பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 அகத்திணைக் கொள்கைகள் wi. வரைவு கடாதல் கேற்கு றியின்பொழுது தலைவனோடு தோழிக்குச் சில உரையாடல்கள் நிகழும். அஃதாவது, இனியும் இவ்வாறெல்லாம் களவிலேயே வந்து தலைவியைக் கூடும் வழக்கத்தை விடுத்து விரைந்து மணம் செய்து கொள்ளல் வேண்டும் என்று தலைவனை அவள் பலவாறு வேண்டிக் கொள்வாள். முன்பெல்லாம் தலைவன் தோழியைக் குறையிரந்தது போக, பகற்குறிப் புணர்ச்சிக்குப் பின்னர் தோழி தலைவனைக் குறையிரப்பக் காண்கின்றோம். இஃது உலகியல் வழக்கமும் ஆகும். புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும்' என்று தோழி தலைவனைப் புணர்ச்சியின்பின் வணங்கி வேண்டிக் கொள்ளும் முறையினைத் தொல்காப்பியனாரும் ஒதியிருத்தல் அறியப்படும். தலைவனுடன் தோழி உரையாடுந்தோறும் அவள் நோக்கம் எல்லாம் தலைவியின் திருமணத்தையே நினைந்தவாறு இருக்கும். களவு நீடிப்பின், வெறியாட்டு நொதுமலர் வரைவு முதலான பல ஏதங்கள் நேர்வதற்கு இடம் ஏற்படுமே என்ற சிந்தனை அவள் மனத்தில் ஒடியவண்ணம் இருக்கும். அறிவு முதிர்ச்சியும் சிந்தனைச் செல்வமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற தோழி தலைவியின் வாழ்க்கையில் களவு என்று ஒன்று நடைபெற்றது. என்பது தோன்றாவகையில்மணத்தை முடித்து வைக்கப்வோ பாடு படுவாள்; பல்வேறு வழிகளால் வற்புறுத்தி உரைப்பாள். இவ்வாறு மனம் செய்து கொள்ளுமாறு குறிப்பாகவோ வெளிப்படையாக கேட்டலை அகத்திணை இலக்கணம் வரைவு கடாதல் என்ற துறையாக எடுத்துப் பேசும். சங்க இலக்கியத்திலும் பிற்காலக் கோவை நூல்களிலும் நூற்றுக்கணக்கான பாடல்கள் இத் துறையில் அமைந்திருப்பதைக் காணலாம். வேறு பல துறைப் பாடல்களும் இத்துறையைச் சார்ந்து வருதலையும் அங்குக் காணலாம். இப்பாடல்கள் யாவற்றிலும் தோழியின் அறிவுக் கூர்மையைக் கண்டு மகிழலாம். தோழி வரைவு கடாதல் பற்பல ஏதுக்கள் காட்டி கடாவப் படுதலின் அது பலவகையாக விரியும். தோழி வரைவு கடாவும் முறை குறிப்பினால் வரைவு கடாதல், வெளிப்படையினால் வரைவு கடாதல் என்று இரு 126. களவியல்-23 (இளம்)அடி-16,