பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 - அகத்திணைக் கொள்கைகள் இதனைத் தலைவன் கேட்டறிந்தால் தலைவி உயிர் வாழ்தல் மறை வெளிப்படாதிருத்தலை விட அரிதாகும் என்றும் துணி கின்றாள். இந்த இரண்டு பாடல்களிலும் வெறியாட்டு மிக அழகு பெறக் கூறப்பெற்றிருப்பது நன்கு புலனாகும். இங்ஙனம் இந்த ஒரு துறையை ஆழ்ந்து அழகுறப் பாடவல்ல புலமைபற்றி வெறிபாடிய காமக் கண்ணியார் என்று இவர் சிறப்பினைப் பெற்றார் என்று அறிகின்றோம். - ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையில் கபிலரால் பாடப் பெற்ற பத்துப் பாடல்கள் வெறிப்பத்து என்ற தலைப்பின் கீழ்க் காணப் பெறுகின்றன." இவற்றால் அன்னையின் அறியாமை, வேலனின் அறியாமை, தோழியின் எதிர்ப்பு முதலியவற்றைத் தொடர்பாக நமக்கு அறிவூட்டி நிற்பதை அறியலாம். எல்லாப் பாடல்களிலும் கற்பின் வென்றியே தலைதுாக்கி இலங்கக் கண்டு மகிழ்கின்றோம். தலைவியின் காதல் நோய்க்குத் தெய்வ மூலம் கூறுவதாக அமைந்த வெறியாட்டைக் கற்புக்கு மாசாகச் சமூகம் கருதுவ தில்லை. இந்நிலையில் தலைவியும் தாயர் வெறியாட்டு அயர் வதைப்பற்றி அத்துணையாகக் கவல்வதில்லை. இது நடை பெறாது தடுக்கத் தோழியும் தலைவியும் முன்னேற்பாட்டை மேற்கொள்வதும் உண்டு. நடந்தால் நடந்து ஒழியட்டும் என்று தடையின்றி அது நடந்தொழிய விட்டு விடுதலும் உண்டு. வெறி யாட்டு என்பது அன்னை அறியாமையால் முதுவாய்ப் பெண்டிரின் யோசனையால் நடைபெறும் ஒரு கேலிக் கூத்தேயாகும் என்பது தலைவியின் கருத்தாகும். மேற்காட்டிய அகநானூற்றுப் பாடலில் காட்டப்பெற்ற நிகழ்ச்சியே இதற்குச் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும். wi. நொது மலர் வரை வு களவு நெறியில் வெறியாட்டைப்போல் அயலவர் வரைவும் களவுடை நங்கையின் கற்பைச் சோதிக்கும் ஒரு சமுதாயக் களனாக அமைகின்றது. என்றாலும், காதல் நோய்க்குத் தெய்வ 1இெங்குறு. (241.250).