பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Hi S அகத்திணைக் கொள்கைகள் > お .هي ممه : o 3 - الإم بيت. ... ...? என்று மிகத் தெளிவாக விளக்குவர். காமம் மிகுந்தாலும் இல் வழக்கத்தை மகளிர் மேற்கொள்வதில்லை என்பது அறியத் தக்கது. கடலன்ன காமம் உழந்தும் மடல் ஏறப் பெண்ணிற் பெருந்தக்க தில்" (உழத்தல்-வருக்துதல்.) என்ற குறள் இக்கருத்தினை அரண் செய்வதைக் காண்க. தலைவனது இக்கடுஞ்செயலைக் கண்டு இதனால் அவனது பெரு வேட்கையை உணர்ந்த உறவினர், சான்றோர், அரசன் இவர் களுள் யாரேனும் தலையிட்டு இருவரையும் பல்லோர் அறிய வெளிப்படையாக மணம் செய்து வைப்பர். இதுவே மடலேறு தலின் உடன்பெறக் கூடிய பயனாகும். மடல் மாப் பொருள் குறித்துப் பதின் மூன்று பாடல்கள் சங்க இலக்கியத்துள் காணப்பெறுகின்றன. இவற்றுள் நற்றிணை யிலுள்ள நான்கு பாடல்களும்” குறுந்தொகையிலுள்ள ஐந்து பாடல்களும் ஐந்திணைக்கு உரியவை. கலித்தொகையிலுள்ள நான்கு பாடல்களும்' பெருந்திணையைச் சார் ந் த ைவ. ஐந்தினை மடலுக்கும் பெருந்திணை மடலுக்கும் நுண்ணிய பெரிய வேறுபாடு உண்டு. மடல்மா ஏறுவேன்' என்று தலைவன் வாயளவில் சொல்லுதல் ஐந்தினையாகும். மடல்ம்ா கூறும் இடனுமார் உண்டே' என்று தொல்காப்பியம்.இதற்கு இலக்கணம் கூறும். அவ்வாறன்றி மடல்மா ஏறியே காட்டும் செய்கை பெருந்திணையாக முடியும் 'ஏறிய மடற்திறம்' என்ற தொல்காப்பிய நூற்பாத் தொடரில் 'ஏறிய எனவரும் இறந்த கால வினை பெருந்திணை இலக்கணத் தைச் சுட்டுதல் ஈண்டு அறியப்பெறும். மாதங்கீரனார் என்ற சங்கப் புலவர் இத்துறை பாடுவதில் வல்லவர். இதனால் இவருக்கு மடல் பாடிய மாதங்கீரனார்’ என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இவர் பாடியனவாகக் 83. குறள் 1137 84. நற். 116, 152, 342, 377 85. குறுந் 14, 17, 32, 173, 182. 86. கலி. 138, 139, 140, 141 87. களவியல்-11 (இளம்) 88. தொல். அகத்திணையி-54 (இளம்)