பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 - அகத்திணைக் கொள்கைகள் கள்ளுண்ணலாம். கள் உண்பாரையான் தடுக்ககிலேன். வேண்டும் அளவு உண்க. காரணம் காணாமல் நோய் தீர்க்க முயலும் உன் புத்தியே புத்தி. உன்னையன்றி என் அன்னைக்கு அறிஞர் பிறர் யாரும் கிடைத்திலர் போலும்!” என்று எள்ளி உரைக்கின்றாள். பொதுவாக வெறியாட்டு அறத்தொடு நிற்கவும் வரைவு கடாவவும் பயன்படுவதைக் காணலாம். சமுதாயச் சடங்கிற்கும் கற்பொழுக்கத்திற்கும் ஒரு போராட்டம் நடைபெறுவதை வெறி யாட்டில் கண்டு மகிழலாம். முதுமை வழிவழியாக வரும் மரபைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதையும், உண்மையை அறிந்த இளமை முதுமையை எள்ளி நகையாடுவதையும் பொருளாக அமையும் நிலையில் வெறித்துறைப் பாடல்கள் திகழ்வதையும் காணலாம். எதிர்ப்புணர்ச்சிகள் புலவர்கள் கிளர்ச்சியுடன் பாடுவதற்குக் கவர்ச்சியுள்ள இடங்களாகும். சங்க இலக்கியத்தில் இத்துறைபற்றி நாற்பது பாடல்கள் காணப் படுகின்றன. காமக்கண்ணி (காமாட்சி)யார் என்ற பெண்புலவர் இத்துறைபற்றி மூன்று பாடல்களை யாத்துள்ளார்.’’’ அன்னைக்கும் அருமை மகளுக்கும் இடையே எழும் ஒரு பூசலைப் பெண் புலத்தி பாடுவது சிறப்பல்லவா? இந்த மூன்று பாடல் களையும் ஈண்டு ஆராய்வது பொருத்த முடைத்தாகும். நற்றிணைத்தோழி சிறைப்புறமாக நிற்கும் தலைவன் கேட்கு மாறு தலைவியிடம் கூறுகின்றாள்: சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக் கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ ஒவுக்கண் டன்ன இல்வரை இழைத்த நாறுகொள் பிரசம் ஊறு நா டற்குக் காதல் செய்தும் காதலம் அண்மை யாதெனிற் கொல்லோ தோழி வினவுகம் பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே’** |சூர் உடை - அச்சம் தருதலையுடைய ந்னந்தலை - இட மகன்ற, மால் - மேகம், மதன் - வன்மை; ஒவு - ஒவியன் இல் - வேட்டுவர் இல்லம்: இழைத்த கட்டப்பட்ட 111. அகம் 22, 98, நற். 268. 112. நற். 268.