பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 133 தலைவியின் நோய் தலைவன் கூட்டத்தால் தான் தணியும் என்பதை அன்னை அறியவில்லை. தன்மகளுக்கு இவ்வேறுபாடு எற்றினாலாயிருக்கக் கூடும் என கட்டுவிச்சியரை வினவுகின்றாள். அவர்கள் முறத்தில் பிரப்பரிசியைப் பலியாகப் பரப்பி வைத்து குறியறிந்து இது முருகனால் நேரிட்டது என்று கூறுகின்றனர். அவர்கள் கூற்றை நம்பி உடனே வெறியாட்டு எடுக்க ஏற்பாடு செய்கின்றாள். தோழி தலைவியிடம் இதனைக் கூறுகின்றாள், ஒவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை அன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பரை இக் கூடுகொள் இன்னியம் கறங்கக் களனிழைத்து ஆடணி அயர்ந்த அகன்பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர் ஐதமை பாணி இரீஇக்கை பெயராச் செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையின் துங்கல் வேண்டின் என்ஆம் கொல்லோ தோழி' (ஒவம் - ஒவியம்; மாண்கவின் - மாண்புற்ற அழகு; பரைஇதெய்வத்தைப் பரவி, கூடுகொள் - இணைந்த இன்னியம்இனிய வாத்தியங்கள்; கறங்க - ஒலிக்க ஆடு - ஆடுதற் கேற்ற வெண்போழ் - போழப்பட்ட பனந்தோடு, இன் சீர் - இனிய தாள அறுதி செல்வன் - மூருகன்; ஏத்திதுதித்து; பொற்ப - அழகு பெற; பாவையின் - பாவையைப் போல; தூங்கல் - ஆடுதலை வேண்டின் - விரும்பினால்) என்பது வெறியாட்டைக் காட்டும் சொல்லோவியம். இங்ஙனம் வெறியாட்டு முடிந்த பின்னரும் தலைவியின் வாடிய மேனி முன் போலச் சிறந்திடாதாயின் தன் களவொழுக்கம் பலரும் துாற்று மாறு வெளிப்படாதிருத்தல் அரிதாகும் என்கின்றாள் தோழி. மேலும் அவள், தலைவன் உறுவித்த இந்த அல்லலைத் தெரிந்து அருள்தலைவிட மணங்கமழ் நெடுவேள் (முருகன்) தலைவியின் முன்னைய அழகினைத் தந்தருள்வான் என்றால் தலைவி உற்ற துன்பம் பிறிதொன்றால் ஆகியது என்று ஆகிவிடும் என்கின்றாள். 115. Q-98