பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 137 தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மனம்பேசி வர விடுத்தபோது தன் தமர் மறுப்பரோ என அஞ்சிய தலைவியை நோக்கி தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்: நீ கவலை ஒழிக. என்று தோழி கூறுவதை இதில் காணலாம். இங்கு நற்காலமாக ஆண்வீட்டார் தலைவியோடு களவுத் தொடர்புடைய தலைவன் வீட்டாராகவே அமைந்து விட்டனர். இத்தகைய ஒரு நற்பேற்றினை ஐங்குறுநூற்றுத் தலைவியின் வாழ்விலும் காணலாம், - கொடிச்சி கூந்தல் போலத் தோகை - அஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன் வந்தனர் எதிர்ந்தனர் கொடையே அந்திங் கிளவி பொலிகநின் சிறப்பே. .'" (கொடிச்சி-குறிஞ்சி நிலத்து நங்கை, தோகை-சிறகு சிறைதோகை: வெற்பன்-மலை நாட்டுத் தலைவன்; கொடை நேர்தல்-பெண்தர ஒப்புக் கொள்ளல்; அம்தீம் கிளவிஅழகும் இனிமையும் அளாவிய மென்மொழி மங்கையே மகட்பேச விடுத்த தலைவன் சுற்றத்தாரைத் தலைவியின் சுற்றத் தார் ஆர்வத்தோடு வரவேற்று மகட் கொடை நேர்ந்தனர் என்ற உவகைச் செய்தியைத்தலைவியிடம் மகிழ்ந்துகூறி வாழ்த்துவதைப் பாடலில் காணலாம். இதன்கண் கொடிச்சி கூந்தற்கு ஒப் பாதலை விரும்பித் தோகைமாமயில் அஞ்சிறையை விரிக்கும் என்றது, தலைவன் விழைவிற்கு ஒப்பாகவே தலைவியின் சுற்றத் தாரும் விழைந்து உவகையோடு முகமன் கூறி வரவேற்று மகட் கொடையும் தேர்ந்தனர் என்ற குறிப்புடையதாக இருப்பதைக் கண்டு மகிழலாம். இங்கனம் களவு யாதொரு இடர்ப்பாடும் தடையுமின்றி மணமாக முடிதல் வேண்டும் என்றுதான் தலைவியும் தோழியும் விரும்புவர்; அங்ஙனம் நினைந்தவாறே முடிந்தக்கால் பேருவகைப் படுவர். களவு நெறியில் இங்ஙனம் முடிவதே இயல்பும் ஒழுங்கும் முறையும் ஆகும். வாழ்க்கை, குறிப்பாகக் காதல் நெறியில் தொடங்கும் வாழ்க்கை, நீரோட்டம் போல, சீமைக்காரைச் சாலையில் (Cement) 10% of 5 (Pieasure car) Goré 6,613, GLITav, எளிதாக, இனிமையாகக் கற்பாகி விடுதல் அரிதினும் அரிது. அப்படி ஆகிவிடின் நெஞ்சக் குமுறலுக்கும் அறிவுத் தீட்டலுக்கும் ٤غتمغ% 119. ஐங்குறு-300.