பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் - i39 தனமாகும். தலைவனுடன் தனக்கிருக்கும் தொடர்பை உரிய காலத்தில் வெளிப்படுத்தப் பின்வாங்குவது மடமையாகும். துணிவற்ற காதல் செயலற்ற ஏட்டுக் கல்வியை ஒக்கும். எவரிடமிருந்து எத்தகைய தொல்லை வரினும் அவரையும் அவர் தரும் தொல்லையையும் துரவெனத் தள்ளும் பெருவலி தூய மெய்க் காதலுக்கு இயல்பாகவே அமைந்த ஒர் உயரிய பண்பாகும். ஒருகால் நாணத்தால் தலைவி தயங்கினும் காதல் வாழ்வில் மிகப் பொறுப்புடன் செயற்படும் தோழி இதற்குச் சிறிதும் பின் வாங்காள். எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஒதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன் இனியே.’’’ (எக்கர்-மணற்பரப்பு: ஞாழல்-ஒருவகை மரம்; ஒதம்-கடற் பெருக்கு: வாங்கும்-வளைத்து இழுக்கும்; மாயோள்மாமை நிற்முடையவள்; நீக்கினன்-தீர்த்தருளினன்.) 'இந்த மாமை நிறத்தாளின் பசலையை-பிரிவுச் சோகையைநீக்கினவன் யாரெனின், ஞாழல் மரத்தின் பெருங்கிளையை அலைகள் வளைக்கும் துறைவன் ஆவான் என்று தோழி துணிந்து களவை வெளிப்படுத்தலைப் பாடலில் காணலாம். குமரப் பருவம் எய்திய நங்கைக்குப் பிரிவும் பசலையும் இல்லை; காதலர்ப் புணர்ந்த மகளிர்க்கே அவை உள. ஆதலின், மாயோள் பசலை நீக்கினன்' என்ற தோழியின் சொற் கேட்ட தலைவியின் பெற்றோர் ஒரு தலைவனுடன் தன் மகளுக்கு உறவு ஏற்பட்டுள்ளது போலும் என்றும், அந்தத் தலைவன் இங்கு மணம் பேச வந்திருக்கும் வீட்டாரின் நம்பியே என்றும் தெளிந்து மணத்திற்கு உடன்படுவர். சில சமயம் தலைவியின் பெற்றோர் மகட்கொடை நேர உடம்படாது தலைவனது தமரை வலிந்து பேசி தம் அருமைச் செல்வியை அவர்தம் செல்வனுக்குக் கொடுக்க மறுத்துச் செருக்கி நிற்பது. உண்டு. இந்நிலையில் தோழி கை கடந்த துணிவுடன் அச்செல்வனுக்கு உரியவள் இச்செல்வியே' என்று மிக வெளிப் படையாகச் சொல்லியே தீர்வாள். குன்றக் குறவன் காதன் மடமகள் அணிமயி லன்ன அசைநடைக் கொடிச்சியைப் 122. டிெ-145.