக்கள் தாம் காதலித்த தலை 78. 77. இறை. கள, 9-இன் உரை. 9 س ه 79. குற்ள்-1131.