பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 அகத்திணைக் கொகைகள்


பெருவரை நாடன் வரையும் ஆயிற்
கொடுத்தனெம் ஆயினோ நன்றே
இன்னும் ஆனாது நன்றுதல் துயரே'

(காதல்-பேரன்பு: மடமகள்-இளமகள்: அணிமயில்-அழகிய மயில், அசை நடை-அசைந்த நடை: இன்னும்-இப் பொழுதைவிட ஆறாது-பெருகி ஒழிவிலதாகும்)

நெடுநாள் வரைவை நீட்டித்துக் களவு நெறியில் ஒழுகும் தலைவனைத் தோழி இடித்துரைத்த பின்னர் அவன் வரைவு பேச அனுப்பிய சுற்றத்தாரைப் பெற்றோர் நிலைமை அறியாமல் மறுத்துரைத்தபோது மேன்மேலும் பெருகி நிற்கும் தலைவியின் துயரை அறிந்த தோழி இடைப்புகுந்து பெற்றோர்க்கு அறிவுறுத்தலைப் பாடலில் காண்கின்றோம்.

   இங்ஙனம் காதல் தலைவனே மணம் பேசும் வாய்ப்பே' கிட்டும் என்று சொல்வதற்கில்லை. அயலாரும் மணம் பேச வருவதுண்டு, அப்போது தோழி தலைவிக்குக் கூறுவது போலத் தாய் முதலியோருக்குத் தலைவியின் களவொழுக்கத்தை வெளிப் படுத்தி நொதுமலர் வரைவினைத் தடுக்க முயல்வாள். -
   
இன்றியாண் டையனோ தோழி குன்றத்து
பழங்குழி பகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண்அகல் தூமணி பெறூஉ நாடன்
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி
எம்மால் வருகுவை நீயெனப்
பொம்மல் ஒதி நீவி யோனே.”*

(யாண்டை-எவ்விடம்: கண் அகல்-இடம் அகன்ற: துரமணி-துாய மணி காழ் கொள்ளும் அளவை-முதிர்கின்ற பருவத்தில்; செறிதொடி-செறிந்தவளை யடையாய் (விளி); பொம்மல் ஒதி-நெருங்கிய கூந்தல்; நீவியோன் தடவியோன்.)

என்ற குறுந்தொகைப் பாடலில் இத்தகைய நிகழ்ச்சியை. காணலாம். நின்பால் அன்பு பூண்ட தலைவன் இப்பொமுது எங்குள்ளானோ?’ என்பதனால் தோழி அன்னை முதலியோருக்கு உண்மை செப்பி இங்கு அறத்தொடு நிற்பதைக் காணலாம். _________________

   123. டிெ-258. 124. குறுந் 379