பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 119 கிடைத்துள்ள பாடல்கள் இரண்டு. ஒன்று குறுந்தொகையில் உள்ளது; மற்றொன்று நற்றிணையில் காணப்பெறுகின்றது. அவற்றையும் ஈண்டு அறிதல் சாலப் பொருந்தும். விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி வெள்ளென்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீங்கித் தெருவின் இயலவும் தருவது கொல்லோ கலிந்துஅவிர் அசைநடைப் பேதை மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த துதே." (விழுதலை-சிறந்த உச்சி; விளையல்-முதிர்தலையுடைய, தார்-மாலை; மரபின் பூட்டி-முறையோடு அணிந்து: எள்ளல் - இகழ்தல்; ஒருநாள் மருங்கில் - ஒருநாளில், இயல்தல்-செல்லுதல்; கவிந்து அவிர்-அழகு ஒழுகி விளங்கும்; மெலிந்திலள் நெஞ்சம் நெகிழ்ந்திலள்) தோழியால் குறை மறுக்கப் பெற்ற தலைமகன் தன் நெஞ்சை நோக்கி உரைத்ததாக அமைந்தது இப்பாடல். நெஞ்சிற்குக் கூறியதாக இருப்பினும் அவன் கருதியது தோழி அறிய வேண்டும் என்பதேயாகும். நற்றிணைப் பாடல் இது: மடல்மா ஊர்ந்து மாலை சூடிக் கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும் உண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப் பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று அது பிணி ஆக விளியலங் கொல்லோ அகலிரு விசும்பின் அரவுக்குறை படுத்த பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல அளகம் சேர்ந்த சிறுநுதல் - கழலுறுபு மெலிக்கும் நோயா கின்றே." (கண்அகல்-இடம் அகன்ற, நுதல்-நெற்றி, அரிவை-பெண்; பண்ணல்-செய்தல்; மேவலம்ஆகி-செல்லேமாகி; அரிது உற்று-உள்ளத்தை அரிதாகநிலைநிறுத்தி: விளிதல்: இறந்து படுதல்; அரவுக்குறை படுத்த-பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பெற்ற சுழலுறுபு-நினைக்குந்தோறும்; மெலிக்கும்-இளைக்கச் செய்யும்) 89. குறுந்.:182. 90, நற்.377,