பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 131 பிரசம் - தேன்; பெய்மனல் - மணல்-பரப்பிய மணல்; கடி கொண்டு - சிறப்புச் செய்து மெய்மலி - உண்மை கூறும்: தந்து - அழைத்து வந்து.) அறியாமையால் அன்னை வெறியாட்டயர்கின்றாள். அதனைத் தோழி பயன்படுத்திக்கொள்ளும் திறம் பாராட்டுதற்குரியது. காதல் செய்தும் காதலம் அன்மை யாதெனில் கொல்லோ?? என்பதனால் இறைமகள் கைகடந்த காதல் உடையள் எனவும், இறைமகன் அங்ங்ணம் இலனாயினான் எனவும் கூறி அவன் விரைந்து வரைய வேண்டும் என்பதைப் புலப்படுத்துகின்றாள். :மெய்ம்மலி கழங்கினை வினவுவதற்கு வருமாறு தலைவியை அழைத்தல் நகைச்சுவை பயப்பதாகும். இதனால் தலைவனுக்கு இல்லத்தில் நடைபெறும் வெறியாட்டையும் குறிப்பிக்கின்றாள். வன்மையில்லாத பேதையாகிய குறிஞ்சிப் பூக்கள் தமக்குக் கைம் மாறேதும் இயற்றாத தேனடைக்குத் தாம் தேனுாறி நல்குதல் போன்று குறவர் மகளிராகிய தம்பால் காதலில்லாத மருதநிலத் தலைவனுக்குத்தாம்மட்டும் காதல் கனிந்தபேதையரானமையைக் குறிப்பிடும் திறம் மெச்சத் தக்கது. இங்ஙனம் தலைவனுக்கு முன்னிலைப் புறமொழியாக இல்லத்தில் நிகழ இருக்கும் வெறி யாடும் நிலையை எடுத்துக் காட்டி அவளை வரைவு கடாவும் முறையில் அமைத்த பாடலின்நுட்பம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. அகநானூற்றுப் பாடல்களில் அவர் வெறியாடலை அமைத்து காட்டும் அருமைப்பாடு நம் இந்நிலையை மேலும் அரண் செய்வதாகும். களவொழுக்கத்தில் ஒழுகி வரும் அகநானூற்றுத் தலைவி ஒருத்தியின் உண்மையான வருத்தத்தை இதனால்தான் உண்டா யிற்று என்று அறியாது கலக்க முற்ற காலத்தில் தாயர் முதுவாய்ப் பெண்டிரைக் கலந்து ஆய்கின்றனர். அவர்கள் முருகனுக்குப் பூசை எடுப்பித்தால் இவள் உற்ற நோய் திரும் என்று யோசனை கூறுகின்றனர். உடனே வெறியாட்டயர ஏற்பாடு செய்யப்பெறு கின்றது. கள நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்' 113. அகம் - 22